மன்மதன் அம்புவின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல். தான் திரைக்கதை எழுதி நடித்து இன்று வெளியாகி உள்ள மன்மதன் அம்பு படத்தை நேற்று தன் சினிமா உலகின் நெருங்கிய நண்பர் ரஜினிக்கு போட்டுக் காண்பித்தார் கமல். படம் பார்க்க ரஜினி தன் குடும்பத்துடன் வந்தார். கமலும் குடும்பத்தோடு வந்திருந்தார். கமலின் மற்ற சினிமா நண்பர்களும் இந்தச் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டனர்.
தன் திரைக்கதையில் உருவான தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் படங்களுக்கும் இப்படி ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் கமல். அதிலும் திரையுலக நண்பர்கள், இளம் இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே கருதுகிறார் கமல்.
காமெடி கலந்த கதையில் நடிப்பது என்பது கமலுக்கு ஒன்றும் புதிதில்லை. அதுவும் இவரோடு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். இவர்கள் காம்பினேஷனில் மீண்டும் வெளிவந்திருக்கிறது மன்மதன் அம்பு. இது ஒரு வியாபார சினிமா என்று கமலே சொல்லிவிட்டார். அதனால் படத்தில் ஆட்டம் பாட்டம் அதிகமாம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் 'டண்டணக்கா' இசையை கேட்கும் போதே, இதை பல பேர் உணர்ந்திருப்பார்கள். விடுமுறை நாட்களை என்ஜாய் பண்ண சரியான படம் என்றும் மன்மதன் அம்பு படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.
படத்தில் சூர்யா ஒரு பாடலுக்கு வருகிறார் என்பது படத்தின் இன்னொரு ஹைலைட். படத்துக்கு முக்கியமாக உதவி இருப்பது வசனங்கள் தானாம். அப்படி கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பை வரவழைக்கிறதாம் வசனங்கள். அதை விட, படத்துக்கு சிறப்பாக உதவியது ஷூட்டிங் செல்வதற்கு முன்பு படத்தில் நடிப்பவர்கள் ஒத்திகை பார்த்ததுதான் என, படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
சரி படம் பார்த்து ரஜினி என்ன சொன்னார்?... படத்தை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்த ரஜினி. படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் கமலைத் கட்டி அனைத்து வாழ்த்தினார். குடும்பத்தோட பார்த்து சிரித்தோம். நல்ல படம் என்று கமலிடம் சொன்னார் ரஜினி.
சிரிக்க மட்டும் இல்லைங்க, சிந்திக்கவும் நிறைய விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறாராம் கமல்.
|
No comments:
Post a Comment