1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும். மேலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்திலிருன்து தமிழுக்கு நொடிகளில் மொழி பெயர்க்கும் சாஃப்ட் வேரை தயாரித்தாக வேண்டும்.
2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அலட்சியத்தை காட்டிலும் எமன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்படி செய்ய வேண்டும். எங்கள் ஊரில் மக்கள் தெலுங்கு படிச்சா உடனே வேலை (?) என்ற பிரமையில் தங்கள் வாரிசுகளை தெலுங்கில் போட ஆரம்பித்தார்கள். இப்போ நிறைய பள்ளிகளில் தமிழ் செக்ஷனே மூடப்பட்டு வருகிறது
3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.
4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிகள் எத்தனை எளிமையாக இருந்தால் அத்தனை பேர் அதை பின்பற்ற விரும்புவார்கள்.5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை மட்டுமே தொடர்பு மொழியாக உபயோகிக்கப் பட வேண்டும். பொறுக்கி என்ற பெயர் தமிழ் பெயர் என்பதற்காக ஒரு திரைப்படத்துக்கே வரி விலக்கு வழங்கும் போது தமிழை தொடர்பு மொழியாக கொண்ட நிறுவனத்துக்கு தருவதில் தவறே இல்லை.
6.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது..எனவே மழலையர் வகுப்பிலிருந்தே தமிழ் கட்டாயமாக்கப் பட வேண்டும். மொழி என்பது வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு ஆயுதமாக,உணவைப் பெற்றுத்தரும் தூண்டிலாக செயலாற்றும் சூழல் அரசு நிர்வாகம்,நிதி அமைப்புகள், வியாபாரம், சமூகம்,அரசியலில் ஏற்படுத்தப் படவேண்டும்.
7.தமிழில் நாளிதுவரை எழுதப்பட்ட படைப்புகள் அனைத்திலும் தேடி படிப்பதற்கான டேட்டா பேஸ் ஒன்று ஏற்படுத்த வேண்டும்.
8.தமிழில் உள்ள ஞான செல்வத்தை உடல் நலம்,நிதி நிர்வாகம்,நீதி நிர்வாகம், இப்படி தலைப்பு வாரியாக தேடி,படித்து மகிழவும் வழி வகை செய்ய வேண்டும்.
9.இதற்காக குளோபல் டெண்டர் அழைத்து அரசு சாரா அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலையங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அதன் பொறுப்பில் விடலாம். இதற்கான நிதியாதாரத்தை பல வகைகளில் ஏற்படுத்தலாம். (உ.ம் ) தனித் தமிழை காற்றில் விட்டு சகட்டு மேனிக்கு கலப்படம் செய்யும் பெரிய மனிதர்கள்,பத்திரிக்கைகள்,அரசுத் துறைகள்,தனியார் நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம்
10.குறிப்பிட்ட காலத்துக்கு அரசு விளம்பரங்களை இதர பத்திரிக்கைகளில் வெளியிட சுயதடை விதித்துக் கொண்டு முன்னர் கூறிய அரசு சாரா நிர்வாகத்தின் கீழ் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டும் வெளியிட்டாலே போதும். அந்த பத்திரிக்கையை சில காலத்திற்கு அரசு பள்ளிகள்,ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வினியோகிக்க வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலத்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் நல்லதே..
11. உலகெங்கிலும் வாழும் எந்த தமிழனும் ட்யூட்டர் கிடைக்கவில்லை என்று தன் வாரிசை வேறு மொழியில் பயிற்றுவிக்க கூடாது

|
No comments:
Post a Comment