பேஸ்புக்கில் ஆன்லைனில் இருப்பதை மறைக்க
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். ஒரு சில நேரங்களில் ஏதோ ஒரு தேவைக்காக நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
- முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும்.
- திறந்தவுடன் ஆன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
- அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- மேலே குறிப்பிட்டு உள்ளதை போல விருப்பத்தேர்வுகள் என்பதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.
- அந்த விண்டோவில் உள்ள ஆப் லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும்.
- இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்க படுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியாது.
- இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் திரம்பவும் இவ்வசதியை பெற்று விடலாம்
No comments:
Post a Comment