மொபைல் போன் சேவையில் அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போல, அண்மையில் வீடியோகான் மொபைல்ஸ் நிறுவனம்,விநாடிக்கு 0 பைசா என்ற திட்டத்தினைச் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீடியோகான் மொபைல் போனை வாங்குவோருக்கு, அதனுடன் வீடியோகான் நிறுவனத்தின் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஒருவர், தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக 30 நிமிடங்களும் இலவசமாக எந்த நெட்வொர்க் எண்ணுக்கும் பேசலாம்.
அதன் பின்னர் பேசும் அழைப்புகளுக்கு, விநாடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். வாங்கும் போனைப் பொறுத்து இந்த சலுகை மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் அடங்கிய ஏழு மொபைல் மாடல்களை, வீடியோகான் மொபைல்ஸ் விற்பனைக்கு வெளியிட்டு உள்ளது. வி 1676, வி 7400 மற்றும் வி 7500 ஆகிய மாடல்களை வாங்குவோர் மேலே குறிப்பிட்ட வகையில் தினந்தோறும் 30 நிமிடங்கள் வீதம் பேசலாம்.
இன்னொரு வீடியோகான் சிம் பயன்படுத்துபவர் எவருடனும், ஓர் ஆண்டு காலம், எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பேசலாம். வி 1404 மற்றும் வி 1428 ஆகிய மாடல் போன்களை வாங்குவோர் ஓர் ஆண்டிற்கு தினந்தோறும் 10 நிமிடங்கள் எந்த நெட்வொர்க் சேவையுடனும் பேசலாம்.
வி 202 மற்றும் வி 1292 மாடல்கள் வாங்குவோர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தினந்தோறும் 10 நிமிடங்கள் லோக்கல் காலாக, இலவசமாக எந்த போனுடனும் பேசலாம். தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, கேண்டி பார் வடிவம் எனப் பலவகைகளில் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வி 7500:
ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 3.5 ஜி இணைப்பு, வை-பி, ஜி.பி.எஸ்., உடன் 8 ஜிபி கார்ட், 5 எம்பி கேமரா, 3.2 அங்குல மல்ட்டி டச் கெபாசிடிவ் ஸ்கிரீன், 1230 mAh பேட்டரி இரண்டு, கார் சார்ஜர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
வி 7400:
ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 3ஜி இணைப்பு, வை-பி, 2.8 அங்குல ரெசிஸ்டிவ் திரை, 1150 mAh பேட்டரி ஆகியவை உள்ளன.
வி 1676:
இரண்டு சிம், 2.4 அங்குல திரை, உள்ளாக அமைந்த லவுட் ஸ்பீக்கர், 2 எம்பி கேமரா, ஜாவா, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., ரெகார்டிங் வசதியுடன் எப்.எம். ரேடியோ, 1000 mAh பேட்டரி, நிம்பஸ் மற்றும் ஆப்பரா மினி பிரவுசர் கொண்டது.
வி 1428:
இரண்டு சிம், 2 அங்குல திரை, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் விஜிஏ கேமரா, புளுடூத், எம்பி3 பிளேயர், 1800 mAh பேட்டரி ஆகிய சிறப்பு வசதிகள் உள்ளன.
வி 1404:
இரண்டு சிம், 1.8 அங்குல திரை, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் விஜிஏ கேமரா, எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, ஸ்டீரியோ ரெகார்டிங், எல்.இ.டி. டார்ச், 1800 mAh பேட்டரி ஆகிய சிறப்பு வசதிகள் கொண்டுள்ளது.
வி 1292:
இரண்டு சிம், எம்பி3 பிளேயர், 20மிமீ ஸ்பீக்கர், இரண்டு சிம், இரண்டு வண்ணங்கள் இணைந்த ஸ்லிம்மான வடிவம், பெரிய கீகள், ரெகார்டிங் உடன் எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச் ஆகிய வசதிகள் கொண்டது.
வி 202:
1.5 அங்குல திரை, எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச், 500 mAh பேட்டரி கொண்டது.
இந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் அன்கல் புன்கானி இது பற்றிக் குறிப்பிடுகையில், போன் மற்றும் சேவை என இரண்டு வழி செலவினைத் தவிர்த்து ஒரு முறை போன் பெற்றால், காசே இல்லாமல் மொபைல் போன் பயன்பாடு என்ற சலுகையை பயனாளர்கள் அனுபவிக்கலாம் என்றார்
Read more: http://therinjikko.blogspot.com/2011/01/0.html#ixzz1B7X9We4J
|
No comments:
Post a Comment