Thursday, November 24, 2011

பாலியல் மூடநம்பிக்கைகள் -18+

அறிவியல் சார்ந்து நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்கிறோம். மதம் சார்ந்த சில சடங்குகள்,நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக அறியப்பட்டுள்ளன.அவற்றை ஒழிப்பதற்கு இயக்கங்கள் தோன்றின.தொடர்ந்து விவாதங்களும் இருந்து வருகின்றன.பாலியல் சார்ந்த நம்பிக்கைகள் மட்டும் இன்னமும் ரகசியமாகவே சமூகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கலாம்.

பாலியல் தொடர்பான சந்தேகங்கள் யாருக்கும் இல்லையா?அந்த சந்தேகங்களை எப்படி தீர்த்துக்கொள்கிறான்?.இன்டர்நெட்டில் அதிகமாக தேடப்படும் பொருள் செக்ஸ் என்று அறிகிறோம்.எதை தேடிக்கொண்டிருக்கிறான்?"சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை"-என்றால் என்ன தெரிந்துகொள்ள இத்தனை ஆவல்?இது தொடர்பாக நண்பர்களும்,சுற்றியிருப்பவர்களும் தரும் நம்பிக்கைகள்தான் ஒருவனது கல்வியாக இருக்கிறது.

ஒரு சிறு நகரத்தின் ஒரே தெருவில் பத்தாம் வகுப்பு வரை படித்த இரண்டு ஆண்கள்.இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுடையவர்கள்.திருமணமானவர்கள்.பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், பாதுகாப்பான உடலுறவு பற்றி அவர்களிடம் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் பேசினார்.ஒருவர் உடலுறவையே மறுத்தார்.அவரது நம்பிக்கை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்.இன்னொருவர் நீர் விட்டுக்கொண்டிருந்தால்தான் குழந்தை நன்றாக வளரும் என்றார்.

ஒரே தெருவில் இருவேறு நம்பிக்கைகளை யார் உருவாக்கியது.அவரவர் நண்பர்கள் வட்டமே.இரண்டாமவர் நம்பிக்கை தனது நோயை மனைவிக்கும் தொடர்ந்து குழந்தைக்கும் பரப்பும் ஆபத்தை கொண்டிருக்கிறது.கன்னிப்பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணுறுப்பில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.இந்த நம்பிக்கை குழந்தைகள்,சிறுமிகளையும் வன்முறைகளுக்கு உள்ளாக்குகின்றன.

பாலியல் சார்ந்த மூட நம்பிக்கைகளை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?அவை தனிமனிதனை உளவியல் ரீதியாக பாதிக்கச்செய்து அவனது இயல்பு நிலையை முடக்குகிறது.உதாரணம்.சுய இன்பம் பற்றிய தவறான நம்பிக்கைகள்.சமூக சீர்கேட்டை உருவாக்குகின்றன..(sexual abuse- போன்றவை ),சில நம்பிக்கைகள் குடும்பத்தில் குழப்பத்தையும்,கள்ளக்காதல் போன்ற உறவுகளையும் உருவாக்கலாம்.எடுத்துக்காட்டாக பிறப்புறுப்பு அளவுகள் பற்றிய மூட நம்பிக்கைகளை சொல்லலாம்.எச்.ஐ.வி./எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களும் பரவிக்கொண்டிருக்கின்றன.

தற்போது நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன.சில ஆயிரம்பேர் அவற்றை படித்திருக்கலாம்.சமூகத்தில் பெருவாரியான மனிதர்களிடம் மூட நம்பிக்கைகளை எப்படி அகற்றுவது? உங்களிடம் சிந்தனையை உருவாக்கவும்,ஆலோசனைகளை பெறவுமே இந்த பதிவு

பெண்கள் பச்சை உடை அணிவதே இதற்குத் தானா?

பல இடங்களில் கவனித்திருக்கிறேன்.அவற்றில் ஒன்று.ஒரு பெண்–திருமணமானவர்-பச்சை புடவை உடுத்தி வழியில் சென்றுகொண்டிருக்கிறார்.கல்லூரி மாணவர்கள் மூவர் நின்றிருந்தார்கள்.இளைஞர்களில் ஒருவன்-வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம்-,”யாருக்குடா மச்சி க்ரீன் சிக்னல்?’’

பச்சை கலரில் உடை உடுத்துவது எப்படி சிக்னலாகும்? என்பதுஎனக்கு புரியவில்லை.அக் கலரில் உடை இல்லாமல் யாரும்இருப்பது வாய்ப்பில்லை.அந்த வக்கிரத்தை என்னவென்றுவர்ணிப்பது? திருமணமானவர் ஒருவர் பச்சை நிறத்தில் உடைஉடுத்தினால் அது காதலுக்கான அறிகுறியா?

கருப்பு கலர்,சிவப்பு கலருக்கெல்லாம் ஒவ்வொரு பொருள்கற்பித்துக் கொள்வது பெண்ணை அவமதிக்கும் செயல்.ஒருகிராமத்தில் இரண்டு,மூன்று பேர் ஒரு பெண்ணின் மீது காதல்கொண்டிருக்கும்போது பச்சை நிற உடையை பார்த்தே மூவரும்கடிதம் கொடுப்பார்களா? இல்லை,அப்பெண் விரும்பும் ஒருவர்கண்ணுக்கு மட்டும் அந்த கலர் தெரியுமா?
கிராமத்தில் நேரில் பேச முடியாத பழங்கால காதலுக்கு நிறங்கள்பயன்பட்டிருக்கலாம்.இப்போது செல்போன் யுகம்,அதுவும் நேரில்சந்திப்பதோ ஏன் டேட்டிங் அது,இதுவென்றுபோய்விட்ட்து.இன்னமும் இம்மாதிரியான கலாச்சாரங்களை ஏன்கட்டிக்கொண்டு அழ வேண்டும்.எதில்தான் வக்கிரமென்று அளவேஇல்லையா?

நடந்தால்,அமர்ந்தால்,சிரித்தால்,இன்ன கலரில் உடைஉடுத்தினால் காதல்,காம்ம் என்றுஅடையாளங்கள் வாழ்க்கைமுறையாகிவிட்ட்தால்தான் எய்ட்ஸ்,பால்வினைநோய்கள்,கள்ளக்காதல் போன்ற சீரழிவுகளை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.தேசத்தின் பெரும் சாபம் இது.

மேற்கண்ட இளைஞர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பித்த்துயார்? கல்லூரியில் வரலாறு,இலக்கியம்,அறிவியல் சமூகம் என்றுஎத்தனையோ கற்பிக்கிறோம்.பச்சை நிறத்தில் உடைஉடுத்திவந்தால் ’சிக்னல்’என்று எவர் கற்பித்தார்கள்?

காலம் காலமாக இருந்து வரும் மட்த்தன்ங்களை நம்முடையஇளைஞர்கள் உள்ளத்தில் அழுக்காக சேராமல் விரட்டினால் ஒழிய,அவர்கள் மிக விலை உயர்ந்த செல்போனை வைத்துக் கொண்டுஅசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பார்கள்.செவ்வாய்கிரகத்தில் குடியேறினாலும் மனம் மட்டும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.

கமலும் மணிரத்னமும் தந்த அவநம்பிக்கைகள்

அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது அண்ணன் ஒருவன் என்னைஅணுகினான்.உறவு இல்லை.என்னை விட ஆறு வயது மூத்தவன்என்பதால் அண்ணன் என்றேன்.ஆரம்ப்ப் பள்ளியோடு அவனதுபடிப்பு முடிந்து போயிருந்த்து.”டேய்,சினிமாவுக்கு போகலாம்வர்றியா?செகண்ட் ஷோ.’’

முன்பு இப்படியெல்லாம் சினிமா பார்த்துபழக்கமில்லை.அப்பாவோடு ஒன்றோ இரண்டோபார்த்திருக்கிறேன்.எனக்கும் ஆசை.எங்கள் வீட்டில்திட்டுவார்கள்,என்றேன்.வீட்டில் இருப்பவர்கள் நிலத்தில் உள்ளவீட்டில் இருந்தார்கள்.நான் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டுதனியாக இருந்தேன்.”செலவெல்லாம் நானேபார்த்துக்கொள்கிறேன்” என்றான்.நானும் சம்மதம்சொல்லிவிட்டேன்.
முதல் முறையாக செகண்ட் ஷோ வுக்கு போகிறேன்.பரபரப்பாகஇருந்த்து.தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது எங்கள்ஊர்.முக்கால் மணி நேர பயணத்தில் நகரத்தை அடையலாம்.எட்டுமணிக்கு புறப்பட்டு ஒன்பது மணிக்கு தியேட்டர் வாசலில்இருந்தோம்.நல்ல கூட்டம்.புதுப் படமாக இருக்க வேண்டும் என்றுநினைத்தேன்.மங்கலான விளக்கொளியில் போஸ்டரைபார்த்தேன்.

பட்த்தின் பெயர் ‘நாயகன்’.”இந்த படம் ரொம்ப நாளாக இருக்கிறதே?”என்று கேட்டேன்.இன்னிக்கு கடைசி நாள்டா! என்று பதில்வந்த்து.அதனால்தான் இவ்வளவு கூட்டம்.எப்படியோ முந்தியடித்துடிக்கெட் வாங்கிவிட்டான்.உள்ளே உட்கார இடம் கிடைத்துவிட்ட்து.அவன் இரண்டாம் முறையாக பார்க்கிறான்.கதவுகள்மூடவில்லை.அங்கே ஏராளமானவர்கள் நின்று கொண்டே படம்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு தூக்கம் தலையை சுற்றியது.ஆனால்தூங்கவில்லை.பட்த்தில் மனம் ஒன்றிப் போய்விட்ட்து.ஒரு பாட்டுமுடிந்தவுடன் விசில் சத்தம் காதைப்பிளந்த்து.’ஒன்ஸ்மோர்’-கூக்குரல் தியேட்டரை நடுங்கவைத்த்து.அந்த பாடல் எதுவென்று உங்களுக்கும் தெரியும்.

நான் எதிர்பார்க்கவில்லை.படம் முடிந்து வெளியே வந்த பின்லாரிகளை நிறுத்த ஆரம்பித்தான்.நள்ளிரவிலெல்லாம் எங்கள்ஊருக்கு பஸ் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்த்து.போகும்லாரியை கேட்டுதான் போக வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைஎன்பதால் எளிதென்று நினைத்தேன்.ஆனால் பத்து லாரிக்குபிறகுதான் ஒன்று கிட்டியது.

லாரி டிரைவர் திட்டினார்.இப்படியெல்லாம் யார் சினிமா பார்க்கச்சொன்னார்கள்.நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்த்துலாரி.நீண்ட தொலைவு செல்லும் வாகனம்.ஊர் வந்த அவசரத்தில்’நிறுத்துங்கள்’என்றோம் சத்தமாக! வண்டி உடனே நின்றது.நாங்கள்இருக்கையில் இருந்து எழும்போது “தடார்”’ என்று ஒரு சத்தம்.

பயந்து போனேன்.இருதய துடிப்பு அதிகமாகிவிட்ட்து.திடீரென்றுலாரி நிற்கவே பின்னால் வந்த லாரி மோதிவிட்ட்து. யாருக்கும் அடிபடவில்லை.எனக்கு தலையில் லேசாக இடித்து விட்ட்து. கீழே இறங்கினோம்.இரண்டு லாரி டிரைவர்,கிளீனர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களை யாரும் கண்டுகொள்ள வில்லை.அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.’யார் கிட்டயும்சொல்லாதடா” என்றான். அடுத்த நாள் மாலை பார்த்த போதும் அந்தலாரிகள் அங்கேயே நின்றிருந்தன. டிரைவர், கிளீனர்களைகாணவில்லை.அடுத்த நாளும் அங்கேயே நின்றிருந்த்து.

சென்ற முறை ஊருக்கு சென்ற போது அவரைக்கேட்டேன்.”இப்போதெல்லாம் செகண்ட் ஷோ போவதில்லையா?”’எனக்கு தெரிந்து யாரும் போகிறமாதிரி தெரியவில்லை.’’

தடய அறிவியல் : திக் திக் துறை.. விறு விறு தகவல்கள்!

தன்னுடைய மனைவியின் சிலம்பை விற்பதற்காக மதுரை வந்தான் கோவலன். அதே நேரத்தில் பாண்டிய மன்னனுடைய மனைவின் சிலம்பு காணாமல் போயிருந்தது. கோவலன் கொண்டு வந்தது தன் மனைவியின் சிலம்பு என்று நினைத்த பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரண தண்டனை விதித்தான். இதை கேள்விப்பட்ட கண்ணகி தன் இன்னொரு கால் சிலம்பை எடுத்து பாண்டிய மன்னனின் அவையில் உடைத்தாள். கண்ணகியின் சிலம்பில் இருந்த்து மாணிக்க பரல்கள் அரசியிடம் இருந்ததோ முத்துமணிகள். இதை பார்த்த பாண்டிய மன்னன் யானோ அரசன்? யானே கள்வன் என்று இறந்துவிடுவான். இந்த இடத்தில் சிலம்பு தான் தடயம்!

தடய அறிவியல் என்ற வார்த்தையை இப்போது நாம் கண்டுபிடித்தாலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த அறிவியல் இங்கு இருந்திருக்கிறது என்று ஆரம்பித்தார் தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குனர் விஜயகுமார்.

தடய அறிவியல் துறை பற்றியும் தமிழ்நாட்டில் தடய அறிவியல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் விஜயகுமாரிடம் பேசினேன். தன் துறை சார்ந்த அறிவை பகிர்ந்துக்கொண்டார்.
ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது என்றவர் தடய அறிவியல் துறையின் பயன்பாடுகளை பற்றி சொன்னார்.

"நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்டுபிடிப்பதற்கு, சரியான நபர்களை அடையாளம் காணுவதற்கு தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபிப்பது தான் தடய அறிவியலின் பணி. நாங்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை எங்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வோம். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறையின் பங்களிப்பு இருக்கிறது.

எம்.எஸ்.இ. முடித்து 74-ம் ஆண்டில் தடய அறிவியல் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஊட்டியில் வேலை. அங்கு இருந்த ஒரு மலை கிராமத்தில் தன் கணவனையே மனைவி கொலை செய்திருந்த வழக்கு தான் என் முதல் வழக்கு. இருபதுகளில் இருந்ததால் ஒரு விதமான பயம் இருந்தது. இதற்கு மலை சார்ந்த இடமும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சடலம் இருக்கும் இடத்துக்கு அருகே அமர்ந்து சாப்பிடுகிற மனநிலைக்கு கூட வந்துவிட்டேன்," என்றவர் தான் சந்தித்த சில வழக்குகள் பற்றி விரிவாகச் சொன்னார்.

"சென்னை அருகே இருந்த கிராமத்தில் ஒரு தாய் மட்டும் தனியாக இருக்கிறார். கரூரில் வேலைபார்க்கும் மகன் சீரியஸாக இருக்கிறான். உடனே கிளம்பி வரவும் என்று அவருக்கு ஒரு தந்தி வருகிறது. பதறியடித்து அந்த தாயும் கிளம்பி செல்கிறார். ஆனால் அங்கு மகன் நன்றாக இருக்கிறான். தந்தி ஏன் வந்தது என்பதை பற்றி மறந்துவிட்டு மகனுடன் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிகிறார்.

வீட்டை திறந்தவர்க்கு அதிர்ச்சி, உள்ளே வைத்திருந்த பணத்தை காணவில்லை. இந்த புகார் காவல் துறைக்கு செல்கிறது. அவர்கள் எங்களை உதவிக்கு அழைக்கிறார்கள். நான் சென்று திருட்டு நடந்த வீட்டை பார்க்கிறேன். ஒரே வீட்டை இரண்டாக தடுத்திருக்கிறார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு உள்ளேயே செல்ல முடியும். வீட்டின் பூட்டு சரியாக இருப்பதால் வீட்டின் இன்னொரு பகுதியில் இருந்து வந்து தான் திருடி இருக்க முடியும் என்று நம்பி நானே ஏறிச்சென்று மேலே பார்த்தேன். பனை மரத்திலான ரீப்பர் கட்டை நடுவே இருக்கிறது. அந்த ரீப்பர் கட்டை தாவி குதிக்கும் போது பக்கத்து வீட்டுகாரனின் கால் முடி அந்த மரத்தில் சிக்கி விட்டது. கால் முடியை எடுத்து ஆராயந்து பார்த்ததில் பக்கத்து வீட்டுகாரன் தான் திருடி இருக்கிறார் என்று நிரூபிக்க இந்த தடயம் வசதியாக இருந்தது," என்றவர் தான் சந்தித்த இன்னொரு வழக்கின் விவரத்தை பகிர்ந்தார்.

"இன்னொரு கிராமத்தில் வயதான முதியவரை கொன்று விடுகிறார்கள். வீடு முழுக்க ரத்தம். சென்று பார்த்தபோது எந்த தடயமும் கிடைக்க வில்லை. ஆனால் முதியவரின் ரத்தத்தை மிதித்துவிட்டு வெளியே செல்லும் போது கொலை செய்தவனின் கால் தடம் பதிந்துவிட்டது. அந்த மாதிரியை எடுத்தோம். மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்ட சிலரை காவல் துறையினர் கைது செய்திருந்தார்கள். அவர்களின் கால் தடத்தை எடுத்துபார்த்ததில் ஒருவனின் கால்தடம் சரியாக பொருந்திவந்தது," என்றவரிடம் ரேகை ஆராய்வதும் உங்களது துறைதான என்று கேட்டதற்கு, "என் சொந்த ஊருக்கு போகும் போதும் கூட என்னை ரேகை பார்க்கும் இடத்தில் வேலை பார்ப்பவர் என்று சொல்லுவார்கள்," என்று சிரித்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.

"ரேகையை ஆராய்வது தடய அறிவியல் துறையின் பணி அல்ல. நாங்கள் குற்றம் அல்லது சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் தடயங்களை அறிவியல் பூர்வமாக நிரூப்பிப்பது தான் எங்களது பணி.

சம்பவம் என்று என்று சொன்னது தான் காரணம் இருக்கிறது. ஒருவர் மறைந்து விடுகிறார். அவரது உடல் புதைக்கபட்டுவிடுகிறது. சில நாட்களில் எழும்புக்கூடு தான் இருக்கும். அப்போது குறிப்பிட்ட இவர் தான் இறந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது. அவர் யார் என்பதையும் தடய அறிவியல் மூலமாக கண்டிபிடிக்கலாம்.

இறந்தவரின் புகைப்படம் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதாகக்கி, மண்டை ஓட்டை வைத்துக்கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து சூப்பர் இம்போசிஷன் முறையில், இறந்தவர் இவர்தான் என்று கண்டிபிடிப்போம். ஒரு வேளை புகைப்படம் கிடைக்கவில்லை, இறந்தாக சொல்லப்படும் நபரின் பெற்றோர்களின் டி.என்.ஏ.வையும் கிடைத்த மண்டையோட்டில் இருக்கும் டி.என்.ஏ.வையும் வைத்து சோதனை செய்வோம்.ஒருவேளை பெற்றோர்கள் இல்லை என்றால், இறந்தாக சொல்லப்படும் நபரின் குழந்தைகளின் டி.என்.ஏ.வை எடுத்துக்கொண்டு சோதனை செய்வோம். இது போல பல வகைகளில் தடய அறிவியல் துறை தடய அறிவியல் துறை செயல்படுகிறது என்று சொன்னவரிடம்,

"இப்போது உங்களிடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் வந்து சென்றதற்கான தடயத்தை பற்றி சொல்ல முடியுமா என்று விஜயகுமாரிடம் கேட்டதற்கு. உடனடியாக இரண்டு மூன்று தடயங்களை சொல்ல முடியும். மேலும் உங்களது பழக்கங்களை வைத்து நிறைய கண்டிபிடிக்க முடியும். முதலில் உங்களது விசிட்டிங் கார்டு இங்கே என்னிடம் இருக்கிறது. இரண்டாவதாக இந்த டேபிளில் இரண்டு டம்ளர்கள் இருக்கிறது. அது ஏன் இங்கு இருக்க வேண்டும். அதில் என்ன இருந்தது. மேலும் அதில் என்ன கலக்கப்பட்டிருந்தது. என்ற அடிப்படையில் தேடலாம். இன்னும் தேடிப்பார்க்கும் போது நிறைய தடங்களை நீங்கள் விட்டுச் சென்றிருக்கலாம்.

சம்பவம் நடந்த இடத்தில் எது வேண்டுமானலும் தடயமாக இருக்கலாம். அது தான் தடயம் என்று கண்டுபிடிக்கும் ஆற்றலை அனுபவம் தான் கற்றுக்கொடுக்கும்," என்று முடித்தார் விஜயகுமார்.

வினோத வழக்குகள்...

தடய அறிவியல் துறையின் மற்றொரு பிரபல நிபுணர் சந்திரசேகரிடமும் பேசினேன். அவர் தான் சந்தித்த 'கொலை அல்லாத வினோத வழக்கின்' அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

"தடய அறிவியல் துறையில் வேலைக்கு சேரப்போகிறேன் என்று சொன்னவுடனே என் வீட்டில் அனைவரும் பயந்தனர். இருந்தாலும் எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. இப்போது திருப்பி பார்க்கையில் நிறைய வழக்குக்கு உதவியிருக்கிறேன் என்று நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது.

தஞ்சாவூர் அருகே பாத்தூர் கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தை தோண்டி இருக்கிறார். அப்போது நடராஜர் சிலை உடபட அவருக்கு நிறைய சிலைகள் கிடைத்திருக்கிறது. தேவை கருதி நடராஜர் சிலையை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுவிட்டார். நிறைய இடங்களுக்கு கைமாறி, அந்த சிலை எங்கு சென்றதோ தெரியவில்லை. பிறகு தன் வசம் இருக்கும் மற்ற சிலைகளை விற்க முற்பட்டபோது காவல் துறையில் பிடிபட்டார். விசாரிக்கும்போது நடராஜர் சிலையை ஏற்கெனவே விற்றுவிட்டார் என்று தெரிய வந்தது.

அது எங்கு இருக்கிறது இன்டர்போல் உதவியுடன் தேடினால் அது இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு மியூசியத்தில் இருக்கிறது. இங்கு தடய அறிவியல் எங்கு வருகிறது என்று யோசிக்க தோன்றும். ஆனால், இங்கும் தடய அறிவியலின் பணி இருக்கிறது. இதற்கு சிற்பகலை பற்றிய அறிவு வேண்டும். அதிர்ஷ்டவசமாக என் தாத்தா ஒரு சிற்பி. மேலும், அதைப்பற்றி ஆராய்ந்து இங்கிலாந்தில் இருக்கும் சிலையை இங்கு கொண்டுவந்தோம். அதற்கு முன்பு அந்த சிலை இங்கிருந்து எடுக்கப்பட்டது தானா என்று உறுதி செய்தோம். இங்கிலாந்தில் இருக்கும் சிலையில் அளவுகளை அனுப்பச்சொல்லி, அதுபோல ஒரு மாடல் சிலையை செய்து இந்த சிலைகளுக்கு நடுவே வைத்துப்பார்த்ததில் இவை அனைத்தும் ஒன்றே என்று முடிவுக்கு வந்தோம். (சிற்பகலை உதவியுடன்) அதன் பிறகு இங்கிலாந்து இது எங்களின் சிலை என்று சொன்ன போது அவர்கள் நம்பவில்லை. இது நடக்கும் என்று தெரிந்து இங்கிருந்தே மண்களையும், மண்ணுடன் ஐம்பொன் பல ஆண்டுகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்காக அந்த சிலைகளையும் எடுத்து சென்றிருந்தோம். இங்கிலாந்தில் இருக்கும் சிலையை இருக்கும் மண்ணும் இங்கிருந்து கொண்டி சென்ற சிலைகளையும் காண்பித்தோம். இரண்டு சிலைகளிலும் இருக்கும் மண் தன்மை ஒன்று தான் என்பதை நிரூபித்து சிலைகளை இங்கு கொண்டுவந்தோம்.

இன்னொரு திருட்டில் தொலைந்து போன தொகையே 600 ரூபாய் தான். ஆனால் அதற்கான தடய அறிவியல் செய்த செலவு 1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து குற்றவாளியை கண்டிபிடித்தோம்," என்றார்.

மேலும், தடயஙகள் இல்லாமல் குற்றங்கள் நடைபெற வாய்ப்பே இல்லையா என்று கேட்டதற்கு, "மிகச்சிறிய குற்றங்கள், உதாரணத்துக்கு சிறு திருட்டுகள் எந்த விதமான தடயமும் இல்லாமல் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரிய குற்றங்களில் தடயம் இல்லாமல் செய்யவே முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னால் புரியவரும்.

தடய அறிவியல் துறைக்கு சவால் விட்டு நான் இந்த வீட்டில் திருடப்போகிறேன். முடிந்தால் நான் வந்ததற்காக தடயங்களை உறுதி செய்யுங்கள் என்று சவால் விட்டு, ஒரு வீட்டுக்கு திருடப்போகிறார். (நிஜமாக அல்ல சவாலுக்காக). சவால் விட்டுவிட்டோமே என்று கவனமாக தலைமுடிக்கு கவசம், கையுறை, காலுறை என எல்லாவிதமான முன் எச்சரிக்கையுடனும் செல்கிறார். அதீத எச்சரிக்கையுடன் செல்வதால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு வியர்த்துவிடுகிறது. அதனால் ஃபிரிட்ஜில் இருந்து ஒரு குளிர்பானத்தை எடுத்துகுடிக்கிறார். அதிலும் தடயங்கள் இல்லாமல் அழித்துவிட்டு திரும்பிவிடுகிறார்.

சிறிதுநேரத்தில் தடய அறிவியல் துறையினர் செல்கிறார்கள். தேடிப்பார்த்தும் எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு அவர் குடித்த மிச்சம் வைத்த பாட்டலின் மூடி கிடைக்கிறது. இப்போது தான் ஒரு விஷயம் புரிய வருகிறது. அந்த ஃபிரிட்ஜிலே பாட்டில் திறப்பதற்கான ஓப்பனர் இருக்கிறது. இருந்தாலும் இவரின் பழக்கத்தின் காரணமாக தன் பல்லை பயன்படுத்தி பாட்டிலை திறந்திருக்கிறார். அந்த மூடியில் அவர் பல்லின் அச்சு இருக்கிறது. இருந்தாலும் அது அவரின் அச்சுதான் என்று கண்டிபிடிக்க அவரை சில நாட்கள் பின்தொடர்ந்து வேறு இடத்தில் இதே போல் பாட்டிலை திறக்கும் போது அந்த மூடியையும் எடுத்து நிரூபிக்கிறார்கள். பழக்கம் கூட தடயத்தை உண்டாக்கும்," என்று முடித்தார் சந்திரசேகர்.

தமிழ்நாட்டில் தடய அறிவியல்!

சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.

தடய அறிவியல் துறையில் எப்படி இணைவது?

இயற்பியல், வேதியியல், உயிரியில் பாடங்களில் பட்ட மேற்படிப்பு படித்திருத்தவர்கள் டி.என்.பி.எஸ்.இ. தேர்வுகள் மூலமே இந்த பணியில் சேரமுடியும்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. ஃபாரன்சிஸ் சயின்ஸ் கோர்ஸ் இருந்தது. இருந்தாலும் இந்த கோர்ஸ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த படிப்பு இருக்கிறது.

அதிக திறமை ஆபத்தா?

அண்மையில் 'பன்முகமாக இருங்குங்கள்' என்ற கட்டுரையை விகடன் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். இதற்கு விமர்சனம் செய்திருந்த பலர் அதிக திறமை (over skilled) ஆபத்தாக முடிந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள்.


உண்மையில் அதிக மற்றும் அதீத திறமை பல நேரங்களில் பல பணியாளர்களுக்கு நல்ல பெயரைத்தான் பெற்று தந்திருக்கிறது. அந்த நல்ல பெயர் என்பது உங்களைச் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
உதாரணத்துக்கு, அடுத்த வாரத்தில் அலுவலகத்துக்கு மூன்று தினங்கள் விடுமுறை இருக்கிற இரு தினங்களின் எல்லா வேலையையும் முடிக்க வேண்டும் என்கிற போது யார் தயவையையும் எதிர்பார்க்காமல், வேலைகளை வேகமாக முடித்து விடும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எப்போதும் தனி மரியாதை, தனி சம்பள உயர்வுதான்.

இந்த பன்முக திறமை மற்றும் அதிக திறமையை வேலைக்கு சேர்ந்து, உங்களுக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில் தனித் திறமையை காட்டி நல்ல பெயர் எடுப்பதுதான் நல்லது. இல்லை என்றால் அதிகப்பிரசங்கி என்கிற பெயர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பலர் இங்கே தான் மெகா தப்பு செய்துவிடுகிறார்கள்.

அதாவது, தாங்கள் எந்த வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்களோ, அதை செய்யாமல் இதர வேலைகளை செய்வதால் பல அதிகாரிகள் கோபம் கொள்கிறார்கள். அங்கேதான், சிக்கல் ஆரம்பிக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டுதான். அதிக திறமையை மற்ற பணிகளில் காட்ட வேண்டும்.

மேலும், புதிதாக ஓர் இடத்தில் வேலைக்கு சேரும் போது, என்ன வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்களோ, அது தொடர்பான தனித் திறமைகளை முன் நிறுத்தி விவரங்களை சொன்னால் போதும். பல நேரங்களில் உங்களின் பன்முக திறமைகள் மற்றும் அதிக திறமைகளை நேர்முகத் தேர்வின் போது முழுமையாக வெளிப்படுத்தினால் வேலை கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

உங்களிடம் நேர்முகத் தேர்வு நடத்துகிறவர், இவ்வளவு திறமையான நபர் வேலைக்கு வந்தால், தன் வேலை பாதிக்கப்படுமோ என்கிற பயத்தில் நல்ல திறமையான பணியாளர்களை தட்டி கழிக்கும் நிலை பரவலாக காணப்படுகிறது.


அதே நேரத்தில், அலுவலக அதிகாரியின் நேர்முகத் தேர்வு முடிந்து நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது நிர்வாக இயக்குநரின் நேர்முகத் தேர்வு என்கிறபோது, நீங்கள் உங்களின் பன்முகத் திறமை மற்றும் அதிக திறமையை காட்டத் தயங்க கூடாது. அந்த வகையில் உங்களுக்கு கேட்ட சம்பளம் அதை விட கூடுதலாக கூட கிடைகக் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.. அதிகப்படியான தகுதியையும் (Over qualification), அதிக திறமையையும் (over skilled) பலர் ஒன்றாக போட்டுக் குழப்பி கொள்வது..! 

முதலில் அதிகப்படியான தகுதியை பார்ப்போம். பல நேரங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கவும் என்று விளம்பரத்தில் போட்டிருப்பார்கள். அந்த வேலைக்கு எம்.பில், பி.ஹெச்.டி. முடித்தவர்கள் கூட விண்ணப்பங்கள் அனுப்புவதை நடைமுறையில் பார்க்கிறோம். அது தவறு...


இது போன்று, பதவிக்கு தேவையில்லாத அதிகம் படித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்புவதை பல நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன. அப்படியே தெரியாமல் அழைப்பு அனுப்பினாலும், நேர்முகத் தேர்வு அறையில் அலுவக நிர்வாகி, பிளஸ்டூ படித்தவர்களுக்கான வேலைக்கு இரட்டை பட்டம் முடித்திருக்கும் நீங்கள் விண்ணப்பிக்க என்ன காரணம் என்ற கேள்வி வரும். அப்போது, 'வேறு எந்த வேலையும் கிடைக்கவிலலை' என்று ஒருவர் சொல்ல வேண்டி வரலாம். அப்போது அதிகாரிகள், இவர் படித்தப் படிப்புக்கும் திறமைக்கும் தொடர்பு இல்லாதவராக இருக்கிறார் என்று புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.

அதிக திறமை என்ன என்று பார்ப்போம். ஒருவரை, ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கு மொழிப்பெயர்க்கும் வேலைக்கு அழைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், ஆங்கிலத்திலிருந்து தமிழ், மலையாளம் போன்ற இதர மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு திறமை உள்ளவர் என்றால் அது அதிக திறமையாக எடுத்துக் கொள்ளப்படும். வேலையில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும், இவர் ஒருவரை வைத்து அலுவலகம் பல மொழிப்பெயர்ப்புகளை செய்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அப்போது கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அதிக திறமையுடன் சிறப்பாக பணிபுரிந்து வெற்றி காண வாழ்த்துகள்..!

விவாகரத்துக்களுக்கு காரணம் பெண்களா?

விவாகரத்து-அன்பெனும் ஈரமில்லாமல் இறுகி உடைந்து போன இதயங்கள் வாழும் இடம்.நான் செய்தியில் படித்த்து.சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டும் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சராசரியாக நாளொன்றுக்கு ஒரு விவாகரத்து வழக்கு தாக்கல் ஆகியிருக்கிறது இவற்றில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள்.

காதலிக்கும் போது யதார்த்தமாக இருப்பதில்லை.அப்போது காதலனுக்கு காதலியும்,காதலிக்கு காதலனும் தெய்வங்கள்.அல்லது அவற்றிலும் மேலானவர்கள்.அவள் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.ஏன்,உயிரை விட தயார் அவன்!காதல் காலங்களில் உணர்ச்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன்.உணர்ச்சிகள் ஆதிக்கத்தில் இருக்கும்போது மனம் சிந்திப்பதில்லை.
திருமணத்துக்கு முன் அந்த உலகத்தில் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.திருமணத்திற்கு பிறகு,மாமனார்,மாமியார்,நாத்தனார் எல்லாம் இருக்கிறார்கள்.ஆளுக்கொன்று சொல்கிறார்கள்.மனைவி மயக்கத்தில் மகன் தன்னை கவனிக்காமல் விட்டு விடக் கூடாதென்று மருமகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காதலித்தபோது இருந்த்து போலவே கல்யாணத்திற்கு பிறகும் இருப்பது சாத்தியமில்லை.இது அவர்களுக்கு தெரியாது.தெரு முனையில் தன் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்த காதலன் இப்போது சில நிமிட தாமத்த்திற்கு எரிந்து விழுகிறான்.இதை அவள் எதிர்பார்க்கவில்லை.அவனும் அப்ப்டியொன்றும் முக்கியமில்லை என்று நினைக்கிறான்.அக்கா,தங்கை,அம்மா,அப்பா எல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள் .இப்போது அவர்களெல்லாம் முக்கியமாக படுகிறது.காதலிக்கும்போது வீட்டில் இருப்பவர்கள் காணாமல் போயிருந்தார்கள்

இருவருக்கும் திருமணத்திற்குமுன் எதிர்பார்ப்புகள் அதிகமிருந்த்து.அதனால் இப்போது ஏமாற்றமும் அதிகமாகி,வலியும் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.அப்போது வேறு யாரைப் பற்றியும் நினைக்கவில்லை.இப்போது ஒரு சமூகத்தை எதிர்கொள்ளவேண்டும்.கல்யாணத்திற்கு முன்னால் இருவருக்கும் உரிய மன நல ஆலோசனை வழங்குவது சிக்கலை ஓரளவு குறைக்கும்.

தவிர பெண் முன்பு போலில்லை என்றார் ஒரு பெரியவர் விவாகரத்து செய்தியொன்றை படித்துவிட்டு!.உண்மைதான்!கணவனிடம் அடியும்,உதையும் வாங்கிக் கொண்டு சாராயம்,சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளை காரணமாகச் சொல்லியே வாழ்க்கையை தியாகம் செய்த பெண்கள் இன்று இல்லைதான்.

படிப்பும்,வேலையும் பெண்ணுக்கு இன்று சுய மதிப்பை வழங்கியிருக்கிறது.சொந்தக்காலில் நிற்கமுடியும்.பூமி மட்டும் எத்தனை நாளைக்கு பொறுக்கும்? எதன்பொருட்டும் சந்தோஷமில்லாத வாழ்க்கையை ஏன் வாழவேண்டும்?வாழ்க்கை திரும்பவராது!ஜோடி சேர்ந்து நெருப்பில் நின்று கொண்டிருப்பதை விட தனியாக மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால் நல்லதுதான்.

குடும்பம் என்ற நிறுவனம் ஆட்டம் காண்கிறது.இது சமூகத்திற்கு நல்லதில்லைதான்.இப்போதைக்கு வேறெதுவும் செய்ய முடியாது.குழப்பங்களும்,சிக்கல்களும் அதிகரிக்கும்.பின்ன்ர் நாம் சிந்திக்க துவங்குவோம்.காரணத்தைக் கண்டறிவோம்.இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில்தான் குடும்பம் என்று ஒன்று இருந்த்து என்பதை உணர்வோம்.உண்மை தெரியும்போது,உணரும்போது நல்ல மாற்றங்கள் வரும்.

பொறாமை தூண்டி வரும் காதல் நிலைக்குமா?

செல்போன் நிறுவன்ங்கள் காதலர் தினத்துக்கு இலவச குறுஞ்செய்தி சேவை கிடையாது என்று சொல்லிவிட்டன.நஷ்டம் அதிகமாக இருக்கும் என்று அனுபவத்தில் தெரிந்து கொண்ட்துதான்.தீபாவளி,புத்தாண்டு,பொங்கல் போல காதலர்தினமும் முக்கியமாகிவிட்ட்து.அதிக எஸ்.எம்.எஸ் கள் பறப்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.செல்போன் நல்ல,கள்ள காதலையெல்லாம் அதிகப்படுத்துவிட்ட்து

டாஸ்மாக் மது விற்பனையும் காதலர்கள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.கல்லூரி காதல்கள்தான் இவற்றில் அதிகம்.இதில் பெரும்பாலானவை கல்யாணம் வரையெல்லாம் போகாது.இன்பாக்சுவேஷன் என்பார்களே அந்த மாதிரி!தொற்றிக் கொள்வதும் கூட!ஒரு வகுப்பில் காதலர்களாகவே இருப்பார்கள்,இன்னொரு வகுப்பில் இல்லாமலும் இருக்கலாம்.
மனிதன் தோன்றிய காலம் முதல் காதல் இருந்து வருவது தெரிகிறது.சங்க காலத்தில் அகநானூறு இருக்கிறது.பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போவது அப்போதிருந்தே இருந்து வருகிறது.”ஆதலினால் காதல் செய்வீர்’என்றார் பாரதி.கவலை தீரும் என்று வேறு சொல்கிறார்.மனதை சந்தோஷமாக்கி சிலிர்ப்பை தருவது காதல்.காதல்,காமத்தால்மூளையில் சுரக்கும் ரசாயனம் கவலை,இறுக்கம்,மன உளைச்சல் போன்ற்வற்றை போக்கிவிடுகிறது.

வீட்டில் பெற்றோருக்கு காதல் கசப்பாக தோன்ற காரணம்,தங்கள் குழந்தைகளை மனிதர்களாக பார்க்காமல் சொத்தாக பார்ப்பதுதான்.தவிர காதல்கள் தகுதி,அந்தஸ்து எல்லாம் பார்க்காமல் வந்து விடுகிறது.ஏழைப்பையனாகவோ,வேறு சாதியிலோ இருந்தால் சங்கடம்.ஊரில் கேலி பேசுவார்கள்,யாரும் மதிக்க மாட்டார்கள்.இப்போது பார்வை மாறியிருக்கிறது.

சில காதல்களை அருகிருந்து கவனித்திருக்கிறேன்.காதல் என்பதே உணர்ச்சிகளின் விளையாட்டுதான்.அதில் அன்பு,காம்ம் மட்டுமல்லாது,கோபம்,ஆத்திரம்,குற்ற உணர்வு எல்லாவற்றுக்கும் பங்கிருக்கிறது.பொறாமைக்கு முக்கிய இடம் இருப்பதை கவனித் திருக்கிறேன்.என்னை உறுத்தியதும் உண்டு.

காதலன் தன்னையே சுற்றி சுற்றி வரவேண்டும் என்பதற்காகவும்,மேலும் கவனத்தை கோரவும் காதலி இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பழகுவதுபோல காட்டிக் கொள்வது!அதே போல காதலனும் இன்னொரு பெண்ணுடன்! இந்த உத்தி சிறப்பாக வேலை செய்வதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.அவனுடன் பேசாதே,அவளுடன் பேசாதே என்பதெல்லாம் தாவிவிடுவார்களோ என்ற கலக்கத்தில்தான்.

எனக்கென்னவோ இது சரியாக படவில்லை.நீ, நீ மட்டும்தான் என்பதுதானே காதல்.பிளாக்மெயில் செய்து வரும் காதல் பிரச்சினையை உருவாக்கும்.தன்னை விட்டு விட்டு வேறொருவருக்கு தாவிவிடுவார்களோ என்ற எண்ணத்துடனே இருப்பது அப்போதைக்கு நெருக்கத்தை அதிகரித்தாலும் பின்னாளில் பிரச்சனையை உருவாக்கும்.

ஒரு வேளை இருவருக்கும் திருமணமாகி விட்டால் பிளாக்மெயில் காதலர் மீது சந்தேகம் தோன்றுவது –நம்மை விட்டு விட்டு வேறு யாரையாவது?-தவிர்க்க முடியாது போகலாம்.சந்தேகம் சூறாவளியாகி சந்தோஷத்தை அடித்துக் கொண்டு போய்விடும்.காதல் வாழ்க!மேலதிக விபரங்களுக்கு எனது நேற்றைய இடுகையை பார்க்கவும்