திருமணமான தம்பதிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் எப்படி பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலான தம்பதிகள் சுவாரஸ்யம் இன்றி பதிலளித்த போதிலும், பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூட தீவிர செக்ஸ் உறவு வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது எப்படி சாத்தியம்? கணவருடன் வாரம் ஒரு முறையாவது வெளியே ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். முடிந்தால் சினிமா, சுற்றுலா அல்லது பார்ட்டி என ஏதாவது நிகழ்ச்சிக்கு சேர்ந்து செல்லலாம்.
அப்படிச் செல்வதால் அன்யோன்யம் அதிகரிப்பதுடன் பாலுறவில் ஈடுபாடு குறையாமல் நீடிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடைவெளியில் இருவரின் உடல்நிலைக்கு ஏற்ப பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ளலாம்.
பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளாத நிலையிலும் சிறு, சிறு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 24 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதியாக வாழும் மார்க்-ஜெல்டா கூறுகையில், தாங்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறினர்.
அதற்குக் காரணம் குழந்தைகள் இருந்த போதிலும், தங்கள் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை பின்பற்றி வருவதாகவும், குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளதால் அவர்களும் தங்களைப் புரிந்து நடந்து கொள்வதாகவும் கூறினர்.
மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, துர்மணமாகி விடக்கூடாது.
சிறு சிறு பிரச்சினைகளுக்குக் கூட கூச்சலிட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடிய தம்பதிகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
பாலுறவுப் புணர்ச்சி தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை பாலுறவுப் புணர்ச்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுறவுப் பிரச்சினைக்காக பிரிந்த குடும்பங்கள் ஏராளம்.
எனவே மனம் விட்டுப் பேசி மகிழ்வோம். முடிந்தவரை தம்பதியரில் இருவரின் நிலைக்கேற்ப பாலுறவுப் புணர்ச்சி மேற்கொள்வோம். இன்பத்தின் எல்லையை அடைவோம்.
|
No comments:
Post a Comment