பல்வேறு விதமான வீடியோ பைல்கள் நம்மிடம் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தனி பைல் பார்மெட்டில் இருக்கும். அவற்றை பயன்படுத்தும் போது ஒரு சில பைல்கள் மட்டும் எதாவது கோளாருகளை உண்டாக்கும். அவ்வாறு உள்ள வீடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். வீடியோக்களை கன்வெர்ட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் Total video converter ஆகும். இதை தவிர்த்து சிறந்த மென்பொருட்கள் உண்டா என்று இணையத்தில் தேடி பார்த்தால் பல இருக்கிறன. அவற்றில் ஒன்றுதான் AIO Video Converter, இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Choose Encoding Profile என்பதில் எந்த பார்மெட்டில் வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.
பின் Add பொத்தானை அழுத்தி எந்த வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert என்ற பொத்தானை அழுத்தவும்.
இந்த அப்ளிகேஷனின் அமைப்பை (Setting) உங்கள் விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் எந்த வீடியோ பைலாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பைல் பார்மெட்டில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.
|
No comments:
Post a Comment