சிலர் நன்கு படித்து,நல்ல பதவியிலிருப்பார்,ஏன் புத்திசாலிகளாகக் கூட இருப்பார். அனால், மற்றவர்களுடன் பழகத் தெரியாது.அதனால் இப்படிப்பட்ட நபர்களுடன் நட்பு பாராட்ட யாரும் முன் வருவதில்லை.உறவினர்கள்,நண்பர்கள்,உடன் பணியாற்றுவோர் என,நம் தினசரி வாழ்வில் பலரை சந்திக்கிறோம்.அவர்களுடனான நட்பு வலுப்பட வேண்டும் என்றால்,நமக்கு இனிமையாகப் பழகத் தெரிய வேண்டும்.மற்றவர்களுடன் பழகுவது என்பது ஒரு கலை;இனிமையாகவும் கலகலப்பாகவும் பழகும் ஒருவரிடம் எல்லோருமே இனிமையாகப் பழகத் துவங்குகின்றனர்.
கல்வி,அறிவு,திறமை,துணிச்சல் ஆகியவற்றைப் போன்றே வாழ்வின் வெற்றிக்கு மிக முக்கியமான குணமாக விளங்குவது பிறரிடம் பழகும் தன்மை.இன்று பல கம்பெனிகளில் வேலைக்கு விண்ணப்பித்தால் பாட சம்பந்தமான கேள்விகளை மாயும் கேட்டு உங்கள் அறிவை சோதிப்பதில்லை.உங்களது பேச்சு,பாடி லாங்குவேஜ்,ஆளுமைத் திறன் ஆகியவற்றோடு நீங்கள் மற்றவருடன் பழகும் தன்மை ஆகியவற்றையும் கண்காணிக்கின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில்,நீங்கள் ஒரு வேளைக்கு விண்ணப்பித்தால்,நிறுவனத்திலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காண செய்கின்றனர்.அதன்மூலம்,உங்களால் பிறருடன் எளிதாக பழக முடியுமா,அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப் போக முடியுமா என்றும் பார்க்கின்றனர் எனவே,பிறரிடம் பழகக் கற்றுக் கொள்ளுகள்,உறவுகளை வலுப்படுத்துங்கள்.அப்படி நாம் சந்திக்கும் நபர்களுடனான நட்பு வலுப்பட வேண்டுமென்றால்,நிச்சயமாக நாம் சில செயல்களை மேற்கொள்ள வேண்டும்.அப்போது தான் நம்முடன் பழக மற்றவர்கள் ஆர்வம் காட்டுவர்.பிறருடனான நமது உறவு வலுப்படும்.அப்படி என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
சொற்களை நயமாகவும்,இனிமையாகவும் கையாள வேண்டும்.அதாவது சொற்களை பொறுக்கி எடுத்து பேச வேண்டும்.வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்களை கவனித்தால், அவர்கள் சொற்களை நன்றாக கற்று,அவற்றைச் சரியாக பயன்படுத்துவதை காணமுடியும்.மேலும்,சொல்லின் அழகை வெளிக் கொண்டு வருவதோடு,அவற்றை தூண்டி இயக்கக் கூடிய தன்மையையும் சரியாகப் பயன்படுத்துவர்.அடுத்து,நம்மில் பலரும் நாம் என்ன பேசினாலும்,அதை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.அப்படி இல்லாமல்,எதிர்மறையான கருத்துகளையும் முக மலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும்,மற்றவர்களோடு பேசும் பொது,நம் கருத்தை மட்டுமே கூறிக் கொண்டு இருக்கக் கூடாது.மற்றவர்களையும் பேசவிட வேண்டும்.அப்போது தான் அவருடைய கருத்தும் தெரிய வரும்.அப்படி மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நாம் மட்டும் பேசிக் கொண்டே இருந்தால்,கேட்பவருக்கு எரிச்சல் தான் வரும்.விளைவு,நம் கருத்து சரியாக இருந்தால் கூட,அதை கேட்கக் கூடாது என்ற நிலைக்கு அவர் வந்துவிடுவர்.மேலும்,உங்களின் இந்த குணம் இருவருக்கும் இடையே உள்ள உறவை பாதிக்கும்.எனவே,பேசுங்கள்,பேச விடுங்கள்.
|
No comments:
Post a Comment