Friday, December 23, 2011

ஆனந்தம் இன்று முதல் ஆரம்பம்

வணக்கம் அன்பர்களே!

புதிதாக வந்துள்ள என்னை உங்களுடன் ஐக்கிய்யப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
என்னையும் உங்கடுடன் ஒருவனாய் மனமார ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இப்படிக்கு புதிய பதிவன்

உச்சக்கட்டம்என்பது இதுதானா?(வீடியோ இணைப்பு)

பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பயமாகவும் இருக்கலாம்.

நம் மூளையிலுள்ள திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான காரணமாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது.

தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறியாகும். இங்கு காணப்படும் பெண் தற்காலிக பயத்தை வெளிக்காட்டும் காட்சியைக் காணலாம்.

'பில்லா 2' அப்டேட்ஸ்!

'மங்காத்தா' படத்தினை தொடர்ந்து 'பில்லா - 2' படத்தில் நடித்து வருகிறார் அஜீத், 'உன்னைப்போல் ஒருவன்' படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'பில்லா 2' குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி தனது டிவிட்டர் இணையத்தில் " 'பில்லா 2' படத்தினை EPIC கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஆசியாவில் 'பில்லா 2' படம் தான் முதன் முதலில் அந்த கேமிராவை பயன்படுத்தி உள்ளது.

படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே அஜீத் டூப் இல்லாமல் செய்து இருக்கிறார். அவரது உழைப்பு கண்டிப்பாக அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.

'பில்லா 2' படத்தில் யுவன் உழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் பாடல்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும் " என்று தெரிவித்துள்ளார்

மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?


படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி, திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி.தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும் வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை.பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4 நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.




சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

விஜய் இடத்தை பிடித்து விட்டேன் -சிம்பு

ஆனந்த விகடன் பேட்டியில்தான் சிம்பு இப்படி சொல்லியிருக்கிறார்.


விஜய் எல்லாம் மாஸ் நடிப்பை விட்டு இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நண்பன் படத்தில் நடிக்கிறார்.நீங்க ஒஸ்தியில இப்படி மாஸ் ஹீரோவா பழையபடி நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே..விண்ணை தாண்டி வருவாயா படத்துல நடிச்ச மாதிரி சாஃப்டா நடிக்கலாமே ..? என கேட்டதற்கு சிம்பு இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.


விஜய் மாஸ் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு நண்பனில் சாஃப்டாக நடிக்கிறார்.நான் சாஃப்டாக நடிப்பதை விட்டுவிட்டு மாஸ் ஹீரோவாகிட்டேன்.அவர் அங்க போயிட்டார்.நான் இங்க வந்துவிட்டேன்..!

அதாவது விஜய் இடத்துக்கு இவர் வந்துட்டாராம்…ம்..ஒஸ்தியில பத்து கோடி ரூபா நஷ்டம் ஆகிட்டு அப்பா புலம்பிகிட்டு இருக்கார்.,அவர் கண்ல பட்டுடாதீங்க..சிம்பு!

மங்காத்தா படத்தில் அஜீத் அறிமுகம் ஆகிற ஜீப் சீனை ஒஸ்தியில் படமாக்கிய எஸ்.டி.ஆர் தீவிர அஜித் ரசிகர் என்பது தெரிந்ததே.முன்பு இவர் ரஜினி ரசிகராக இருந்தார்.இப்போது விஜய் மீது இன்னும் கொஞ்சம் கொளுத்திப்போடலாம் என்று ,2011 ஆண்டின் சிறந்த படம் மங்காத்தா தான்.அதுக்கு அடுத்து காஞ்சனா அப்புறம் வேலாயுதம் என சொல்லியிருக்கிறார்.

மேட்டர் என்னன்னா தனுஷ் தான் தனக்கு போட்டியாளர்னு சொல்றாங்க.அஜீத்,விஜய் லெவெலுக்கு தன்னை மீடியாக்கள் உயர்த்த மாட்டேங்குதே என்ற கடுப்பில்தான் சிம்பு இப்படியெல்லாம் தத்துவம் பொழிகிறாரா என்னவோ.

சில சினிமா ரகசியங்கள் டுவிட்டரில் உடைக்கும் திவ்யா : இயக்குனர் டென்ஷன்

சஸ்பென்சாக வைத்திருக்கும் சினிமா பற்றிய தகவல்கள், போட்டோக்களை நடிகை திவ்யா டுவிட்டரில் வெளியிடுவதால் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர் மீது கோபத்தில் உள்ளனர். ‘கட்டாரி வீர சூர சுந்தராங்கி’ என்ற படத்தை கன்னடத்தில் இயக்கி வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. 

இதில் உபேந்திரா ஹீரோ. திவ்யா ஹீரோயின். தற்போதைய நவீன காலம் மற்றும் தேவலோக காலம் ஆகிய இரண்டையும் இணைத்து இப்படம் உருவாகிறது. இதனால் படத்தின் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, காஸ்டியூம் போன்றவற்றை வெளியிடாமல் இயக்குனர் ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் ஹீரோயின் திவ்யா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். படத்தில் அணிந்து நடிக்கும் புதுவித காஸ்டியூம், பின்னணி அரங்கு ஆகியவற்றின் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சஸ்பென்சாக வைத்திருக்கும் தகவல்களை திவ்யா அம்பலப்படுத்தி வருவதால் இயக்குனரும் தயாரிப்பாளரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். படம் சம்பந்தமாக எந்த தகவல், போட்டோவையும் வெளியிட கூடாது என்று திவ்யாவுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜனவரி 1ம் தேதி - ஒரு வரலாற்றுபார்வை


ஜனவரி 1ம் தேதி என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது புத்தாண்டை ஜாலியாக கொண்டாடுவது, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை, நண்பர்கள், குடும்ப நபர்களுடன் சேர்ந்து மகிழ்வது, டூர் செல்வது என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சிலர் புத்தாண்டு அன்று கோவில், சர்ச், மசூதி என்று பக்தி பரவசமாகவும், சிலர் புத்தாண்டை கொண்டாடுவதாக கூறி 'புல்' போதையில் கவிழ்ந்து கொண்டு, கிடக்கும் சம்பவங்களை தற்காலத்தில் பார்க்க முடிகிறது. ஆனால் வரலாற்றில் இந்த ஜனவரி 1ம் தேதிக்கு பல சிறப்புகள் உள்ளன. இந்த தேதியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளன.

ஜனவரி- 1 பிறந்தது எப்படி?

ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் கொண்ட நாட்கள் காட்டியை அறிமுகப்படுத்தியவர் கிறிஸ்தவ தலைமை மதக் குருவான போப் கிரிகோரி XIII. இவர் கடந்த 1582ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த கால அட்டவணையை வெளியி்ட்டார். அதன்பிறகு அந்த கால அட்டவணை பிரபலமாகி உலகம் எங்கும் பரவியது.

இந்த நாள் காட்டியானது, கிரிகோரியன் காலண்டர் என்றும், கிறிஸ்டியன் காலண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜூலியன் காலாண்டரை தழுவி தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது. கிரிகோரி காலண்டர் கணக்குபடி ஜனவரி 1ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.


அந்த காலண்டர் வழக்கத்துக்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். கிரிகோரியன் காலண்டர் வெளியான பிறகும் ரஷ்யா, கிரேக்கம் உள்ளிட்ட சில நாடுகள் பழைய முறையை தான் பின்பற்றி வந்தன.


இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனத்தினரும் ஒரு வகையான ஆண்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனற். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் சித்திரை மாதம் 1ம் தேதியை (ஏப்ரல் 14ம் தேதி) தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.


கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க சபையில் இருந்து 15ம் நூற்றாண்டில் பிராட்டஸ்டன்டு சபை பிரிந்தது. இதனால் பிராட்டஸ்டன்டு பிரிவினர் கிரிகோரியன் காலண்டரை பின்பற்ற மறுத்து, வேறு பல முறைகளை பின்பற்றி வந்தனர். 20ம் நூற்றாண்டில் தான் இந்த பிரிவிணைகள் நீக்கப்பட்டு, உலகம் முழுவதும் பொதுவாக கிரிகோரியன் காலண்டர் முறையை பின்பற்றும் வழக்கம் தோன்றலாகியது.


இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது.


சரி இனி, ஜனவரி 1ம் தேதி நடந்த சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்...


வரலாற்றில் ஜனவரி 1ம் தேதி பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. கிமு 42ம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஜூலியன் காலாண்டர் பின்பற்று முறை வழக்கில் வந்தது. அதன்பிறகு அதே நாளில் 1522ல் வெனிஸ் குடியரசு, 1544ல் ரோம பேரரசு, 1556ல் ஸ்பெயின், போர்ச்சுகல் அரசுகள் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக கொண்டாட துவங்கின.


மேலும் பெர்சியா, சுவீடன் நாடுகளில் 1559லும், பிரன்சு குடியரசில் 1564லும், ஸ்வாட்லாந்தில் 1600லும், ரஷ்யாவில் 1700லும், இங்கிலாந்து பேரரசின் பகுதிகளில் 1752ம் ஆண்டு முதல் ஜனவரி 1ம் தேதியை ஆண்டின் முதல் தேதியாக அங்கீகரிக்கப்பட்டது.


1800ம் ஆண்டு டச்சுக்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. 1804ம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களிடம் இருந்த ஹைதி சுதந்திரமடைந்தது. மேலும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் 1956ம் ஆண்டிலும், ப்ரூனை நாடு 1984லும் வந்த ஜனவரி 1ம் தேதிகளில் சுதந்திர நாடுகளாக மாறின.


இந்தி சினிமா நடிகர் நானா படேகர் 1951ம் ஆண்டும், இந்திய நடிகை சோனாலி பிந்த்ரே 1975ம் ஆண்டும் இதே நாளில்தான் பிறந்தனர்.


இதே ஜனவரி 1ம் தேதிதான் அமெரிக்காவின் சீல் கடற்படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து போட்டுத் தள்ளினார்கள் என்பது நினைவிருக்கலாம்.


இப்படி ஜனவரி 1ம் தேதியின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்...