சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல கூகுள் நிறுவனம் எல்லா இடத்திலும் வெற்றிகொடி நாட்டி வருகிறது, சாதாரண சர்ச் இஞ்சின் என்ற நிலைமை மாறி இண்டர்நெட் என்றாலே கூகிள்தான் என்ற ஒரு நிலை உள்ளது, எங்கு பார்த்தாலும் கூகிள் நிறுவனத்தின் சேவைகள் தான், ஜிமெயில்,ஆர்குட், Youtube, Blog போன்று பல சேவையினை வழங்கி வருகிறது, தற்போது ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் பணியில் மும்முரமாகி இருக்கிறது கூகிள், சரி நான் சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ சென்று விட்டேன். நான் கூற வந்தது ப்ரவுசர் (GOOGLE CHROME) இதனை நாம் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் நிறுவ முடியும்.
இதனை பதிவிறக்கி கொண்டு, இணைய வசதி இல்லாமலேயே கூகுள் குரோமினை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். கூகிள் நிறுவனம் அனைத்தும் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது, ஈ-மெயில் என்றால் யாகூவினை பின்னே தள்ளி விட்டு ஜி-மெயில் முன்னேறி வருகிறது, அதே போல் தேடுபொறி சேவையிலும் மைக்ரோசாப்டின் தேடுபொறிகளை ஒரம் கட்டி விட்டதே என்று தான் சொல்ல வேண்டும்.
|
No comments:
Post a Comment