Saturday, January 15, 2011

Youtube ல் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நம் பதிவில் பகிர


உண்மையிலேயே இந்த வசதி பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. கண்டிப்பாக பயன் படுத்தி கொள்ளுங்கள். என்ன வசதின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க. நாம் பதிவில் வாசகர்களுக்காக சில யூடியூப் வீடியோக்களை பகிருவோம். இந்த முறையில் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றாலும் முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். ஆதலால் வாசகர்கள் அதிக நேரம் செலவழித்து அந்த வீடியோவை பார்ப்பதை தவிர்த்து விடுவதால் நாம் சொல்ல வந்த கருத்து மற்றவர்கள் இடத்தில் சரியாக போய் சேருவதில்லை.
குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் டவுன்லோட் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் நம் பிளாக்கில் அப்லோட் செய்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறிகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க எந்த பதிவரும் விரும்புவதில்லை ஆகையால் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.

இந்த பிரச்சினைகளை தீர்க்கவே ஒரு அருமையான தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த முறையில் நான் உருவாக்கிய வீடியோ கீழே உள்ளது பாருங்கள். இந்த வீடியோவில் நான் தேர்வு செய்த பகுதியை மட்டும் தான் உங்களால் பார்க்க முடியும்.


  •  முதலில் இந்த லிங்கை snipsnip.it க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • மேலே உள்ள படத்தில் நான் காட்டியுள்ள இடத்தில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் URL கொடுத்து உங்கள் கீபோர்டின் என்ட்டர் கீயை அழுத்தவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பது போல விண்டோ வரும்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் பகுதியின் START TIME மற்றும் வீடியோவின் END TIME நிமிடம் மற்றும் நேரத்துடன் சரியாக கொடுத்து கீழே உள்ள SNIP IT என்ற பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து உங்கள் வீடியோ ரெடியாகி விடும் அதில் அந்த வீடியோவிற்கான EMBED URL கொடுக்கப்படும் அதை முழுவதும் காப்பி செய்து கொள்ளுங்கள். (நீங்கள் உருவாக்கிய வீடியோவின் PREVIEW பார்க்க வேண்டுமென்றால் கீழே லிங்கை க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்)


  • இப்பொழுது உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து NEWPOST பகுதியில் EDIT HTML பகுதியில் நீங்கள் காப்பி செய்த EMBEDED கோடிங்கை பேஸ்ட் செய்து வெளியிட்டால் நம் பதிவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
    குரோம் நீட்சி- Smiley Central
    நாம் அனைவருக்கும் பேஸ்புக் சமூக தளத்தின் பயன்பாடு தெரிந்திரக்கும். இதில் நாம் நண்பர்களுக்கு செய்திகள் அனுப்பும்போது அதோடு இந்த smileyகள் சேர்த்து அனுப்பினால் சூப்பராக இருக்குமல்லவா. கீழே உள்ள லிங்கில் சென்று நீட்சியை இணைத்து அந்த வசதியை பெற்று கொள்ளுங்கள்.

    பேஸ்புக்கில் ஆன்லைனில் இருப்பதை மறைக்க


    பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். ஒரு சில நேரங்களில் ஏதோ ஒரு தேவைக்காக  நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
    • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
    • நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும். 
    • திறந்தவுடன் ஆன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
    • அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள். 
    • மேலே குறிப்பிட்டு உள்ளதை போல விருப்பத்தேர்வுகள் என்பதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். 
    • அந்த விண்டோவில் உள்ள ஆப் லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும்.

    • இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்க படுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியாது.
    • இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் திரம்பவும் இவ்வசதியை பெற்று விடலாம்

    இதை மறக்க முடியுமா ?

    நம் வாழ்வில் மறக்க முடியாத சில பொருட்கள்.

    அதை பின்னோக்கி பார்போமா
    பிரில் இன்க்
    கேமல் கம்
    ஹீரோ பேனா
    பால் பாயிண்ட் பேனா

    ஜாமென்ட்ரி
    நடராஜ் பென்சில்
    கேசெட்

    வீடியோ கேசெட்

    வாக்மேன்

    ப்லோபி டிஸ்க்
    பிலிம் கேமரா
    பிலிம் ரோல்

    டெலிபோன்

    ஸ்டாம்ப்
    இன்லாந்து லெட்டர்
    போஸ்ட் கார்டு
    கான்வாஸ் சூ
    ரிக்ஷா
    கோல்டு ஸ்பாட்

    பபுள் கம்

    _____________________________________________
     திருக்குறள்: