Monday, December 19, 2011

வீட்டைவிட்டு ஓடிப்போயிடுவேன்!-மிரட்டும் குழந்தைகள்.. மிரளும் அம்மாக்கள்: ஓர் அதிர்ச்சி அலசல்

வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்! - மிரட்டும் குழந்தைகள்... மிரளும் அம்மாக்கள்: ஓர் அதிர்ச்சி அலசல்" - பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது? இதற்குத் தீர்வு தான் என்ன..?


‎''அம்மா, அப்பாவிடம் கோபித்துக் கொண்டோ, சண்டை போட்டுக் கொண்டோ வீட்டை விட்டு ஓடிவரும் பதின்பருவ சிறுவர் - சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கைதான் அதிகம்.." 

''எம்பொண்ணுக்கு படிக்கறதுல அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா, அவ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறணுமேனு 'படி... படி'னு சொல்வேன். இப்போ எல்லாம், 'ரொம்ப படுத்தினா... வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்’னு சொல்றா. எனக்கு உயிரே போறமாதிரி இருக்கு. அதனால் படினு சொல்றதையே நிறுத்திட்டேன். படிப்பைவிட புள்ளைதானே முக்கியம்..?!''

- இப்படி மனம் பிழியும் வருத்தத்துடன் சொல்லும் அம்மாக்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதிலிருந்தே... பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது என்பதை நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும்...

இப்பிரச்னைக்கு தீர்வு தான் என்ன..?

"வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்! - மிரட்டும் குழந்தைகள்... மிரளும் அம்மாக்கள்: 
ஓர் அதிர்ச்சி அலசல்"

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்


குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.

இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.

நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.

இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.

எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ‘நீ ஒன்றுமே செய்யவில்லை’ எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ‘நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்’ என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.

மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! ‘அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்

அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)

அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.

மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.

அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.

தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி

பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.

இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.

இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.

நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)

ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.

ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய சவுண்டான தளம் இது.

ஒரு அழகான பறவையின் படத்தை காலண்டர் ஒன்றில் பார்க்கிறோம். அந்த பறவையின் அழகில் ரசிக்கும் நாம் அதன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் அது எப்படிக் கூவும் என்று அறிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? இல்லை; ஏனென்றால் எங்கு போய் அதனை அறிந்து கொள்வது என்ற எண் ணத்தில் விட்டுவிடுகிறோம். 

நம் தேடுதல் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றும் கம்ப்யூட்டர் சர்ச் இஞ்சின்கள் இது போன்ற சத்தத்தைத் தேடும் சர்ச் இஞ்சின் எதனயாவது உரு வாக்கி உள்ளனவா என்று என் நண்பரைக் கேட்ட போது சான்ஸே இல்லை என்று கை விரித்தார். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து இணையத்தில் தேடுகையில் அதற்கென ஓர் இணைய தளம் இருப்பது கண்டறியப்பட்டது. http://www.findsounds.com/ என்பது அந்த தளத்தின் முகவரி. 

இந்த தளம் சென்றால் ஒலிகளைத் தேடப் பல வழிகள் உள்ளன. ஒலிகளைச் சொற்களாகக் கொடுத்து அது எப்படி இருக்கும் என அறியலாம். மியாவ், கர்ர்ர்ர் என் றெல்லாம் கொடுத்து அந்த ஒலியினைக் கேட்கலாம். இந்த ஒலிக்கான பைல் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என் பதனையும் நீங்கள் உங்கள் ஆப்ஷனில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் எந்த பார்மட்டை உங்கள் கம்ப்யூட்டர் இயக்குமோ அந்த வழியில் பெற்றால் தானே கேட்க முடியும். 

அடுத்து விலங்கு, பறவைகளின் பெயர்களைக் கொடுத்து அவற்றின் வெவ்வேறு விதமான ஒலியைக் கேட் கலாம். உங்கள் தேடலுக்கான வேறு வேறு ஒலிகளின் பைல்கள் இருக்கும் தளங்களின் அல்லது பைல்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டு அருகேயே ஒரு ஸ்பீக்கரின் படமும் இருக்கும். அதில் கிளிக் செய்தால் ஒலி கிடைக்கும். ஒலி அலை எப்படி இருக்கும் என்று படமாகவும் காட்டப்படுகிறது. இதன் மூலம் ஒன்றின் ஒலியை இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து கேட்கலாம். 

இன்னும் என்னவெல்லாம் கேட்கலாம் என்று தெரிந்து கொள்ள ஆசையா? கீழாக Need Examples என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் இயற்கை, விலங்குகள், இசைக் கருவிகள், விடுமுறைநாட்கள், வீட்டில் உள்ள சாதனங்கள் (nature, animals, musical instruments, holidays, household) என இதன் பட்டியல் பெரிதாக உள்ளது. எந்த பிரிவையும் கிளிக் செய்து தேடும் ஒலியினைப் பெறலாம். 

எத்தனைதான் இருக்கிறது? ஒரு வழி காட்டக் கூடாதா? என்று எண்ணுகையில் இதன் ஹெல்ப் மெனு நமக்கு உதவுகிறது. இதில் என்ன வகை பார்மட்டில் சவுண்ட் பைல்கள் கிடைக்கின்றன, ரெசல்யூசன் எவ்வளவு, அவற்றை இயக்க என்ன புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனப் பல வழிகளில் நமக்கு உதவிக் குறிப்புகளைத் தருகிறது. நான் இந்த தளம் சென்று பூனையின் குரல் எப்படி எல்லாம் இருக்கும் என்று பார்த்தேன். முதலில் ஒலி குறைவாக இருந்ததால் ஸ்பீக்கரின் அளவை உயர்த்தி கிளிக் செய்தேன். 

பூனையின் சத்தம் வந்தது; என் வீட்டுப் பூனை என் அருகே வந்து கம்ப்யூட்டரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்து. அதில் நீ என்னைப் போல் சத்தம் போட்டு பார்த்தாயா? என்ற கோபக் கேள்வி இருந்தது. அடுத்து சோஷியல் அனிமல் என அழைக்கப்படும் மனிதனின் குரல் எப்படி இருக்கிறது என்று இது காட்டுமா என்ற கேள்வியுடன் ட்ச்ண என டைப் செய்து பார்த்தேன். பல பைல்கள் பட்டியலிடப்பட்டன. 

மனிதன் ஒவ்வொரு வேளையிலும் எப்படி எல்லாம் குரலிடுவான் என பலவகையான சத்தம் வந்தது. பயந்து போய் வெளியேறினேன். 

தமிழில் அதிகம் வசூலித்த திரைப்படங்கள்

இதை வாசிக்க முதல் கவனிக்க வேண்டியவை இதன் தகவல்கள் IMDb மற்றும் விக்கிபீடியா போன்றவையில் இருந்தது திரட்டபட்டவை வசூலை அடிப்படையாக கொண்டே திரைப்படங்கள் வரிசைப்படுத்தப்படுள்ளதே அன்றி படம் ஈட்டியஇலாபத்தை வைத்து அல்ல.


சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் தான் முன்னணி

பெரும்.எனெனில் டிக்கெட் விலை அதிகரிப்பின் காரணமாக.

இல்லாவிட்டால் சந்திரமுகி,கில்லி போன்ற திரைப்படங்கள்

மேலும் முன்னேறும்.பாட்ஷா,முத்து போன்ற பல

திரைப்படங்கள் இப்படியலில் நுழையும்.


1.எந்திரன்

132 கோடி செலவில் தயாரிக்கபட்டது.375 கோடியை

வசூலித்தது என்று சன் பிக்செர்ஸ் குறிப்பிட்டது.மற்ற

இணையத்தளங்கள் 255 கோடி வசூலித்தது என்று

அறிவித்தது.எது எப்படியோ தமிழ் சினிமாவில் அதிகம்

வசூலித்த திரைப்படம் இது தான்.




2.சிவாஜி

அறுபது கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.128 கோடிகளை

வசூலித்தது.



3.தசாவதாரம்

எழுபது கோடி செலவில் தயாரிக்கபட்டது.95 கோடிகளை

வசூலித்தது.



4.வேலாயுதம்

45 கோடி செலவில் தயாரிக்கபட்டது.85 கோடிகளை

வசூலித்தது நான்கு வாரங்கள் முடிவில்.தசாவதாரத்தின்

வசூலை முந்தும் என நிபுணர்களால் எண்ண படுகிறது.

கேரளாவில் திரைப்படம் நன்றாக ஓடுவதையே இதற்கு

காரணமாக சொல்கிறார்கள்.



5.ஏழாம் அறிவு

இத்திரைப்படமும் 85 கோடியை வசூலித்துள்ளது.

இத்திரைப்படம் தமிழ் நாடில் மட்டுமே நன்றாக ஓடுவதால்

90 கோடிகளை மாத்திரமே குவிக்க முடியும் என நிபுணர்களால்

கூறப்படுகிறது. மயக்கம் என்ன, ஒஸ்தி, ராஜபாட்டை போன்ற

நிறைய திரைப்படங்கள் வர இருக்கின்றன.இதன் மூலம் ஏழாம்

அறிவு மற்றும் வேலாயுதத்தின் தமிழ் நாட்டின் வசூல் வெகுவாக

பாதிக்கும்.இத்திரைப்படம் 85 செலவில் தாயரிக்கப்படதும்

குறிப்பிடத்தக்கது.



6.மங்காத்தா

34 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 84 கோடியை வசூலித்தது.

இந்த வருடத்தின் அதிக இலாபம் ஈட்டிய படமாக இன்னுமும்

திகழ்கிறது.



7.வேட்டையாடு விளையாடு

65 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 82 கோடியை வசூலித்தது.



8.கில்லி

வெறும் ஆறு கோடி செலவில் தயாரிக்கபட்டத்து.80 கோடியை

வசூலித்தது.ஆனால் இந்த எண்பது கோடி இன்றைய பெறுமதியில்

104 கோடி ஆகும்.இப்படிப்பட்ட பிரச்சினைகளால் தான் பழைய

திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம் பெற முடியவில்லை.





9.சந்திரமுகி

இந்த படமும் இக்காலகட்டத்தில் வெளியாகி இருந்தால் 100

கோடிக்கு கிட்ட வசூலித்து இருக்கும்.19 கோடிகளில் தயாரிக்கபட்டு

80 கோடிகள் வசூலித்தது



10.பில்லா

இந்த திரைப்படம் 15 செலவில் தயாரிக்கப்பட்டு 75 கோடியை

வசூலித்தது.
Did you like th

ஃபேஸ்புக்கை முதல் கட்டமாக பெங்களுருவில் புறக்கணித்தனர்.

பெங்குளுருவில் நடந்த விவாகரம் ஃபேஸ்புக் வலைதளத்தின் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது கடந்த வாரத்தில் ஃபேஸ்புக் வலைதளத்தில் அழகான இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் நிர்வாண படங்கள் விதவிதமாக ஃபேஸ்புக்கில் உலாவந்தது. அதுமட்டுமின்றி அந்த படங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் அனுப்பபட்டிருந்தன அத்தோடு இளம் பெண்களின் படங்கள் அவர்களின் தகப்பனாரின் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பப்பட்டு இருந்தன.
இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த பெங்களுருவாசிகள் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதை ஆராய்ந்த சைபர் கிரைம் போலீசார் அந்த படங்கள் அனைத்தும் ஒட்டுவேலை செய்து போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை கண்டுபிடித்தனர். இது சம்பந்தமாக ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் விசாரித்த போதுதான் ஃ பேஸ்புக்தளம் ஹேக் செய்யப்பட்டு களவாடப்பட்ட தகவல் வெளியானது. 

ஃபேஸ்புக் சர்வருக்குள் புகுந்த குற்றவாளிகள் சர்வரை முடக்கி அதில் இருந்த அழகான பெண்களின் கணக்குக்குள் நுழைந்து அவர்களின் முழு விபரத்தையும் அவர்களின் விதவிதமான புகைபடங்களியும் திருடி அந்த பெண்களின் தலையை மட்டும் எடுத்து தங்களிடம் இருந்த நிர்வாணபடத்துடன் இணைத்து அவர்களுக்கும் அவர்களின் காப்பாளர் பெயர் இருந்த முகவரிக்கும் அனுப்பிவைத்திருந்தது தெரியவந்தது. 

இதுபோன்று இழிசெயல்கள் தொடராமல் இருக்க ஃபேஸ்புக் இணையதளத்தில் தங்களின் விபரங்களையும் புகைப்படங்களையும் பதிய வேண்டாம் என பெங்களுரு சைபர் கிரைம் காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிகம் விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்தில், அந்நாட்டு அரசு, மானியங்களை குறைத்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததுடன், கல்வி கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்தி விட்டது. 

இதனால், அந்நாட்டு மாணவிகள், தங்கள் படிப்புச் செலவை ஈடுகட்ட விபசாரத்தில் குதித்து இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான நல அமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது. மேலும், ஓட்டல்களில் ஆடை அவிழ்ப்பு நடனம் ஆடுபவர்களில் 25 சதவீதம் பேர் மாணவிகள் என்று லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

விபசாரம் மட்டுமின்றி, சூதாட்டம் மற்றும் ஆபத்தான பணிகளில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக தாய்மார்களும் விபசார குழியில் தள்ளப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பேஸ்புக் என்னும் விபச்சாரவிடுதியில் தங்கியிருக்கும் இளம்பெண்களின் நிலை ??


உலகிலுள்ள 14பேரில் ஒருவர் பேஸ்புக் அங்கத்தவர்களாக உள்ளனர். கடந்தவாரம் வரையில் 520மில்லியன் அங்கத்தவர்கள் மாதமொன்றுக்கு 70 ஆயிரம் கோடிநிமிடங்களை அங்கத்தவர்கள் இணையத்தளத்தில் செலவழிக்கின்றனர் 150 மில்லியன் பேர் தமது கைத்தொலைபேசிகளில் பேஸ்புக் இணைப்பைக் கொண்டுள்ளனர். ஒரு அங்கத்தவருக்கு சராசரியாக 130 நண்பர்கள் தற்போதைய நிலையில் உலகளவில் வயது வித்தியாசமின்றி மிகவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற அன்றேல் பரவி வியாபித்துவருகின்ற வலையமைப்பு எதுவென்றால் அதற்கு பதில் பேஸ்புக் என்பதாகத்தான் இருக்க முடியும்.

2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக் இணையத்தளத்தில் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் 500மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள்; அன்றேல் பயனாளர்கள் உள்ளதான தகவல் ஆச்சரியமிக்கதாகவே அமைந்திருக்கும்.

பேஸ்புக் இணையத்தளத்தில் முதல் 100 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துகொள்வதற்கு 1665நாட்கள் எடுத்தன .2008ம் ஆண்டு ஒகஸ்ற் 26ம்திகதியே 100 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது.
அதற்குப்பின்னர் அசூர வேகத்தில் பேஸ்புக்கின் அங்கத்துவம் கூடிக்கொண்டு செல்கின்றதை நோக்கமுடியும் 100மில்லியனில் இருந்து 200மில்லியன் எண்ணிக்கையைத் தொடுவதற்கு 225நாட்களும் 300மில்லியனைத் தொடுவதற்கு 160நாட்களும் 400மில்லியன் எண்ணிக்கையை எட்டுவதற்கு 143நாட்களும் 400ல் இருந்து 500மில்லியனைத் தொடுவதற்கு 166நாட்களும் எடுத்துள்ளன.

தினமும் லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் புதிதாக பேஸ்புக் அங்கத்தவர்களாக இணைந்துகொண்டிருப்பதன் காரணமாக ஜுலை மாத பிற்பகுதியில் 500மில்லியன்களை எட்டிய பேஸ்புக் இணையத்தளத்தின் ஒக்டோபர் ஆரம்பத்தில் அங்கத்தவர்கள் எண்ணிக்கை 520மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது.

அமெரிக்கா கனடா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவர்கள் பேஸ்புக்கின் தீவிர அங்கத்தவர்களாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. உலகளவில் பேஸ்புக் வளர்ச்சி வரைபு பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு சராசரியாக 130 இணைய நண்பர்கள் பேஸ்புக்கில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சனத்தொகையில் 14 பேரில் ஒருவர் தற்போது பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் என்ற செய்தி ஒருபக்கம் அதன் அசூர வளர்ச்சியைக் காண்பித்தாலும் மறுமுனையில் நமது சமூகத்தில் ஏற்பட்டுவருகின்ற சமூக கலாசார மாற்றத்தினையும் காண்பித்து நிற்கின்றதென்றே கூறவேண்டும் . ஓய்வின்றி மக்கள் உழைத்துக்கொண்டிருக்கின்ற பரபரப்பான உலகத்தில் நண்பர்களின் பிறந்தநாள்களை நினைவில் வைத்திருப்பது ஒருநண்பரின் இணையத் தோட்டத்திற்குள் சென்று பச்சியை விடுவது காய்கறிகளைப் பரிசளிப்பது என்பதையெல்லாம் பேஸ்புக் வந்ததன் பின்னரே சாத்தியமாகின. பிறந்தநாள் திருமணங்கள் பட்டமளிப்பு விழாக்கள் பதவியுயர்வுகள் வருடாந்த நிறைவு தினக்கொண்டாட்டங்கள் போன்ற பல தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கூட சுடச்சுட பேஸ்புக் ஊடாக பரிமாறப்படுகின்றன தகவல்கள் மட்டுமன்றி புகைப்படங்களும் ஏன் பிடித்த பாடல்களும் கட்டுரைகளும் கூட பேஸ்புக்கில் பரிமாறப்படுகின்றன.

வீடுகள் அலுவலகங்கள் பொது இடங்கள் ஏன் கைத்தொலைபேசிகளை வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் தாம் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பேஸ்புக் இணைய வலையமைப்பில் அதிகமதிகமாக நேரத்தை செலவிட்டு வருவதனை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன .

பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றவர்கள் ஒவ்வொருமாதமும் அண்ணளவாக 700 பில்லியன் நிமிடங்களை செலவிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன .

ஓவ்வொரு மாதமும் பேஸ்புக் அங்கத்தவர்கள் 30பில்லியனுக்கு அதிகமான புகைப்படங்கள் செய்திக் கட்டுரைகள் இணையத்தளங்களுக்கான தொடர்புக் குறிகாட்டிகள் போன்றவற்றை பேஸ்புக் இணையத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

பேஸ்புக் என்பது ஒரு தனிநாடாக கருதப்படுமானால் அது சீனாவிற்கு இந்தியாவிற்கு அடுத்து அதிக சனத்தொகை கொண்டநாடாக இருக்கும் அத்தோடு பேஸ்புக் 70 உத்தியோகபூர்வ மொழிகளில் உள்ளமையால் அதன் பல்கலாசாரத்தன்மையை எந்தவொருநாட்டாலும் இலகுவில் எட்டிவிடமுடியாது இது பேஸ்புக்கின் பாரிய பரிணாமவளர்ச்சிக்கு சான்றுபகர்வதாகவும் அமைந்திருந்தது.

உலகில் இலங்கை உட்பட 212 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் .ஆகக்கூடுதலாக அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக பேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்கா திகழ்கின்றது அமெரிக்காவில் 133மில்லியன் பேர் பேஸ்புக் அங்கத்தவர்களாக திகழ்கின்றனர். 260 அங்கத்தவர்களுடன் ஆகக்குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக நாரு(யேரசர) உள்ளது.

முதல் பத்து நாடுகள்

அமெரிக்கா - 133 மில்லியன்

பிரித்தானியா- 28 மில்லியன்

இந்தோனேசியா- 27 மில்லியன்

துருக்கி- 24 மில்லியன்

பிரான்ஸ்- 19 மில்லியன்

இத்தாலி- 17 மில்லியன்

பிலிபைன்ஸ் 16 மில்லியன்

கனடா- 16 மில்லியன்

மெக்ஸிகோ 15 மில்லியன்

இந்தியா- 13 மில்லியன்

இலங்கையில் பேஸ்புக்கின் தாக்கம் எப்படியுள்ளது?

674,480 அங்கத்தவர்களுடன் இலங்கை இந்த வரிசையில் 74வது இடத்திலுள்ளது .இலங்கையின் மொத்த சனத்தொகையில் 3.14வீதமென்பதுடன் இணைய வசதியுடையவர்களில் மூன்றிலொரு பங்கு(37.97மூ) என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

இலங்கையில் பேஸ்புக் அங்கத்தவர்களில் 435,040 பேர் ஆண்களாகவும் 228,740 பேர் பெண்களாகவும் உள்ளனர்

அறிமுகமான ஆரம்பத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே பிரபலமாகியிருந்த பேஸ்புக் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்களையும் வேகமாக கவர்ந்து அதன் வலையமைப்பில் உள்வாங்கிவருகின்றது.

காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்படி அன்றேல் தேநீர் கோப்பி அருந்துவது போன்று தற்போது காலை எழுந்ததுமே பல்துலக்காமல் பேஸ்புக் பார்க்கும் பழக்கம் ஒருசாரரிடையே ஏற்பட்டுள்ளது காலையில் மாத்திரம் என்றால் பரவாயில்லை நாள் பொழுதிலும் ஏன் பின்னிரவுவேளையிலுமே பேஸ்புக்கில் தொங்கிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இலங்கையிலுள்ள பல அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுவதனை அறியமுடிகின்றது காலையில் வேலைக்கு வந்தவுடனேயே இறைவனுக்கு வழிபாடுசெய்கின்றனரோ இல்லையோ பேஸ்புக் இணைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டே பணியை ஆரம்பிக்கின்றனர் பணியாளர்கள்; அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிட்டு நேரடிவீணடிப்பு செய்வதால் சில நிறுவனங்களில் பேஸ்புக் பார்ப்பதையே தடைசெய்கின்ற நிலைமையும் நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது இதே நிலைதான் உலகின் ஏனைய பல இடங்களிலும் காணப்படுகின்றது.

பேஸ்புக் என்ற கட்டாற்றுவெள்ளத்தில் அதனை விரும்பாதவர்களும் இழுத்துச்செல்லப்படுவது தவிர்;க்க முடியாததாகிவிட்டுள்ளது பேஸ்புக் ஏற்படுத்திவிட்டுள்ள கலாசார மாற்றம் என்பது நம்மால் அதனை புறக்கணித்துவிட்டு இருந்துவிடமுடியாது என்பதையே யதார்த்த நிலை உணர்த்திநிற்கின்றது இதற்கு உதாரணமாக பேஸ்புக்கில் இணைய தனிப்பட்டரீதியில் ஒருவர் விரும்பாதவிடத்தும் தமது உறவினரின் புகைப்படத்தை பார்பதற்கோ அன்றேல் தமது நிறுவனத்தினை விளம்பர ஊக்குவிப்பிக்காகவோ இதில் இணைந்துகொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டமுடியும்.

பேஸ்புக்கை நாம் மூன்றாம் தரப்புவிடயம் என புறக்கணத்து இருந்துவிடமுடியாது என்பதற்கு அதன் சமூகத்தில் அது ஆழமாக ஊடுருவியிருப்பதும் மற்றுமொரு முக்கிய காரணமாகும் .பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்கள் பிள்ளைகள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் அன்றேல் சகோதரர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் .அந்த வகையில் இதனை அறிந்துவைத்திருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்தமுடியும் உங்கள் வாழ்க்கையிலுள்ள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் பேஸ்புக் துணைசெய்கின்றது என்பதே பேஸ்புக் இணையத்தளத்தின் விருதுவாக்காக உள்ளது ஒருகோணத்தில் பார்த்தால் இது மிகவும் உண்மை போன்றே தெரிகின்றது.

ஆனால் பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுத்துக்கொண்டு அதனை தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் செய்திகளையும் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் .

பேஸ்புக்கின் சார்பாக குரல் கொடுப்பவர்கள் அதிலே ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் இரகசியத்தன்மையை பேணிப்பாதுகாக்கின்ற வடிவமைப்புக்களைச் செய்யமுடியும் என தமது தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்.

இருந்தபோதிலும் பேஸ்புக்கினால் பல அபாயங்கள் உள்ளதாகவும் அதிலே முக்கியமான கவனிக்கப்படவேண்டடிய மறைவான ஐந்து அபாயங்களை இணைய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அபாயங்கள்

எமது விபரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன பேஸ்புக் வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் தமது இணையத்தளத்தை மீள்வடிவமைப்பிற்குட்படுத்தும் போது இரகசியத்தன்மை கட்டமைப்புக்கள் பாதுகாப்புக்குறைவான நிலைக்கு தள்ளப்படுகின்றது

பேஸ்புக் விளம்பரங்கள் கணனி உரிமையாளர்களின் அனுமதியின்றியே கணனிகளின் மென்பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் நாசகார மென்பொருட்களை தாங்கிவரக்கூடியவை

உங்களது உண்மையான நண்பர்கள் தெரியாமலேயே உங்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டுசெல்கின்றனர் வேண்டத்தகாதவர்கள் உண்மையான பெயர்களில் போலியான பேஸ்புக் பக்கங்களை உருவாக்குகின்றனர்

பேஸ்புக்கை மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற நவீன ஊடகமாக பார்க்கப்படுகின்றது. குரலற்ற மக்களின் குரலாக பேஸ்புக்கை பயன்படுத்தப்படுவதை பல்வேறு செய்திகளின் போது நாம் அவதானிக்கின்றோம் .உதாரணமாக காஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்படுகின்ற மக்களின் தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரதான மற்றும் பாரம்பரியரிய ஊடகங்களால் மறைக்கப்படுகின்ற செய்திகளை பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்.

மறுமுனையில் இந்திய அரசிற்கு சார்பானவர்கள் காஷ்மீர் பிரச்சனை பற்றிய தமது நிலைப்பாடுகளைத் தாங்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றமை காணமுடியும்.

விரும்பத்தகாத தகவல்கள் பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாக அதற்குள் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி தகவல்களை சேகரிப்பதான செய்திகளும் கடந்தநாட்களில் வெளியாகியிருந்தன பேஸ்புக்கிற்கு எதிரான முறைப்பாடுகள் தமது தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்துதல் திரிவுபடுத்துதல் தவறாக பிரசுரித்தல் ஆகியனவே பேஸ்புக்கிற்கு எதிரான உலகளாவிய முறைப்பாடுகளில் பொதுவானதாக காணப்படுகின்றது.

இலங்கையில் கூட பேஸ்புக் குறித்து பல முறைப்பாடுகள் வெளியாகியிருப்பதை செய்திகளில் பார்த்திருக்கின்றோம் பேஸ்புக் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளில் அனேகமானவை நண்பர்களாக இருந்து பின்னர் கோபித்துக்கொண்டவர்கள் நண்பர்களாக இருந்த காலத்தில் பேஸ்புக்கில் இருந்தோ வேறு இணையத்தளங்களில் இருந்தோ தரையிறக்கம் செய்த புகைப்படங்களை திரிவுபடுத்தி ஆபாசமான முறையில் பேஸ்புக்கில் அன்றேல் வேறு இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளமை பற்றியதாகவே உள்ளதென இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சி ஐ பாலச்சந்திர தெரிவித்தார் .

கருத்துவெளியிடுகையில் என இவ்வாறான ஆறு பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எனக் குறிப்பிட்டாh.; இதனைத்தவிர போலிவிபரங்களைத் தெரிவித்து சிறுவயது பெண்களுடன் காதல்தொடர்புகளை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றமை போன்ற முறைப்பாடுகள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கின்றோம் .

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்

1 . எவரும் பார்க்கக்கூடாதென நீங்கள் எண்ணுகின்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாதீர்கள் .

2 . நிஜவாழ்வி;ல் நண்பர்கள் வட்டாரத்தில் இல்லாதவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக சேர்த்துக்கொள்ளாதீர்கள்

3 . பேஸ்புக் இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை பயன்படுத்தும் வகையில உங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .நமது மூன்றாம் தரப்பினரிடம் முடியுமானவரையில் வழங்கக்கூடாது

4 . பெற்றோர்கள் இணையத்தளத்தில் தமது பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தமது பார்வைக்குப்படும் இடத்திலேயே இல்லங்களில் கணனிகளை வைத்திருக்கவேண்டும்

குறிப்பு இது ஏனைய சமூக இணையத்தளங்களுக்கும் பொருந்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

பேஸ்புக் தவிர 100ற்கு மேற்பட்ட சமூக இணையத்தளங்கள் உள்ளன .பேஸ்புக்கிற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் ஆரம்பத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது எனினும் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதனை பேஸ்புக் முறியடித்தது அதற்கு பின்னர் பேஸ்புக்கின் வளர்ச்சி அபரிமிதமானது .பேஸ்புக் அளவி;ற்கு இல்லாவிட்டாலும்

twitter, Orkut, tagged, hi5, bebo, frienster, buzz ஆகியனவும் எம்மவர்களிடையே ஒரளவிற்கு அறியப்பட்ட சமூக இணையத்தளங்களாக உள்ளன.

இறுதியாக ஒன்றைக் கூற வேண்டுமெனில் எமது வாழ்க்கைக்கு நாமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஆகவே நாம் நம்மை எப்படி நிஜவாழ்விலும் இணையத்தளங்களிலும் வெளிப்படுத்துகின்றோமே அதுவே எமக்கு சாதகமான அன்றேல் பாதகமான விளைவுகளைக்கொண்டுவருகின்றது எனவே ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் பாதக விளைவுகளை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதே எனது கருத்தாகும் .