Tuesday, December 14, 2010

பாட்டு கேட்க ஒரு நல்ல இணையதளம்


                  பாட்டு கேட்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட  சிறந்த பழைய பாடல்கள் கேட்க சிறந்த தளம் இது


அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ்  எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே  போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாக,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்


 அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு  அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற  இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்


 மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம்
   
    அதிலும்  இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது 

                      இணையதளத்தில் நமக்கு பிடித்த  பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது

                திரைப்பாடல்.காம் செல்ல இதை அழுத்தவும்  நண்பர்களுக்கு கூற


குழந்தைகளுக்கு ஏற்ற ஓவிய கலரிங் இணையம்


குழந்தைகள்     தினத்தை முன்னிட்டு 


          சிறுவர் சிறுமியர்க்கு ஓவியங்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுதல் என்பது சந்தோஷம் தரும் விஷயம்
வாட்டர் கலர் பென்சில் க்ரேயான் என பல முறையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுவது அவர்களுக்கு சந்தோஷம் தருவதுடன்  அவர்களுக்குள் இருக்கும் கலை திறமை வெளிவர உதவும் பக்கம் கூட அது

பேப்பரில் அவர்கள் வர்ணம் பூச செலவு ஆவதுடன் மறுமுறை  வேறு நிறம் மாற்ற முடியாது மற்றும் அடிக்கடி கலரிங் புக் வாங்க கூட செலவு செய்ய வேண்டும்
இந்த இணைய உலகில் அதற்க்கு ஏற்ற ஒரு சிறந்த் இணையதளம் இது இதில் பல பிரிவுகளில் பல்வேறு படங்கள் மற்றும் நாம் வர்ணம் பூச எதுவாக வர்ணம் இல்லாமல் நகல் எடுக்கும் வசதி இதில் உள்ளது


நமக்கு தேவையான படங்களை பிரிண்ட் எடுக்கலாம்

   இணையம் பயன்படுத்தும் போதே சிறந்த முறையில் வர்ணம்  பூசி நாம் விரும்பும் நண்பர்களுக்கு அனுப்பலாம்

மற்றும் மற்றவர்கள் பயன்படுத்திய கலரிங் ஓவியங்களை பார்க்கலாம்


இதன் மூலம் நம்மை விட மற்றவர்கள் சிறப்பாக கலரிங் பூசி இருந்தால் மீண்டும் நாம் இன்னும் சிறப்பாக பூச மயற்சி செய்யலாம்

நான் வர்ணம் கலரிங் செய்ததது 


இந்த இணையத்தில் பதிவு செய்து பயன்படுத்தலாம் பதிவு செய்யாமல் கூட பயன்படுத்தலாம்

www.coloring.com   சிறப்பான இந்த இணையத்தை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு  :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.

1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.


2 .Google Cache ஐ பயன்படுத்தல்

நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.


3 .e -mail இல் பெறுதல்

web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.


4 .Proxy Websites இனை பயன்படுத்தல்

இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம் http://www.hidemyass.com ஆகும்.


5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம் http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.


6 .Screen-Resolution.com

இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search

http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன்  இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும். இத்தளத்துக்கு சென்றும் நீங்கள் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் போகலாம்.

அப்படியே இந்த வீடியோவையும் பாருங்கள்


.

எந்தவித கருத்தடை மாத்திரைகளையும் உபயோகிக்க தேவையில்லை.

எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு சனத்தொகை அதிகரிக்க தொடங்கி விட்டது. 50 வருடங்களிற்கு முன்பு  விரும்பியோ விரும்பாமலோ ஒரு குடும்பத்தில் குறைந்து 8 பிள்ளைகளாவது இருக்க வேண்டும்.இந்த எண்ணிக்கையை நிர்ணயித்த பெருமையெல்லாம் அந்த காலத்து அப்பத்தா,பாட்டி களையே சென்றடையும்.தற்போது எத்தனை % என்று தெரியவில்லை.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில தவறுகள் நேர்ந்த பின் ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ குற்றம் சொல்வதில் எதுவும் ஆகப்போவதில்லை. எதுவும் நம்ம கையில இல்லை.மேலதிகமாக இன்னுமொரு பிள்ளையை பெற்று கொள்ள விரும்பாது கருகலைப்பு செய்கிறார்கள்.இதிலே முற்று முழுதாக பாதிக்கப்படுவது பெண்தான்.

பிறப்புகளை குறப்பதற்காக (BirthControl) பெண்களிற்கு chemicals,drugs போன்றவற்றை உபயோகிப்பதை விட இயற்கை எமக்கு தந்துள்ள வளங்களை கொண்டு ஏன் ஆண்களிடத்திலும் உபயோகிக்க்கூடாது?.(Male Contraception)

HOT Bath
116 degrees தண்ணீரிலே தினமும் 50 நிமிடங்கள் வரை 20 நாட்கள் தொடர்ந்து இருந்து வந்தால் 6 மாதங்களிற்கு நீங்கள் எந்தவித கருத்தடை மாத்திரைகளையும் உபயோகிக்க தேவையில்லை.இந்த ஆய்வு 1950 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப் பட்டாலும் இன்று வரை இதை பரந்த அளவில் உபயோகிப்பதாக தெரியவில்லை.

தற்போதய கால நிலைக்கும்,வேலைத்தளத்திலிருந்து வந்த களைப்பிற்கும் இது றொம்ப முக்கியமா என நினைப்பது புரியுதுங்க.

Oleanolic Acid

இதை myrtle என்கின்ற மரத்தின் இலைகளிலிருந்து பெற்று கொள்கிறார்கள்.இந்த மரம் தெற்கு ஆசிய நாடுகளில்தான் கிடைக்கின்றது.எலிகளில் தான் இந்த பரீட்சையை 30 நாட்களிற்கு செய்து இருக்கிறார்கள்.15 நாட்களிற்குள் இவை வளமையான நிலையை அடைந்துவிட்டன.தற்போது ஆபிரிக்காவில் உள்ள ஆண் குரங்குகளை பரீட்சித்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.இன்னும் சில வருடங்களிற்குள் ஆண்களின்  உடலிற்குள் பலவந்தமா ஏத்தப் போறாங்க.

Papaya
1970 ம் ஆண்டிலேயே இந்த பப்பாசி பழம்,தற்காலிகமாக பிள்ளை பிறப்பதை தடுக்க (5 மாதங்கள் வரை) உதவுகிறது என்பதை கண்டு பிடித்து விட்டார்கள்.இலங்கை, இந்தியா,பாகிஸ்தான் நாடுகளில் ஆண்கள்,பெண்கள் இருவரும் இதை கருத்தடை மாத்திரைக்கு பதிலாக அதிக அழவில் உபயோகித்து வருகிறார்கள்.இது 100% contraception ஐ தருகிறது. 1/2 பப்பாசி, 3 வாழை பழம், 50 பப்பாசி கொட்டைகளையும் ஒன்றாக மிக்ஸியில் இட்டு அரைத்தபின் தொடர்ந்து 3 மாதங்கள் வரை குடிக்க வேண்டும்.

கருத்தடை மாத்திரையை கொடுத்தமா, இல்லையா என்றில்லாமல் இதை யார் செய்யிறது என நினைக்க தோன்றுகிறது. இருந்தாலும் திருமணமான ஆரம்பத்தில் சில பெண்கள் தொடர்ந்து  கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர் நோக்க நேரிடுகிறது.

உங்கள் மனைவி மீது அதிகமாக அன்பானவரா நீங்கள், அப்படியானால் இதையும் Try பண்ணுங்க.

இந்த தளங்களை எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத அனால் அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com
 
நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன் களில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . 
http://www.alertful.com
 
உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . 
http://www.pdfunlock.com
 
சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . 
http://www.daileez.com
 
இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை  காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள  முடியும்

5 . 
http://isitraining.in

 

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம்  உலக வானிலை அறிக்கையே உங்கள்  காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 .  http://www.typingweb.com
 
இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 .  http://www.gedoo.com
 
இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 .  http://www.cvmaker.in
 
வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 .  http://www.zoom.it
 
இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search   படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.

Fast Food கடைகளின் அந்தரங்கங்கள் அம்பலம்

நாங்கள் எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.

1 .வரலாறு

 

  • 1921   - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.
  • 1948 -McDonald 's  Fast Food மார்க்கெட்  இல் தன்னை இணைத்தது.
  • 1951   - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.
  • 1951   - Jack In The Box "Drive Through"  ஐ  அறிமுகப்படுத்தியது

2 .சந்தை நிலவரம்
 

  • McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion
  • YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut )  $11.3 Billion 
  • Wendy 's &  Arby 's   இன் வருமானம்  6 700 locations களில்இருந்து $3.6 Billion
  • Burger King   இன் வருமானம்  11 200 locations களில்இருந்து $2.5 Billion

3.McDonald 's இன் சந்தை நிலவரம்
 

  • 126 நாடுகளில் இயங்குகிறது
  • 400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்
  • அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன
  • US இல் மாடு,பன்றி  இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்

4 .Super Heavy users
 

  • இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்
  • 75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது
  • 60 % sales Drive Through மூலம் நடக்கிறது


5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்

  • 61 % - கொங் Kong
  • 59% - மலேசியா
  • 54% - பிலிப்பைன்ஸ்
  • 50% - சிங்கபூர்
  • 44% - தாய்லாந்து
  • 41% - சீனா
  • 37% - இந்தியா
  • 35% - அமெரிக்கா
  • 14% - இங்கிலாந்த்து
  • 03% - சுவீடன்


6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு

45   - Jack In The Box  
62   - Taco Bell 
84   - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை  
98   - Subway 
98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ       கையாளல்         
102 - KFC - காலாவதியான இறைச்சி
111 - Burger King
115 - Arby 's
118 - Hardee 's
126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை

 

7 .பயங்கரம்
 

  • ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்
  • McDonald 's அநோமதய  விலங்கு பொருட்களில் இருந்து  சுவை ஊட்டப்படுகிறது
  • Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை கொண்டது.
  • Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது
  • ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது

8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்

 

  • Sodium  Phosphate - Fast Food Coffee
  • Titanium Diaoxcide - fat free ranch dressing
  • Dimethylpolysiloxane - McNuggets
  • Azodicarbonamide - Sub way bread
  • Diacetyl  - Milk Shake

படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்.


ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது.

துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது.இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும்முக்கியமாக Sexதான் வில்லனகவோ,வில்லியாகவோ மாறிவிடுகிறது.

பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள்.

உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்.


பெண்கள் Sex ற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.

ஆற்றல்கள்[Skills]
 
சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆத்திரம்

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக sex ல் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கதைப்பது தான் உகந்தது.

தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்

இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது.

அனேகமான பெண்களிற்கு sex ற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தியம் முற்றாக இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.

இதை பற்றி எழுதும் போது கொஞ்சம் பயமா தான் இருக்கு.யாராவது தப்பா நினைச்சிடுவாங்களோ. இது முற்றிலுமாக ஆபாசமானதாக இல்லை என்று தான் நினைக்கிறேன்.

இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் தொலைகாட்சி ,தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

எல்லா அப்பா , அம்மா களுக்கும் தங்களுடைய பிள்ளைகள் எல்லாவற்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கூறி விட்டு , சில அப்பா,அம்மா கள் தங்களுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து TV பார்த்து பிள்ளைகளை பாதிக்க செய்கிறார்கள்.தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கி சிறுவர்களுக்கு உரிய TV நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பதே நல்லது.


தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் சில
விளைவுகளை இங்கு பார்க்கலாம்

முரட்டுத்தனம்
 
ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200 000  சண்டை காட்சி களையும் , 50 000 கொலைகளையும்   தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது ,  1 - 3 மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும்,22 .5 % ஆன  சிறுவர்கள் மற்றயவர்களுடன் சண்டை,களவு என்பவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். 

05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22 .5 % - 28 .8 % க்கு உயர்வடைகிறது .இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும்  குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5 .7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கை களில் ஈடுபடுகிறார்கள் . இதற்கு, வீடுகளில் சிறுவர்கள் பெற்றோரால் துன்புறுத்தப்படுவதும் ஒரு காரணியாக அமைகிறது .

 
தனிமை போல உணருதல்

சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் மாட்டுபட்டு இருப்பது போல காட்டுவார்கள் . அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள் . 

படமாக இருந்ததால் 02 மணித்தி யாலங்களுக்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடு படுவது போல காட்டுவார்கள்.
இவ்வாறான படங்களயும் , நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக நடிகைககளை Role Model ஆக பின்பற்றும் இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள் ., காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் [ விளையாட்டு பொருட்கள்  ] கதைத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் .

 
ஒரு விடயத்தில் கவனம் [ concentration ] செலுத்த முடியாமை
 
சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சி நிகழ்சிகள் மிகவும் வேகமாகவும், நிறங்கள் அதிகமானதாகவும் , மிகவும் தெளிவாகவும் காட்டப்பட்டு இருக்கும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள். பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாகவும் , குறைந்த நேரம் மட்டுமே படிப்பிக்க வேண்டும் என இந்த சிறுவர்கள் எதிர் பார்க்கிறார்கள் .

சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறு கிறார்கள்.ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணித்தியாலங்கள் சிறுவர் களுக்கு TV பார்க்கவும் ,Games விளையாடவும் கொடுத்தபோது அநேக மானோர் சிறிது நாட்களின் பின்னர் பாடங்களில் கவனம் செலுத்த சிரமப் பட்டுள்ளார்கள்.

 
கனவுகளை மாற்றுகிறது
 
எங்களில் அநேகமானோருக்கு கனவுகள் [Dreams ]கருப்பு வெள்ளையில் தான் வருகிறது . 50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி  [ இவர்களில் பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் , பாதிபேர் 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் ] ,இவர்கள் காணும் கனவுகளை ஒரு புத்தகத்தில் குறித்து வைக்க கூறி உள்ளார்கள் .

இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேக மானோர்  கண்ட கனவுகள் பல நிறங்களாக  [colourful ] உள்ளது . 55 வயதுக்கு மேற் பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் வந்துள்ளது .55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது .

 
என்ன பார்க்கிறோம் என அறியாத வயது
 
தற்போது குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் தொலைகாட்சிகளில் போகும் பாட்டுகளுக்கு தனது கால்களை அசைத்து நடனம் ஆடுகிறது .இதை வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் பெற்றோர்கள் பெருமையாக சொல் கிறார்கள்.29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,

அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் கணக்கு பாடத்தில் குறைவான புள்ளிகளையும் , வகுப்பறைகளில் சோம்பலாகவும் இருப்பதாக கூறுகிறார்கள் .பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது .

 
உடல் பருமன்
 
TV ஐ தொடர்ந்து பார்ப்பதால் நாம் மற்றைய வேலைகளை செய்யாது ஒரே இடத்தில் இருந்து கொண்டு நொறுக்கு பண்டங்களை சாப்பிடும் போது calories இழக்கப்படாது உடல் பருமன் அசுர வேகத்தில் கூடி விடுகிறது . நடத்தப்பட்ட ஆராச்சியில் TV ஐ குறைவாக பார்த்தோர் , தினமும் 05 மணித்தியாலங்கள்  TV ஐ பார்த்தோரை விட 120 calories ஐ இழந்துள்ளார்கள்.

இவற்றில் இருந்து விடுபட ஒரு வழி இருக்கின்றது
TV ஐ பார்க்காமல் என்னுடைய Blog ஐ வந்து பாருங்கோ :))