Sunday, June 26, 2011

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு...!

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு. இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும்.


 ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன? 


No comments:

Post a Comment