Wednesday, March 2, 2011

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க


நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.

இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Downloadசெய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  
Information Overview : 
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 


இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 

Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.


மென்பொருட்களினால் கணினி பாதிப்பு அடையும் வாய்ப்பு உள்ளது.


இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழ்கின்றோம். ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணினி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகளை கொடுத்து உள்ளேன்.
  • இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.
  • இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை ஆன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம். 
  • எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிருங்கள் ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள் ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
  • இலவச மென்பொருட்களை தொகுத்து வழங்கும் தளங்களான Cnet.com , brothersoft.com மற்றும் சில தளங்களில் இருந்தே டவுன்லோட் செய்யவும்.
  • டொரன்ட் மூலம் மென்பொருளை டவுன்லோட் செய்வது முற்றிலும் தவிர்க்கவும் ஏனென்றால் இந்த முறையில் தான் நம் கணினி மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

  • தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்தாலும் கூட நாம் டவுன்லோட் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின்  Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்து டவுன்லோட் செய்யவும்.
  • குறிப்பாக Cnet.com தளத்தில் டவுன்லோட் செய்யும் போது அதனுடைய Product Ranking 1 முதல் 2 வரை உள்ள மென்பொருட்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
  • எந்த தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யும்போது மொத்த டவுன்லோட்  அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை டவுன்லோட் செய்தார்கள் என்று பார்த்து அதிகம் பேர் பார்த்து இருந்தால் அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது ஆகவே அந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

    • ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
    • இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம். 
    இன்றைய குரோம் நீட்சி- Chrome SEO 

    நீட்சிகள் வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள நீட்சி இந்த Chrome SEO (Search Engine Optimization). இந்த நீட்சியை பதிவர்கள் அனைவரும் கட்டாயம் உபயோகிக்கவும். என்றால் இந்த நீட்சியின் மூலம் தேடியந்திரங்கள் மூலம் நம் பிளாக்கிற்கு எத்தனை பேர் வந்துள்ளனர். மற்றும் நம் தளத்திற்கு மற்ற தளங்களில் இருந்து கிடைக்கப்பட்டுள்ள Backlinks எவ்வளவு மற்றும் traffic rank, Search Stats, Bookmarks, cached, On site, Domain Details போன்ற வசதிகளை இதில் அறிந்து கொள்ளலாம்.  


    போட்டோவின் பின்புறத்தில் முக்கியமான பைல்களை மறைத்து வைக்கலாம்.

    நாம் சில முக்கியமான பைல்களை நம் கணினியில் பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம் அந்த வகையில் இந்த முறையும் சிறந்த முறையே அதாவது ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய முக்கியமான பைல்களை மறைத்து வைக்கலாம். சாதரணமாக அந்த பைலை ஓபன் செய்தால்  போட்டோ மட்டுமே தெரியும் அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் பைல்கள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.
    • இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் பைல்களை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
    • அடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் கொள்ளுங்கள்.
    • இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை டவுன்லோட் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.  
    • அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.  அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
    • அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
    • Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg பைலை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே பைலை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
    • இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.
    • அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் உங்களுடைய பைல்கள் மறைக்க பட்டது என செய்தி வரும் அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் பைலை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.
    • வெறும் படம் மட்டுமே தெரியும்.  பின்னால் இருக்கும் நம் பைல்கள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் பைல்களும் தெரியும் அதை நாம் உபயோகித்து கொள்ளலாம்.
    • இது போல் நம் பைல்களை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசிய பைல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

    இனி குழந்தைகளையும் கூகுளில் தைரியமாக மேய விடலாம்


    கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என அனைவரும் அறிந்ததே.  இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அதைவிட இரு மடங்கு கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆகையால் கூகுளில் கெட்ட விஷயங்களை தேடினாலும் லட்சகணக்கில் ஆபாச இணையதளங்கள் வரும் இதனால் நம் பிள்ளைகளின் கவனங்கள் சிதற வாய்ப்பு உள்ளது. ஆகவே கூகுள் தேடலில் இந்த ஆபாச இணையதளங்கள் வருவதை எப்படி தடுப்பது என காண்போம்.
    • முதலில் இந்த லிங்கில் Google க்ளிக் செய்து கூகுள் Settings பகுதிக்கு செல்லுங்கள்.
    • உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Safe Search Filtering பகுதிக்கு செல்லவும்.
    • அங்கு உள்ள Lock Safe Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    •  அதை க்ளிக் செய்தவுடன் உங்களின் ஜிமெயில் Id, Password கேட்கும் அதை கொடுத்து Sign In கொடுத்தால் உங்களுக்கு அடுத்த விண்டோ வரும் அதில் இருக்கும் Lock Safe Search என்ற பட்டனை அழுத்தவும்.
    • அங்கு அவ்வளவு தான் கூகுள் தேடலில் ஆபாச இணையதளங்கள் தடுக்கப்பட்டு விடும். 
    • நீங்கள் திரும்பவும் இந்த Safe Search Lock நீக்க நினைத்தால் அதே செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று Unlock என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் USER ID, PASSWORD கொடுத்தால் திரும்பவும் இந்த லாக் நீங்கிவிடும்.
    • மேலும் உதவிக்கு கூகுள் வழங்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




    குரோம் நீட்சி - Personal Block List



    குறிப்பிட்ட சில நமக்கு தேவையில்லாத தளங்கள் கூகுள் தேடலில் வருவதை தடை செய்யலாம். இந்த நீட்சியை முதலில் உங்களின் உலவியில் நிறுவிடவும் இப்பொழுது கூகுளில் தேயில்லாத தளத்தின் பெயரை கொடுத்து வரும் முடிவில் தற்போது புதியதாக எல்லா முடிவுகளுக்கு கீழேயும் Block என்று ஒரு புதிய வசதி இருக்கும் அதில் க்ளிக் செய்து அந்த தளங்களை நீக்கி விடலாம்.



    கூகுளில் கேட்டது ஜிமெயிலில் கிடைக்கும்


    • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு Google Alert  செல்லுங்கள்.
    • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும்.