Sunday, December 26, 2010

ஆன்லைன் வீடியோ- Downloader

தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது  YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும்.


ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாக ஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி: BenderConverter

இந்த தளத்திற்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும்  Format னை தேர்வு செய்யவும். உதாரணமாக  mp3, .wav, .avi, .mpeg and also Apple iPad, iPod, iPhone போன்றவை ஆகும். பிறகு இணையத்தின் முகவரி (URL) யை உள்ளிட்டு  Convert என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் விருப்பிய Video வினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய

நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் எதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது.


நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும், இதன் மூலம் திறக்கபட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும்.

முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் ACCOUNT > Account Setting என்பதை தேர்வு செய்யவும்.


பிறகு Account Security  என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்தாதக் தோன்றும் திரையில்,  உங்கள்  பேஸ்புக் அக்கவுண்ட்  வேறு இடத்தில் திறக்கபட்டிருந்தால் காட்டும்.





பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கபட்டிருந்தாலும் சரி மற்ற Device அதாவது மொபைல் போனில் உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால்  அதுவும் Logout ஆகிவிடும்

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Cracker)

 இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

 




1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.


3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்குபெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.
7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனைஇங்கு பெறலாம்.

நாம் உபயோகிக்கும் COMPUTER ஆல் எவ்வளவு மின்சாரம் செலவாகும்

”ஜோல் மீட்டர்”

நம் கணினிக்கு தினசரி ஆகும் மின்சார செலவை துல்லியமாக
கண்டுபிடிக்கலாம். திரைக்கு (Monitor) ஆகும் மின்சாரம் முதல் டிஸ்க்
(வன்தட்டு) -க்கு ஆகும் மின்சாரம் வரை அத்தனையையும் மிகச்சரியாக
கண்டுபிடிக்கலாம்.

கணினிக்கு ஆகும் மின்சார செலவை
மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற புது சாதனையை
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
மென்பொருளின் பெயர் ”ஜோல் மீட்டர்” .கணினி ஆன் செய்ததில் இருந்து 

இதுவரை எவ்வளவு மணி நேரம் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு ஆகும் மின்சாரம் என்ன என்பதை கிலோவாட்ஸ் -ல் நமக்கு சொல்கின்றனர். நாம் எந்த
நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மின்சார வரியைப் போட்டு
நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.


Download

யோட்டா ஹெர்ட்ஸ் என்றால் என்ன

டெரா ஹெர்ட்ஸ்

அடுத்ததாக ஜெட்டா பைட் என்றால் என்ன என்று பார்ப்போம்..

ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில்(Byte) கூறுவோம்.

(எ.கா) ஒரு MP3 பாடல் கோப்பை சேமிக்க 5MB இடம் தேவைப்படும்.
1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆக இருக்கும்.
1 பிட் = 0 அல்லது 1
4 பிட் = 1 நிப்பிள் (1nibble)

8 பிட் = 1 பைட்

1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte

1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte

1024 மெகா பைட் = 1 ஜிகா பைட் (GB) Gega Byte

1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte

1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte

1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte

1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte

1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte

நம்பிக்கையால் விபரீதம் - ஆவி, பேய், மறுஜென்மம்

வாய்க்காலில் புத்தாடை, மாலையுடன் மிதக்கும் ஆண், பெண் சடலங்கள் மறுஜென்மம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இறந்தவர்களது சடலங்களை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு செல்லும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரம் பவானிசாகர் அணை. இங்கிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ நீளம் கொண்டது. வாய்க்காலில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்துள்ளன. பெரும்பாலும் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்தவர்கள் உடல்கள்தான் வாய்க்கால்களில் மிதப்பது வழக்கம். கீழ்பவானியிலோ, புத்தாடை உடுத்தப்பட்ட சடலங்கள் அதிகளவில் மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்களுக்கு புத்தாடை மாட்டி யார் இங்கு தள்ளிவிடுவது என்று விசாரித்ததில் கிடைத்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் வசிக்கும் ஒரு தரப்பு மக்களிடையே வினோத, விபரீத நம்பிக்கை ஒன்று உள்ளது. இறந்தவரது உடலை குளிப்பாட்டி, சடங்குகள் செய்து புத்தாடை அணிவித்து, வாய்க்காலில் வீசி மீனுக்கு உணவாக போட்டால் மறுஜென்மம் நல்லதாக இருக்கும் என்பது இவர்கள் நம்புகிறார்கள். இறந்தவர்களது உடல்களை இவர்கள் புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. அலங்கரித்து, பாடையில் தூக்கிவந்து, வாய்க்காலில் வீசிவிடுகின்றனர். இவ்வாறு செய்தால், அந்த ஆத்மாக்கள் பேயாக அலையாது என்றும் நம்புகிறார்கள்.
வாய்க்கால்களில் ஆண், பெண் சடலங்கள் மாலையுடன் மிதப்பது அதிர்ச்சியாகவும் பீதி ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. குறிப்பாக புங்கம்பாடி பகுதியில்தான் இவை அதிகம் கரை ஒதுங்குகின்றன.
இதுபற்றி போலீசார் கூறுகையில், “தகவலே இல்லாமல் பல உடல்கள் வாய்க்காலோடு போய்விடுகின்றன. எங்களுக்கு தகவல் வந்தால் உடனே சென்று மீட்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட உடலை மீட்கச் சென்றபோது, அடையாளம் தெரியாத 4 பிணங்கள் கிடந்தன. யார் அவற்றை வீசினர் என்றுகூட கண்டுபிடிக்க முடியவில்லை” என்றனர்.

பெட்ரோல் பங்க்களில் நடைபெறும் நூதன மோசடி!

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் வகையில் ஏறிக்கொண்டிருக்க, வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, சத்தமில்லாமல் புதிய மோசடி பெட்ரோல் பங்குகளில் அரங்கேறி வருகிறது. வாடிக்கையாளர்கள் உஷாராக இருந்தால் மட்டும் இதில் தப்ப முடியும்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை எவ்வளவு உயருமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோல் பங்குகளே விலையை நிர்ணயிக்கலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இதற்கிடையே பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, மறைமுகமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடிக்கையாளர்களின் கவனத்தையும், அவசரத்தையும் அடிப்படையாக வைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது.உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட சென்றால், அவருக்கு 200 ரூபாய்க்கான பெட்ரோல் கிடைத்தால், நிச்சயமாக அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லலாம்.
ஏனெனில், 200 ரூபாய்க்கு கேட்டால், பங்க் ஊழியர், 100 ரூபாய்க்கோ அல்லது 50 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுவார்.வாடிக்கையாளர் மீட்டரைப் பார்க்காமல் சென்று விட்டால், அந்த ஊழியருக்கு லாபம். வாடிக்கையாளர் மீட்டரைப் பார்த்து, குறைவாகப் போட்டு விட்டீர்களே என்று உஷாராக கேட்டால், “100 ரூபாய்க்கு தானே கேட்டீர்கள்’ அல்லது “சாரி சார்… 100 ரூபாய்க்கு தான் கேட்டீர்கள் என நினைத்தேன்’ என வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேசி சமாளித்து, பாக்கி பெட்ரோலைப் போடுவர்.மற்றொரு வகை மோசடி என்னவென்றால், பெட்ரோல் போட “டேங்க்’ மூடியைத் திறந்து நீங்கள் காத்திருக்கும் போது, பங்கில் உள்ள ஒரு ஊழியர் பெட்ரோல் போடுவார்; மற்றொருவர் உங்களது கவனத்தை திசை திருப்பி, “டேங்க் மூடி துருப்பிடித்துள்ளதே, ஆயில் போடுங்க சார்; இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது’ என்பது போல் பேசுவார்.
அதற்குள் மற்றொரு ஊழியர், மீட்டரை ஜீரோ செய்யாமல் ஏற்கனவே பெட்ரோல் போட்ட கணக்குடன் துவங்கி, அடுத்தவருக்கும் போட்டு கணக்கு காட்டி விடுவார்.இந்த மோசடிகள் மாநிலம் முழுவதும் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களால் நடத்தப்படுகிறது. ஒரு சில ஊழியர்கள் தான் இம்மோசடியில் ஈடுபட்டு, மற்ற ஊழியர்களையும் மிரட்டுவதாக தெரிகிறது.இரவுப்பணி முடித்து தூக்க கலக்கத்தில் வருவோர், அலுவலகப்பணி முடிந்து, அவசரமாக வீடு திரும்புவோர், “சீக்கிரம் பெட்ரோல் போடுங்கள்’ என அவசரப்படுத்துவோர் ஆகியோரை குறி வைத்து, இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.சரியான அளவில் பெட்ரோல் அடிக்கவில்லை என்று சந்தேகம் தெரிவித்தால், வாடிக்கையாளர்களை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதும் நடக்கிறது.
இவ்வாறு புகார் கூறும்பட்சத்தில், “வேண்டுமென்றால் வாகனத்தில் உள்ள பெட்ரோல் முழுவதையும் எடுத்து அளந்து பார்க்கலாம்’ என்று ஊழியர்கள் சொல்கின்றனர்.பெரும்பாலானவர்கள் வாகனத்தில் ஏற்கனவே பெட்ரோல் வைத்திருந்து, கூடுதலாக பெட்ரோல் போடுவதால் இந்த சோதனையால் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.