Friday, March 4, 2011

Paranormal Activity 2



Paranormal_Activity_2_1284811474_2010இரண்டு வருடங்களுக்கு முன் ஹாலிவுட்டையே கலக்கிய படம். வெறும் பதினைந்தாயிரம் டாலரில் படமாக்கப்பட்டு, பின்பு இரண்டு ஆண்டுகள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து, ஸ்பீல்பெர்க்கின் கண்ணில் பட்டு, மோட்சமடைந்து பாரமவுண்டினால் ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 100 மில்லியனுக்கு மேல் வசூல் செய்த படம். சுமாராய் பேசப்படும் படத்தையே எட்டு பார்ட் எடுக்கிறவர்கள் இவ்வளவு பெரிய ஹிட்டை எடுக்காமல் இருப்பார்களா? அதான் இரண்டாவது பார்ட்
.
Paranormal Activity 2 2010 TS Xvid Feel-Free.avi_snapshot_01.00.16_[2010.10.30_07.30.44]
வழக்கமாய் இம்மாதிரியான படங்களில் முதல் பார்ட்டில் செட்டான ஒரு பார்மெட் இருக்கும். அது ஒரு சக்சஸ் பார்முலாவாக இருப்பதால் மீண்டும் அதையே இன்னும் பாலீஷ் செய்யப்பட்டு இன்னும் ப்ரெஷ்ஷாக கொடுக்க முயற்சிப்பார்கள். இதிலும் அதையே.. செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இக்கதை முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது, அதன் முன் பகுதி. முதல் பகுதியின் முடிவையும் இரண்டாவது பகுதியின் முடிவையும் மிக அழகாய் முடிச்சு போட்டிருப்பது திரைக்கதையாசிரியன் திறமை.
Paranormal Activity 2 2010 TS Xvid Feel-Free.avi_snapshot_00.11.44_[2010.10.30_07.29.17]கிறிஸ்டி ரே பிரசவத்திற்கு பிறகு தன் குழந்தை ஹண்டருடன் வீட்டிற்கு வருகிறாள்.  குழந்தையின் முதல் சில மாத வீடியோக்களுடன் காட்சிகள் நகர்கிறது. அவளுடய கணவன் டான், அவனுடய பெண், வீட்டை பார்த்துக் கொள்ளுமொரு  ஆயா போன்ற பிலிப்பைன்ஸ் பெண், ஏபி எனும் நாய் இதுதான் அவர்கள் குடும்பம். ஒரு நாள் இரவு வீட்டின் எல்லாக் கதவுகளும் பூட்டியிருக்க.. வீட்டையே தலைகீழாக்கி போடப்பட்டிருக்க.. கிறிஸ்டியின் ஒரு நெக்லஸை தவிர எதுவும் திருடு போகவில்லை. எனவே வீடு முழுவது செக்யூரிட்டி கேமராக்களை பொருத்துகிறார்கள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் நமக்கு காட்டப்பட.. மெல்ல.. மெல்ல அமானுஷ சக்திகளின் அட்டகாசங்கள் ஆரம்பமாகிறது. ஆனால் அதை நம்பாத டான்.. எல்லாவற்றுக்கும் ஒரு விஞ்ஞான காரணம் சொல்கிறான். ஒரு கட்டத்தில் அமானுஷ சக்தி குழந்தை ஹண்டரிடம் போய் நிற்க, அவனுடய் ரூமிலிருக்கும் நாய் அதை கண்டு மிரண்டு குலைக்க ஆரம்பிக்கிறது. திடீர் திடீரென நடக்கும் சில பல அதிர்ச்சிகள் தொடர, வேறு வழியில்லாமல் முன் இந்த வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்று சொன்ன ஆயாவை வேலையை விட்டு விரட்டிய டான் அவளை வரவழைக்கிறான். அவள் ஒரு சிலுவையை அவனுக்கு கொடுத்து, இவ்வீட்டில் உள்ள துஷ்ட சக்தியை கிறிஸ்டியின் மீது வைத்து அவளுடய ரத்த சம்பந்தமான அவளுடய சகோதரி கேட்டியின் மீது மாற்றிவிட்டால் அவனுடய குழந்தையும், குடும்பமும் பிழைக்கும் என்கிறாள். ஆனால் அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஏறு மாறானவை.  டேன் மற்றும் கிறிஸ்டிக்கு என்ன ஆயிற்று? குழந்தை ஹண்டரை ஏன் அமானுஷ்ய சக்தி ஆகர்ஷிக்கிறது? அவனுக்கு என்னவாயிற்று என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதில் தெரிந்து கொள்ளுங்கள்.
Paranormal Activity 2 2010 TS Xvid Feel-Free.avi_snapshot_00.56.37_[2010.10.30_07.30.40]தன் ஒரே தொந்தரவான நாயை ஒரு நாள் அமானுஷ சக்தி அடித்துப் போட, அந்த ஒரே நாள் இரவில் நடக்கும் பல விஷயங்கள் ஸ்பைன் சில்லிங். படம் முடிந்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது முதல் பாகத்தின் கேட்டியை வைத்து இந்த பாகத்தை முடித்திருப்பது.. அட்டகாசம்.  நிச்சயம் வழக்கமான ரெண்டாவது பாகம் தானே என்ற சலிப்புடன் பார்க்க ஆரம்பித்தவர்களை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடும் க்ளைமாக்ஸ்.

டெக்னிக்கலாய் முதல் பாகத்தைவிட சிறப்பாக இருக்கிறது. முதல் பாகத்தில் கூடவே ஓடிவரும் கேமரா காட்சிகள் தான் அதிகம் இருக்கும். இதில் அம்மாதிரியான காட்சிகள் சில சமயம் பார்வையாளர்களின் பாயிண்ட் ஆப் வியூவிலும், சில காட்சிகள் டேனின் பெண்ணின் கேமராவின் பார்வையிலும் இருக்கிறது. சிசி டிவி கோணங்களில் காட்டப்படும் காட்சிகள் மெல்ல, மெல்ல..  ஒரு கட்டத்தில்  நடு முதுகில் சில்லிட வைக்கிறது. ராத்திரியில் படம் பார்த்தால் நிச்சயம் வீட்டின் ஏதாவது அறையில் சத்தம் கேட்டால் ஒரு ஜெர்க் ஏற்படுவது நிச்சயம்.

No comments:

Post a Comment