மார்க் ஜூகர்பெர்க் 2003ல் ஹார்வேட் மாணவன் ஆறே வருடங்களில் கோடீஸ்வரன். எப்படி? இந்த கேள்விக்கான பதில் தான் இந்த திரைப்படம். கற்பனைகதையல்ல. நிஜத்தில் கண் முன்னே பார்த்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒருவனின் கதை. வழக்கமாய் நிஜ வாழ்க்கை கதைகள் அதிலும் சமகாலத்தில் வாழும் ஆட்களை பற்றிய கதைகளில் பெரிதாய் ஈர்பிருக்காது. அதிலும் வெறும் கம்ப்யூட்டர், வெப்சைட் என்று சுற்றி கொண்டிருக்கும் ஒருவனது கதையை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா?என்று யோசிப்பவர்களும் முடியும் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லில்யிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியரும், இயக்குனரும்.
கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான். ஒரு போதையான மது இரவில் ஹாவர்ட் ரோயிங் டீமிலிருக்கும் இரட்டையர்கள் தங்கள் சைட்டுக்கு வேலை செய்ய மார்க்கை அழைக்கிறார்கள்.
சிறிது நாட்கள் கழித்து மார்க்குக்கு பேஸ்புக் பற்றிய ஐடியா தோன்ற, அவனது நண்பன் எடுராடோவிடம் சொல்கிறான். அந்த இணைய தளம் மூலமாக ஹாவர்டிலிருக்கும் அத்துனை மாணவர்களையும் ஒன்றினைத்து அவர்களுக்குள்ளான தகவல்களை பரப்ப முடியும் என்று சொல்ல, எடுராடோ அவனுக்கு ஆயிரம் டாலர் கொடுத்து உதவுகிறான். சடுதியில் ஹாவர்டில் பிரபலமான பேஸ்புக்கின் வளர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ஆலமரம் வளர ஆரம்பிக்க பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இரட்டையர்கள் சகோதர்களும், முதலாய் பணம் கொடுத்து உதவிய நண்பனும் மார்க் தங்களை ஒதுக்கிவிட்டு தங்கள் ஐடியாவையும் சுட்டு விட்டதாய் கேஸ் போட, அதில் எவ்வாறு மார்க் வென்றெடுக்கிறான் என்பதுதான் கதை. முழுக்க, முழுக்க, வசனங்களாலேயே நிரப்பப்பட்ட திரைக்கதை. அதிலும் மார்க் பேசும் சப்டைட்டிலில்லா ஸ்பீடுக்கு கூடவே ஓடி சில சமயம் நுரை தள்ளுகிறது.
ஆனால் படத்தின் ஆரம்ப காட்சியில் வரும், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஷாட்டுகள் கொண்ட நீண்ட காட்சியை என்ன தான் சுவாரஸ்யமாய் டயலாக் நடிப்பு என்றிருந்தாலும் நம் இயக்குனர்கள் வைப்பார்களா? என்று தெரியவில்லை.. ஆனால் சரி சீன். இம்மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகளில் இருக்கும் சமகால காதல், பணம், துரோகம், செக்ஸ் போன்ற சுவாரஸ்யங்களை வைத்து திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும்.

|
No comments:
Post a Comment