கேள்வி: வேர்டில் பெரிய அளவிலான ஒரு டாகுமெண்ட் முடித்த பின்னர், பாராக்களை இடம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட பாராக்களைப் பல இடங்களில் மாற்றி வைத்திட வேண்டும் என்கிற சூழ்நிலையில், வேலையில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படுகிறது. இதற்கு வேர்ட் தொகுப்பில் ஏதேனும் வழி உள்ளதா?-கே. ஏகாம்பரம், திருவள்ளூர்.பதில்: இதற்கு வேர்ட் தொகுப்பில் தனியே எந்த டூலும் இல்லை. ஆனால் அதன் டூல் ஒன்றை, நம் முயற்சியுடன் இணைத்தால், நீங்கள் குறிப்பிடும் பணியினை மேற்கொள்ளலாம். முதலில் எந்த பாரா எந்த இடத்தில் வர வேண்டும் என்பதனைத் தீர்க்கமாக, தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது முதல் பாரா 9-ஆவது இடத்தில், மூன்றாவது பாரா முதல் இடத்தில் என அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது முதல் இடத்தில் வர வேண்டிய பாராவின் தொடக்கத்தில், அது முதல் இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ எங்கு இருந்தாலும், 1 என எண் இடவும். இப்படியே ஒவ்வொரு பாராவிற்கும் எண்களை இடவும்.
பின்னர், Table மெனு செல்லவும். இங்கு Sort என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். Sort Text என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Sort By என்பதில் Paragraphs என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதுதான் அங்கு டிபால்ட் ஆக இருக்கும். பின்னர், அருகில் மேலிருந்து கீழாகவா அல்லது கீழிருந்து மேலாகவா என்ற வகையில் Ascending /Descending என இரண்டு பிரிவு இருக்கும். இதில் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்தால், வேர்ட் அதன் பாராக்களை, எண்களின் அடிப்படையில் வகைப் படுத்தி வரிசைப்படுத்தித் தரும். பின்னர், எண்களை நீக்கிவிட்டு டெக்ஸ்ட்டை அமைத்துக் கொள்ளலாம்.
கேள்வி: ஒரு வெப்சைட் பாதுகாப்பானதா என்று எந்த எந்த வழிகளில் அறியலாம்?-டி. திரவியம், விருதுநகர்.பதில்: எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது. இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது.
http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல், அந்த தளத்தின் முகவரி கொடுத்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில்
அமைத்து என்டர் தரவும். அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில், அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும். மோசமான தளமாக இருந்தால், அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும். அருகே தினமலர் இணைய தளம் குறித்து கேட்டதற்குக் கிடைத்த பதிலைப் பார்க்கலாம்.
கேள்வி: ஸ்டார்ட் அழுத்தி ஆல் புரோகிராம்ஸ் பட்டியலில் தேடி நாம் திறக்க விரும்பும் அப்ளிகேஷன்களைத் திறக்க முடிகிறது. ஆனால் அதிகமான எண்ணிக் கையில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், இவை வரிசையாக அகரவரிசைப்படி இல்லை என்பதால், சிரமமாகிறது. இதனை எப்படித் தடுக்கலாம்?-சி. குமாரசாமி, சிவகாசி.பதில்: இதனைத் தடுக்க முடியாது. உங்கள் தேவைப்படி இந்த புரோகிராம் களின் பெயர்களை அகரவரிசைப்படி மாற்றி அமைக்கலாம். புதிய புரோகிராம்களை நாம் இன்ஸ்டால் செய்வதால் அவை லிஸ்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்கின்றன. நம் தேடும் பணி இதனால் கடினமாகிறது. அவற்றையும் அகர வரிசைப்படி அடுக்கினால் வேலை எளிதாகும்.இதனைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா? அதற்கு பட்டியலிடப்பட்டுள்ள புரோகிராம்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Sort by Names என்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். அனைத்து புரோகிராம்களும் அகரவரிசைப்படுத்தப்படும். பின் உங்கள் வேலையும் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.
கேள்வி: இன்டர்நெட் சைட்டில் உள்ள படங்கள் அல்லது செய்திகளை மொத்தமாக ஒரு போல்டரில் அமைக்க, அடிக்கடி புதிய போல்டரை அமைக்கிறேன். இதற்கு ரைட் கிளிக் மெனு அழுத்தி நியூ கிளிக் செய்து பின் போல்டர் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா?-டி. பாண்டியன், மதுரை.பதில் :ஒரு போல்டரில் இருக்கையில் புதிய போல்டர் ஒன்றை உருவாக்க விரும்புகிறீர்களா? வலது கிளிக் செய்து new / folder என்பதை எல்லாம் ஒவ்வொன் றாகக் கிளிக் செய்திட வேண்டியதில்லை. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருப்பதால், ஆல்ட் (Alt ) கீயை அழுத்திக் கொண்டு பின் F, W, F என்ற கீகளை வரிசையாக அழுத்துங்கள். புதிய போல்டர் உரு வாகும். உருவான பின்னர், விருப்பமான பெயரை அதற்கு அளிக்கலாம்.
கேள்வி: கம்ப்யூட்டரின் ரெப்ரெஷ் ரேட் என்பது சிபியுவின் இயக்கமா அல்லது ஹார்ட் டிஸ்க்கிலிருந்து தகவல் பெறும் செயல்பாடா?-எஸ். சிவகைலாஷ், பொள்ளாச்சி.பதில்: நல்ல வேளை கேட்டீர்கள். இரண்டும் இல்லை சிவகைலாஷ், ஐ ஆம் சாரி.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை ரெப்ரெஷ் ரேட் என்பது மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் தான். இதில் நமக்குக் காட்சியாகக் கிடைக்கும் டிஸ்பிளே ஒரு நொடியில் எத்தனை முறை ஒளியூட்டப்படுகிறது (Illuminating) என்பதனையே ரெப்ரெஷ் ரேட் குறிக்கிறது. இது பிரேம் ரேட் (Frame Rate) என்பது போல் இருக்கிறது என்று நீங்கள் எண்ணினாலும், இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டிய தில்லை. பிரேம் ரேட் என்பது ஒரு டிஸ்பிளே ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு எத்தனை முறை மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் ரெப்ரெஷ் ரேட் என்பது அந்த பிரேம்களில் காட்சிகள் எத்தனை முறை ஒரு நொடியில் ஒளியூட்டப்படுகின்றன என்பதனைக் குறிப்பதாகும்.
உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினை எப்படிக் கண்டறிவது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Settings டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் Advanced பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் புதிய விண்டோவில் Monitor என்னும் டேப்பினை கிளிக் செய்திடவும். பின் Monitor settings என்னும் ஏரியாவில் உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினைக் காணலாம். அதில் ஒரு கீழ் விரியும் மெனுவிற்கான பட்டி தெரியும். இதில் உள்ள அம்புக் குறியினை அழுத்தினால் பல ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவரும். 60,70, 72, 75 மற்றும் 85 என இவை தரப்பட்டிருக்கும். இவற்றின் அலகு Hertz ஆகும். பெரிய 17 அல்லது 19 அங்குல மானிட்டர் என்றால் ரெப்ரெஷ் ரேட் 85 ஆகக் கொள்ளலாம். மானிட்டர் அளவு குறைய குறைய இதனையும் குறைத்துக் கொள்ளலாம்.
கேள்வி: ரொம்ப நாளா கம்ப்யூட்டரில் வாண வேடிக்கை ஒன்றும் காட்டவில்லையே. ஏதேனும் ஒரு வேடிக்கைக் காட்சிக்கான தளம் அல்லது டிப்ஸ் தாருங்களேன்.-என். சுப்புலஷ்மி, மதுரை.பதில்: வழக்கமான கேள்வியாக இல்லாமல், இந்த மாதிரி வேண்டுகோள் விடுப்பதுவும் நன்றாகவே உள்ளது. சரி, இதோ ஒரு வேடிக்கை.
ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்திட ஒரு குறிப்பு தருகிறேன். கீழே உள்ள வரியினை அப்படியே எழுத்துப் பிசகாமல் பிரவுசரில் டைப் செய்திடவும்.
javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i—) {for (j = n; j > 0; j—){self.moveBy(1,i);self.moveBy (i,0);self.moveBy(0,i);self.moveBy(i,0); } } }} Shw(6)
பின் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு என்டர் அழுத்துங்கள். உங்கள் மானிட்டர் திரை உள்ளுக்குள்ளாகவே நடுங்கி ஓர் ஓரமாகச் செல்வதனைக் காணலாம். பிரவுசரின் விண்டோ தான் அவ்வாறு செல்லும். இந்த வரியில் டி = 35 என்று இருக்கிறதல்லவா? அந்த மதிப்பை இன்னும் சற்று அதிகப்படுத்துங்கள். நடுக்கமும் அதிகமாகும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதனை இயக்கிப் பார்க்க உங்கள் பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டியதில்லை. ஆப் லைனில் கூட இதனை மேற்கொள்ளலாம்.
தேங்க்ஸ் சகோதரி, சுப்புலஷ்மி.
கேள்வி: கீ போர்டில் உள்ள எண்ட் கீயின் பயன் என்ன? இது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவது இல்லையே?-என். கே. ஸ்ரீனிவாசன், திருப்பூர்.பதில்: நல்லா கேட்டீங்க ஸ்ரீனிவாசன். கீ போர்டில் அனைத்து கீகளுக்கும் பயன்பாடு உண்டு. என்ட் கீ பலவகையான செயல்பாடு களை மேற்கொள்வதற்குப் பயன்படுகிறது. அது நீங்கள் பயன்படுத்தும் புரோகிரா மினைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக நீங்கள் இணைய இணைப்பில் ஓர் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். அதில் உள்ள கேள்வி பதில் பகுதியைத் தேர்ந்தெடுத்தால் அதில் பெரிய பட்டியல் இருக்கும்போல் தெரிகிறது. இந்த பட்டியல் எங்கு தான் முடியும் என்று பார்க்க விருப்பம். நீங்கள் உங்கள் என்டர் கீயை தொடர்ந்து அழுத்த வேண்டியதில்லை. இப்போது End கீயை அழுத்தினால் நீங்கள் அந்த பக்கத்தின் கீழ்ப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். வேர்ட் தொகுப்பில் ஒரு டெக்ஸ்ட்டைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த கீயை அழுத்தினால் அது அந்த வரியின் இறுதிக்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இதனை கண்ட்ரோல் (Ctrl) கீயுடன் அழுத்தினால் டாகுமெண்ட்டின் இறுதிப் பகுதிக்கே அழைத்துச் செல்லும். இந்த கீ எங்கு இருக்கிறது எனச் சிலர் கேட்கலாம். எழுத்து மற்றும் எண்களுக்கான கீ பேட்களுக்கு இடையே உள்ள கீகளைப் பார்க்கவும். இதில் Home கீக்குக் கீழாக இதனைக் காணலாம். அதாவது Delete key மற்றும் Page Down கீகளுக்கு இடையே இது தரப்பட்டுள்ளது.