Facebook கணக்கு வைத்திருக்கும் பல பதிவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் பிளாக்கை அப்டேட் செய்யும் பொழுதும், Facebook இல் நுழைந்து தங்களது புதிய இடுகையின் லிங்கை கொடுத்து அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உங்கள் பிளாக்கில் புதிய இடுகைகளை இடும்பொழுது Facebook இல் ஆட்டோமாடிக்காக அப்டேட் ஆக வேண்டுமெனில் ஒரு எளிய வழி உங்களுக்காக.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறத்தில் உள்ள Account லிங்கில் உள்ள Application Settings ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு திறக்கும் திரையில் Notes லிங்கை க்ளிக் செய்து மறு திரையில் மேலே வலது புறமுள்ள Notes Settings பாக்ஸில் Import blog லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இனி Import a Blog டேபில் Web URL க்கு நேராக உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பக்கத்தின் feed url ஐ கொடுத்து (உதாரணமாக http://suryakannan.blogspot.com/feeds/posts/default) Confirmation check box இல் டிக் செய்து Start Importing பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் Confirm Import பொத்தானை சொடுக்குங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் ப்ளாக் அப்டேட் செய்யப்படும் பொழுது தானாகவே உங்கள் Facbook சுவற்றில் வெளியிடப்படும். இதன் மூலம் உங்கள் பிளாக்கின் டிராபிக்கும் அதிகரிக்கும்.
|
No comments:
Post a Comment