Tuesday, December 6, 2011

பெண்களின் உணர்ச்சிகளை ஏமாற்றும் ஆண்கள் ..!!

பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும்,
காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 98 வீதமான பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்காத போது 40 வீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

42 வீதமானோருக்கு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம். வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.

அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள். இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்

பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில்

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமலேயே பிறருடைய சிகரெட் புகையால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் இதற்கு ”பேசிவ் ஸ்மோக்கிங்” என்று பெயர்.
பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இது போன்ற பிறரது புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,௦௦௦ கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,௦௦௦ ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,0௦௦ நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் ஆய்வறிக்கை கூறுகிறது. 

51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.

பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.

பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.

பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. 
பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை,தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்தசுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம்,"கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை;மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. 

கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். 

வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம்.

புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும். 

முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.( நன்றி தினமலர் ).

சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும்.

குளிப்பதற்கு கஷ்டப்படுபவர்கள் இனியாவது குளிக்கட்டும், உங்களுக்கான அபார தொழிநுட்பம்!

ஒரு சிலரை குளிக்கவைப்பதென்பது ரொம்ப குஷ்டமான விடயம்! குளிப்பதிலும் குஷியை தேடுபவர்களுக்காக உருவானதுதான் இந்த தொலைதூர குளியல் நுட்பம்! சிலர் மலையிலிருந்து ஆற்றில் குதிப்பர்,

சிலர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து தடாகத்துக்கு குதிப்பர், இதும் அதுபோல தொலை தூரத்திலிருந்து சறுக்கிவழியாக நீச்சல் தடகத்துக்குள் கொண்டுபோய் விடும் ! ஹ்ம்ம் பிறகென்ன குளியல் குதூகலித்துவிடும்




கணவரின் அனுமதியோடுதான் ஆபாச காட்சிகளில் நடிக்கிறேன் - ஸ்வேதா மேனன் (குடும்பம் விளங்கீடும்)

நான் அவன் இல்லை, அரவான் ஆகிய படங்களில் நடித்தவர் சுவேதா மேனன். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

ரதிநிர்வேதம் என்ற படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறினார்.

இதுதவிர பல்வேறு விளம்பர படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீனிவாச மேனன் என்பவரை இவர் கடந்த ஜூனில் திருமணம் செய்துகொண்டார்.

சுவேதா மேனன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்வதில் பெண்கள் கைதேர்ந்தவர்கள். ஒரே நேரத்தில் நடிப்பு, குடும்பம் இரண்டையும் என்னால் கவனிக்க முடிகிறது. திருமணத்துக்கு பிறகு எவ்வளவு நேரம் குடும்பத்துக்காக செலவிடுகிறேன் என்பதைவிட, அவர்களுக்கு உபயோகமாக எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன்.

சினிமா ஒரு தொழில். அதில் சாதாரண வேடம், கவர்ச்சி வேடம் என்ற வித்தியாசங்கள் கிடையாது. கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறில்லை. நான் மட்டுமல்ல, என் கணவரும் இதை நன்கு புரிந்திருக்கிறார். நடிப்பு தொழிலை நான் தொடர்ந்து செய்வதற்கு அவர் அதிகபட்சமாக உதவி செய்கிறார். எனது முன்னேற்றத்தில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். இவ்வாறு சுவேதா மேனன் கூறினார்.

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது. முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும்.

28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும். மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 

பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. 

ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன. கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.

எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்

பாலாவின் குரூரம்.

ஹியூமன் ரைட்ஸ் வரைக்கும் யாராவது பாலாவை தள்ளிக் கொண்டு போனால்தான் உண்டு. அந்தளவுக்கு அவரது படத்தில் நடிப்பவர்கள் மன நோயாளியாகிற அளவுக்கு அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். ஒன்றரைக்கண் விஷாலை சொல்வதா, அகோரி ஆர்யாவை சொல்வதா, பிச்சைக்காரி பூஜாவை சொல்வதா என்று ஒவ்வொரு படத்திலும் திணற திணற அவஸ்தைப்பட்ட கேரக்டர்கள் பாலாவை பற்றி கதை கதையாக சொல்லும்.

ஒரு நடிகனை உருவாக்குகிற விதத்தில் பாலாதான் கலையுலக பிரம்மா என்பவர்களும் உண்டு. அவர்களால் மட்டுமே பாலா படத்தில் மனமுவந்து நடிக்க முடியும் என்கிற யதார்த்தத்தையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மதிக்கவும் வேண்டும். போகட்டும்... நாம் சொல்ல வந்ததும் இப்படி ஒரு அவஸ்தை காண்டம் பற்றிதான்.
பாலா அடுத்து இயக்கவிருக்கும் படம் தேயிலை தோட்ட தொழிலாளிகளை பற்றியது. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக சுமார் 200 துணை நடிகைகளை வரவழைத்த பாலா முன்தலையை மொட்டையடித்துவிட்டாராம். இவர்கள் அத்தனை பேரும் இதே முன் தலை மொட்டையோடுதான் இருக்க வேண்டுமாம் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும்.

பொதுவாகவே பாலா, தன் பட ஷுட்டிங் விஷயத்தில் கன்னித்தீவு ஆசாமி. ஆரம்பிக்கிற நாளைதான் உத்தரவாதமாக சொல்ல முடியும். அப்புறம்? அது ஆண்டவன் விட்ட வழி. எனவே எங்களுக்கு மூன்று படத்தில் நடித்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ, அதை முதலில் கொடுத்துவிடுங்கள் என்றார்களாம் நடிகைகள்.