நாட்களில் விதைகொண்ட
கிழட்டு மரம் கிளை
யறுந்து நிர்மூலமாகி
ரத்தம் சுண்டி
சுவாசம் காய்ந்து
நரம்புகள் உடைந்து
பிணைப்புகள் வெந்து
சுடுகாட்டுக்குழியில்
கட்டை சாம்பலாகி
சித்திரச்சுவடாய் சுவரில்
கண்ணாடிக்கூண்டாய்
மூன்றாம் நாள்
காரியத்துக்கு அஸ்தி
கரைக்கப்பட்டு காத்திருக்க
முதல் நாளிலேயே
தலைவாழை விரித்து
தன் மனையாளை
பணயம் நீட்டி
பாகப்பிரிவிணைக்கு
அடிக்கல் நாட்டி
வியர்க்கவிறுவிறுக்க
படையலிட்டு சொத்துக்கு
வேண்டிக்கொள்கிற
மாப்பிள்ளையே!
வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்
|
No comments:
Post a Comment