Thursday, March 3, 2011

புரிதல் காலம்



ல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.
**
போக போறது
புறப்பட்டது எல்லாம்
சொல்லக் காணோம்.
போகும்போது சிரித்தது
புரியக் காணோம்.
**
குழந்தையோடு பேசி கொண்டே
ஜன்னல் திறந்தாள்.
போய் கொண்டிருக்கும்
பூச்சாண்டி புரிந்ததும்
மூடிக்கொண்டாள்.

No comments:

Post a Comment