Saturday, December 4, 2010

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌.

புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை
ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.
அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம்.
‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.
இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம்.புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து.என்வே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையயில்லை.
ப‌க்க‌ங்க‌ளை திருப்புவ‌து போல‌ ஒவ்வொரு ப‌க்க‌மாக‌ கிளிக்செய்து ப‌டித்துக்கொண்டே இருக்க‌லாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது. மாஜிகல் ரிய‌லிச‌ மேதை மார்குவேசின் ஒரு நூற்றாண்டு த‌னிமையில் துவ‌ங்கி எல்லா பிரிவுக‌ளிலும் புத்த‌க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.
புத்த‌க‌ங்க‌ள் எதிர்பார்க்க‌ கூடிய‌து போல‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளின் கீழ் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட்டிய‌லை கூட‌ பார்க்க‌ வேண்டாம் நமக்கு தேவையான‌ புத்த‌க‌த‌தை குறிப்பிட்டு தேட‌வும் முடியும்.அதே போல‌ ம‌ற்ற‌வ்ர்க‌ள் ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ளையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் ப‌டிப்ப‌தை ப‌டித்து பார்க்க‌லாம்.
ஒவ்வொரு புத்த‌க‌ம் ப‌ற்றீய‌ சுருக்க‌மான அறிமுக‌த்தோடு அவ‌ற்றின் வ‌கை குறிப்பிட‌ப்ப‌ட்டு அத்தியாய‌ம் அத்தியாமாக‌ ரிட‌ரில் புத‌த்க‌ம் விரிவ‌து புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்கு உண‌மையிலேயே ப‌ர‌வ‌ச‌ம‌ன‌ அனுப‌வ‌ம்.ந‌ல்ல‌ புத்த‌க‌ம் என்றால் ஒரே மூச்சில் கூட‌ வாசித்து விட‌லாம்.புதிய‌ புத்த‌க‌ம் என்றால் எப்ப‌டி இருக்கிற‌து என் சில‌ ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டி பார்க்க‌லாம்.
புத்த‌க‌ங்க‌ளை ட‌வுண்லோடு செய்வ‌தும் அவ‌ற்றின் கோப்பு அள‌வும் சோத‌னையாக‌ அமைய‌லாம் என்னும் போது ஒரே ப‌க்க‌த்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தக‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம் என்ப‌து உண்மையிலேயே பாராட்ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தான்.
புத்தக‌ பிரிய‌ர்க‌ளை இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் க‌வ‌ரும்.தங்க‌ள் அபிமான‌ த‌ள‌மாக‌ இத‌னை குறித்து கொள்ள‌லாம்.
அப்ப‌டியே இந்த‌ த‌ள‌த்தில் இன்னும் இட‌ம் பெறாத‌ புத்தக‌த்தை சேர்க்க‌ சொல்லி ப‌ரிந்துரைக்க‌லாம்.
இலவச இணைய வாசிப்பிற்கான இந்த தளத்தை கொண்டாடலாம்.ந‌ம்முடைய‌ செம்மொழி த‌மிழுக்கும் இப்ப‌டி ஒரு இணைய‌த‌ள‌த்தை உருவாக்க‌லாமே.

சந்தேகம் தீர்க்கும் இணையதள‌ம்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பதைவிட யாரிடமாவது மனம் திறந்து கேட்டு விட்டால் பிரச்ச்னையே இல்லை.

எதற்காக இந்த முன்னுரை என்கிறீர்களா? இப்படி புழுங்கித்தவிப்பவர்களுக்கு
உதவக்கூடிய இணையதளத்தை அறிமுகம் செய்யத்தான். ‘
ஈஸ் இட் நார்மல்’ இது அந்த இணையதளத்தின் பெயர்.தளத்தின் உள்ளடக்கமும் இந்த ஒரு கேள்வியில் அடங்கி விடுகிற‌து. அதாவது ஒருவருக்கு இருக்ககூடிய பயம் அல்லது உணர்வு சகஜமானது தானா என்னும் கேள்வி.
குற‌ட்டை விடுப‌வ‌ர்க‌ளை பார்த்தாலே ப‌ற்றிக்கொண்டு வ‌ருவ‌தாக‌ சில‌ர் கூற‌லாம்.இன்னும் சில‌ரோ விசில் அடிப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்டாலே அடிக்க‌த்தோன்றுவ‌தாக‌ சொல்ல‌லாம்.
இப்ப‌டி ஒவ்வொருக்கும் ஒரு வித‌மான‌ விநோத‌மான‌ பழ‌க்க‌மோ அல்ல‌து ப‌ய‌மோ இருக்க‌லாம்.ஆனால் என்ன‌ பிர‌ச்ச‌னை என்றால் சில‌ருக்கு இந்த‌ உண‌ர்வு க‌வ‌லைத்த‌ராலாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு இல்லாத‌ உண‌ர்வு த‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் இருக்கிற‌தோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வாட்டி எடுக்க‌லாம்.
அதிலும் குறிப்பாக‌ மிக‌வும் விசித்திர‌மான‌ ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் அத‌னை நினைத்து ம‌ன‌துக்குள் புழுங்க‌லாம்.உதார‌ண‌த்திற்கு பெண்க‌ளின் உள்ளாடையை அணிந்து கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட ஆண்களையே எடுத்துக்கொள்ள‌லாம்.
 இவ‌ர்க‌ள் ஏதோ குற்ற‌ம் செய்வ‌தைப்போல‌ நினைத்து த‌விக்க‌லாம். இப்ப‌டி ஏதோ ஒரு கார‌ண‌த்தினால் த‌வ‌று செய்து கொண்டிருப்ப‌தாக‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் மேலே சொன்ன‌ இணைய‌த‌ள‌த்திற்கு சென்று தங்க‌ள் ப‌ழ‌க்க‌த்தைகுறிப்பிட்டு அது ச‌ரி தானா என்று கேட்க‌லாம்.
அதனை பார்த்து விட்டு ம‌ற்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ப‌தில் அளிப்பார்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அளிக்கும் ப‌தில்க‌ள் க‌வ‌லையை போக்க‌ கூடிய‌ வ‌கையிலோ ஆறுத‌ல் த‌ரும் வ‌கையிலோ அமைய‌லாம்.
உதார‌ண‌த்திற்கு இந்த‌ உரையாட‌லை பாருங்க‌ள்; யாரோ ஒருவ‌ர் த‌ன‌க்குள்ள‌ பெண்க‌ளின் உள்ளாடையை அணிந்து கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் ச‌ரி தானா என்று கேட்டுள்ளார்?
 இத‌ற்கு ப‌தில் அளித்துள்ள‌வ‌ர்க‌ள் அட‌ இதெல்லாம் ரொம்ப‌ ச‌க‌ஜ‌ம்பா என்ற‌ ரேஞ்சுக்கு ப‌தில் அளித்துள்ள‌ன‌ர். இன்னும் சில‌ரோ அந்த‌ ப‌ழ‌க்க‌ம் தங்க‌ளூக்கும் இருப்ப‌தாக‌ கூறியுள்ள‌ன‌ர். ஒரு சில‌ர் இத‌ற்கான‌ விள‌க்க‌த்தையும் அளித்துள்ள‌ன‌ர்.
இதே போல‌ என் மார்ப‌க‌த்தை நானே த‌ட‌விப்ப‌ர்ர்ப‌து ச‌ரியா என்னும் கேள்விக்கும் ஒருவ‌ர் தானும் அப்ப‌டி செய்வ‌து உண்டு என்று கூறியுள்ளார். இப்ப‌டி எண்ண‌ற்ற‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விள‌க்க‌ங்க‌ளும் ப‌தில்க‌ளும் இட‌ம் பெற்றுள்ள‌ன‌..
ப‌ல சுவார்ஸ்யமான‌வை.சில‌ சிந்த‌னையை தூண்டுப‌வை. மொத்த‌தில் நாம் ம‌ட்டும் த‌வ‌று செய்வ‌தாக‌ நினைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர்களுக்கு ஆசுவாச‌ம் த‌ருப‌வை.
——-

ஆப்பிள் ஐபேடில் பி.எஸ்.என்.எல்., 3ஜி சேவை

ராஜஸ்தானில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 3ஜி சேவை வசதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் போனிலும் கிடைக்கும் என அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் ‌செய்து கொண்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்ததத்தின்படி ஆப்பிள் நிறுவன சேவை பயன்படுத்தும் ப்ரீபெய்டு மற்றும் ‌போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கு மாதம் ரூ.999 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் டிசம்பர் முதல் தேதி முதல் கணக்கிடப்பட உள்ளது.

டெலிபோன் கம்ப்யூட்டர் டெலிவிசன் மூன்றையும் அற்புதமாக இணைக்க!


                                                                 
 mobile witch remote 
                                                                 connect to a projector 
                                                        


நோக்கியோ டெலிபோன்,கணினி மற்றும் டெலிவிசன்(tv) இந்த மூன்றுக்கும் ஒரு அற்புதமான  தொடர்பை ஏற்படுத்தினால் நமக்கு மிக பெரிய வுதவியாக இருக்கும்.


அந்த அற்புதம் இன்றயபதிபில் பார்போம்.


  நம்மிடம் இருக்கும் நோக்கியா போனையே நமது லாப்டபுக்கு மைஸாக (bloutooth)மற்றும் ரிமோட்டாக ப்லூடூத்   வுதவியுடன் பயன் படுத்தமுடியும் அப்படியே TVயையும்  இயக்கமுடியும். இந்த mobile witch remote மென்பொருள் வுங்கள் கணினியில் இருந்தால். 


மிகவும் பயன்வுள்ள இந்த மென்பொருள் குறைந்த கொள்ளளவே கொண்டுள்ளது (3.32 MB) இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கஇங்கு கிளிக் செய்யவும்.

பதிவிறக்கம் முடிந்ததும் save or run வரும் கணினிக்கு புதியவர்கள் run தேர்ந்துஎடுக்கவும்,











i accept என்று இருக்கும் கட்டத்தில் மார்க்கை எடுத்துவிடவும் இல்லையேன் டூல்பரும் சேர்ந்து நிறுவப்பட்டுவிடும்.

இப்போது மென்பொருள் வுங்க கணினியில் நிறுவப்பட்டு கொண்டு இருக்கும்.


கணினியில் நிறுவிக்கொண்டு இருக்கையிலேயே நமது கணினியில் java இலையெனில் அதுவாகவே ஜாவா நிறுவுவதற்கு ஒருதளம் திறந்து குடுக்கும்.


ஜாவா தளம் திறக்கப்படவில்லை என்றால்?வுங்கள் கணினியில் முன்போ ஜாவா நிறுவப்பட்டு இருக்கலாம் ஒருவேளை ஜாவா இல்லையேன் தேவைபட்டால் மட்டும் இங்கு கிளிக் செய்து ஜாவா இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்(ஜாவா நிறுவும் போது இணையதொடப்பு இருப்பது சிறந்தது)ஜாவாவையும் நிருவிகொல்லுங்கள்.




கணினியில் mobile witch remote மென்பொருள் நிறுவியதும் இதன் icon கணினித்திரையில் தோன்றும் கீலிருக்கும் படத்தில் இருபதைபோல்.






இப்பொது ஒருமுறை மௌஸின் வுதவியுடன் refresh செய்தால் இரண்டு icons திரையில் வந்துவிடும் கீழே இருபதைபோல்.











இதில் மேல் இருபது கணினிக்காக கீழே இருபது (Nokia Application Installer)போனில் நிறுவ.


Nokia Application Installerரை போனில் நிறுவுவதற்கு பலவழிகள் இருந்தாலும் நோக்கியா pc suite  மூலம் நிறுவுவதுதான் சிறந்தது,nokia pc suite சாப்ட்வேரை போன் வாங்கும் போதே ஒரு டிஸ்க் இலவசமாக தருவார்கள்.


pc suite CD தற்போது கைவசம்  இல்லையென்றால்இங்கு கிளிக் செய்து  இலவசமாக 
Nokia pc suite  மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொல்லுங்கள்.(Nokia pc suite சாப்ட்வேர் எப்போதுமே கணினியில் இருப்பதுதான் நல்லது அப்போதுதான் நோக்கியா நிறுவனத்தின் புதிய,புதிய பதிப்புகள் வுங்கள் போனில் நிருவிகொள்ளமுடியும்)


Nokia pc suite மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு முதலில் பதிவிறக்கம் செய்த ரிமோட் சாப்ட்வேருக்கு(mobile witch remote) வருவோம்.


(Nokia Application Installer)மென்பொருளை போனில் நிறுவ  போனையும் கணினியையும் ப்லூடூத் மூலம் இனைதுவிடவேண்டும்.










இப்பொது இந்த படத்தில் கீழே இருபதின்மேல் (Nokia Application Installer) (MWRemot....) மௌஸை வைத்து வலதுகிளிக் செய்தால் install with Nokia Application Installer என்று இருப்பதை தேர்வுசெய்தால் மென்பொருளை போனில் நிருவதுடங்கிவிடும்.


கணினியின் திரையிலும் டெலிபோனின் திரையிலும் நிறுவவேண்டுமா என்று கேட்கும் அனைத்திற்கும் ok குடுத்துவிட்டால் போதும்.


இப்போது டெலிபோனின் மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கும் நமது டெலிபோனில் (menu + installations + remote)  சென்று பார்க்கவும் இதன் ஐகான் தெரியும்.







நிறுவும் வேலைகள் முடிந்துவிட்டது இப்போது ரிமோட்டாக பயன் படுத்தும் முறையை பார்போம்.


முதலில் கணினியின் திரையில் இருக்கும் இதன் iconனை கிளிக் செய்யவும் ஐகானை கீழே பார்க்கவும்.







இப்பொது கீழே இருபதைபோல் ஒரு விண்டோ திறக்கும்.









இப்போது போனில்  menu + installations + remote சென்று ரிமோட் ஐகானை திறக்கவும் search for servers வரும் சிறிதுநேரத்தில் நமது கணினியின் பெயர் போனில் வந்துவிடும் கணினியின் பெயர்தெரியும் இடத்தை திறந்தாள் கீழே இருபதைபோல் வரும்.




                                                இது கணினியின் திரையில் தெரிவது






                                                 இது போனின் திரையில் தெரிவது.




இதில் mouse mode,keyboard mode, நமக்கு தேவையானதை தேர்வுசெய்யலாம்.


போனில் menu + tools + settings +general + personalisation + standby mode + shortcuts. சென்று shortcuts சொடுக்கி போனில் தேவையான இடத்தில் இதை வைத்து விட்டால் எழிதில் திறக்கவுதவும்.  


அவ்ளோதான் வேலைமுடிந்தது இனி தொலைவில் இருந்துகொண்டே தொலைபேசிமூலம் அற்புதமாக கணினியை மௌஸின் மற்றும் கீபோர்டின் வுதவி இல்லாமல் இயக்கலாம். கணினியின் திரை முழுவதுமாக டெலிபோனின் திரைக்கு வந்துவிடும்.



                                                            connect to a projector 


இப்போது கணினிக்கும் டெலிவிஷனுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதை பார்போம்







இது பலருக்கு தெரிந்து இருந்தாலும் கணினியின் திரை TV யில்
தெரியும் என்ற அளவிலேயே தெரிந்து வைத்து இருகின்றார்கள் இதில் இருக்கும் வசதிகளை முழுமையாக தெரிந்தால் இவ்ளோநாள் இது தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருந்துவார்கள்.


முதலில் கணினியையும் டெலிவிஷனையும் இணைப்பதால் என்ன பயன் என்பதை பார்த்துவிட்டு அதை எப்படி இணைப்பது என்று பார்போம்.



கணினியின் வெரும்திரையில் மௌசை வலது செய்து கீழே கடைசியில் இருக்கும்  Personalize  கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் ஒருவிண்டே திறக்கும்.







இதில் கீழே இடதுபக்கம் display என்பதை கிளிக் செய்தால் கீழே இருபதைபோல் ஒரு விண்டோவ் திறக்கும்.



  
இதில் இடதுபக்கம் connect to a  projector என்பதை தேர்வு செய்தால் கீழ் இருப்பதை போல் ஒருவிண்டோவ் திறக்கும்.






அல்லது சுருக்கமாக் கீபோர்டில் விண்டோ படம் போட்ட கீயையும் P என்னும் கீயையும் சொடுக்கலா.






(விண்டோ 7 மற்றும் Windows Vista ஒரேமாதிரிதான் Windows XP மட்டும் FN key அழுத்திக்கொண்டு(function key) F5, F7 or F8 அழுத்துவதன் மூலம் எழிதில் திறந்து விடலாம்)இதில் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கு 
கிளிக் செய்துபார்க்கவும்.

இதில் நான்கு வகையான படங்களும் நான்கு வகையான வசதிகளை கொண்டது நமக்கு தேவையானத்தின் மேல் மௌசால் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்.


1 Computer only  இதை தேர்வு செய்வதன்மூலம் கணினிக்கும் tv கும் வுள்ளதொடர்பை    துண்டிப்பது.


2 duplicate   இதை தேர்வு செய்வதன் மூலம் கணினியின் திரையில் தெரிவது அனைத்தும் tv யிலும் தெரியும்.


மூன்றாவதாக இருப்பதுதான்(extend)மிக மிக அற்புதமான பயன் தரக்கூடியது 


3  Extend இதைதேர்வுசெய்தால் நமது கணினியின் ஸ்க்ரீன் மட்டும் TV யில் தெரியும்.
நமது மௌசின் கர்சரை(mouse cursor) tv பக்கம் இழுத்து செல்லுங்கள் கர்சர் tv யில் தெரிவதை பார்க்கலாம்.


Extend    தேர்வு செய்வதால் வசதிகள்என்ன என்று பார்போம். இரண்டு நண்பர்கள் இருக்கும் அறையில் ஒருவர் இணையத்தில் ஏதேனும் ஒரு வீடியோ பார்க்க அல்லது டிஸ்கில் ஏதேனும் படம் பார்க்க விரும்புகிறார் மற்றவரோ இணையத்தில் வேறஎதேனும் பக்கங்களை பார்க்க விரும்புகிறார் அல்லது ஆலுவலகம் சம்மந்தமாக ஏதேனும் ஒருவேலை கணினியில் செய்யவேண்டும்  இருபதோ ஒருகணினி! இதற்க்கு இந்த Extend மூலம் அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது.


அதாவது நண்பர் பார்க்க விரும்பும் அந்த விண்டோவை மட்டும் மௌசின் கர்சர்(mouse cursor) வுதவியுடன் இழுத்து சென்று டிவி பக்கம் வைத்து விடுங்கள் நண்பர் tv யில்  அவருக்கு தேவையான வீடியோ வந்து விட்டதால் வுன்களை தொந்தரவு செய்யாமல் tv யை  பார்க்க ஆரம்பித்து விடுவார் இந்த EXTEND என்கின்ற    மந்திர சாவிமூலம்.


இன்னு விபரம் தேவையெனில் கீழே வீடியோவை பார்க்கவும் 










4  projector only இதனை தேர்வுசெய்வதன்மூலம் கணினியின் திரையை மூடிவிட்டு tv கணினியின் திரையை பார்க்கலாம் இது எதற்கு பயன் படும் என்றால் எதேனு படம் பார்பதாக இருந்தால் கணினியின் திரையில் பார்பதைவிட கணினியில் இருந்து tv யில்  பார்ப்பது நன்றாக இருக்கும் ஒரு DVD பிளயரின் தேவையை இது பார்த்துவிடும்.




        இப்போது எப்படி டிவியுடன் கணினியை இணைப்பது என்றுபார்போம்.




கணினியையு  டிவியையும் இணைக்க கீழே இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு கேபிள் மட்டு இருந்தால் போதும்.


      

இதில் நமது கணினிக்கும் டெலிவிசனுக்கும் பொருத்தமான கேபிளை வாங்கவும் குவைத்தில் இதன் விலை இரண்டுதினார்கள் மட்டுமே.




ஆடியோவிற்கு தனியாக இணைக்க வேண்டும் கீழே பார்க்கவும்





இதில் சிவப்பு மற்று வெள்ளையாக இருப்பதை டிவி யில் ஆடியோ இடத்திலும் கருப்பாக இருப்பதை கணினியல் ஹெட்செட்  பொருத்தும் இடத்திலும் பொருத்தவேண்டும் (கணினிக்கும் tv க்கும் கேபிள் தொடர்பு குடுக்கும் சமயம்   மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்து விடவேண்டும்)


கேபிள் பொருத்தி தொடர்பு ஏற்படுத்தியதும் டிவியை ஆன் செய்து ரிமோட்டில் TV/AV
மாற்றம் செய்து மேற்கூறிய connect to a projector வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.


இப்போது தொலைபேசி கணினி டெலிவிசன் மூன்றையும் இணைத்தாகிவிட்டது.







இலவசமாக phone call,sms,மற்றும் தடை செய்யப்பட்ட தளங்களை திறக்க!


இறைவனின் பெயரால்!!


          
இந்த பயனுல்ல தகவலுக்கு முன்பு சிலவிசயங்கள்.
 நான் ஆன்லைனில் இருக்கும் சமயம் என்னிடம் வுரையாடும்(chat) நண்பர்களுக்கு நன்றி! அதேசமயம் எடுத்த எடுப்பிலேயே என் சுய முகவரிகளை கேட்கின்றார்கள்! முகவரிகளை தருவதில் யாதொரு சங்கடமும் இல்லை என்றாலும் அதில் தவறான செயலுக்கு பயன்படுத்துபவர்களும் இருகின்றார்கள் என்பதை மறந்துவிடகூடாது.


பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில்  இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான்  இது சாத்தியம் என்பதை பணிவுடன்  தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.


தர்போது வுலக அளவில் என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிதுகொண்டு இருக்கிறது என்றாலும் முதல் முதலில் இன்ட்லி யில் என்னை பின் தொடர்ந்த நண்பர்களுக்கு RDX,kingkhan,senthazalravi,karisalkaran மற்றும் அணைத்து சமுகதலங்களில் இருந்து என்னை பின்தொடரும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி! இதேபோல் அடுத்து அடுத்த பதிப்புகளில் நல்லபடியாக performance பன்னவே நினைகின்றேன்






                                                                                      1


கணினியில் இருந்து இலவசமாக வுலகம் முழுவதும் "SMS"அனுப்ப.





                                                        Photobucket
                                                                           

கணினியில் இருந்து அணைத்து நாடுகளுக்கும் SMS அனுப்ப அற்புதமான தளம்
அதுவும் பண்டிகைகாலங்களில் ஒவ்வொரு நண்பர்களுக்காக வாழ்த்துக்கள் அனுப்பி நேரத்தை வீணாகாமல் ஒரேநேரத்தில் பத்துநபர்கள் வீதம் தொடந்து அனுபிகொண்டே இருக்கலாம் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு!அதுவும் இலவசமாக!!


பயனுல்ல இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்




Photobucket





முதலில் இதில் இடதுபக்கம் register என்பதில் சென்று எந்த சிரமமும் இன்றி நிமிடத்தில் register செய்து கொல்லுங்கள்.இதில் வுங்கள் டெலிபோன் என் கேட்பார்கள் நமது போன் நம்பரை குடுத்துவிட்டு ok குடுத்தால்(We have sent an SMS with your Password to your mobile number) சில நொடியில் நமது தொலைபேசிக்கு நான்கு இழக்க என் அனுப்புவார்கள் அதை இங்கு இருக்கும்
இங்கு Activate your account என்ற இடத்தில் தந்து ok குடுத்தால் போதும் வுலகம் முழுவதும் SMS இலவசமாக அனுபிகொண்டே இருக்கலாம்.(குவைத்தில் viva வில் மட்டும் இது வேலைசெய்யாது)
ஒரேநேரத்தின் பத்து நபர்களுக்கு அனுப்ப send text message பாக்ஸ்சில் moble number என்ற இடத்தில் ஒவ்வொரு டெலிபோன் நம்பர்முடியும் இடத்தில் கமா( , ) வைத்தால் போதும் 00 அவசியம் இல்லை நாட்டின் கோடு என் மட்டும்போதும்.




way2sms இதுவும் இலவசமாக sms வுதவும் தளம் ஆனால் இந்தியவுக்குமட்டும் அதாவது வுலகில் எந்தமூலையில் இருந்து  வேண்டுமானாலும் இந்தியவிற்கு sms அனுபலாம்.


முதலில் இங்கு கிளிக் செய்து இத்தளம் செல்லவும்.

Photobucket





register என்பதில் பதிவு செய்து phone நம்பர் கேட்கும் இடத்தில் இந்தியாவில் நமது வீட்டில் இருக்கும் போன் நம்பரை கொடுத்துவிடவும் நான்குஇழக்க என் இந்தியாவிற்கு அனுபிவிடுவார்கள் சிறிது நேரம் கழித்து இந்தியாவில் இருக்கும் நமது வீடிற்கு போன் செய்து அந்த நான்கு இழக்க என்னை வாங்கி இதில் பதிந்து விடுங்கள் கீழே படத்தை பார்க்கவும்.



Photobucket








அவ்ளோதான் வேலைமுடிந்தது அடுத்து அடுத்த முறை sms அனுப்பும்போது இந்த நான்கு இழக்க என்னையே password ஆக பயன் படுதவேண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

Photobucket



அடுத்து இலவசமாக வுலகம் முழுவதும் பேச

                                     





இத்தளம் மூல இலவசமாக வுலகின் பலபாகங்களுக்கு பேசலாம் என்றாலும் ஒருநாளைக்கு மிக குறுகிய நிமிடங்களே பேசமுடியும்.
தினமும் யாருக்கேனும் ஹாய் சொல்ல பயன்படுத்தலாம் குறிப்பாக அரபு நாட்டில் இருந்து மற்ற அரபுநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு பேச பயன் படுத்தலாம்(அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேசிவிடலாம் ஆனால் அரபு நாடுகளில் இருந்து மற்ற அரபு நாடுகளுக்கு பேச அதிக செலவாகும் அதற்காகத்தான்) 

பயன்னுள்ள இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Photobucket



இதில் இடதுபக்கம் சென்று எந்த நாட்டிக்கு பேசவேண்டுமோ அந்த நாட்டை தேர்வு செய்துகொள்ளவும்.இத்தளம் செல்ல எந்த  password,மற்றும் register தேவையில்ல சுலமமாக திறந்துவிடலாம்.

தினமும் மணிகணக்கில் பேசுபவர்களுக்கு இது வுதவாது என்றாலும் அவசரத்திற்கு தேவைக்கு கண்டிப்பாக இதி பயன் வுள்ளதாக இருக்கும்.

தடைசெய்யப்பட்ட தளங்களை திறக்க!




சிலதளங்கள் நாம் திறக்க முற்படுபோது அது தடைசெய்யப்பட்டு இருக்கும் சில அலுவலகங்களில்,ஹஷ்டல்களில் குறிப்பாக அரபுநாடுகளில்.பயனுல்ல நல்ல தளங்களைகூட தடை செய்து வைத்து இருப்பார்கள்.

அப்படி தடை செய்த தளங்களை எழிதில் திறந்து விடலாம் இந்த proxy வழியாக
இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்.
Photobucket



இதில் surf now !என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட தளத்தின் URL குடுத்து surf now என்பதினை சொடுக்கவும் தடைசெய்ய பட்ட தளம் அற்புதமாக திறந்து இருப்பதை காணலாம்.


அரபுநாடுகளில் சில messenger பயன் படுத்த தடை செய்து இருகின்றார்கள் அதேபோல் தொலைதொடர்பு சம்மந்தமாக பணனுள்ள நல்ல தளங்களையும் தடை செய்து இருகின்றார்கள் மற்றும் blackberry தடை செய்யப்பட்ட இருக்கிறது  அதேபோல் இந்தியர்கள் அதிகம் பயன் படுத்தும் skype messenger ரை தடை செய்யவேண்டும் என்று அரபுநாடுகளில் பேச்சுகள் அடிபடுகின்றது அத்தகைய சூழ்நிலையில் சிரமங்களை தவிர்க்க பயன்பட வுதவவே இதைதருகிறேன்.

இது அல்லாமல் நேரிடையாகவே கணினியில் சில மாற்றங்கள் செய்து தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்கலாம் என்றாலும் அதுவெல்லாம் தீய செயலுக்கே வழிவகுக்கும் என்பதனால் இது ஒன்றே போதும்.

இந்த web proxy பயன் படுத்தி தடைசெய்யப்பட்ட தளங்களை திறப்பது சட்டபடி குற்றம் இல்லை என்றாலும் அரசாங்கம் பொதுமக்கள் நன்மை கருதி சில தளங்களை தடை செய்து இருகின்றார்கள் என்பதினை மறந்துவிட கூடாது

நல்ல நோக்கத்துடன் இதைதருகின்றேன்  தீய செயல்களுக்கு பயன் படுத்தினால் தீய வழியில் அழைத்து சென்றுவிடும்  என்பதினை கவனத்தில் கொள்ளவும்.

அதேபோல் வேலை நிமித்தமாக  பணக்கார நாடுகளுக்கு செல்பவர்கள்.
பணக்கார நாடுகளில் சட்டங்கள் மிக கடுமையானது என்பதினையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பணக்கார நாடுகளில் சிறிய தவறுக்கு குடுக்கும் தண்டனை கீழே பார்க்கவும்.

அப்படி பாதிகப்பட்ட ஒருவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் புலம்புவதை இரண்டாவது வீடியோவில் பார்க்கவும்.

                                                                                1






                                                                                     
                                                                               2 




 பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில் இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான் இது சாத்தியம் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.