Tuesday, December 13, 2011

கண்டிப்பா இதுக்கு கட்டுப்பாடு தேவை தான்

டி.வி.யில் குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பதற்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. 
அதன்படி, குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தை நட்சத்திரங்களின் படிப்பு பாதிக்காத வகையில் விடுமுறை தினங்களில் தான் ஷூட்டிங் வைத்துக்கொள்ள வேண்டும்; பெற்றோர் இல்லாமல் குழந்தைகளை வெளியூர் அழைத்துச் செல்லக் கூடாது; குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதித் தொகையை அவர்களது பெயரிலேயே வங்கியில் நிரந்தர வங்கிக் கணக்கில் வைக்க வேண்டும் என்பதே முக்கிய விதிமுறைகளாகும். 

ஷூட்டிங் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரங்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதே இந்தப் புதிய நடவடிக்கைகளின் நோக்கம். - நல்ல விஷயம் தானே?

பொண்ணு பார்க்க போறீங்களா..?! ஜாக்கிரதை

எனக்கு ஒரே மகன். அவனுக்கு பெண் தேட ஆரம்பித்தபோது... உறவுகள், தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தோம். கூடவே, செய்தித்தாளிலும் விளம்பரம் கொடுத்தோம். அவ்வளவுதான்... 

அதைப் பார்த்துவிட்டு படையெடுத்து வந்தவர்கள் பெண் வீட்டார் அல்ல... புரோக்கர்கள். ''நான் நல்ல ஜாதகமா கொண்டுட்டு வர்றேன்...'' என்று ஆசை வார்த்தைகள் கூறி, ஒவ்வொருவரும் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பெற்றுச் சென்றனர். 

ஆனால், பெண் எதுவும் அமைந்தபாடில்லை. இதில் கொடுமை என்னவென்றால், அப்படி வந்தவர்களில் ஒருவர்... புரோக்கரே இல்லை என்பதுதான். அவர், 

செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட விளம்பரத்தைப் பார்த்ததுமே, புரோக்கர் என்று ஆஜராகிப் பணத்தைக் கறக்கும் ஏமாற்றுப் பேர்வழி என்று தெரிந்தபோது, அதிர்ந்துவிட்டோம்.

திருமணத்துக்கு வரன் தேடி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பவர்கள், இந்த புரோக்கர்கள், போலி புரோக்கர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க, வீட்டு முகவரியைத் தவிர்த்து, போஸ்ட் பாக்ஸ் நம்பர் அல்லது வேறு ஏதாவது உபாயத்தைக் கையாள்வதே நல்லது!

- ஏமாந்த ஒரு பெற்றோர்

நன்றிக் கடனுக்காக ஒரு தாலி! - பெயர் வெளியிட விரும்பாத பெண்

வாழ்க்கையே கேள்விக்குறியாகி, என் குடும்பம் தவித்து நின்ற வேளையில், எங்களைக் கரையேற்றினார், என் மாமா. இப்போது அவரே என் வாழ்க்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கி விடுவாரோ என்ற குழப்பத்தில் நான் இருப்பது, துயரம்!

நான் பிறந்த சில தினங்களிலேயே அப்பா இறந்துவிட்டார். நிராதரவாக நின்ற என்னையும் என் அம்மாவையும் தேற்றி, தாங்கி, பாரம் எனத் தெரிந்தும் எங்களை ஏற்று, இத்தனை காலமாகச் சுமக்கிறார் என் மாமா. இப்போது நான் பட்டதாரியாக வளர்ந்து நிற்பதற்கு, என் மாமா குடும்பத்தின் அரவணைப்புதான் காரணம்.

சமீபத்தில் எங்கள் வீட்டில் என் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. தன் மகனுக்கு என்னைத் திருமணம் செய்து தரும்படி கேட்டார் என் மாமா. அம்மாவும் முழுமனதுடன் சம்மதித்தார். ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மாமா பையன் நல்லவர், அன்பானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் பத்தாவது மட்டுமே படித்திருக்கிறார். இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறார். இவரை நம்பி எப்படி என் எதிர்கால வாழ்க்கையை ஒப்படைப்பது?

"நீ அவரை ஏத்துக்கிட்டாலும், அவரோட படிப்பு கண்டிப்பா அவருக்கு ஒரு கட்டத்தில் தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கும். அது உங்க வாழ்க்கையைப் பாழாக்கும். அவருக்கும் உனக்கும் 10 வயசு வித்தியாசம் வேற. நிதானிச்சு முடிவெடு..." என்று எச்சரிக்கும் என் தோழிகளின் வார்த்தைகளை புறந்தள்ள முடியவில்லை.

என் அம்மாவிடம், "எனக்கு இந்தத் திருமணத் தில் விருப்பமில்லை’' என்று சொன்னபோது... 'நன்றி கெட்டவள்' என என்னைத் திட்டுகிறார். "அவங்க மட்டும் இல்லைனா, இன்னிக்கு நாம இல்லை. எனக்காக இதுக்கு ஒப்புக்கோ. உன் கால்ல விழறேன்..." என்று அழுகிறார். ஆனால், என் மனதில் உள்ள விருப்பங்களை, தயக்கங்களைப் பொருட்படுத்த மறுக்கிறார் அம்மா.

பட்ட கடனுக்காக, என் வாழ்க்கையையே வட்டியாக நினைத்து, 'இதுதான் விதி' என மனதை திடப்படுத்திக் கொண்டு மாமா பையனை ஏற்கவா..? இல்லை, எத்தனை மனங்கள் புண்பட்டாலும் சரி... என் எதிர்கால வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என, இந்தத் திருமணத்தை எதிர்த்து நிற்கவா..?

குழம்பித் தவிக்கிறேன்... தெளிய வையுங்கள்!

தெளிய வைத்த வாசகர்கள் 


Chennai Devadai முந்தைய தலைமுறை புரிந்து கொள்ளாவிட்டாலும், உன் மாமன் மகனிடம் நேரடியாக சென்று உன் பிரச்சினைகளையும், எண்ணங்களையும், உறவில் மணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறை இருக்கலாம் என்பதையும் சொல்லி பார்க்கலாம்......சரீன், சென்னை.

Suresh Kumar மாப்பிள்ளை நல்லவர் எனில், கடைசிவரை குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தாரளாமாக அவரை திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு படிப்பு மட்டும் ஒரு காரணம் அல்ல. ச


Parimalakannan Kanthan உன்னை படிக்க வைத்த உன் மாமா தன் மகனை ஏன் படிக்கவைக்கவில்லை.... தாழ்வு மனப்பாண்மை எப்போது வரும் ... நீ உன்னை உயர்வாய் நினைக்கையில்... அந்த அளவுக்கு உன்னை வளர்த்தவருக்கு நீ என்ன செய்ய போகிறாய்????????/

முதலில் நீங்கள் சூழலின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும். உதாரணமாக, மாமன் மற்றவர்களுக்கு உங்கள் நிலையினைப் புரியவைக்க சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இப்படி ஆறப்போடுவது, 


Rajasekar Mani ‎//மாப்பிள்ளை நல்லவர் எனில், கடைசிவரை குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தாரளாமாக அவரை திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு படிப்பு மட்டும் ஒரு காரணம் அல்ல//

மிகவும் சரியாக சொன்னிர்கள் சுரேஷ்! :)

ஆக மொத்தத்தில் நமது தமிழ் பெண்களுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை போகவில்லை. தன்னை விட அதிகம் படித்திருக்க வேண்டும், தன்னை விட அதிகம் சம்ப்சம்பாதிக்க வேண்டும், பெரிய பணக்காரனாக வேண்டும், இப்படி எல்லாம் தன்னை விட அனைத்திலும் ஒரு படி உயர்வாக இ...See More

Kalpana Ramprasath Mapillai is good guy means better marry him , He will take care of you , dont oppose the marriage

Uma Raj பணமும் படிப்பும் வாழ்க்கை அல்ல.இரு மனங்களின் சங்கமமே திருமணம். அன்பான் கணவர் அமைவது வரம். அம்மா, தோழிகள் சொல்வதற்காக அல்ல. உன்சந்தோஷம் உன் முடிவில். M.Com படித்த என் தங்கை 4-ஆம் வகுப்பு படித்த கணவருடன் நிறைவாக குடும்பம் நடத்துகிறாள்(15 வருடங்களாக).அதற்கு அன்பு மட்டுமே அடித்தளமாக அமைய வேண்டும்.பணத்தை வைத்து வீடு கட்டலாம், குடும்பத்தை கட்ட முடியாது. உன்னிடம் அன்பு இருக்கிற்தா என்று தெரியவிலையே?

நமது தமிழ் பெண்களுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை போகவில்லை. தன்னை விட அதிகம் படித்திருக்க வேண்டும், தன்னை விட அதிகம் சம்ப்சம்பாதிக்க வேண்டும், தன்னை விட அனைத்திலும் ஒரு படி உயர்வாக இ...ருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அப்புறம் ஏன் பெண்ணுரி...See More
December 8 at 1:31pm · Like · 3

Gomathi Natarajan வல்லவனா என்று பார்க்காதே நல்லவனா என்று பார் ...[ரஜினி பன்ச் பாஷையில் அழகாக சொல்கிறேன்]

IGaja Indira Narasihan Gomathi mam sarya soniga

படிப்போ, பத்து வயது வித்தியாசம் என்பதோ தடையில்லை. ஆண் தன்னை விட அதிகமாகத்தான் படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. நீங்கள் பார்க்க வேண்டியது அவர் நல்லவரா, உங்களை வைத்து காப்பாற்றும் தகுதி உடையவரா என்பதை மட்டும்...See More



ரகுநாத் சுரேந்திரன் படித்துவிட்டு சும்மா இருக்குற பையன கல்யாணம் பண்றத விட, பத்து வரை படித்து ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பற்றுபவருக்கு நீங்கள் மனைவி ஆகலாம்.. உங்களையும் கண்டிப்பாக காப்பாத்துவார்..



Uma Raj முழுமையான அன்பும் தெளிவும் இருந்தால் மட்டுமே மாமா பையனை திருமணம் செய்யுங்கள். அரைமனதோடு ஒத்துக்கொணடு நல்ல, அன்பான, அவருடைய வாழ்க்கையை நரகமாக்கிவிடக்கூடாது.



Balaji Raghavan படிப்பு மட்டும் தான் தடை என்றால், கல்யாணத்திற்கு பிறகு உனது அன்பான கணவரை படிப்பில் கவனுமும் செலுத்தி, பொருளாதரிதிலும் ஒரு பெண்ணால் உயர்த்த முடியும்.


Suren Sundar வணக்கம் நண்பர்களே.. எவ்வளவு பணம் இருந்தாலும் அது குணம் இருக்கிற இடத்துல இருந்தால்தான் மதிப்பு.... பசின்னு வந்த பணத்த உங்களால சாப்பிட முடியுமா? உங்க மாமா உங்கள மருமகள் பார்க்கணும் ன்னு ஆசை படுறாரு... உங்கள் தோழிகள் கூறுவது முட்டாள் தனம். நியாயமாக சுய தொழில் செய்யும் உங்கள் மாமா ஒரு சொக்க தங்கம்... உங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் தைரியமாக கூறி விடுங்கள்... சந்தேகம் கூடாது...

Suren Sundar உங்க மாமா ஆட்டோ ஒட்டுனா கட்ட மாட்டிங்க... இதே நேரம் அவரு Flight ஒட்டுனா ? அம்மணி என்ன செய்விங்க?

மிரள வைத்த 'மிஸ்டுகால்'!


துக்க வீடு ஒன்றில் இருந்ததால், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சரியாகக் கவனிக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மொபைலை எடுத்துப் பார்த்தபோது... 

ஒரே நம்பரிலிருந்து நான்கு 'மிஸ்டுகால்'கள். புது நம்பராக இருந்ததால்... அவசரமாக யாரும் அழைத்திருப்பார்களோ என்று பதற்றத்துடன் அந்த நம்பரை டயல் செய்தேன். எதிர்முனையில் பேசியவர் ஏதோ பெயரைச் சொல்லி கேட்க, 'ராங் நம்பர்' என்று தெரிந்தது.

என்றாலும், அவர், கட் செய்யாமல், என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்க, நானும் பதற்றத்தில் பெயர், ஊர் என அனைத்தையும் ஒப்பித்துவிட்டேன். 

அதற்குப் பிறகுதான் அவஸ்தையே! தினமும் அந்த நம்பரிலிருந்து நேரம் கெட்ட நேரங்களில் போனில் பேசி தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டான் அந்த நபர். விஷயத்தை என் கணவரிடம் சொல்ல, அந்த நம்பருக்கு போன் செய்து அவர் கண்டித்த பின்புதான் விட்டது தொல்லை.

'மிஸ்டுகால்'களை மீண்டும் அழைக்கும்போது, நிதானத்துடன் பேசுவதும், தேவையற்ற தகவல்களை தராமல் இருப்பதும் இதுபோல ஆபத்துக்கு வாசல் கால் வைக்காமல் காக்கும் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொண்டேன்!

மேக்கப்... அடிமைத்தனத்தின் அடையாளமா?

'அழகு என்பது ஒவ்வொரு உயிரிக்குள்ளும் இருக்கும் இயற்கை. எல்லா மனிதர்களிடத்திலும் ஏதோ ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது.

 அதை உணரும் மனப்பாங்கு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்கிற இடத்தில்தான், மேக்கப் இவர்களுக்கு அவசியம் என்ற நிலை ஏற்படுகிறது. ஒரு வாடிக்கையாளரைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர்... வாடிக்கையாளர் தன்னைக் கவனிக்கும்படி இருப்பதற்குக் காரணம் தவறான சமூகப் புரிதலே. பெரியார் சொன்னதுபோல், 'ஆணோ பெண்ணோ ரம்மியமாக இருக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்பதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்'' என்று பதிலை உதிர்த்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி.

''ஒரு பெண் செக்ஸுவலி ஆக்டிவா இருக்கிறாள் என்பதற்கான சிக்னல்தான் மேக்கப். அவள் ஓவலேஷன் எனப்படும் சூட்டில் இருக்கும்போது, அவளுடைய உடலில் ஏற்படும் ஃபிஸிக்கல் மாற்றம்தான் அதீத மேக்கப்புக்கு அடிப்படை'' என்றொரு கருத்தை, சமீபத்தில் விஜய் டி.வி. 'நீயா... நானா' நிகழ்ச்சியில் எடுத்து வைத்து, பலரையும் அதிர வைத்திருக்கும் மனநல மருத்துவர் ஷாலினி நினைப்பது என்ன?



''இயற்கையாகவே ஓர் ஆணுக்கு எல்லா விஷயத்தையும் மிகைப்படுத்திக்காட்ட வேண்டும். அந்த சூப்பர் நார்மல் ஃபீலைக் கொண்டு வருவதற்காகவே இன்று மேக்கப் அவசியமாகிவிட்டது. 'உனக்கு நான் சூப்பர் நார்மல் எஃபெக்டைக் கொடுத்துவிட்டேன். அதற்குப் பதிலாக இந்த வேலையை நீ முடித்துக் கொடு’ என்று வேகமாக வளர்ந்துவரும் இன்றைய வியாபார உலகத்தின் 'கிவ் அண்ட் டேக்’ மனப்பான்மை, மேக்கப் அவசியம் என்கிற மாயபிம்பத்தை உருவாக்குகிறது'' என்று எச்சரிக்கும் டாக்டர் ஷாலினி,



''இப்படி மேக்கப் போட்டு, மற்றவர்களை கவர்வதன் மூலமாக, பெண் இன்னும் அடிமையாக இருக்கிறாள் என்பதைத்தானே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம். அழகு என்பது நம்மில் இருக்கும் விஷயம். அதை எந்த விலை பொருளாலும் அதிகரிக்கவோ, அதீதமாக உணர வைக்கவோ முடியாது. இந்த உண்மையை இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் உறுதியாக.



சட்டென்று தீர்ப்பு சொல்லக்கூடிய பட்டிமன்றமா இது?

டீன்-ஏஜ் பருவம்.. புரிந்து கொள்வோமா இந்த புதிர் உலகத்தை!

'அது ஒரு புரியாத வயது' என்று மிகச் சாதாரணமாக சொல்லி விடுவது நம்மில் பலருக்கும் வழக்கமாகி விட்டது. அதுதான் புரியாத வயதா.. இல்லை, அந்த வயதுப் பிள்ளைகளின் உணர்வுகள், உருக்கங்கள், கனவுகள், கவலைகள்.. இவற்றையெல்லாம் பெற்றவர்களாகிய நாம்தான் புரிந்து கொள்வதில்லையா? நாம் ஒவ்வொருவருமே நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது!

'திடீரென்று இப்போதென்ன இப்படி ஒரு கேள்வி' என்கிறீர்களா? மீடியாக்களில் ஃப்ளாஷ் செய்யப்படுகிற பல அதிர்ச்சி செய்திகளும், பெற்றோரின் காதுகளுக்கு மட்டுமே வருகிற சில திடுக் செய்திகளும் டீன்-ஏஜ் பிள்ளைகள் பெரும் குழப்பத்தில் இருப்பதைச் சொல்கின்றன.

'ஆசிரியை திட்டியதால் 15 வயது மாணவி தற்கொலை', 'தந்தை திட்டியதால் காணாமல் போன பள்ளி மாணவன்' போன்ற செய்திகள், செய்தித் தாள்களின் தலைப்புச் செய்திகளாக அல்ல.. பெட்டிச் செய்திகளாக இடம் பெறும் அளவுக்கு சாதாரணமாகி விட்டன.
'கொல்லவும் துணிந்ததே பிள்ளை மனது' என்ற தலைப்பில் சென்ற 'அவள் விகடன்' இதழில் நாம் அலசியிருந்த செய்தியின் (புதுடெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் இருவர், தங்கள் வகுப்பு நண்பனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியின்) ஈரம் காய்வதற்குள்ளேயே அடுத்த பள்ளிக்கூட கொலை நிகழ்ந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொன்றிருக்கிறான். இந்த பள்ளிப் பருவ வன்முறை நம் ஊர் வரை வந்து விடுமோ என்கிற பீதி, நம் ஒவ்வொருவருக்குமே உள்ளுக்குள் எழாமல் இல்லை.

இவற்றோடு, நம் வாசகிகள் பலரும் தொடர்ந்து நமக்கு எழுதும் கடிதங்கள் பலவும் நம்மை அந்த வளர் இளம் பருவத்தினர் மீது தனி அக்கறை கொள்ள வைக்கின்றன.

'என் பொண்ணு சின்ன வயசுல ரொம்ப சமர்த்து.. குறும்பு பண்ணாம சொல்ற பேச்சைக் கேப்பா.. சுறு சுறுப்பாவும் இருப்பா. ஆனா, இப்போ.. பத்தாவது படிக்கிற இந்த முக்கியமான பருவத்துல அவ நடந்துக்குற விதம் கொஞ்சம்கூட சரியில்லை' என்ற ரீதியில் பல அம்மாக்களின் பொருமல்கள், நமக்கு கடிதங்களாக வந்து சேருகின்றன. 'எதுக்கெடுத்தாலும் கோபம், எரிச்சல்.. ரொம்ப எதிர்த்துப் பேசுறா' என்று அவர்கள் சொல்லும் புகார்களின் பட்டியல் நீளுகிறது.

ஆனால், சமீபத்தில் ஒரு பள்ளி மாணவி நம்மிடம் பகிர்ந்து கொண்ட உணர்வு வேறு மாதிரியாக இருந்தது..

''எங்க அம்மா, அவங்க சொல்றதை நான் கேக்கறது இல்லைனு எல்லார்கிட்டயும் சொல்லி கவலைப் படுறாங்க. ஆனா, அவங்க நான் சொல்றதை கவனிக்கக்கூட மாட்டேங்கறாங்களே!''

 ஒட்டு மொத்த டீன்--ஏஜ் பருவத்தினரின் ஆதங்கமாக வெளிப்பட்ட இந்த வார்த்தைகளை நாம் அலட்சியம் செய்து விட முடியாது!

பதினொன்றாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவியின் தந்தை சமீபத்தில் நம் தொலைபேசி லைனுக்கு வந்தார். அவர் விவரித்த சம்பவத்தில் ஆடிப்போய் விட்டோம். இதுதான் அந்த சம்பவம்..

''என் பொண்ணு ரொம்ப நாளா அவ ஃப்ரெண்ட் ஒருத்தியைப் பத்தி சொல்லிக்கிட்டே இருந்தா. அவ பேரு கூட ஏதோ.. அனிதாவோ.. அம்பிகாவோ! அதை நான் சரியா கவனிச்சதுகூட இல்லை. 'அவ ரொம்பப் பாவம்.. அவங்க அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சு வாழுறாங்க.. அவங்க பாட்டி ரொம்ப அடிப்பாங்களாம்.. இன்னிக்கு கிளாஸ்ல மிஸ் திட்டினதுக்கு ரொம்ப அழுதா'னு தினமும் என்கிட்ட எதையாவது சொல்லுவா என் பொண்ணு.

சரி, சின்னப் பசங்க.. சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் பெரிசா சொல்லிக்-கிட்டிருப்பாங்கனு நான் அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். திடீர்னு ஒரு வாரமா அவளைப் பத்திப் பேசுறதையே என் பொண்ணு நிறுத்திட்டா. நானேதான் ஒரு நாள் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போகும்போது 'உன் ஃப்ரெண்டு எப்படி இருக்கா?'னு கேட்டேன். 'போன வாரம் அவ தற்கொலை பண்ணிக்கிட்டா'னு சொன்னா பாருங்க.. அதிர்ந்து போய்ட்டேன்.



அவ ஃப்ரெண்டைப் பத்தி நிறையச் சொன்னாளே.. அப்பவே அதைக் கொஞ்சம் கவனிச்சு, அதுக்காக நான் ஏதாவது செஞ்சிருந்தா, அந்தப் பொண்ணை காப்பாத்தி இருக்கலாமோனு இப்போ மனசு கிடந்து அடிச்சுக்குது.



சின்னக் குழந்தைங்கனு நினைக்கிறோம். ஆனா, வளர்ந்தப்பறமும் அவங்களை சின்ன குழந்தைகளாவே ட்ரீட் பண்றதுல இவ்வளவு பெரிய ஆபத்து இருக்குனு எனக்குத் தெரியாதுங்க. இப்போல்லாம் என் பொண்ணைத் திட்டுறதுக்கோ, அதட்டுறதுக்கோ.. ஏன், ஏதாவது தப்பா பேசிடுவேனோங்கற பயத்துல அவகிட்ட பேசுறதுக்கே கூட யோசனையா இருக்கு..'' என்று தன் பயத்தை பதற்றத்தோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அந்தப் பொறுப்பான தந்தை.



''ஆனால், டீன்-ஏஜ் பிள்ளைகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை.. கடுமை காட்டி மிரட்டவும் அவசியமில்லை.. அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வதும், அவர்களின் மனதில் இருக்கும் கேள்வி களுக்கு நாம் தெளிவான பதிலைத் தருவதுமே போதும்!'' என்பது சென்னையைச் சேர்ந்த நம் நெடுநாள் வாசகி அருணாவின் கருத்து.



தன் மகள்கள் இருவரிடமும் அம்மா என்ற எல்லை தாண்டி, ஒரு தோழியாகப் பழகுபவர் அவர். ஒரு நாள் பிள்ளைகள் முன்னிலையிலேயே அவர் தன் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். சமீபத்தில் திருமணமான அவர்களின் உறவுக்காரப் பெண் பற்றித்தான் பேச்சு.



''கல்யாணமான ஒரே மாசத்துல புருஷன்காரன் ஃபாரின் கிளம்பிப் போயிட்டான். பாவம் அந்தப் பொண்ணு..'' என்று அவர் பேசும்போதே, அவர் இளைய மகளும் அவள் தோழியும் வெட்கப்பட்டு சிரித்திருக்கிறார்கள்.



''இப்போ அவ எய்த் படிக்கிறா. இதுவே அவ நாலாங் கிளாஸ் படிக்கும்போது இதை நான் சொல்லி இருந்தா கவனிச்சிருக்கவே மாட்டா. கவனிச்சிருந்தாலும் புரியாது. ஆனா, இப்போ புரியுது. தனக்குப் புதுசா ஒரு விஷயம் புரிஞ்சுடுச்சுங்கற மிதப்பு அவ கண்ல தெரியுது. இந்த உலகத்துல இந்த மாதிரியான விஷயங்களை ஏதோ தாங்களே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிட்டதா இந்த வயசுப் பிள்ளைங்க நினைச்சுக்கிறாங்க. ஆனா, உலகத்துலயே ரொம்பப் பழைய விஷயம் இதுதான்ங்கிறது அவங்களுக்குத் தெரியறதில்ல'' என்று நகைச்சுவையோடு அந்தச் சம்பவத்தை எடுத்துரைத்த அந்த வாசகி, அதன் பிறகு தன் மகளுக்கு மட்டுமில்லாமல் அவள் தோழிக்கும் சேர்த்து பாலியல் ரீதீயிலான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.



'' 'மாமனார் மாலை போட்டிருக்கார்.. சுத்தபத்தமா இருக்கணும்', 'ரெண்டு குழந்தை ஆச்சே.. ஆபரேஷன் பண்ணிக்கக் கூடாதா?'னு நாம சாதாரணமா கேக்குற கேள்விகள்லயே உள் அர்த்தமா செக்ஸ் இருக்கு. அதுக்கெல்லாம் நாம கிண்டலா சிரிக்கிறதில்ல. ஏன்னா, அது நமக்குப் பழகிப் போச்சு. வாழ்க்கையில அது ஒரு அங்கம்னு புரியுது. ஆனா, சின்னப் பசங்களுக்குப் புரியாது. அது ஒரு பெரிய விஷயமா தோணும். அதுவேதான் மனசுக்குள்ள ஓடும். என் பொண்ணுகிட்டயே அந்தத் தடுமாற்றத்தை என்னால பார்க்க முடியுது. போன வருஷ எக்ஸாமுக்கும் இந்த வருஷ எக்ஸாமுக்கும் ஏழெட்டு மார்க்காவது வித்தி யாசம் இருக்கு. ஆனா, அவ கிளாஸ்ல எல்லாருக்குமே இதே தடுமாற்றம் இருக்குறதால ரேங்க்ல வித்தியாசம் இல்ல'' என்று நம் வாசகி பேசப் பேச ஆச்சர்யம் நம்மை ஆக்கிரமித்தது. தன் பிள்ளையைப் பற்றி ஒரு பிஹெச்.டி-யே செய்து வைத்திருக்கிறார் அந்த புத்திசாலித் தாய்.



''என் பொண்ணுக்கும் அவ ஃப்ரெண்டுக்கும் செக்ஸ்னா என்ன.. அது எவ்வளவு இயல்பான விஷயம்னு நான் மட்டும் புரிய வைக்கலைன்னா.. அதுவேதான் அவங்களுக்கு உலகமா ஆகி இருக்கும். ஒரு கட்டத்துல யாராவது ஒரு பையனைப் பத்தின நினைவுகள் அவங்க மனசை அலைக்கழிக்கும். அப்போ அவனேதான் உலகமா தெரிவான். இந்த சமயத்துலதான் பொண்ணுங்க சின்ன வயசுலயே காதல் கீதல்னு போய், கடைசியில தப்பான முடிவுகள்ல விழுறாங்க. 'இதெல்லாம் சின்ன விஷயம்.. போகப் போக சரியாயிடும்'னு நமக்குத் தெரியும். ஆனா, அதுக்குள்ள நம்ம பிள்ளைங்க பெருசா எதுவும் முடிவெடுத் துடாம பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா?'' என்ற அவரின் கேள்வி அர்த்தமுள்ளது.



ஆம்! குழந்தையாகவும் இல்லாமல் இளைஞியாகவும் (இளைஞனாகவும்) இல்லாமல் இடைப்பட்ட பருவத்தில் நின்று கொண்டிருக்கிற நம் குழந்தைகளின் மனதில் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என்று யாருமே தங்களை சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை என்கிற வருத்தங்கள் இருக்கின்றன. அவர்களின் குழப்பங்களைப் போக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.



அவர்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களை.. சொல்லத் தயங்கும் உண்மைகளை.. பகிர யோசிக்கும் அனுபவங் களை.. உங்கள் தொலைபேசி எண்ணுடன் உங்கள் குடும்பத்தின் தலைமகளாம் 'அவள் விகடனுக்கு' எழுதுங்கள்.



'நான் இந்த மாதிரியான ஒரு பிரச்னையை இப்படி அணுகி வெற்றி கண்டேன்' என்று உங்கள் பிள்ளையை ஏதேனும் சிக்கலில் இருந்து விடுவித்த அனுபவம் இருந்தால்.. அதையும் அனுப்புங்கள். நீங்கள் பயணித்த பாதை.. அது தந்த வெற்றி.. வேறு பல பெற்றோருக்கு வேறு மாதிரியான தெளிவைத் தரலாம் அல்லவா? அந்த வழிமுறையைத் தங்கள் குழந்தையின் இயல்புக்கு ஏற்ற வகையில் அவர்கள் உபயோகிக்கலாம் அல்லவா? அல்லது, 'நம் குழந்தை சரியாகத்தான் இருக்கிறது.. தவறு மொத்தமும் நம் மீதுதான்' என்பதை உணர்ந்து, ஒரு தெளிவுக்கு வரவும் அவர்களால் முடியுமே!



எழுதுங்கள்.. கை கோர்த்து கை கொடுப்போம் நம் கண்மணிகளுக்கு!



நன்றி: ஜி.ஆர்.டி. மகாலட்சுமி வித்யாலயா, சென்னை

- படம்: ம.அமுதன்

(புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே!)

ஆணுக்கு "அது"; ஆனால் பெண்ணுக்கு உணவே பிரதானம்

எப்ப பாத்தாலும் சாப்பாட்டு நினைப்புதானா? என்று பெண்கள் சிலரை கேலி செய்வதுண்டு. நிஜமாகவே பெரும்பாலான பெண்கள் உணவு குறித்தே சிந்தித்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவில் ஈடுபடுவதை விட உணவுக்கே முக்கியத்துவத்துவம் தருவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதேசமயம் ஆண்கள் அடிக்கடி செக்ஸ் பற்றிய நினைப்பிலேயே ஆழ்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.

ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ இயல் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வு முடிவில், ஆண்களுக்கு ஏழு செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றிய நினைப்பு ஏற்படுவதாகவும் ஒரு வாரத்திற்கு 8 ஆயிரம் முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும் கண்டறிந்துள்ளார்.
ஆண்களுக்கு ஆசை அதிகம்

163 பெண்கள் மற்றும் 120 ஆண்களிடம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம், அத்தியாவசியமான உணவு, தூக்கம், செக்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு சராசரியாக 19 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாக ஆண்கள் தெரிவித்தனர். ஒருசில ஆண்கள் நாளொன்றுக்கு 388 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு பற்றி 18 முறையும், உறங்குவது பற்றி 11 முறையும் சிந்தனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு உணவு பிரதானம்

இளம் பெண்கள் நாளொன்றுக்கு 15 முறை உணவு குறித்து சிந்திப்பதாகவும், செக்ஸ் பற்றி 10 முறை சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெண்கள் மட்டுமே நாளொன்றுக்கு 140 முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். பசியின் போது உணவைப் பற்றியும், சோர்வின் போது உறக்கத்தைப் பற்றி சிந்திக்கும் இளைஞர்கள் செக்ஸ் பற்றி அநேக நேரங்களில் சிந்திப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு ஆங்கில மருத்துவ இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.