Saturday, July 9, 2011

பாம்பின் கால் பாம்பறியும்

95 மில்லியன் வருட தொல்படிவ எச்சத்தில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் கூர்ப்பின்போது எப்படிப் பாம்பு தனது கால்களை இழந்தது என்பதை அறிந்துகொண்டுள்ளனர். கால்களுடன் கூடிய பாம்புகளின் மூன்று தொல்லுயிர் எச்சங்களில் இதுவும் ஒன்று லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
 
இதற்கு பின்னங்கால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அடுத்தகாலை தொல்படிமப் பாறைகளில் காண்பதற்கு எக்ஸ்-கதிர் நுட்பம் தேவையாக இருந்தது. முள்ளந்தண்டு உயிரிகளின் தொல்லுயிரியல் சஞ்சிகையில் ஆய்வுக்குழு கால்கள் இழத்தலின் ஆரம்பக் கட்டத்தில் பாம்பு இருந்திருக்கின்றது என்று தெரிவித்தனர். Eupodophis descouensi எனப்படும் இனப் பாம்பினது கால்களையே உயர் நுணுக்க முப்பரிமாணப் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது. இவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வருதல் சாத்தியமாக உள்ளது. பாம்பு கணுக்கால் எலும்புகளைக் கொண்டிருப்பினும் அவை பாத எலும்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வில் இருந்து பாம்புகள் 150 மில்லியன் வருடத்திற்கு முன்னர் கூர்ப்பில் தோன்றியுள்ளது எனக் கருதலாம்.பரிணாம வளர்ச்சியின் போது, பாம்பின் கால்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் மிகவும் குறைவாக வளர்ந்து பின்னர் மறைந்து போயின. இவற்றின் தேவை பாம்புகளில் குறைந்தமையே காரணம் ஆகும்.

இரண்டு கருதுகோள்கள் பாம்பின் தோற்றம் பற்றி உள்ளன. ஒன்றில், பல்லி வகைகள் வளைகள் உருவாக்கத்தொடங்கின, பின்னர் நிலக்கீழ் வசிவிடத்துக்கு ஏற்றவாறு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டன; அவற்றின் கால்கள் குறுக்கப்பட்டு பின்னர் இல்லாமல் போயிற்று; முதலில் முன்னவயவமும் பின்னர் பின்னவயவமும் மறைந்தன. இரண்டாவது கருதுகோளில், இவற்றின் தோற்றம் நீரில் நடைபெற்றன; கடல்வாழ் ஊர்வன மூலம் தோன்றின.

அறியப்பட்ட இருகால் பாம்புகளின் தொல்-எச்சங்களில் அவை பெரியதாக இருப்பது, இக்கருதுகோள் பற்றிய விவாதத்துக்கு துணை போகின்றது.

இந்தப்படிப்பு இவ்விரு கருதுகோள்களை மெய்ப்பிப்பதற்கு போதாது, இன்னமும் புதைபடிமங்களில் இருந்து தகவல்கள் பெறப்படல் அவசியம் என்று இவ்வாராய்வை மேற்கொண்ட முனைவர் ஹௌசே கூறினார். Eupodophis descouensi இனப் பாம்பு ஒரு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. பிந்தைய கிரித்தேசியக் காலத்தில், டைனசொர்கள் வாழ்ந்த காலத்தில் இவை ஊர்ந்து திரிந்திருக்கலாம். அசைவதற்கென்று இக்கால்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைவிட இவற்றிற்கு வேறு தொழில்களும் இருந்திருக்கலாம். பைதன் போன்ற இற்றைய காலத்துப் பாம்புகளில் குறுகிய நகர்நீட்சிகள் இருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது, இவை பாலுறவின் போது இறுகப்பற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன.

பிடிஎப் கோப்புகளை சேர்க்க, பிரிக்க புதிய மென்பொருள்

பிடிஎப் கோப்புகளை மாற்றம் செய்து உரிய கோப்பாகவும், குறிப்பிட்ட கோப்பினை மாற்றம் செய்து பிடிஎப் கோப்பாக செய்வதற்கு இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன.


ஆனால் பிடிஎப் கோப்புக்களை உடைக்கவோ அல்லது ஒட்டுவதற்கோ மென்பொருள்கள் குறைவு. பிடிஎப் கோப்புக்களை இணைக்கவும் பிரிக்கவும் Hexonic PDF Split and Merge என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் கோப்புக்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் கோப்பை தேர்வு செய்யது இணைத்துக் கொள்ளவும்.பிடிஎப் கோப்பை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் கோப்புக்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ள முடியும். வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தனித்தனியாகவும் பிரித்துக் கொள்ள முடியும்.ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் கோப்பை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.

கூகுள் பிளஸ், Vs பேஸ்புக் கிரெடிட்: தொடரும் போட்டி!

சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக ‘பேஸ்புக் கிரெடிட்ஸ்’ என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு அப்ளிக‌ேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பா‌க, பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் இந்த புதிய பேஸ்புக் கிரெடிட்ஸ் ‌பேமெண்ட் முறை, அமலுக்கு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்ப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த வெற்றியைத் தொடர்ந்தே இந்தியாவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
 
இந்த புதிய சேவையின் மூலம், 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கிரெடிட்டை பயனாளர்கள் ஒருமுறை இவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை, பல்வேறு நவீன தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சோஷியல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பேஸ்புக்கும் தன்பங்கிற்கு பேஸ்புக் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளஸ்: இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’ என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது ‘கூகுள் பிளஸ்’ என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் ‘தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)’ சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது. இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலம‌ே சாத்தியமாகி உள்ளத‌ாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்


நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும். அத்ற்க்கு தேவையான


மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும். அதுவும் சிலவற்றை பணம் செலுத்தி வாங்கியும்

இருக்கின்றோம். அத்ற்க்கு விடுதலை தரும் விதமாக அனைத்து மென்பொருட்களும் ஓரே மென்பொருளில் இனைக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக. இந்த மென்பொருளின் பெயர் Free Studio. இதில் கீழ்காணும் வசதிகள் உள்ளன‌.



தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள்.  அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்ய இங்கு செல்லுங்கள்.

கோயிலுக்குள் விபச்சாரம்: 2 பெண்களும் பூசாரியும் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அ.அம்மாபட்டி காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது.

 

இங்கு கள்ளப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி (47) என்பவர் பூசாரியாக உள்ளார். கோயிலில் பவுர்ணமி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் கூட்டம் அவ்வளவாக இருக்காது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தண்டபாணி கோயில் அறையை விபசாரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார். கோயிலில் மாலை நேரங்களில் சந்தேகத்துக்கிடமாக பெண்கள், ஆண்கள் வந்து செல்வது பற்றி குடிமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது.

எஸ்ஐ செல்வம் தலைமையில், போலீசார் நேற்று மாலை கோயில் பகுதியில் மறைவாக இருந்து கண்காணித்தனர். அப்போது 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அங்கு வந்தனர். தண்டபாணியிடம் சென்று பேசினர். பின்னர் அவர் கோயில் அருகே உள்ள அறையின் கதவை திறந்து விட்டார். அதற்குள் நால்வரும் சென்றனர். உடனடியாக போலீசார் அறையை நோக்கி சென்றனர். இதை பார்த்த பூசாரி தண்டபாணி, அறையில் இருந்தவர்களை உஷார்படுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அறைக்குள் இருந்து வெளியேறிய 4 பேரும் தப்பி ஓடினர்.

போலீசார் விரட்டி சென்றதில், பூசாரி தண்டபாணியும், 2 அழகிகளும் சிக்கினர்.
பெண்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் உடுமலை கொல்லம்பட்டறையை சேர்ந்த சரஸ்வதி (36), மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பதும், விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களையும், தண்டபாணியையும் போலீசார் கைது செய்தனர்

ஆப்பிள் நிறுவனத்தையும் குறி வைத்து விட்டார்கள் இணைய திருடர்கள்

அநாமதேய இணையத் திருடர் குழு ஒன்று அப்பிளின் நிறுவனத்தின் ஒரு சேவரைத் திருடி அதனை நிரூபிக்க பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை டுவீட்டரில் பதியவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய திருடர்களின் இலக்குகளில் அப்பிள் நிறுவனமும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.அதியுயர் ப்ரொபைல்களின் பொது ஸ்தாபனமான அப்பிளிற்கு இது பாரிய சேதங்களை ஏற்படுத்தும் என்ற விதத்தில் அதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.

 
 
இதேவேளை லெபனானைச் சேர்ந்த இணையத் திருடரான இடாக் அப்பிள் சேவரில் SQL ஏதுநிலை இருப்பதைக் கண்டறிந்ததாக டுவீட்டர் மூலம் தெரியப்படுத்தினார். இந்நிலையில் Apple Consultants Network server இனை வெற்றிகரமாகத் தான் தாக்கியிருப்பதாக அந்த அநாமதேய இணையத் திருடர் தெரிவித்துள்ளார். இது பற்றி அப்பிளின் பேச்சாளரிடம் கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொண்டபோது அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.




விண்டோஸை லினக்ஸ் பின்னுக்கு தள்ளிவிட்டது.

லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 
வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.

லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது. லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை. புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை. லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவமுடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது. லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.

லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

லினக்ஸினுடைய Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும். லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. விண்டோசில் இருந்து லினக்ஸ்க்கு மாறுவதற்கு முக்கியத் தடையாக இருந்து வந்த பிரச்சனை தீர்க்கபட்டு வருகிறது. அதன் முதல் படியாக விண்டோசில் உபயோகப் படுத்தப்படும் சில சாப்ட்வேர்களை இப்போது லினக்ஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும். அதற்காக ஒரு சாப்ட்வேர் உள்ளது அதன் பெயர் WINHQ இதற்க்கான லிங்க் இதோ.

பரவலாக பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு அதற்க்கான லிங்க் இதோ.