Tuesday, January 11, 2011

நோக்கியா இ-5 NOKIA E5

குவெர்ட்டி வகை கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட நோக்கியா இ-5, விற்பனைக்கு வெளியானது முதல், மக்களின் ஆதரவினைப் பெற்று வருகிறது. இதற்குக் காரணம் பயன்படுத்த மிக எளிதாக 
இருப்பதுவே எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



கீ பேட் சற்று பெரியதாகத் தரப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பாரைத் தொட்டால், எல்.இ.டி. விளக்கு ஒளிவிடுகிறது. இதனையே கேமராவிற்கும் பயன்படுத்தலாம். 3.2 அங்குல திரை இதில் தரப்பட்டுள்ளது. போனின் சார்ஜ் செய்திடும் போர்ட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்கெட் ஆகிய அனைத்தும் மேலாகத் தரப்பட்டுள்ளது.

இதன் ஹோம் ஸ்கிரீன் மட்டும் வேறுபட்டு படுக்கை வசமாகக் காட்சி அளிக்கிறது. ஷார்ட்கட் கீகளாகப் படத்தை வைத்து இயக்கும் கூடுதல் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மியூசிக் பிளேயர் மிகவும் துல்லிதமான ஒலியை ரம்மியமாகக் கேட்கும் வகையில் அளிக்கிறது.

இதற்கு அதன் 8 பேண்ட் கிராபிக் ஈக்குவலைசர் உதவிடுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி சேவையில் இன்டர்நெட் ரேடியோ கிடைக்கின்றன. MPEG4, 3GP மற்றும் WMVபார்மட்களில் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளேயிங் உள்ளது.

A2DP இணைந்த புளுடூத், 3ஜி, எட்ஜ் மற்றும் வை-பி தொழில் நுட்பம் நெட்வொர்க்கிங் இணைப்புகளுக்குக் கை கொடுக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள பிரவுசர்,சற்று மெதுவாகச் செயல்பட்டாலும், நன்றாக உதவுகிறது.

இதில் இலவசமாகத் தரப்பட்டுள்ள நோக்கியா மேப்ஸ், ஜி.பி.எஸ். வசதியுடன் இணைந்து நன்றாகச் செயல்படுகிறது. இதே போல பி.டி.எப். மற்றும் ஸிப் ரீடர், ஆக்டிவ் நோட்ஸ் ஆகிய அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. இதன் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது.

ஆனால் சற்று வித்தியாசமாக, செட் செய்யப்பட்டு இதன் போகஸ் உள்ளது. இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நொடிக்கு 15 பிரேம் வேகத்தில் வீடியோ இயங்குகிறது. போனின் பேட்டரி நல்ல திறனுடன் இயங்குகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால், வழக்கமான பயன்பாட்டில் இரண்டரை நாள் தாங்குகிறது. மெயில் பார்ப்பதற்காக, எந்நேரமும் இயங்கினாலும், இரண்டு நாட்கள் வரை பவர் கிடைக்கிறது. இதில் பேட்டரி சேவர் மோட் இருப்பது ஒரு கூடுதல் வசதியாகும். இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 11,000


Read more: http://therinjikko.blogspot.com/2011/01/5.html#ixzz1B7W4coAK

No comments:

Post a Comment