Wednesday, December 21, 2011

தங்கை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தேன் ?


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் கணேசன். நகை பட்டறை தொழிலாளி. இவருக்கும், மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த நடராஜன் மகள் தனலட்சுமிக்கும்(30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தனலட்சுமி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவரது அண்ணன் ராஜ்குமார்(33) இருந்தார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மருத்துவமனையின் வார்டு பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. பணியிலிருந்த ஊழியர்கள் சென்று தனலட்சுமியின் அறையில் பார்த்தபோது, அவர் படுக்கையில் தீப்பற்றி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். உதவிக்கு இருந்த தனலட்சுமியின் அண்ணன் ராஜ்குமாரை கூச்சலிட்டு அழைத்தனர். அப்போது அந்த வார்டின் பாத்ரூமில் இருந்த ராஜ்குமார், “எனது தங்கை இறந்து விட்டாளா?“ எனக்கேட்டுக் கொண்டே கையில் பெட்ரோல் கேனுடன் வெளியே வந்தார். ராஜ்குமாருக்கும் உடல் முழுவதும் தீக்காயம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மதிச்சியம் போலீசார் விரைந்து வந்து ராஜ்குமாரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போலீசாரிடம் ராஜ்குமார் அளித்த வாக்குமூலத்தில், “எனது தங்கை தனலட்சுமி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால், எங்களது குடும்பமும், தங்கையின் கணவர் குடும்பமும் நிம்மதி இழந்தன. எனவே தங்கையை கொல்ல முடிவு செய்தேன். நேற்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்கை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தேன். போலீசார் என்னை துன்புறுத்துவார்கள் என்பதால், என் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டேன்Õ என கூறினார். வாக்குமூலம் கொடுத்து முடித்த சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஜெயலலிதாவை திடீரென சந்தித்த மலையாள நடிகர் மம்மூட்டி- கேரள அரசு தூது

மலையாள நடிகர் மம்முட்டி திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இனவெறிப் பிரச்சினையாக்கி விட்டனர் கேரளத்தில் உள்ள சிலர். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் போனாலும், யார் போனாலும் தாக்குகிறார்கள், கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள், சபரிமலை பக்தர்களை மிகக் கேவலமாக அர்ச்சிக்கிறார்கள். இதனால் கொந்தளித்துப் போன தமிழகத்தில் உள்ள சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத கேரள அரசு தமிழகத்தில் உள்ள மலையாளிகளை யாரும் தாக்கக் கூடாது என்று கோரி வருகிறது. ஆனால் கேரளாவில் தாக்குதலை தடுக்கவோ, நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவோ அங்குள்ள போலீஸார் சுத்தமாக முயல்வதில்லை. மாறாக அவர்களே தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கால் மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த மம்முட்டியிடம் முதல்வரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு பதிலளிக்கக் கூட நேரமில்லாமல் விருட்டென போய் விட்டார் மம்முட்டி.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அத்தனை சினிமாக்காரர்களும் உள்ளனர். கேரள அரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சினிமா சங்கமும் இதுவரை கேரள அரசுக்கு எதிராக களம் இறங்கவில்லை. முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மம்முட்டி வந்து போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக திரைத்துறையினரை போராட விடாமல் தடுக்க தூதராக அவர் வந்து போனாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழகத் திரைத்துறையினர் இப்போதைக்கு தமிழக அரசுக்கு ஆதரவாக போராடுவதாகத் தெரியவில்லை.

பேஸ்புக்கில் இளம்பெண் விரித்த காதல் வலை:ஏமாந்த டாக்டர்கள் என்ஜீனியர்,

திருச்சி தொழில் அதிபரை பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி மிரட்டிய அபிநயா இதேபோல் 3 டாக்டர்கள், ஒரு என்ஜினீயரை ஏமாற்றியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதில் என்ஜினீயரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டதாகவும் அபிநயா கூறியுள்ளார்.


திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (30). இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபர். இவர் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (23) என்ற பெண் குறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பேஸ்புக் மூலம் காதல்

அதில், அபிநயா என்ற பெண்ணுடன் பேஸ்புக்' மூலம் தனக்கு அறிமுகம் கிடைத்ததாகவும், இந்த அறிமுகத்தை பயன்படுத்திக்கொண்டு தன்னுடன் பேஸ்புக்' மற்றும் ஈமெயில் மூலம் அடிக்கடி பேசி தன்னை காதலித்த அபிநயா தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்டுருந்தார். தனது சொத்துக்களில் பாதியை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், ஈமெயில் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்த புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கோட்டை அனைத்து மகளிர் போலீசார் அபிநயாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதல் வலை விசிய பெண்

போலீசார் அபிநயாவிடம் நடத்திய விசாரணையின்போது அவர் ஏற்கனவே இதேபோல் பலரை காதலிப்பது போல் பழகி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.

பேஸ்புக் பழக்கத்தின் மூலம் திருச்சி தொழில் அதிபர் முருகனை காதல் வலைவீசி மிரட்டிய அபிநயாவின் காதல் வலையில் முதலில் சிக்கியவர் கடலூரை சேர்ந்த ஒரு டாக்டர் ஆவார். 

ராயப்பேட்டையில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அந்த டாக்டரிடம் அனு என்ற பெயரில் முதலில் நோயாளி போல் சென்று பழகி இருக்கிறார். அதன்பின்னர் அவரை காதலிப்பதுபோல் நடித்து ஒரு கட்டத்தில் கேட்ட பணம் கிடைக்காததால் அவர் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்திருக்கிறார். 

இதேபோல் அரியலூரை சேர்ந்த ஒரு டாக்டர், நாமக்கல்லை சேர்ந்த இன்னொரு டாக்டர் ஆகியோரையும் பேஸ்புக் காதல் மூலம் வீழ்த்தி இருக்கிறார் இந்த அபிநயா என்கிற அனுஷ்கா.

திருமணம், விவாகரத்து

விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் காவியா என்ற பெயரில் பேஸ்புக் மூலம் பழகி நட்பை ஏற்படுத்தி இருக்கிறார், அபிநயா. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாற அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக அவரை விவாகரத்து செய்து இருக்கிறார்.

அரியலூர் டாக்டர் மூலம் திருச்சி தொழில் அதிபர் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அபிநயா. இந்த பழக்கம் எல்லை மீறி போய் மிரட்டலில் முடிந்தபோதுதான் தற்போது போலீஸ் பிடியில் சிக்கி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பெரிய தொழில் அதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுடன் வலைத்தளத்தின் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு காதலிப்பதாக கூறி மிரட்டல் விடுத்து கைவரிசை காட்டிய அபிநயா தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக அபிநயாவிடம் ஏமாந்த டாக்டர்கள் என்ஜினீயர் ஆகியோரில் 2 பேரை சாட்சியாக சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்களை திருச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவித்து உள்ளது.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரூ.115

10ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 


மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்களில் அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் அப்பாடப்பிரிவை எடுத்து படித்த மாணவர்களிடம் ரூ.225 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் நடப்பாண்டில் அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு எழுதவிருக்கின்றனர். இதனால் பிற மாணவர்களைப் போன்று மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் தேர்வுக் கட்டணத்தை அரசு ஏற்கிறது. தனியார் பள்ளிகளில் பயில்வோர், ஆங்கில வழியில் பயில்வோர் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவ-மாணவியர் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகாமானோர் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். 

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குனர் பரிந்துரைத்திருந்தார். அவரது பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் பிறப்பித்துள்ள அரசாணை விவரம் வருமாறு,

பத்தாம் வகுப்புத் தேர்வுக் கட்டணமாக பள்ளித் தேர்வர்களிடமிருந்து ரூ.115ம், மெட்ரிக் பள்ளித் தேர்வர்களுக்கு அறிவியல் 1 மற்றும் 2-க்கு செய்முறைத் தேர்வு இருந்ததால் ரூ.225ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

வரும் 2012 மார்ச்சில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வுக் கட்டணத்தில் எந்தவித உயர்வும் கூடாது என்று அரசு கருதியுள்ளது.

எனவே மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டணமாக ரூ.115ஐ நிர்ணயம் செய்து வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கோரியுள்ளார். அதையேற்று மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.115 நிர்ணயம் செய்யப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.வுக்கு அடுத்து சசிகலா முதல்வர்? ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி!

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு நிச்சயம் ஆபத்து வரும், அப்போது அடுத்த முதல்வராக யாரைப் போடலாம் என்று ஜோசியரிடம் ஜாதகத்துடன் போனதால்தான் சசிகலா குரூப்புக்கு முதல்வர் ஜெயலலிதா ஆப்பு வைத்து விட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா இடையிலான பிளவுக்கு என்ன காரணம் குறித்த 'உளவுத் தகவல்கள்' தொடர்ந்து கசிந்தவண்ணம் உள்ளன. பல காரணங்களை இதற்கு அடுக்குகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது போயஸ் தோட்ட வீட்டுக்குள் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் இதுவரை தங்கியிருக்கவில்லை, மாறாக ஏராளமான ரகசியங்களும் சேர்ந்து குடித்தனம் செய்துள்ளது தெரிய வருகிறது.

ஜெயலலிதாவிடமிருந்து சசிகலா நீண்ட காலத்திற்கு முன்பே மனதளவில் பிரிய ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார்கள். குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு பாதகமாக ஜெயலலிதா மாறக் கூடும் என்று சசிகலா தரப்பு 'கெஸ்' செய்ய ஆரம்பித்து விட்டதாம். இதனால்தான் அடுத்தது என்ன என்று அட்வான்ஸ்டாக யோசிக்கு ஆரம்பித்துள்ளது இந்தக் கூட்டம்.

இதற்காக ஜெயலலிதாவுக்காக யாருடனெல்லாம் பேசாமல் இருந்தாரோ அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார் சசிகலா. அவர்களுடன் ரகசியமாகவும் சந்தித்துப் பேசியுள்ளார். சிலர் போயஸ் தோட்ட வீடு வரைக்கும் கூட வந்து போயுள்ளனராம். இந்த ரகசிய சந்திப்புகளுக்கு கார்டனில் உள்ள சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகள் உடந்தை என்று கூறப்படுகிறது.

மேலும் பெங்களூர் கோர்ட்டுக்கு விசாரணைக்கு சசிகலா வந்தபோதும் இந்த ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் வந்து சசிகலாவைப் பார்த்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு அவருக்கு விசுவாசமான அதிகாரிகள் மூலம் போயிருக்கிறது.

அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை மட்டும் பக்குவாகமாக, பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்து முக்கிய சட்ட நிபுணர் ஒருவருடன் சசி தரப்பு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளதாம்.

மேலும் திமுக தரப்பைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களுடனும் கூட சசிகலாவுக்குத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் ஜெயலலிதாவை அதிர வைத்துள்ளது.

இதை விட ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாரை முதல்வராக்குவது என்ற மந்திராலோசனையில் சசிகலா தரப்பு ஈடுபட்டதுதான். இதற்காக முக்கிய ஜோதிடரையும் போய்ப் பார்த்துள்ளனர். அப்போது இரண்டு அமைச்சர்களின் ஜாதகங்களையும் கொடுத்து இதில் யார் எங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள் என்றும் ஆலோசனை கேட்டுள்ளனராம்.

இதெல்லாம் ஜெயலலிதாவை கடும் அதிர்ச்சியிலும், ஆவேசத்திலும் தள்ளி விட்டு விட்டது. இதனால்தான் சசிகலா மீது கடும் கோபம் கொண்டு அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டியுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

மொத்தத்தில் சமீப காலமாக தனக்கு வெளியில் உள்ள எதிரிகளை விட உள்ளுக்குள்ளேயே, அதுவும் கூடவே இருப்பது ஜெயலலிதாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதால்தான் தனது கொடநாடு பயணத்தைக் கூட தள்ளிப் போட்டு விட்டு முதலில் வேரறுப்பு வேலைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்று கூறுகிறார்கள்.

'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாதவரா?'


எந்த காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்... எந்த வினைக்கும் ஒரு எதிர்வினையுமிருக்கும்.

அப்படி கிளம்பியிருக்கும் எதிர்வினை...

''சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் சேர்ந்திருந்ததால், சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே?

என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாதா?...''

-என்பதுதான் சசிகலாவுக்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கும் வாதம்!

இன்னொரு பக்கம் இப்போதைய ஜெயலலிதா நடவடிக்கையை வைத்து ஜெயலலிதாவை புனிதராக்கவும் சசிகலாவை வில்லன் கேரக்டர் போலவும் மாற்றும் முயற்சியில் சசிகலா எதிர்ப்பு ஊடகங்கள் மும்முரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் மட்டுமல்ல, அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!.

சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?.

அப்படியெனில் 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருவரும் இணைந்தே செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது? சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சசிகலா குடும்பத்தினர் மீது மட்டுமில்லையே... அதில் பிரதான குற்றவாளியே முதல்வர் ஜெயலலிதாதானே!.

சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் எந்த கணக்கில் சேரும்? சிறுதாவூர், கொடநாடு, பையனூர்... எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரில் அல்லது அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது எதனால்? ஜெயலலிதாவின் நம்பிக்கையானவராக அவர் இருந்ததால் தானே?.

கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றி வைத்துள்ளது எப்படி?.

ஜெ-சசி இருவரும் இணைந்தே அனைத்து காரியங்களையும் செய்தனர். அதற்காகவே சசிகலாவை கணவரிடமிருந்து பிரித்து தன்னுடனே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக செயற்குழு உறுப்பினர் பதவி தொடங்கி, யாருடன் கூட்டணி வைக்கலாம், யார் யாரை கட்சிக்குள் இழுக்கலாம் என்பதில் முதன்மை ஆலோசகர் பதவி வரை! இத்தனையும் செய்ய தேவைப்பட்ட சசி, இப்போது மட்டும் சதியாளரா?.

'ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்துவித உபாயங்களையும் கையாண்டது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டிதான். விஜயகாந்துடன் பேரம் பேசியதிலிருந்து அடிப்படை வேலைகளைச் செய்ததும் இவர்கள்தான். அந்த உரிமையை அவர்கள் ஆட்சியில் நிலைநாட்டப் பார்ப்பதைப் பொறுக்காத குறிப்பிட்ட சிலர் தான் இப்போதைய நிலைக்குக் காரணம்' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நிறையவே உண்மைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

"முதல்வர் ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது போன்றவற்றுக்கும் சசிகலாதான் காரணம் என்று கூற முடியுமா?.

ஜெயலலிதாவை போற்றிப் பாதுகாக்க சில ஊடகங்கள் முனைகின்றன... அது இன்னும் சில தினங்களில் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும்," என்கிறார்கள் சசிகலா ஆதரவு தரப்பினர்.

ஆனால் இதெல்லாம் தற்காலிகமே என்கின்றனர் நடுநிலைப் பார்வையாளர்கள்.

"ஜெயலலிதா - சசிகலா இருவராலுமே, இப்போது மட்டுமல்ல, இனி எப்போதுமே பிரிய முடியாது.

ஜெயலலிதா தன்னை விரட்டிவிட்டாரே என்ற கோபத்தில் அவருக்கு எதிராக எதையும் செய்யக்கூடியவரல்ல சசிகலா. இதற்கு முன்பு ஜெயலலிதா அவரை விரட்டியபோதும் விசுவாசமாகவே நடந்து கொண்டார். சசியின் குடும்பத்தினரும் அப்படியே. அதேபோல வெளிப்படையாக அவர்களை விலக்கி வைத்தாலும், மீண்டும் எந்த நேரத்திலும் அவசியம் அல்லது நெருக்கடி கருதி ஜெயலலிதா அவர்களைச் சேர்த்துக் கொள்வது சாத்தியமே.

அவர்கள் இருவரின் நட்பும் பிரிவும் அவர்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறதோ தெரியாது... ஆனால் சசிகலா நீக்கத்துக்காக நடத்தப்படும் கொண்டாட்டமும் சரி, புலம்பலும் சரி அர்த்தமற்றவை!".

-இது பிரபல தேசிய ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு மூத்த பத்திரிகையாளர் நம்மிடம் சொன்ன கருத்து.

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு:

இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் சசிகலாவின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஜனவரி 12ம் தேதி நடைபெறுவதால் ஜெயலலிதாவின் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனத்துக்கு பிஸ்கட்ஸ் கொடுத்த சூர்யா!

இந்தியாவின் பிரபல கன்பெக்‌ஷனரி நிறுவனமான சன் பீஸ்ட் பிஸ்கட்ஸ் நிறுவனத்துக்கு


கடந்த 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் விளபரத்தூதராக இருந்தார் சூர்யா. தற்போது விஜய் டிவியில் பொங்கல் முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஒரு கோடி’ என்ற கேம் ஷோவில் முதலில் விஜய்க்கு ஒரு கோடி சம்பளம் பேசி அழைக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்சியை விஜய் பிராண்ட் அம்மாசிடராக இருக்கும் ஜோஸ் அலுகாஸ் நகைக்கடையை முதன்மை ஸ்பாண்சராக பேசியிருகிறார்கள்.
ஆனால் விஜய் கடைசிநேரத்தில் முல்லை பெரியாறு பிரச்சனை தீவிரமாகும்போது, மலையாள நகைக்கடை விளபரத்துடன் கேம் ஷோவை ஆங்கர் செய்தால் சரியாக இருக்காது என்று விலகியிருகிறார்.

இந்த கேம் ஷோவுக்கு ஆரம்பம் முதலே நான் தயார் என்று சொல்லிக்கொண்டிருந்தாராம் சூர்யா. நல்லதாப் போச்சு என்று முதல் ஐந்து எபிசோட்களை படம்பிடிக்க விஜய் டிவி தயாரான போது சூர்யா செய்த அதிரடி, “ இந்த நிகழ்சிக்கு பிஸ்கட் கம்பெணியை மெயின் ஸ்பான்ஸராகப் போடுங்கள்” என்பது.

வேறு வழியில்லாமல் டிவியும் பிஸ்கட் நிறுவனத்தையே மெயின் ஸ்பான்ஸர் ஆக்கி விட்டார்களாம். ஸ்பான்ஸர் விஷயத்தில் சூர்யா ஆர்வம் காட்டியதற்கு காரணம், விஜயின் பிராண்ட்க்கு நாம் எந்த வகையிலும் பூஸ்டாக அமைந்து விடக்கூடாது என்பதுதான். இதனால் தற்போது நகைக்கடை நிறுவனத்துக்கு சூரியாவுடன் சேர்ந்து பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் சூரியாவும், விஜய் டிவியும் என்கிறார்கள் மக்கள் தொடர்பாளர் வட்டத்தில்.

பிஸ்கட்; பிரபல நிறுவனத்துக்கு மட்டுமா...அல்லது...?