ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவையினை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு கடிதம் எழுதியுள்ளது.
பாதுகாப்பு விதிகளை இவை மீறுவதனைக் கண்காணிக்க இயலவில்லை எனக் காரணம் காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இச்சேவையை வழங்கிய முதல் தனியார் நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் சென்ற வாரம் இந்த சேவையைத் தொடங்கியது. 3ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கும் இதே போன்ற கடிதம் ஒன்றை அரசு அனுப்பியுள்ளது. அரசின் பாதுகாப்பு விஷயங்களைக் கவனித்துக் கொள்ளும் பிரிவினால், இந்நிறுவனங்கள் வழங்கி வரும் இந்த சேவையின் சில பிரிவுகளை, குறிப்பாக வீடியோ அழைப்புகளை, கண்காணிக்க முடியவில்லை என்பதால், இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
3ஜி சேவையில் வீடியோ அழைப்புகளே மக்களின் முதல் விருப்பமாக இருக்கின்றன. நிறுவனங்களும் இதனையே விரும்புகின்றன. இந்நிலையில் இந்த தடை விதிப்பு மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை அளிக்கும்.
ஆனால் இந்தத் தடை பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு விதிக்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 3ஜி சேவை வழங்கும் உரிமத்திற்கென, தனியார் நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ. 51,000 கோடி செலுத்தியுள்ளனர்.
ரிலையன்ஸ் ரூ.8,585 கோடி செலுத்தி, 13 மண்டலங்களில் இந்த சேவையை வழங்க உரிமம் பெற்றிருந்தது
|
No comments:
Post a Comment