Thursday, January 13, 2011

ரஜனியின் என்னைக் கவர்ந்த படங்கள்

              இது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே அவரை ரசிப்பவர்களாக இருந்தாலும்.. நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை.. எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் அதன் நடிப்பே பெரும் கதையை சொல்லாமல் சொல்லி விடும். ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜி தன் கண்ணளால் காட்டுவாரே அதற்கடுத்த்தாக கண்காளால் ஒரு கலை ஜாலம் காட்டும் நபராக என்னை கவர்ந்தவர் ரஜனி தான்..

       நான் அதிகம் ரசித்த படங்களை தருகிறேன் இது ஒரு தரப்படுத்தலில் அடங்கவில்லை.
தளபதி
மணிரத்தினத்தின் இப்படம் அவரது வித்தியாசமான படைப்புக்களில் ஒன்று. குறிபாகச் சொல்வதானால் தளபதி திரைப்படத்தில் நான் மறுபடி மறுபடி பார்த்த காட்சி எது தெரியுமா. அந்தக் கோயில் கேணியில் தாயை மறைந்திருந்து பார்க்கும் காட்சியும்அவர் முகத்தோடு பேசும் இவர்கண்களின் நளினமுமாகும். அதற்கேற்றால் போல் ஒலிக்கும் இசை ஞானியின் பாடல் “சின்னத் தாயவள் ” மனதில் பெரும் அழுத்த்த்தை உண்டாக்கும் காட்சியது.
படிக்காதவன்
அதிலே இவர் கண்கள் பேசும் காட்சியும் பின்னணி இசையும் மிகவும் தத்ரூபமானது அதுவும் யாருடன் பேசினார் தெரியுமா நடிகர் திலகத்துடனல்லவா. சிறுவயதில் பிரிந்த அண்ணனைக் காண்கிறான் ஒரு இளைஞன். தன்னை வியப்போடு பார்க்கும் அந்த இளைஞனை வியந்து பார்க்கும் வழக்கறிஞர்... அது ஒரு உச்சக்கட்ட நடிப்பு அதை விபரிப்பது சிரமமானது.
எந்திரன்
இப்படம் பற்றி பலர் பலதையும் சொல்லியாகிவிட்டது. அதிலும் அவர் கண்கள் பேசுகிறது ஆனால் அந்த இயந்திரத்தனம் அதை மறைக்க முயற்சிக்கிறது. அதில் வரும் வசியின் பார்வையை பாரங்கள் எப்போதும் ஒரு அறிவு கூர்மையான அப்பாவித்தனம் இருக்கும்.
தர்மதுரை
அதிலும் இவரது உச்சக்கட்ட காட்சி ஒன்றை நான் கண்டேன். தம்பி செய்த கொலைக்காய் கைதாகிப் போகும் வேளையில் ஒரு பார்வை பார்ப்பாரே. அதிலே பாசம், ஏமற்றம், வஞசகம் எல்லாம் தெரியம்.
சிவாஜி
அதிலே பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தாத காட்சி தான் ஆனால் அங்கும் அவர் கண் பேசிக் கொள்ளும்.. அதுதாங்க ஸ்ரேயாவை ஏற இறங்கப் பார்ப்பாரே அதைத் தான் சொல்கிறேன்.
சந்திரமுகி
அதிலே ஒரு நகைச்சுவைக் காட்சியை குறிப்பிடுகிறேன். வடிவேலுவுடன் அந்த பேய் பற்றி விபரிப்பாரே அப்போது முழிக்காதா எங்களையும் திருதிருவென்று முழிக்க வைத்தவிடுவார்.
ஆறிலிருந்து அறுபது வரை
அதிலேயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கட்டம் தான். அவரது இறுதித் தருணங்களில் அந்த சாய்மனைக் கட்டிலில் இருந்தபடி ஒரு ஏக்கப்பார்வை ஒன்றை உதிர்ப்பாரே ஒரு ஏழ்மையின் தோற்றப்பாடு, ஏதொ சாதித்த்தாய் தெறிக்கும் பார்வைக் கோடுகள் எம் மனதை உருக்கும் காட்சியது.
தில்லு முல்லு
அதில் ஒரு காட்சியில் திணரறும் வேளையில் இரு விழிகளையும் குவித்தும் விரித்தும் ஒரு ஜாலம் காட்டுவாரே நினைவிருக்கா..?
மன்னன்
அதிலே ஒரு சமையல் குறிப்பிற்கு சமைப்பாரே ஒரு சமையல் அப்போது கடைசியில் ஒரு எமாற்றப்பார்வை பார்ப்பாரே அந்தப் பார்வை எப்படியிருந்தது.
முத்து
நானும் கடைசிப்படத்தை ஒரு அழுத்த்த்துடன் தர வேண்டுமல்லவா.... தந்தையாக இவர் நடித்த முழுக் காட்சியிலும் இவரது கண்களுக்கு  தான் உயரிய நடிப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆமாம் அப்படி ஒரு சாந்தமான ஈர்க்கும் கண்கள். “விடுகதையா இந்த வாழ்க்கை” என்று பாடலிலே இன்னும் உயர்வாகக் காட்டியிருப்பார்கள்.

        என்ன பதிவு பொலிவில்லாமல் இருக்கிறதா..?? எனது ரசனை இப்படிப்பட்டது தான் உண்மையில் எனக்கு ஆர்ப்பாட்டமான, ஹீரோயிசமான காட்சிகள் பிடிக்காது நடிப்பவரை மட்டும் தான் நான் நடிகனென்று எற்றுக் கொள்ளும் மனம் உடையவன். அந்த வகையில் தான் நான் விரம்பிப் பார்க்கும் படங்களும் அமைந்திருக்கும். நான் ஒரு ரஜனியின் தீவிர ரசிகனில்லை (அப்ப கமலுடைய ஆளா..??) என்றால் அதுவும் இல்லை என்பதே என் பதில் நான் வேறொருவருடைய ஆள்..
என்னை தொடர்பதிவிற்கு அழைத்த முதல் நபரும், என் தளத்தை தன் தளத்தில் பார்வைக்கு வைத்த முதல் நபரும், என் பதிவுலகத்தின் ஆரம்ப கால நண்பருமான ரஹிம் காசாலி  அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
       அடுத்ததாக இன்னுமொரு நண்பரும் தொடர்பதிவிற்கழைத்திருந்தார் அடுத்த பதிவில் அதை தொடர்கிறேன். யார் அந்த நடிகர் என எனத் தெரிய வேண்டுமா வேறு யாருமில்லை நடிப்பின் வரைவிலக்கணங்களில் ஒன்றாக கருதப்படும் கமல்ஹாசன் பற்றியது

No comments:

Post a Comment