Thursday, January 13, 2011

பில்கேட்சை ஏழையாக்கப் போகும் இந்தியன்..!


உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்சை முந்துவது குப்புசாமிக்கு இயலாத காரியமாக இருந்தது. அவருக்கு சாவதற்குள் பில்கேட்சை முந்த வேண்டும் என்ற வெறி இருந்தது. இத்தனைக்கும் பில்கேட்சை விட இவருக்கு பல வயது அதிகம். இதை எண்ணியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்த குப்புசாமி ஒரு நல்ல விசயம் செய்தார். தன் மகனையும் தன்னைப்போல வியாபாரப் புலியாக மாற்றியிருந்தார். இவர் உலகின் இரண்டாம் தரப்பணக்காரராக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
சில ஆய்வாளரைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டார். அவர்கள் சொன்னார்கள். “உங்கள் வர்த்தகம் இப்படியே இருக்குமானால் இன்னும் 50 வருடத்தில் பில்கேட்சை முந்த முடியும்” என்றார்கள். குப்புசாமிக்கு தூக்கிவாரிப் போட்டது ஏனெனில் அந்த நிலையில் இவர் மகனுக்கே பல வயதாகிவிடும். இதை எண்ணி எண்ணி குப்புசாமி புலுங்கிப்போனார். அப்போது தான் இவருக்கு ரஷ்யாவின் விஞ்ஞானம் உதவ முன்வந்தது.
சில நாட்களாக குப்புசாமியில் பெரிய மாற்றம் தெரிந்தது. அவர் இப்போது முன்னர் போல் இல்லை. அதிகம் இணையத்தில் இருந்து ஏதோ கற்கிறார் அதிகம் உடற்பயிற்சி செய்கிறார். அவரின் செயற்பாடு எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தது.
ஒருநாள் திடிரென மகனை அழைத்த குப்புசாமி “மகனே நான் சில விடயங்களுக்காக விண்வெளி போகிறேன் வர ஒரு சில மாதங்களாகலாம். உன் 24 வயதென்பது குழப்படியானது தான். ஆனால் நீ மற்றவர் போல் இருக்காதே. நான் வரும்வரை நீ இந்த வர்த்தகத்தை கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும்” என்று கூறி விடை பெற்று சென்றார்.
ஒருசில மாதங்கள் உருண்டோடின குப்புசாமியின் விண்கலம் ரஷ்யாவின் தளத்தில் தரையிறங்கியது. அவரை வரவேற்க அவரது அகன் வந்திருப்பதாக தெரிவித்தார்கள். கண்களால் துலாவியபடியெ குப்புசாமி நடந்து போனார். அப்போது “அப்பா” என்றொரு குரல் கெட்டது. திரும்பிப் பாரத்து தன் மகனை அடையாளம் காண அவருக்கு ஒரு கணம் எடுத்தது. அவன் தலையில் மொட்டை விழுந்து ஒரு கிழவனாக நின்றான். அவன் கையில் ஒரு சிறு பிள்ளையிருந்தது. அது இவரை “தாத்தா” என்று கூப்பிட்டது. இதெல்லாம் இவர் எதிர்பார்த்தது தான் ஆனால் இந்தளவுக்கு இருக்குமென்று எதிர்பார்க்க வில்லை.
அவருக்க இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருந்துது. சுவரில் தொங்கிய அந்த சுவரொட்டித் தொலைக்காட்சியில் பில்கேட்சின் இறுதி ஊர்வலத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்த மகன் சொன்னான் “அப்பா பில்கேட்ஷ் போன வாரம் மாரடைப்பில் இறந்திட்டார். சாகும் போது அவருக்கு 97 வயது தெரியுமா? நீங்க ஐன்ஸ்டினுக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். இனி நீங்க உலகின் முதல்தர பணக்காரராகலாம். நான் சாகும் முன் என் கண் குளிர அந்தக் காட்சியை காணணும் அப்பா” என்று தன் வயோதிபக் குரல் தளதளக்க கூறினான்.

குறிப்பு – ஐன்ஸ்டினின் TIME RELATED THEORY ப்படி விண் வெளியில் ஒளியின் வேகத்தை விட வேகமாகப் பிரயாணிக்கையில் காலக்கடிகாரத்தை வெல்லலாம்.

சுவரொட்டித் தொலைக்காட்சி – LCD T.V

காவலன் - சினிமா விமர்சனம்

வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி 
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே 
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை 
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு 
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.

http://pirapalam.net/wp-content/uploads/2010/08/Kaavalkaran-On-Location-4.jpg
வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத 
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால்  முக்கிய இடத்தில் 
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ்  செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )

படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய் 
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
 டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு  அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின்  தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல்  மறைத்து விடுகிறது.
http://www.4tamilmedia.com/ww5/images/stories/cinema/kavalan.jpg
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.

2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..

3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.

4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?

உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
. 
சரி சரி போ..


எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?

5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..

6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?

ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.

7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்

வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?

விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..

8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..


வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?


ரூம்ல எட்டிப்பார்த்தேன்.

பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?


9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும்பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..


என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.

10. எதுக்குடா அடி வாங்குனே?

நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?

சரி எத்தனை பேர் அடிச்சாங்க?

 கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.

11. டாக்டரை பார்க்கப்போறேன்.

அவர் பேர் என்ன?

அது  அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.

12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.

அவ அழகா இல்லைன்னா?

அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?

13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?

உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..

14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.

15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?

விஜய் - ஹி ஹி


வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..

16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,

வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?

17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..

என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?

18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..

19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?

20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.

21. அவன் யாரு?     பாடிகாட்.


நீ யாரு?                       அவனுக்கு ஜோடிகாட்

22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.

23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசாபார்த்ததில்லை.

வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?

ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..

யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.

கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.

ரஜனியின் என்னைக் கவர்ந்த படங்கள்

              இது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே அவரை ரசிப்பவர்களாக இருந்தாலும்.. நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை.. எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் அதன் நடிப்பே பெரும் கதையை சொல்லாமல் சொல்லி விடும். ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜி தன் கண்ணளால் காட்டுவாரே அதற்கடுத்த்தாக கண்காளால் ஒரு கலை ஜாலம் காட்டும் நபராக என்னை கவர்ந்தவர் ரஜனி தான்..

       நான் அதிகம் ரசித்த படங்களை தருகிறேன் இது ஒரு தரப்படுத்தலில் அடங்கவில்லை.
தளபதி
மணிரத்தினத்தின் இப்படம் அவரது வித்தியாசமான படைப்புக்களில் ஒன்று. குறிபாகச் சொல்வதானால் தளபதி திரைப்படத்தில் நான் மறுபடி மறுபடி பார்த்த காட்சி எது தெரியுமா. அந்தக் கோயில் கேணியில் தாயை மறைந்திருந்து பார்க்கும் காட்சியும்அவர் முகத்தோடு பேசும் இவர்கண்களின் நளினமுமாகும். அதற்கேற்றால் போல் ஒலிக்கும் இசை ஞானியின் பாடல் “சின்னத் தாயவள் ” மனதில் பெரும் அழுத்த்த்தை உண்டாக்கும் காட்சியது.
படிக்காதவன்
அதிலே இவர் கண்கள் பேசும் காட்சியும் பின்னணி இசையும் மிகவும் தத்ரூபமானது அதுவும் யாருடன் பேசினார் தெரியுமா நடிகர் திலகத்துடனல்லவா. சிறுவயதில் பிரிந்த அண்ணனைக் காண்கிறான் ஒரு இளைஞன். தன்னை வியப்போடு பார்க்கும் அந்த இளைஞனை வியந்து பார்க்கும் வழக்கறிஞர்... அது ஒரு உச்சக்கட்ட நடிப்பு அதை விபரிப்பது சிரமமானது.
எந்திரன்
இப்படம் பற்றி பலர் பலதையும் சொல்லியாகிவிட்டது. அதிலும் அவர் கண்கள் பேசுகிறது ஆனால் அந்த இயந்திரத்தனம் அதை மறைக்க முயற்சிக்கிறது. அதில் வரும் வசியின் பார்வையை பாரங்கள் எப்போதும் ஒரு அறிவு கூர்மையான அப்பாவித்தனம் இருக்கும்.
தர்மதுரை
அதிலும் இவரது உச்சக்கட்ட காட்சி ஒன்றை நான் கண்டேன். தம்பி செய்த கொலைக்காய் கைதாகிப் போகும் வேளையில் ஒரு பார்வை பார்ப்பாரே. அதிலே பாசம், ஏமற்றம், வஞசகம் எல்லாம் தெரியம்.
சிவாஜி
அதிலே பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தாத காட்சி தான் ஆனால் அங்கும் அவர் கண் பேசிக் கொள்ளும்.. அதுதாங்க ஸ்ரேயாவை ஏற இறங்கப் பார்ப்பாரே அதைத் தான் சொல்கிறேன்.
சந்திரமுகி
அதிலே ஒரு நகைச்சுவைக் காட்சியை குறிப்பிடுகிறேன். வடிவேலுவுடன் அந்த பேய் பற்றி விபரிப்பாரே அப்போது முழிக்காதா எங்களையும் திருதிருவென்று முழிக்க வைத்தவிடுவார்.
ஆறிலிருந்து அறுபது வரை
அதிலேயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கட்டம் தான். அவரது இறுதித் தருணங்களில் அந்த சாய்மனைக் கட்டிலில் இருந்தபடி ஒரு ஏக்கப்பார்வை ஒன்றை உதிர்ப்பாரே ஒரு ஏழ்மையின் தோற்றப்பாடு, ஏதொ சாதித்த்தாய் தெறிக்கும் பார்வைக் கோடுகள் எம் மனதை உருக்கும் காட்சியது.
தில்லு முல்லு
அதில் ஒரு காட்சியில் திணரறும் வேளையில் இரு விழிகளையும் குவித்தும் விரித்தும் ஒரு ஜாலம் காட்டுவாரே நினைவிருக்கா..?
மன்னன்
அதிலே ஒரு சமையல் குறிப்பிற்கு சமைப்பாரே ஒரு சமையல் அப்போது கடைசியில் ஒரு எமாற்றப்பார்வை பார்ப்பாரே அந்தப் பார்வை எப்படியிருந்தது.
முத்து
நானும் கடைசிப்படத்தை ஒரு அழுத்த்த்துடன் தர வேண்டுமல்லவா.... தந்தையாக இவர் நடித்த முழுக் காட்சியிலும் இவரது கண்களுக்கு  தான் உயரிய நடிப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆமாம் அப்படி ஒரு சாந்தமான ஈர்க்கும் கண்கள். “விடுகதையா இந்த வாழ்க்கை” என்று பாடலிலே இன்னும் உயர்வாகக் காட்டியிருப்பார்கள்.

        என்ன பதிவு பொலிவில்லாமல் இருக்கிறதா..?? எனது ரசனை இப்படிப்பட்டது தான் உண்மையில் எனக்கு ஆர்ப்பாட்டமான, ஹீரோயிசமான காட்சிகள் பிடிக்காது நடிப்பவரை மட்டும் தான் நான் நடிகனென்று எற்றுக் கொள்ளும் மனம் உடையவன். அந்த வகையில் தான் நான் விரம்பிப் பார்க்கும் படங்களும் அமைந்திருக்கும். நான் ஒரு ரஜனியின் தீவிர ரசிகனில்லை (அப்ப கமலுடைய ஆளா..??) என்றால் அதுவும் இல்லை என்பதே என் பதில் நான் வேறொருவருடைய ஆள்..
என்னை தொடர்பதிவிற்கு அழைத்த முதல் நபரும், என் தளத்தை தன் தளத்தில் பார்வைக்கு வைத்த முதல் நபரும், என் பதிவுலகத்தின் ஆரம்ப கால நண்பருமான ரஹிம் காசாலி  அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
       அடுத்ததாக இன்னுமொரு நண்பரும் தொடர்பதிவிற்கழைத்திருந்தார் அடுத்த பதிவில் அதை தொடர்கிறேன். யார் அந்த நடிகர் என எனத் தெரிய வேண்டுமா வேறு யாருமில்லை நடிப்பின் வரைவிலக்கணங்களில் ஒன்றாக கருதப்படும் கமல்ஹாசன் பற்றியது

கார்களில் பயன்படுத்தும் FM transmitter ரை வீட்டிலும் பயன் படுத்த

கார்கலுக்கேன்றே பிரேத்தியகமாக தயாரிக்க பட்ட fm transmitter அதிக பயன்கள் தருவது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அதையே நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ மின்சாரத்தில் பயன்படுத்தும் வசதி இருப்பது பலருக்கு தெரியாது.

   car fm transmitter 





fm transmitter ரை மின்சாரத்தில் இயக்க தேவை படுவது fm transmitter AC - DC ADAPTOR.
இதன் விலையோ ஒரு தினார்(150 ரூபாய்).

                                         fm transmitter AC - DC ADAPTOR 

fm transmitter AC - DC ADAPTOR. வைத்து இருப்பதன் பயன்கள்?

வீட்டிற்கு ஒன்று காருக்கு ஒன்று என இருவகையான MUSIC DEVICES வாங்க வேண்டியது இல்லை.

car fm transmitter earphone port மூலம் காதுகளில் மாட்டிகொண்டு பாடல்களை கேட்கலாம்.

அதேபோல்  வீட்டில் இருக்கும் music system ங்களில் fm மூலம் இணைப்பை ஏற்படுத்தி
car fm transmitter ரில் இருக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

முக்கியமாக பலவருடங்களுக்கு முன்பு  Flash Memory (USP) இணைக்கமுடியாத விலை அதிகம் குடுத்து வாங்கிய music system வைத்து இருபவர்களுக்கு இத்தகைய வழிமுறை மூலம்(எந்த கேபிள் இணைப்பும் இல்லாமல் fm மூலம் இணைப்பை ஏற்படுத்தி) அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது இசையும் மிக மிக துல்லியமாக இசைகின்றது.





 
car fm transmitter பொறுத்தவரை இரண்டு வகையாகையான இணைப்புடன் வேலைசெய்கின்றது ஒன்று micro SD மற்றொன்று  Flash Memory .

                                                                         Flash Memory 
                                                            micro SD 
 
இதில் MICRO SD பொறுத்தவரை நமது போன்களில் இருக்கும் மெமோரி கார்ட்தான் இதையே(MICRO SD) Flash Memory யாக மாற்றிவிடலாம் 30 ரூபாய் விலைகொண்ட கீழே இருக்கும் micro-sd-card-reader மூலம்
 
  micro-sd-card-reader "High speed data transmission, rate 480M bits per second" 
                                                        
  
 
 
Flash Memory தனியாக வாங்கவேண்டிய அவசியம் இல்லை நமது செல்போன்களில் இருக்கும் memory card டையே Flash Memory யாக மாற்றி பணவிரயத்தை தவிர்க்கலாம்.
 
 
car fm transmitter பொறுத்தவரை 250 ரூபாயில் இருந்து கிடைகின்றது. 

 
 
காரிலோ அல்லது வீடுகளில் இருக்கும் music system திலோ இதனை இணைப்பது மிக மிக எளிது
  
 
இதனை எப்படி இணைப்பது என்று இன்னும் விபரம் தேவை என்றால் கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.
 
காரில் இணைப்பது

 
வீட்டில் இருக்கும் music system தில் இணைப்பது.

  

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

              குண்டு  தலைப்பே பதிவின் கனத்தை உரைத்திருக்கும் அனால் இது தலைப்பிற்கு ஏற்ப கனம் உடையதா அல்லது மொக்கையா என தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

எதற்கும் கீழே உள்ள காளோளியை ஒரு தடவை பார்த்தீர்களானால் இதன் கனத்தை தங்களுக்கு இலகுவாக்க முடியும் எனக் கருதுகிறேன்.
           கதிர் வீச்சு சம்மந்தமாக எனது முன்னைய பதிவான வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? ஐச் சொடுக்கி வாசிக்கலாம். அதிலேயே சோளத்தின் கதிர் வீச்சை விபரித்துள்ளேன். ஏற்கனவே ஐ போன் வெடிப்பு சம்மந்தமாக பல புகர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள் அதன் ஒரு வெளிப்பாடு தான் இப்பதிவு


செய்முறை
ஒன்றுமே தேவையில்லை ஒரு கோயிலுக்குச் செல்லவும். கச்சான் ஆச்சியிடம் ஒரு பத்து ரூபாய் கொடுத்து ஒரு சோளச்சரை வாங்கவும் அதன் பின்னர் அந்தப் பையினுள் ஒரு ஐ போனை போட்டு வடிவாகக் குலுக்கவும் அவ்வளவும் தான் அதன் பின் அதை சிணிங்க வைத்தால் போதும் படார் என வெடிக்கும் அம்புட்டும் தான் (இப்படி ஒரு குண்டை தயாரிப்பதற்கு ஐம்பதாயிரத்தி பத்து ரூபாய்க்கு மேல் செலவளிக்கணுமா எனக் கேட்டால் சோத்துச் சங்கம் பொறுப்பேற்காது)

ஆதாரம் - மேலுள்ள காணொளி

ஆனால் இதன் பின்னே பல மறைமுக ஆரம்பங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது எடுத்துக்காட்டாக நியூட்டனுக்கு ஆப்பிள் விழுந்த கதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே மேலே சோளம் வாங்கும் கோபியை பற்றி கீழே சுபாங்கன் குற்றத்தடுப்புப் பிரிவிற்கு பகிரங்க மடல் எழுதிக் கொண்டிருக்கிறார். ஏம்பா நமக்கு வீண் வம்பு. 
பட(பாடை) உதவி வம்பு லோசனன்

            என்ன கடுப்பாயிருக்கா என்ன செய்வது இது மொக்கையென்று நினைத்தால் மொக்கை தான் அதே போல் ஒரு அறிவியல் பதிவு என நினைத் தால் அறிவியல் தான் எல்லாம் உங்க மனம் தான் தீர்மானிக்கணும் நான் என்ன செய்யலாம். என்னை அவசரகாலத் தடைச்சட்டத்தில் கைது செய்ய முனையலாம் அதனால் எனது புளொக்கை யாரும் காட்டிக் கொடுத்து விடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் யாரும் எனக்கு வாக்கிட வேண்டாம் காரணம் இந்த ஆக்கம் publish ஆனால் எனது வாழ்க்கை டுப்பிலிஸ் ஆக்கிவிடும் (இப்படி நான் சொல்லி நீங்கள் கேட்கவா போறிங்க பாசக்கார பய புள்ளைக என்னவேணுமன்னாலும் பண்ணிக்கோங்கோ)