பிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிப்பவர் டேவிட். அவருக்கு 2002ல் திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் கெர்ரி ஹோரன். எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் கெர்ரி ஹோரன் தவித்து வந்தார், ஹோரன் கருத்தரிப்பார். ஒரு சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அதனால் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை.
நாட்டிங்காம் நகரில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை நிலையத்துக்கு கெர்ரி ஹோரன் சென்றார். அவர்கள் சோதனைக்குழாயில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்த பிறகு கரு முட்டையை கருப்பைக்குள் வைக்க தீர்மானித்தனர்.
அதன்படி சோதனைக்குழாயில் கரு முட்டை உருவாக்கப்பட்டது. அந்தக் கருமுட்டையை கருப்பைக்குள் வைத்தனர். ஆனால் கருமுட்டை கருப்பையில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு மீண்டும் ஏற்பட்டது. இம்முயற்சிகளை மூன்று முறை தொடர்ந்தனர். ஆனால் மூன்று முறையும் கருச்ச¤தைவுதான் ஏற்பட்டது. அதனால் கெர்ரி ஹோரன்& டேவிட் தம்பதியர் மனமுடைந்தனர்.
அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்படுவது ஏன் என மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது கெர்ரி ஹோரனின் கருப்பை சுவர் மிக மெல்லியதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மெல்லியதாக கருப்பைச் சுவர் இருப்பதால் கருமுட்டை கருப்பை சுவரில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என உறுதி செய்தனர்.
இந்நிலையில் கருத்தரிப்புத்துறை நிபுணர் ஜார்ஜ் நெடுக்வே ஒரு ஆலோசனை கூறினார். வயாகரா உட்கொண்டால் பெண்களுக்கு கருப்பைப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். அதிக ரத்தம் செல்வதால் கருப்பை சுவர் தடிமனாகும். கருப்பை சுவர் தடிமன் அதிகமானால் கரு முட்டை கருப்பையில் பதிந்து வளரும் வாய்ப்பு ஏற்படும் என ஜார்ஜ் தெரிவித்தார்.
இது மிகவும் அபாயகரமானது. எனவே மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் வயாகரா சாப்பிடலாம¢ என ஜார்ஜ் குறிப்பிட்டார். முதலில் இந்த உத்தி பலன் தருமா என ஹோரன் சந்கேகப்பட்டார். ஆனால் எப்படியும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வயாகரா சாப்பிட சம்மதித்தார். ஆனால் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வை அவசியமில்லை என்று கணவனும் மனைவியும் தீர்மான¤த்தனர்.
முதல் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதும் உடலே சிவந்து போய்விட்டது. முகம் ரத்த சிவப்பாகி விட்டது. ஆனால் இதற்கு ஹோரன் பயப்படவில்லை. நாளொன்றுக்கு ஒரு வயாகரா வீதம் ஒன்பது நாள்களுக்கு சாப்பிட்டார். அவரது கருப்பைக்கு ரத்தம் செல்வது படிப்படியாக அதிகரித்தது. பின்னர்அவரது கருப்பையை மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது கருப்பை சுவர் தடிமனாகி இருப்பது உறுதியானது. இந்த அளவு கருப்பைச் சுவர் தடிமனாக இருந்தால் கருமுட்டை பதிந்து கொள்ளும். கரு வளரும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சோதனைக் குழாயில் தயாரிக்கப்பட்ட கருமுட்டையை ஹோரனின் கருப்பையின் உள்ளே நான்காவது முறை எடுத்துச் சென்றனர். இந்த முறை கருமுட்டை கருப்பையின் உள்சுவரில் பதிந்து வளரத் தொடங்கியது. பின்னர் பத்து மாதங்கள் கழித்து ஹோரனுக்கு சிக்கல் எதுவும் இன்றி குழந்தை பிறந்தது. வயாகராவுக்கு புது உபயோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
|
No comments:
Post a Comment