கட்டிய மஞ்சள் கயிறின் வாசனை
மாறும் முன்னே -
கட்டியவளை கண்ணீரில் கரைத்து விட்டு
கடனடைத்து காடு கரை வாங்கி சேர்க்க,
கடல் கடந்து நாடு கடந்து
கட்டியவளை நினைத்து கட்டிலுக்கு முத்தமிட்டு
தலையணையை கட்டிக் கொண்டு உறங்குகிறாயே!
கோடிகோடி கட்டி தங்கங்களை கொட்டினாலும்
நீ வாழ மறந்த
வசந்தகால வாழ்க்கை கிடைக்குமா?
பணம் எனும் உணவு தேவைதான் - ஜீரணிக்கிறேன்
வாழ்க்கை எனும் உடலே இல்லையெனில்
உணவு எனும் பணம் உபயோகப்படாதே?
இளைஞனே!
திருப்பிப் பார்!
நீ அனுபவிக்க மறந்த
உன் வாழ்க்கை பாதச் சுவடுகளை
|
No comments:
Post a Comment