Tuesday, July 5, 2011

போலியான முகவரியில் மெயில் அனுப்புவது எப்படி?








போலியான இமெயில் அனுப்புவதற்கு இவ் http://124112.info/anon/இணையத்தளம் உதவுகின்றது.

இத்தளத்திற்கு சென்று இமெயில் அனுப்ப வேண்டியவரின் இமெயில் முகவரியையும் யார் அனுப்புகின்றார் என்பதில் போலியான இமெளில் முகவரியையும் வழங்கினால் நாம்

கொடுத்த போலியான இமெயில் முகவரியில் இருந்து அனுப்பப்படுவது போல் குறிப்பிட் நபருக்கு இவ் இமெயில் செல்லும். எனினும் யார் இவ் இமெயிலினை அனுப்புகின்றார் என IP முகவரியினைக் கொண்டு கண்டுபிடிக்கமுடியும். IP முகவரியினையும் கண்டுபிடிப்பதை தவிர்ப்பதற்கு IP முகவரியினை மறைப்பதற்கான மென்பொருளை உபயோகிக்கலாம். http://murugananda.blogspot.com/2011/06/ip-addres-hack.html

பேஸ்புக்’ கின் வீடியோ செட்டிங் : புதன் வெளியீடு.

சமூகவலையமைப்பான ‘பேஸ்புக்’ எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

 

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.

‘பேஸ்புக்’ தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், ‘ஸ்கைப் ‘ 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. ‘ஸ்கைப்’பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேமாதம் கொள்வனவு செய்திருந்தது.
இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் ‘கூகுள் +’ என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது.இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூகுளின் புதிய வசதி GOOGLE PLUS

கடந்த வாரம் இணைய உலகம் பரபரப்பானதுக்கு காரணம் கூகுள் பிளஸ்தான் என்றால் மிகையில்லை.


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம்மொன்றை உருவாக்கி மட்டுபடுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு பரிசோதனைக்காக உபயோகத்திற்கு விட்டது கூகுள்.

கூகுள் பிளஸ் பற்றிய சில தகவல்கள் இங்கே

சமூக வலை பேஸ்புக் தளத்திற்கு சிறந்த மாற்றீடாக இது அமையுமாம்.

இலகுவாக அனைத்து நண்பர்களுடனும் இணைப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் + பேஸ்புக் போன்று நியூஸ் பீட்ஸ் புரோபைல் படங்கள் போன்றவற்றை தந்தாலும், எல்லா நண்பர்களும் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை.பேஸ்புக் பிரபலமாக ஆக பிரைவசி தொடர்பில் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கியது. ஆனால் பிரைவசி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கின்றதாம் கூகுள் +.......

கூகுள் பிளஸ் பற்றிய ஏனைய விபரங்களை வலைப்பதிவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்.
கூகிள் ப்ளஸ் என்றால் என்ன?
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.

என்னென்ன வசதிகள்?

ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.


இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

கூகிளின் இந்த அறிமுகம் சாதனை படைக்குமா? அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் விபரங்கள் இங்கே.......

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?

தமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது 
 
அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.

மணிரத்னம் (பிறப்பு ஜூன்-௦2-1956)
 
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில்  எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.
மஹா பாரத    கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே  என்ற அருமையான  காதல்  கதையையும்  வெற்றிகரமாக  கொடுத்தவர்  .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர்  .அதிலும் ரோஜாவுக்கு  முதல்  வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்

என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய்  எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக    தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
 
ஷங்கர் (1963.08.13)

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பிரமாண்டம் என்ற சொல்லின் வரைவிலக்கணமாக திகழ்பவர் .இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் .
 
S.A.சந்திர சேகரிடம்  உதவி இயக்குனராய் பனி புரிந்த இவர் 1993  இல் ஜென்டில்மேன் என்ற படத்துடன்  இயக்கினராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் உயர் தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் இவரே .படத்துக்கு  படம் வித்தியாசமான நுட்பங்களை செய்து வருகிறார்.படங்களை அதிக செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுப்பது இவரின் தனி சிறப்பு .
இவர்  இயக்கிய  படங்கள்   
1993- ஜென்ட்லேமன்
1994- காதலன்
1996-இந்தியன் 
1998-ஜீன்ஸ்
1999-முதல்வன்
2001-நாயக் (ஹிந்தி)
2003-பாய்ஸ்
2005-அந்நியன் 
2007-சிவாஜி
2010-எந்திரன்
2011-நண்பன் (படப் பிடிப்பில்)
ஷங்கரின் பெரும்பாலான படங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளன .இவரின் படங்களில் சமூக மாற்ற கருத்துக்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும் .இந்தியன் ,முதல்வன் என்பன என்னை கவர்ந்த படங்களாகும் .
 
.இவரின் பாய்ஸ், ஜீன்ஸ் படங்கள் தோல்வி அடைந்தன. 
 
ஷங்கரின் மதிப்பு வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது .
இவரின் கடைசிப் படமான எந்திரன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா அளவில் அதிக செலவில் எடுக்கப் பட்டு இந்திய அளவிலேயே அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.தமிழ்சினிமாவின் இயக்குனர் இமயமான K.பாலச்சந்தர் எந்திரனை இந்தியாவின் அவதார் எனவும் ஷங்கரை இந்தியாவின் கமரூன் என வர்ணித்ததில் இருந்து ஷங்கரின் திறமையை அறியலாம். எந்திரன் படத்தின் மூலம் உலக அளவில் பாரட்டுக்களை அள்ளிகுவித்துள்ளர். 
தற்போது முதற் தடவையாக ரீமேக் படம் ஒன்றை (நண்பன் )எடுத்து வருகிறார் .நண்பன் மிக குறைந்த நாட்களில் படப்பிடிக்கப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பின்னர் எந்திரன் -2  எடுக்கலாம்  என செய்தி  அடிபடுகிறது .

A.R.முருகதாஸ்  
தமிழில் இதுவரை மூன்று படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் முருகதாஸ் .அஜீத்குமாருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் தீனா. முதல் படத்தையே அசத்தலாக கொடுத்திருந்தார் முருகதாஸ் .தல என்று அஜித்தை அழைக்கும் வழக்கம் இந்த படத்தாலேயே ஏற்பட்டது .அடுத்து கப்டனை வைத்து ரமணா என்ற படத்தை கொடுத்தார் .புரட்சிகரமான கருத்துக்களை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் .படம் பெரு வெற்றி பெற்றது .அடுத்து சூர்யாவை வைத்து வித்தியாசமான கதையுடன் (short time memory) கஜினி படத்தை எடுத்தார்     .கஜினி  திரைப்படம்   மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார் .memento (2000) என்ற  ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் கஜினி என்றாலும் அதை சிறந்த முறையில் படமாக்கி வெற்றி பெற செய்தார் .பின் ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தை எடுத்தார். அமீர்  கான் நடிக்க ஹிந்தியில் தனது கஜினியை ரீமேக் செய்தார் கஜினி அதுவரை வெளியாகிய ஹிந்தி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது (பின்னர் வந்த படங்கள் அந்த சாதனையை முறியடித்து விட்டன) .இந்த வெற்றியின் பின் இந்திய அளவில் பேசப்படும்  முன்னணி இயக்குனர் ஆனார் .

தற்போது ஏழாம் அறிவு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் மீதான எதிர் பார்ப்பு எகிறியுள்ளது .வரலாற்று கதையை உயர் தொழினுட்பங்களை கொண்டு இயக்குகிறார் .   இந்த படமும் வெற்றி பெற்றால் எங்கேயோ போய்விடுவார் .இது முடிய விஜயை வைத்து படம் எடுக்கவிருப்பதாக அறிய வருகிறது. 

அடுத்த  பதிவில்  கௌதம், பாலா ஆகிய இயக்குனர்களை  பற்றி  பார்க்கலாம்

ட்ரைவர் அப்டேட்

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய ஏற்கனவே என்னுடைய வலைப்பூவிலேயே இரண்டு மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மற்றுமொரு ட்ரைவர் அப்டேட் மென்பொருள் உங்களுக்காக Smart Driver Updater இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக்கொள்ள முடியும். மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.



பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணினியில் அப்டேட் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பேக்அப் செய்து கொள்ளவும் முடியும்.


இந்த மென்பொருள் மூலம் பேக்அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.

மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.
இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன்.

அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது.

இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது.

I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby

இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது.

இணையத்தில் உங்கள் IP முகவரியினை எப்படி மறைப்பது?

நமக்கு பெயர் உள்ளதைப் போல நாம் உபயோகிக்கும் கணனிகளுக்கும் தனித்தனி பெயர் உண்டு. அதுதான் IP முகவரி. இவ IP Addressக் கொண்டு இவ் இணைய பாவனையாளர் எங்கிருந்து இணையத்தைபயன்னடுத்துகின்றார் என மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
 நமது முகவரியினை மற்றவர் பார்க்காத, கண்டுபிடிக்காத போல இயங்க வேண்டும் எனில் அதற்கும் வழி உண்டு. நாம் புரக்சி சேவரினை Proxy Server உபயோகித்து இணையத்தை பயன்படுத்துவோமாயின் நாம் எங்கிருக்கின்றோம் என்பதனை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். சரி இனி புரக்சி சேவரினை எவ்வாறு பயன்படுத்துவது எனப் பார்பபோம்.
புரக்சி சேவரினை டவுன்லோட் பண்னி இன்ரோல் பண்னிக் கொள்ளவும்.
nstall பண்னிய பின் உங்களது IP முகவரி மறைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படின். புரக்சி சேவரினை கிளிக் செய்து கனக்ட் (Connect)பண்ணவும். கனக் ஆனவுடன் எங்கள் உண்மையான முகவரி மாற்றமடைந்திருக்கும்.
உங்கள் IP முகவரியை பார்க்க http://www.ipaddresslocation.org/ இவ் இணையத்தளத்திற்கு சென்று நிங்கள் பாக்கலாம்.