Monday, May 2, 2011

பின் விளைவை ஏற்படுத்துமா பின்லேடன் மரணம்

அல்குவைதா அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் இறந்ததால், அடுத்து அந்த இயக்கம் என்ன ஆகும்? யார் தலைமை ஏற்பார்? சர்வதேச பயங்கரவாதத்தின் சூழ்நிலைகள் எப்படி மாறும் என்ற கேள்விகள் எழுகின்றன. அமெரிக்க மூத்த பத்திரிகையாளரான பீட்டர் பெர்கென், கூறும்போது, "" பயங்கரவாதிகள் மீதான போர் முடிவுக்கு வந்தது'' என்றார். ஆனால் மற்ற சில வல்லுநர்கள் இதை மறுக்கின்றனர்.

2001ம் ஆண்டு இருந்ததை விட 2011ல் அல்குவைதா இயக்கம், புதிய தலைவர்கள் மற்றும் படைகளுடன் வளர்ச்சியடைந்துள்ளது. ஒசாமாவிற்கு பின் எகிப்தில் பிறந்த அய்மேன் அல் ஜவாஹிரி அல்குவைதாவிற்கு தலைவராக பொறுப்பேற்றார். இயக்கத்தின் நடவடிக்கைகளையும் முன்னின்று கவனித்தார். அரேபியாவில் செயல்பட்ட, அல்குவைதாவின் அதிகாரப்பூர்வ குழுக்கள், ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையிலும் தங்கள் பணியை மேற்கொண்டனர். " தலைவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களுடைய கொள்கைள் பரப்படும் என்பதையே இது காட்டுகிறது' என முன்னாள் சி.ஐ.ஏ., அதிகாரி பார்பரா சூடே கூறினார். 
அபு அல் யாசித், அபு யாக்யா அல்-லிபி, அடியா அபுத் அல்-ரகுமான் <உள்ளிட்ட சில இளம் தலைவர்கள், சில ஆண்டுகளாக இயக்கத்தை வழி நடத்துகின்றனர். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இவர்கள் தலைமையிலான படைகள் இயங்குகின்றன. இவர்களில் சிலர் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

""பின்லேடனின் இறப்பு, பன்னாட்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு பெரிய இழப்பு; அதற்காக அல்குவைதா இயக்கம் முடிவுக்கு வந்ததாக கருதமுடியாது'', என வாஷிங்டனைச் சேர்ந்த பன்னாட்டு பயங்கரவாத ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் தாவித் கார்டன்ஸ்டீன் தெரிவித்தார். 

பின் விளைவை ஏற்படுத்துமா பின்லேடன் மரணம்? :பின்லேடனின் மரணம் குறித்து அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இணையதளங்களில் மட்டும், ஒசாமா மரணம் குறித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர். அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கைக்கு பின் தான், பின்லேடன் இறந்து விட்டார் என மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.

உங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்



கணினியில் முக்கியமான ஒன்று இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்கு தளங்கள். பெரும்பாலும் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன் படுத்துகிறோம் . நாம் இந்த கணினியில் இந்த இயங்கு தளங்களை நிறுவும் போது அதற்க்கான லைசன்ஸ் மற்றும் சீரியல் எண்ணை சரியாக கொடுத்தால் மட்டுமே இந்த இயங்கு தளத்தை நம் கணினியில் நிறுவ முடியும். ஒரு எண் மாறினால் கூட நிறுவ முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த எண்ணை நாம் தொலைத்தோ அல்லது மறந்தோ விடுகிறோம் அல்லது மறந்து விடுகின்றோம் என வைத்து கொள்வோம்.

இப்பொழுது நம் கணினியில் ஏதோ ஒரு பிரச்சினையால் இயங்கு தளத்தை திரும்பவும் நிறுவ வேண்டும். இப்பொழுது அந்த எண்ணை மறந்து விட்டதால் நம் கணினியில் நிறுவுவதில் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையில் நமக்கு உதவவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.


மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளில் உங்கள் இயங்கு தளங்கள் மட்டுமின்றி நம் கணினியில் பதிந்துள்ள Nero, VM ware, Ms office ன் Serial எண்ணையும் நமக்கு தெரிவிக்கும். 
  • இந்த மென்பொருளை நம் கணியில் நிறுவ வேண்டாம். தரவிறக்கியவுடன் நேராக இயக்கலாம்.
  • மிகச்சிறிய அளவே உடையது (95kb).
  • 100% பாதுகாப்பான இலவச மென்பொருள்.
 பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் உங்களுக்கு ஒரு செய்தி விண்டோ வரும் அதில் உள்ள Accept பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் படத்தில் உள்ளது போல் தேர்வு செய்து கொண்டு அருகில் உள்ள Search என்ற பட்டனை அழுத்தினால் போது உங்களுடைய இயங்கு தளத்தின் லைசன்ஸ் சீரியல் எண்கள் மற்றும் உங்கள் MS office லைசன்ஸ் ஆகியவைகள் வந்திருக்கும்.
  • கீழே உள்ளதை போல முடிவு வரும். அதில் உள்ள File- Save க்ளிக் செய்து உங்களுடைய கணினியின் லைசன்சை சேமித்து கொள்ளுங்கள். 


இனி உங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டாலும் கவலை இல்லாமல் நாம் பெற்று கொள்ளலாம். மேலும் உதவிக்கு http://www.klinzmann.name சென்று பார்த்து கொள்ளவும்.

Sunday, May 1, 2011

Mediafire இல் நமக்கு என்று ஒரு URL ஐ பெற்றுக்கொள்வது எப்படி?


இலவசமாக மற்றவர்களுடன் File களை பகிர்ந்து கொள்வதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கின்றன ஆனால் நம்ம Mediafire ஐ மட்டும் பார்ப்போம்.இந்த URL நீங்கள் பெற்றுக்கொள்வதன் மூலம் எத்தனையோ விதமான நண்மைகளை பெற்றுக்கொள்வீர்கள் அதில் நான் ஒன்றை மட்டும் விளங்கப்படுத்துகிறேன்

01.இணைய இனைப்பு உள்ள கணனியில் இதை உங்கள் Pendrive  மாதிரி பயன்படுத்தி கொள்ள முடியும்



Mediafire இல் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்து வேறு இடங்களில் பயன்படுத்த நினைக்கும் file  களை upload செய்து கொள்ளுங்கள்.பிறகு தேவைப்படும் இடத்தில் உங்கள் mediafire url இற்கு செல்லுங்கள் ( உங்கள் password அவசியமில்லை) தேவைப்பட்ட File ஐ Download செய்யுங்கள்.இதனால் நமக்கு

01. ஒரு இலவச Pendrive கிடைக்கிறது
02.pendrive மூலம் அடுத்தவர் கணினியில் இருந்து வைரஸ் வருவதை ஓரளவு தடுக்கலாம்.
இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம்

சரி எப்படி  இந்த URL ஐ பெறுவது என்று பார்ப்போம்

01. இங்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்
02. அடுத்து Free Basic Account என்பதை தெரிவு செய்யுங்கள்
03.இடது பக்கம் உள்ள Manage custom URLs என்பதை கிளிக் செய்து

 04.Add New custom URL


05.01 என்பதில் உங்களுக்கு விரும்பிய URL ஐ தெரிவு செய்யவும்.பின் அது  Available என்று இருக்கிறதா என பார்க்கவும். 02 என்பதில் அந்த URL இற்குறிய  Folder ஐ தெரிவு செய்யவும்.

06.அவ்வளவுதான்.உங்கள் email முகவரியை உறுதிப்படுத்திக்கொள்ளுங்க

மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?


ஏற்கனவே சீரியல் நம்பர் இலவசம் என்ற தலைப்பின் கீழ் எந்த எந்த தளத்தில் எல்லாம் இலவசமாக சீரியல் நம்பர் தாராங்கன்டு பார்த்தோம்.இன்டைக்கு பார்க்கப்போவது Craagle என்ற மென்பொருள் மூலம் எப்படி இலவசமாக சீரியல் நம்பர் பெறுவது என்று.
அப்படி என்றால் ஏற்கனவே எழுதியதற்கும் இன்றையதற்கும் வித்தியாசம் உள்ளதா?
ஆம், ஏற்கனவே எழுதியதுல ஒரு பிரச்சினை அதாவது ஒரு தளத்துல சீரியல் நம்பர் தேடி கிடைக்கா விட்டால் அடுத்த தளத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.ஆனா இன்றைக்கு பார்க்கப்போகும் மென்பொருள் அனைத்து தளங்களிலும் தேடி ஒரே இடத்தில் தருகிறது .இதனால் நமக்கு நேரமும் மிச்சம் விரைவாகவும் தேட முடியும்.

சீரியல் நம்பரை பெறுவதற்கு what என்பதற்கு serials என்றும், where என்பதற்கு Search All என்றும் , Search என்பதற்கு software Name ஐயும் வழங்கி விட்டு என்டர் கீயை ப்ரஸ் பன்னவும்.ஒரு நிமிடத்தில் சீரியல் நம்பர் கிடைத்து விடும்.சந்தேகம் இருப்பின் கீழே படத்தை பார்க்கவும்.




Craagle software Download

பழைய தமிழ் வீடியோ பாடல்கள் பதிவிறக்க


ஆயிரம் புதுப்படங்களின் பாடல்கள் வந்தாலும் அந்தகாலத்துப்பாடல்களே பாடல்கள்தான். பழைய பாடல்களை கேட்கும் சமயம் நம்மை அறியாமலேயே பாடல்வரிகளை வாய் முனுமுனுக்கும். சில பதிவிற்கு முன்னர் கக்கு மாணிக்கம் அவர்கள் வென்னிற ஆடை பட பாடல்களை பற்றி பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் இடம் பெறும் அம்மம்மா காற்றுவந்து ஆடைகட்டி என்கின்ற பாடலை இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை என்று குறிபிட்டிருந்தார் . அவருக்காக தேடியபோது அந்த பாடல்கிடைத்ததோடு மிக அருமையான இந்த தளம் கிடைத்தது நீங்களும் அந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். அங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஒப்பன் ஆகும்.

இதில் வரிசைப்படி பாடலின் முதல்எழுத்தை கொண்டு பாடலை தேடவேண்டும். ஒவ்வொரு பாடலின் தம்ப்நெயில் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருக்கும். அதை கொண்டும் பாடலை சுலபமாக தேடலாம்.
உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்தவுடன் அதன் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய பாடல் பாட ஆரம்பிக்கும். தேவையான பாடலை டவுண்லோடும் செய்துகொள்ளலாம்.





பழமையான -அருமையான -புகழ்பெற்ற பாடல்கள் என பல பாடல்கள் இதில் இருக்கின்றது

வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.

நம் வங்கி கணக்கு முதல் பைனான்ஸ் , கிரெடிட் கார்ட், இன்சூரன்ஸ்,
கடன், வட்டி என அனைத்துவிதமான கணக்கிற்கும் ஆன்லைன்
மூலம் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
பைனாஸ்-ல் பைக் வாங்கியது முதல் கார் வாங்கியது வரை வங்கியில்
எவ்வளவு வட்டி , நம் கடனுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என
அனைத்துவிதமான கணக்கு வழக்கிற்கும் நமக்கு துல்லியமாக
உதவுதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.calcmoolator.com
எப்படி வட்டி போடுகிறார்கள் என்றே தெரியவில்லை அவர்களிடம்
சென்று கேட்டால் ஏதோ குழப்புவது போல் இருக்கிறதே , இந்த
வார்த்தைகளை பெரும்பாலும் பைனான்ஸ் முதல் வங்கியில் கணக்கு
வைத்திருப்பவர்கள் வரை பலர் கூற கேட்டிருப்போம், சிறிய கணக்கு
தான் என்றாலும் நமக்கு அதை தெரிந்து கொள்ள நேரம் இல்லை,
சில நேரங்களில் நம் புத்திசாலி மண்டையில் ஏறாமால் இருக்கிறது.
இப்படி நமக்கு எழும் அனைத்துவிதமான கணக்கிற்கும் தீர்வு
கொடுக்கத்தான் இத்தளம் உள்ளது, இங்கு சென்று Auto,Business,Children,
Credit Cards,Debt,Education,Green,Insurance,Investments,IRA,Jobs,
Money Saving,Mortgage,Pets,Retirement,Retirement 2 ,Savings,Taxes
என அனைத்துவிதமான துறைகளிலும் நமக்கு எந்ததுறை
வேண்டுமோ அதை சொடுக்கி அங்கு எவ்வளவு பணம் எத்தனை
மாதம் வட்டி என்ன போன்ற அடிப்பை கேள்விகளுக்கு பதில்
கொடுத்து Calculate என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்
நாம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது முதல் அனைத்து
விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி


லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1
னடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.

இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக

Double Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.