உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்சை முந்துவது குப்புசாமிக்கு இயலாத காரியமாக இருந்தது. அவருக்கு சாவதற்குள் பில்கேட்சை முந்த வேண்டும் என்ற வெறி இருந்தது. இத்தனைக்கும் பில்கேட்சை விட இவருக்கு பல வயது அதிகம். இதை எண்ணியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்த குப்புசாமி ஒரு நல்ல விசயம் செய்தார். தன் மகனையும் தன்னைப்போல வியாபாரப் புலியாக மாற்றியிருந்தார். இவர் உலகின் இரண்டாம் தரப்பணக்காரராக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
சில ஆய்வாளரைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டார். அவர்கள் சொன்னார்கள். “உங்கள் வர்த்தகம் இப்படியே இருக்குமானால் இன்னும் 50 வருடத்தில் பில்கேட்சை முந்த முடியும்” என்றார்கள். குப்புசாமிக்கு தூக்கிவாரிப் போட்டது ஏனெனில் அந்த நிலையில் இவர் மகனுக்கே பல வயதாகிவிடும். இதை எண்ணி எண்ணி குப்புசாமி புலுங்கிப்போனார். அப்போது தான் இவருக்கு ரஷ்யாவின் விஞ்ஞானம் உதவ முன்வந்தது.
சில நாட்களாக குப்புசாமியில் பெரிய மாற்றம் தெரிந்தது. அவர் இப்போது முன்னர் போல் இல்லை. அதிகம் இணையத்தில் இருந்து ஏதோ கற்கிறார் அதிகம் உடற்பயிற்சி செய்கிறார். அவரின் செயற்பாடு எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தது.
ஒருநாள் திடிரென மகனை அழைத்த குப்புசாமி “மகனே நான் சில விடயங்களுக்காக விண்வெளி போகிறேன் வர ஒரு சில மாதங்களாகலாம். உன் 24 வயதென்பது குழப்படியானது தான். ஆனால் நீ மற்றவர் போல் இருக்காதே. நான் வரும்வரை நீ இந்த வர்த்தகத்தை கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும்” என்று கூறி விடை பெற்று சென்றார்.
ஒருசில மாதங்கள் உருண்டோடின குப்புசாமியின் விண்கலம் ரஷ்யாவின் தளத்தில் தரையிறங்கியது. அவரை வரவேற்க அவரது அகன் வந்திருப்பதாக தெரிவித்தார்கள். கண்களால் துலாவியபடியெ குப்புசாமி நடந்து போனார். அப்போது “அப்பா” என்றொரு குரல் கெட்டது. திரும்பிப் பாரத்து தன் மகனை அடையாளம் காண அவருக்கு ஒரு கணம் எடுத்தது. அவன் தலையில் மொட்டை விழுந்து ஒரு கிழவனாக நின்றான். அவன் கையில் ஒரு சிறு பிள்ளையிருந்தது. அது இவரை “தாத்தா” என்று கூப்பிட்டது. இதெல்லாம் இவர் எதிர்பார்த்தது தான் ஆனால் இந்தளவுக்கு இருக்குமென்று எதிர்பார்க்க வில்லை.
அவருக்க இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருந்துது. சுவரில் தொங்கிய அந்த சுவரொட்டித் தொலைக்காட்சியில் பில்கேட்சின் இறுதி ஊர்வலத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்த மகன் சொன்னான் “அப்பா பில்கேட்ஷ் போன வாரம் மாரடைப்பில் இறந்திட்டார். சாகும் போது அவருக்கு 97 வயது தெரியுமா? நீங்க ஐன்ஸ்டினுக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். இனி நீங்க உலகின் முதல்தர பணக்காரராகலாம். நான் சாகும் முன் என் கண் குளிர அந்தக் காட்சியை காணணும் அப்பா” என்று தன் வயோதிபக் குரல் தளதளக்க கூறினான்.
குறிப்பு – ஐன்ஸ்டினின் TIME RELATED THEORY ப்படி விண் வெளியில் ஒளியின் வேகத்தை விட வேகமாகப் பிரயாணிக்கையில் காலக்கடிகாரத்தை வெல்லலாம்.
சுவரொட்டித் தொலைக்காட்சி – LCD T.V
|
No comments:
Post a Comment