1.WorldWideWeb (1990): உலகின் முதல் இன்டர்நெட் பிரவுசர். இன்றைய பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு கற்காலத்து மனிதன். கிராபிக்ஸ் எதுவும் இல்லாத குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் இயங்கிய பிரவுசர். ஆனால் இந்த பிரவுசரில் இருந்தபடியே இணைய தளப் பக்கங்களை எடிட் செய்திட முடிந்தது இதன் சிறப்பாக இருந்தது.
2.ViolaWWW (1992): யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய வகையில் வெளியான முதல் பிரவுசர். முதன் முதலாக, பார்த்த இணைய தளங்களுக்கு முன்னும் பின்னும் செல்வதற்கும், ஹோம் பக்கத்தை அணுகுவதற்கும் வசதிகள் தரப்பட்டன. ஸ்டைல் ஷிட், ஸ்கிரிப்டிங் லாங்குவேஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் அளிக்கப்பட்டன.
3. Cello (1993): விண்டோஸ் (பதிப்பு 3.0) இயக்கத்தில் செயல்படும் வகையில் உருவான முதல் பிரவுசர். இதனை உருவாக்கிய தாமஸ் புரூஸ், வழக்குரைஞர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதன் மூலம் பெறுவதற்காக வடிவமைத்துத் தந்தார். பெற்ற தகவல்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் பார்மட்டிலேயே இருந்தன.
4. Lynx 2.0 (1993): இது உலகின் இரண்டாவது பிரவுசர். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றுமே பெற முடிந்தது. இதனால் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கிய கம்ப்யூட்டர்களில் இது இயங்கியது. 1993 வரை இது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது. டெக்ஸ்ட் மட்டும் தேவைப்பட்டவர்களால் அதிகம் நாடப்பட்டது. இன்றும் சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
5. NCSA Mosaic 1.0 (1993): மிக எளிமையான இயக்கத்திற்கு வழி வகுத்த முதல் பிரவுசர். இதனால் சாமானியர்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கியது. டெக்ஸ்ட் உள்ளாக படங்களையும் காட்டியது.
6. NCSA Mosaic 1.0 (1993): ஐ.பி.எம். நிறுவனம் இணைய உலாவித் தொகுப்புகளில் இந்த தொகுப்புடன் தான் நுழைந்தது. ஏற்கனவே மொசைக் அடிப்படையில் பிரவுசர்களை உருவாக்கியது. ஆனால், அது அந்நிறுவன கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் மட்டும் இயங்கியது. இது சிறப்பாகப் பேசப்பட்டாலும் குறிப்பிட்ட சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கியதால், அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
7. 7. Netscape Navigator 1.0 (1994): மொசைக் பிரவுசர் தயாரித்த வல்லுனர்கள் சிலர், அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, தனியே ஒரு பிரவுசரை உருவாக்கினார்கள். அதுவே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 1. இதன் எளிமை, வேகம் மக்களை அதிகமாகக் கவர்ந்ததனால், அதுவே பெரும்பாலானவர்களின் பிரவுசராக இடம் பெற்றது.
8.Microsoft Internet Explorer 1.0 (1995): நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசருக்குக் கிடைத்த புகழைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தானும் இந்த பிரிவில் இறங்கி, தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தந்தது. முதலில் அரைவேக்காடாக இருந்த இந்த பிரவுசர் நாளடைவில் மேம்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இயங்குகிறது.
09.Netscape Navigator 3.0 (1996): இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மக்களிடம் பெரிய அளவில் சென்றடையும் முன்னர், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 3, மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பதிப்பில் ஆடியோ,வீடியோ மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் சப்போர்ட் தரப்பட்டது, மக்களை இதனுடன் ஒட்டவைத்தது. இது அவ்வப்போது கிராஷ் ஆனாலும், மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.
10. Opera 2.0 (1996): நார்வே நாட்டைச் சேர்ந்த ஆப்பரா நிறுவனம் தன் முதல் ஆப்பரா பிரவுசரை 1996ல் கொண்டு வந்தது. நெட்ஸ்கேப் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்புகளில் பிரச்னையைச் சந்தித்த மக்கள், ஒரு மாற்றாக இதனைப் பயன்படுத்தினார்கள். இணையத்திற்கென வரையறை செய்யப்பட்ட பொதுவான கொள்கைகளுக்கிணங்க இது இயங்கியதால், இணைய தளம் தயாரிப்பவர் களுக்கு இது மிகவும் பிடித்த பிரவுசராக இருந்தது.
11.KDE Konqueror (2000): இது வெப் பிரவுசராக மட்டுமின்றி, ஒரு பைல் மேனேஜராகவும் இருந்தது. யூனிக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸ் இயக்கங்களுக்கு ஏற்றதாக இயங்கியது. பின்னாளில் வந்த சபாரி வெப் பிரவுசருக்கான அடிப்படையைத் தந்தது.
12. Microsoft Internet Explorer 5 for Mac (2001): மேக் ஓ.எஸ். எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஒரு பிரவுசர் தேவைப்பட்ட போது, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேக் சிஸ்டத்திற்கான பிரவுசரை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
13. Microsoft Internet Explorer 6.0 (2001): பிரவுசர் யுத்தத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உச்சத்திற்குக் கொண்டு போன பிரவுசர். இருப்பினும் பின்னாளில் ஹேக்கர்கள் இதன் பலவீனங்களைக் கண்டறிந்து செயல்பட்டபோது, மக்கள் சற்று பயத்துடனே இதனைப் பயன்படுத்தினர். மாற்று பிரவுசருக்குக் காத்திருந்தனர்.
14. Netscape 7 (2002): தன்னுடைய பிரவுசரைப் பயன்படுத்திய பலர், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குத் தாவியதனால், தன் பங்கினை நிலை நிறுத்த, நெட்ஸ்கேப் நிறுவனம் இந்த பதிப்பினை வெளியிட்டது. இதனுடைய குறியீட்டு வரிகளில் பெரும்பாலானவை ஓப்பன் சோர்ஸ் முறையில் மற்றவர்களுக்கு இலவசமாகக் கிடைத்தன. இருந்தும் இந்த பிரவுசரினால், மைக்ரோசாப்ட நிறுவனத்திற்கு முன் நிற்க இயலவில்லை. ஆனால், இந்த பிரவுசரே, ஓப்பன் சோர்ஸ் முறையில் மொஸில்லா நிறுவனத்தை, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கொண்டு வரத் தூண்டுதலாய் இருந்தது. பின்னாளில், மொஸில்லாவின் சில தொழில் நுட்பத்தினை, நெட்ஸ்கேப் கொண்டு வந்தாலும், மைக்ரோசாப்ட் முன்னால், நெட்ஸ்கேப் மறைந்தே போனது.
15. Mozilla Phoenix 0.1 (2002): நெட்ஸ்கேப்பின் சாம்பலில் இருந்து மொஸில்லா உருவாக்கிய பிரவுசர் இது. எளிமை, வேகம், நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இயக்கம், உருவாக்கம் ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு பிரவுசர்களை அமைப்பதாக மொஸில்லா அறிவித்து, இந்த பிரவுசரைக் கொண்டு வந்தது. இதுவே பின்னாளில் பயர்பேர்ட் (Firebird) மற்றும் பயர்பாக்ஸ் (Firefox) ஆக மாறியது.
16. Apple Safari Public Beta (2003): மேக் சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5, மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகக் கருதப்பட்டதால், ஆப்பிள் நிறுவனம் தன் சொந்த முயற்சியில், தன்னுடைய மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரவுசர் ஒன்றை உருவாக்கியது. பின்னாளில் இது சபாரி என்ற பெயரில் இடம் பிடித்தது.
17. Mozilla Firefox 1.0 (2004): தன் சோதனைத் தொகுப்புகள், மக்களிடையே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மொஸில்லா நிறுவனம் பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட்டது. மிக அதிகமாக மக்களால் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் என்ற பெயரைப் பெற்றது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்த மக்கள், பயர்பாக்ஸ் பக்கம் செல்ல, மைக்ரோசாப்ட் பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கத் தொடங்கியது.
18. Google Chrome Beta (2008): தேடல் இஞ்சினில் தன் இடத்தைப் பரவலாகவும், ஆழமாகவும் மக்கள் மனதில் பிடித்த கூகுள் நிறுவனம் தனக்கென ஒரு பிரவுசரை வடிவமைக்க விரும்பி, குரோம் பிரவுசரை வெளியிட்டது. வேகத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கும் இந்த பிரவுசர் இன்றும் மற்ற பிரவுசர்களின் இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வருகிறது. இன்னும் பல பிரவுசர்கள் இருந்தாலும், இந்த பிரவுசர்களே, தனிப்பட்ட தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, பிரவுசர் சந்தையில் தங்களுக்கென இடம் பிடித்தவையாக உள்ளன.
BROWSER - kalin
|
No comments:
Post a Comment