Sunday, June 26, 2011

படுக்கையறையில் படிகள் பல ?

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது.
ஆகவே, `உறவு’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி…

முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள்
நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.
இரடாவது : படி தனித்தனியே சுற்றுலா
பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர். 

முன்றாவது படி : ஒரு புதிய இடத்தில்…
ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

நான்காவது படி :`பிளாஷ்பேக்’கில் முழ்குவது…
நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர
வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.

ஐந்தாவது படி : தடாலடியான செயல்பாடுகள்
விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.’ உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோமைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினை’ விடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி றது, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

ஆறாவது படி : விலகி… சீண்டி…
தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

"இச் அது நச்சு" இனம் புரியாத ஈர்ப்பு "முத்தம்"

காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.


முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது. தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொண்டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது. இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டிப்ஸ்'களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்'. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம். பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.

அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம். காமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். "உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்...'' என்று, காதல் பாடம் சொல்லிக்கொப்டே போகிறார் வாத்சாயனார். பொதுவாக சொல்வது என்றால்... ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது.


அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.



புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு...!

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு. இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும்.


 ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன? 


ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். 



முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும். 

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். 
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும். 

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது. 

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் 

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும். 

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும். 

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம். 

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது


திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம், திருமணமான 3000 ஆண், பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:

திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம் 1 நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் 6 பேர் தெரிவித்தனர்.
தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும், புத்திசாலியாகவும், இரக்க குணத்துடனும், ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதேசமயம், எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.

அதே இடம், அதே பெட், அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் 8 பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல் 2 பேர் கூறியுள்ளனர்.

பெண்ணுக்கு உதவிய வயாகரா

உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.


பிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிப்பவர் டேவிட். அவருக்கு 2002ல் திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் கெர்ரி ஹோரன். எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் கெர்ரி ஹோரன் தவித்து வந்தார், ஹோரன் கருத்தரிப்பார். ஒரு சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அதனால் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை.

நாட்டிங்காம் நகரில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை நிலையத்துக்கு கெர்ரி ஹோரன் சென்றார். அவர்கள் சோதனைக்குழாயில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்த பிறகு கரு முட்டையை கருப்பைக்குள் வைக்க தீர்மானித்தனர்.

அதன்படி சோதனைக்குழாயில் கரு முட்டை உருவாக்கப்பட்டது. அந்தக் கருமுட்டையை கருப்பைக்குள் வைத்தனர். ஆனால் கருமுட்டை கருப்பையில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு மீண்டும் ஏற்பட்டது. இம்முயற்சிகளை மூன்று முறை தொடர்ந்தனர். ஆனால் மூன்று முறையும் கருச்ச¤தைவுதான் ஏற்பட்டது. அதனால் கெர்ரி ஹோரன்& டேவிட் தம்பதியர் மனமுடைந்தனர்.
அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்படுவது ஏன் என மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது கெர்ரி ஹோரனின் கருப்பை சுவர் மிக மெல்லியதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மெல்லியதாக கருப்பைச் சுவர் இருப்பதால் கருமுட்டை கருப்பை சுவரில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என உறுதி செய்தனர்.

இந்நிலையில் கருத்தரிப்புத்துறை நிபுணர் ஜார்ஜ் நெடுக்வே ஒரு ஆலோசனை கூறினார். வயாகரா உட்கொண்டால் பெண்களுக்கு கருப்பைப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். அதிக ரத்தம் செல்வதால் கருப்பை சுவர் தடிமனாகும். கருப்பை சுவர் தடிமன் அதிகமானால் கரு முட்டை கருப்பையில் பதிந்து வளரும் வாய்ப்பு ஏற்படும் என ஜார்ஜ் தெரிவித்தார்.

இது மிகவும் அபாயகரமானது. எனவே மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் வயாகரா சாப்பிடலாம¢ என ஜார்ஜ் குறிப்பிட்டார். முதலில் இந்த உத்தி பலன் தருமா என ஹோரன் சந்கேகப்பட்டார். ஆனால் எப்படியும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வயாகரா சாப்பிட சம்மதித்தார். ஆனால் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வை அவசியமில்லை என்று கணவனும் மனைவியும் தீர்மான¤த்தனர்.

முதல் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதும் உடலே சிவந்து போய்விட்டது. முகம் ரத்த சிவப்பாகி விட்டது. ஆனால் இதற்கு ஹோரன் பயப்படவில்லை. நாளொன்றுக்கு ஒரு வயாகரா வீதம் ஒன்பது நாள்களுக்கு சாப்பிட்டார். அவரது கருப்பைக்கு ரத்தம் செல்வது படிப்படியாக அதிகரித்தது. பின்னர்அவரது கருப்பையை மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது கருப்பை சுவர் தடிமனாகி இருப்பது உறுதியானது. இந்த அளவு கருப்பைச் சுவர் தடிமனாக இருந்தால் கருமுட்டை பதிந்து கொள்ளும். கரு வளரும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சோதனைக் குழாயில் தயாரிக்கப்பட்ட கருமுட்டையை ஹோரனின் கருப்பையின் உள்ளே நான்காவது முறை எடுத்துச் சென்றனர். இந்த முறை கருமுட்டை கருப்பையின் உள்சுவரில் பதிந்து வளரத் தொடங்கியது. பின்னர் பத்து மாதங்கள் கழித்து ஹோரனுக்கு சிக்கல் எதுவும் இன்றி குழந்தை பிறந்தது. வயாகராவுக்கு புது உபயோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.