மருத்துவரின் பதில்:
ஆம், உங்களுக்கு எச். ஐ. வி கிருமி வர வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பரிசோதனைகள் படி, எச்.ஐ.வி நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. அதாவது, எச். ஐ. வி நோயாளிகளில் 100% பேரின் ரத்தத்தில் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது, ஆனால் அதே நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில்தான் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. இவ்வாறு எச்சிலில் காணப்படும் எச்.ஐ.வி கிருமிகளும் குறைந்த அளவிலேயே (low concentration) உள்ளன. ஆணும் எச் ஐ வி கிருமிகள் எச்சிலில் இருப்பதால், வாய் வழிப் புணர்ச்சி மூலம் உங்களுக்கு இந்த கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
மருத்துவ சமூகத்தில், இந்த வகையான பதிலுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. மேல் நாடுகளில், ஒரு தரப்பினர் வாய் வழிப் புணர்ச்சியால், எச்.ஐ.வி பரவுவதற்கு ஏதேனும் முறையான ஆதாரம் உள்ளதா என்று தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். வழக்கமாக பாலியல் நோய்களில் ஆதாரங்களைத் திரட்டுவது ரொம்ப கடினமான விடயம். நான் சொல்ல வருவது எனறால், மிருகக் காட்சியகத்தில், ஒரு புலி இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த புலி யாரையுமே கொன்றதாக ஆதாரம் இல்லை என்றாலும், நீங்கள் அந்தக் கூண்டுக்குள் போகாதீர்கள் என்று அறிவுறுத்துகிறேன்.
அதனால், ஆம் அந்த விலை மகளுக்கு எச்.ஐ.வி இருந்தால், உங்களுக்கும் அது பரவி இருக்க வாய்ப்பு உள்ளது, போய் பரிசோதனை செய்து கொளுங்கள்.
இதனை தடுக்க மிக எளிதான வழி ஆணுறையை உபயோகிப்பது தான். அதனால் அதனை உபயோகித்து, உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
|
No comments:
Post a Comment