உண்மையிலேயே இந்த வசதி பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. கண்டிப்பாக பயன் படுத்தி கொள்ளுங்கள். என்ன வசதின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க. நாம் பதிவில் வாசகர்களுக்காக சில யூடியூப் வீடியோக்களை பகிருவோம். இந்த முறையில் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றாலும் முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். ஆதலால் வாசகர்கள் அதிக நேரம் செலவழித்து அந்த வீடியோவை பார்ப்பதை தவிர்த்து விடுவதால் நாம் சொல்ல வந்த கருத்து மற்றவர்கள் இடத்தில் சரியாக போய் சேருவதில்லை.
குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் டவுன்லோட் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் நம் பிளாக்கில் அப்லோட் செய்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறிகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க எந்த பதிவரும் விரும்புவதில்லை ஆகையால் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
இந்த பிரச்சினைகளை தீர்க்கவே ஒரு அருமையான தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த முறையில் நான் உருவாக்கிய வீடியோ கீழே உள்ளது பாருங்கள். இந்த வீடியோவில் நான் தேர்வு செய்த பகுதியை மட்டும் தான் உங்களால் பார்க்க முடியும்.

- முதலில் இந்த லிங்கை snipsnip.it க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- மேலே உள்ள படத்தில் நான் காட்டியுள்ள இடத்தில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் URL கொடுத்து உங்கள் கீபோர்டின் என்ட்டர் கீயை அழுத்தவும்.
- உங்களுக்கு கீழே இருப்பது போல விண்டோ வரும்.
- உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் பகுதியின் START TIME மற்றும் வீடியோவின் END TIME நிமிடம் மற்றும் நேரத்துடன் சரியாக கொடுத்து கீழே உள்ள SNIP IT என்ற பட்டனை அழுத்தவும்.
- அடுத்து உங்கள் வீடியோ ரெடியாகி விடும் அதில் அந்த வீடியோவிற்கான EMBED URL கொடுக்கப்படும் அதை முழுவதும் காப்பி செய்து கொள்ளுங்கள். (நீங்கள் உருவாக்கிய வீடியோவின் PREVIEW பார்க்க வேண்டுமென்றால் கீழே லிங்கை க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்)
குரோம் நீட்சி- Smiley Central
நாம் அனைவருக்கும் பேஸ்புக் சமூக தளத்தின் பயன்பாடு தெரிந்திரக்கும். இதில் நாம் நண்பர்களுக்கு செய்திகள் அனுப்பும்போது அதோடு இந்த smileyகள் சேர்த்து அனுப்பினால் சூப்பராக இருக்குமல்லவா. கீழே உள்ள லிங்கில் சென்று நீட்சியை இணைத்து அந்த வசதியை பெற்று கொள்ளுங்கள்.
|
No comments:
Post a Comment