Thursday, March 3, 2011

பிடித்தது,பிடிக்காதது-பத்து


ண்பர் மாதவன் தொடங்கிய விளையாட்டு இது. சும்மா கிடக்க மாட்டேங்கிராருங்க சாத்துறார்! இதுல,"பிடிக்காதவர்களை சொல்வதற்கு இங்கு தைரியம் வேண்டியதிருக்கிறது" என்று கொம்பு சீவல் வேறு. நல்லா இருங்கப்பு! நம்ம பப்பு ஆச்சிமுல்லையும், நூரா அத்தா நவாசும் கூப்பிட்டு இருக்காங்க.


ரி,நம்மளும் முட்டித்தூக்குவோம்.

விதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி!

விதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

விதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

நான் இங்கு இருவரை தேர்கிறேன். இணையான என எடுக்கலாம். வாங்க போவோம். படம் போட்டாச்சு.

1.ரசியல்வாதிகள்

பிடித்தது, கக்கன், நல்லகண்ணு.
பிடிக்காதது,ஜெயலலிதா, ராமதாஸ்.

2.ழுத்தாளர்கள்

பிடித்தது, தி.ஜா, வண்ண நிலவன்.
பிடிக்காதது, ராஜேஷ்குமார், சிவசங்கரி.

3.விஞர்கள்.

பிடித்தது, கல்யாண்ஜி, நேசமித்ரன்.
பிடிக்காதது, வைரமுத்து, மு.மேத்தா.

4.டிகர்கள்.

பிடித்தது, கமல், சூர்யா.
பிடிக்காதது, ராமராஜன், மோகன்.

5.டிகைகள்.

பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).
பிடிக்காதது, பானுமதி, சரளா.

6.யக்குனர்கள்

பிடித்தது, மணிரத்னம், பாலா.
பிடிக்காதது, இராம நாராயணன், பாலச்சந்தர்.

7.சை அமைப்பாளர்கள்

பிடித்தது, இளைய ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்.
பிடிக்காதது, தேவா, குன்னக்குடி.

8.விளையாட்டு வீரர்கள்

பிடித்தது, ஸ்ரீகாந்த், பாலாஜி.
பிடிக்காதது, எவ்வளவு யோசித்தாலும் தமிழ் நாட்டில் யாரும் இல்லையே,மக்கா.

9.ர்கள்

பிடித்தது, சிவகங்கை, மதுரை.
பிடிக்காதது, சென்னை, கருப்பாயி ஊரணி(ஏதாவது சொல்ல வேண்டி இருக்கே..)

10.மையல்

பிடித்தது, அம்மா, லதா (எனக்கு இவுங்க பிரபலம்தான்!)
பிடிக்காதது, நம்பியார் சேட்டா, பா.ராஜாராம் (நான்,அம்மா,லதாவுக்கு பிரபலம்தானே!)
ஒஹ்! நம்பியார் சேட்டாவா? அவரும் பிரபலமே, எப்படி சமைக்க கூடாது என்பதில். விடுங்க மாதவன் முல்லை பெரியாறு பிரச்சினைக்கு, இந்த அட்ஜஸ்ட்மென்ட்டில் ஏதாவது தீர்வாகுதானு பாப்போம்.

ன்றி, மாதவன்முல்லைநவாஸ்!

No comments:

Post a Comment