Thursday, February 10, 2011

நவீன கம்யூட்டர் மேசை


இது கம்யூட்டர் காலமாகிவிட்டது. சாதாரண கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை கம்யூட்டர் பயன்படுத்தாத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு கம்யூட்டர் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கும் கம்யூட்டர் கல்வி எல்.கே.ஜி முதல் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு கம்யூட்டர் கல்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான புஜிட்சூ, நவீன கம்யூட்டர் மேசை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த மேசை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மேசையில் கீ போர்டு (விசைப்பலகை) இருக்காது. அதற்கு பதிலாக அகச்சிவப்பு கதிர்கள் (Infra Red Rays) மூலம் விசைப்பலகை இயங்கும் வகையில் இந்த கம்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது
வருங்காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கு புத்தக மூட்டைகளை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது. அவர்கள் ஹாயாக பள்ளி சென்றாலே போதும். அங்கு பள்ளி மேஜையில் கம்யூட்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் அவர்கள் கல்வி கற்றுக்கொள்ள முடியும்.

ஹைடெக் சட்டை மற்றும் புளூடூத் கண்ணாடி
ஸ்காட்வெஸ்ட் நிறுவனம் உங்கள் சட்டையிலேயே நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் அதாவது செல்போன், மற்றும் பாக்கெட் கணிணி, கேமரா, இன்னும் என்னென்ன எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்துகிறீர்களோ அத்தனையையும் பொருத்திக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ளது. PAN (Personal Area Network) என்றழைக்கப்படும் இந்த ஹைடெக் சட்டையில் வயர் மற்றும் வயர்லஸ் கருவிகளை உள்ளேயே பொருத்திக்கொண்டு நீங்கள் சாதாரணமாக உங்கள் பயணத்தைத் தொடரலாம்.
நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம். கிட்டத்தட்ட 40 பாக்கெட்டுகள் வரை இதனுள் தைக்கப்பட்டிருக்கும். நீங்கள் வைத்திருக்கும் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு அதனுள்ளேயே வயர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செல்போன்கள், MP3  பிளேயர், PDA (பாக்கெட் கணினி), பைனாகுலர், மூக்குக்கண்ணாடி, மற்றும் பாட்டரிகளை வைக்கும் விதமாக காந்தவிசை மூடி கொண்ட அறைகள் உள்ளன.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் உங்கள் கருவிகளை பாக்கெட்டில் கையை விட்டு தேடி இயக்கத் தேவையில்லை. சட்டையின் வெளிப்புறத்திலேயே இருக்கும் பட்டனை தட்டினாலே போதும். அந்தந்தக் கருவிகளை இயக்கலாம். MP3 ரேடியோவின் ஒலியைக் குறைக்கலாம், அதிகப்படுத்தலாம். இதை மடிப்பதாலும், இச்சட்டையை சலவை செய்வதாலும் எதுவும் பழுதாகாது. இதுதான் இதனுடைய முக்கிய சிறப்பம்சம்.
சட்டையின் பாக்கெட்டில் மறைந்திருக்கும் பாட்டரியை சட்டையின் பின்புறம் உள்ள சூரிய ஆற்றல் மூலம் `சார்ஜ்’ செய்யலாம். மேலும் இதில் உங்களுக்குத் தேவையான பானங்களை  வைத்துக் கொள்ளலாம். இந்த PAN எல்லா வகை பருத்தியால் நெய்யப்பட்ட கால் சட்டைகளிலும் 11 கருவிகளை வைக்கக்கூடிய அறைகளுடன் கிடைக்கிறது.
சிங்குலர் (Cingular) என்ற நிறுவனம் புளூடூத் தொழில்நுட்பத்துடன் RAZRWIRE என்ற குளிர் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்செட் மூலம் 30 அடி தொலைவில் உங்கள் செல்போனை வைத்துவிட்டு பேசிக் கொண்டே நடக்கலாம். உங்கள் போனுக்கு வரும் அழைப்பையோ அல்லது கொடுக்கும் அழைப்பையோ (Incoming and outgoing) கண்ணாடியில் உள்ள ஒரே பட்டனிலேயே இயக்கலாம்.
இரண்டு காதுகளிலும் நீங்கள் விரும்பியபடி மாற்றி மாற்றி பொருத்திக் கொள்ளும்விதமாக கழற்றி மாற்றிக் கொள்ளும்படி ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கண்ணாடியில் ஆபத்தை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் சுவற்றில் உள்ள மின் இணைப்பிலேயே சாதாரணமாக இதை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதே நிறுவனம் MP3 பிளேயருடன் ஒரு குளிர் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு தனியே ஹெட்போன் தேவையில்லை. ஒரு சிறிய செவி ஒலிபெருக்கி கண்ணாடி பிரேமிலேயே மடக்கி பொருத்தப்பட்டிருக்கும். தேவைப்படும்போது இழுத்து காதில் செருகிக் கொள்ளலாம். மேலும் பிரேமிலேயே USB இணைப்பானும் இருக்கும். இதன் மூலம் கம்யூட்டரில் இணைப்பு கொடுத்து தேவையான MP3 பாடல்களை ஏற்றம் செய்து கொள்ளலாம். எடையும் மிகக்குறைவு.
காற்று, கடல்அலை, சூரிய ஒளியில் இயங்கும் ராட்சத சரக்கு கப்பல்
பொருளாதார சிக்கனத்தை எந்த அளவிற்கு ஏற்படுத்த முடிகிறதோ அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் தரத்தை நிர்ணயிக்கலாம். உதாரணமாக 1 லிட்டரில் 15 கி.மீ செல்லும் ஒரு வாகனம், விஞ்ஞானப் புரட்சியால் 1 லிட்டருக்கு 25 கி.மீ சென்றால் அது அறிவியல் வளர்ச்சியின் மிகப்பெரிய சாதனைதான். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் விஞ்ஞானம் மூலப்பொருள் சிக்கனத்தையும், அதிக லாபம், நேரவிரயம் தடுக்கப்படுதல் போன்றவைகளில் சாதனை புரிந்து வருகிறது.
ஸ்கேண்டினேவியன் கப்பல் நிறுவனமான Wallenius Wilhelmsen (WW) 2025-ல் காற்று, அலை, சூரிய ஒளி இவைகளைக் கொண்டு இயங்கும் சரக்கு கப்பலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆர்செல் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் எடை குறைவான பொருட்களால் தயாரிக்கப்பட்ட மூன்று பாய்மரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காற்றின் உபயோகத்தைத் தவிர சூரியக் கதிர்களையும் (Solar Photovolatic cells) பயன்படுத்தி கப்பல் இயங்குவ தற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கப்பலில் உள்ள 12 துடுப்புகளின் மூலம் அலையிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இந்த இரு உந்து சக்தியைக் கொண்டு இயங்கும் இதன் செயல்திறன் அதிகம். எஞ்சியுள்ள கப்பலுக்குத் தேவைப்படும் மின்சாரம் ஹைட்ரஜன் எரிசக்தியின் மூலம் பெறப்படுகிறது.
இந்த ஆர்செல் கப்பலின் கார்கோ தளம் மட்டும் 14 மடங்கு கால்பந்து ஆடுகளத்தின் அளவைக் கொண்டது. இதில் 10 ஆயிரம் கார்களை நிறுத்தலாம். இப்பொழுது இருக்கும் கார்களை கொண்டு வரும் சரக்கு கப்பல்களைவிட 50 சதவிகிதம் கூடுதலான கார்களை ஏற்றிச் செல்லும் அளவிற்கு இது பெரியது.
ஆனால் கப்பலில் பயன்படுத்தப் பட்டிருக்கும் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இவைகளி னால் மற்றக் கப்பல்களைப் போன்ற எடைதான் இதுவும் இருக்கும். இதன் விஷேச அம்சம் என்னவென்றால் இதனுடைய சுக்கான் (கப்பலை செலுத்துவதற்கு மற்றும் திருப்புவதற்கு உதவும் ஸ்டியரிங் போன்ற சாதனம்), மின் உந்துசக்தி மோட்டார் இவைகள் நவீன வகையில் கச்சிதமாகவும், முந்தைய கப்பல்களில் உள்ளது போல் அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாத வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக எடையுள்ள எரி பொருள் சேமிப்பு தொட்டிகளும் தவிர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment