Thursday, June 23, 2011

அடுத்த நித்யானந்தா !!!


கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர். 
நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?
மீண்டும் படபடப்பாக பேச ஆரம்பிக்கிறார் அவர்.
"பேஸ்புக் வந்த பிறகு புதிய நட்புகளை ஏற்படுதிக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் மிக கவனமாக நட்புகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன். கவிதைகளை தொடக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். விருப்பத் தேர்வுகளாக சிலரிடம் இருந்து கருத்துக்கள் வந்த போது மகிழ்சியாக இருந்தது. எனது கவிதை ஒன்று ஓர் வார இதழில் வெளிவந்த போது கவிதைகள் எழுதும் ஆர்வமும் தீவிரமானது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட இருக்கிறார்கள் என்று முகவரிகளை கொடுத்தார். சில எழுத்தாளர்கள் தளத்தில் வாசகியாக இணைந்து கொண்டேன். அப்படித்தான் சாரு நிவேதிதா வாசகர் குழுவில் இணைந்தேன். ஆனால் சாருநிவேதிதா படைப்புகள் எதையும் நான் வாசித்திருக்கவில்லை. இணையம் மூலமாகவே அவருடைய பெயர் பரிச்சியம் ஏற்பட்ட பின் அவரது வாசகர் வட்டத்தில் இணைந்தேன்.

முதன் முறையாக அவருடன் சாட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தொடக்க நிலையில் மரியாதையாகத் தான் பேசினார். சில நாட்களுக்கு பின் அவருடைய புத்தகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரிடம், "உங்கள் புத்தகம் எதையும் வாசித்ததில்லை" என்றேன். உடனே அவருடைய இணையதள முகவரியை கொடுத்தார். வீட்டு முகவரி கொடுத்தால் புத்தகம் அனுப்புவதாக கூறினார். சிறிது தயக்கமாய் இருந்தாலும் பிரபலமான ஒருவர் கேட்கிறாரே என்று வீட்டு விலாசத்தை கொடுத்தேன். கூடிய சீக்கிரம் புத்தகம் அனுப்புவதாக கூறினார். மேலும் சில நாட்களுக்கு பின் மிக உரிமையாக பேச ஆரம்பித்தார். 'செல்லம்', 'கண்ணு', 'புஜ்ஜி', 'வாடா', 'போடா' என ஆரம்பித்த போது மிகுந்த சங்கடமாக எனக்கு இருந்தாலும் எனது அப்பா வயதுடையவராக கருதியதால் ஏதோ அன்பாக பேசுகிறார் என்று பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சில நாட்களில் எனது கவிதைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். அதனால் மேலும் நான் எழுதி இருந்த கவிதைகளை ஆர்வமாக அவருக்கு அனுப்பினேன். வாசித்துவிட்டு அருமையாக இருப்பதாக பாராட்டினார். என்னை குறித்து அவரது தளத்திலும் ஓர் கட்டுரை எழுதினார். இதன் தாக்கம் பின்னாலில் எப்படி இருக்கும் என்பதை அப்போது நான் உணரவில்லை.
அதற்கு பின் அவரோடு சாட் செய்த போது ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேச ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் பயந்தேன். என்னுடைய சுபாவம் எனக்கு எடுத்தெரிந்து பேசும் தைரியத்தை கொடுக்கவில்லை. ஆனால் சில நண்பர்களிடம் இது குறித்து கூறினேன். பிறகுதான் சாருவின் படைப்புகள் குறித்தும் அவருடைய நடத்தைகள் குறித்தும் சில நண்பர்கள் எச்சரிக்கை செய்தார்கள். நான் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றியது. மேலும் சாரு நிவேதிதாவின் வாசகர் பேஜ் பக்கத்தில் நடக்கும் விவாதங்கள் ஆபாசமானதாகவும் இருந்ததால் இதில் இருந்து விலகி விட வேண்டும் என்று தோன்றியது. அதனால் சாட் மற்றும் வாசகர் வட்டத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். இத்தோடு சாருவும் நிறுத்தி இருந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் பகுதியில் என்னை குறித்து நேரடியாக எழுதிய சில கருத்துக்களால் மனவுளைச்சல் ஏற்பட்டது. அவருடைய சில வாசகர்களும் மறைமுகமாய் என்னை தாக்கி எழுதினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இணையத் தொடர்புகளில் இருந்து விலகி விடலாமா? என்று தோன்றியது.
சாரு வாசகர்களின் மறைமுகத் தாக்குதல்களையும் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சில நண்பர்கள், 'இத்தோடு விட்டுவிடு. பிரச்சனையை வெளியே சொல்லாதே' என்கிறார்கள். என்னால் முடியவில்லை. ஏன் இப்படி?  நான் என்ன தவறு செய்தேன்? எந்த குற்றமும் செய்யாத நான் ஏன் குற்றவுணர்ச்சியோடு இருக்க வேண்டும்.  இதற்கான பதில் தான் தற்போதைய தேடலாய் எனக்குள் இருக்கிறது. இனி நான் என்ன செய்வது? நீங்களே கூறுங்கள்" என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக சாருவுடன் செய்த சாட் அனைத்தையும் நிதானமாய் வாசித்தோம்.
மே மாதம் 22.05.2011- இல் சாட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாசகர்களில் ஒருவர் என்ற அறிமுகத்துடன் பெண் பதிவரின் அறிமுகம் செல்கிறது. சில நாட்கள் சாதாரண நலன் விசாரிப்புகளுடனே சாட் தகவல்கள் உள்ளன. மே 31-இல் சாருவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. 'நீங்கள்' என்கிற வார்த்தையில் இருந்து டா, செல்லம், கண்ணு போன்ற சொல்லாடல்களை உபயோகித்திருக்கிறார். உரையாடலில் பெண் பதிவரின் சங்கடப்படும் தொனிகள் தென்படுகின்றன. அதன் பின் ஜீன் 02.06.2011 அன்று நடைபெற்ற சாட்டில், "கனிமொழியிடம் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்) இருந்த காதலுக்கு பின் இப்போதுதான் உன்னைப் பார்க்கும் போது காதல் வருகிறது என்று குறிப்பிடுகிறார். அப்போது இப்பெண் பதிவரின் பதிலில் அதிருப்தியை பார்க்கிறோம். தன்னை வாசகியாகவே முன்னிருத்தி உரையாடலை முடிக்கிறார். அதற்கு பின் ஜீன் 12.06.2011 அன்று நடைப்பெற்ற சாட் உரையாடலில் சாரு மிக மோசமான பாலியல் கிளர்ச்சி வார்த்தைகளை உபயோகித்தது காணப்படுகிறது. அதில் சில வாசகர்களின் பார்வைக்கு.
Dim lights Embed 
இவ்உரையாடலின் போதே தனது நண்பர்கள் பட்டிலில் இருந்து சாருவை நீக்கியதோடு வாசகர் குழுவில் இருந்தும் நீங்கிக் கொள்கிறார். ஆனால் சாரு அதே தேதியில் (ஜூன் 12) தனது வாசகர் பக்கத்தில் இப்பெண்ணை கேவலப்படுத்தி ஆண்மையத் திமிரோடு எழுதுகிறார்.

charu_comment_on_xxx
மேற்குறிப்பிட்ட சாருவின் அயோக்கியத்தனமான பதிலை பாருங்கள். 23 நாட்கள் வாசகர் வட்டத்தில் இணைந்து, 13 முறை சாட் செய்து பேசிய பெண்ணை, 'தனது நோக்கத்திற்கு இணங்கவில்லை என்றதும், அவள் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டாள் என்பதை அறிந்ததும் சாட்டுக்குள் நடத்திய ரவுசுளை மறந்துவிட்டு, யோக்கியவான் பொங்கி எழுந்து வாசகர்கள் மத்தியில் 'போதனை' செய்கிறார். இந்த அயோக்கியனின் யோக்கியதை 'மைனர் குஞ்சு' ரேஞ்சுக்கு இருக்க, பாதிக்கப்பட்ட பெண் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதும், இணையத்தில் இருந்து விலகிக் கொள்வதும்தான் நியாயமான செயலா? வாசகியாக அறிமுகமாகும் பெண்களிடம் சாட்டுக்குள்ளும், போனிலும் 'காமரசம்' போதிப்பதும், பாலியல் கிளர்ச்சியில் உளறுவதும்தான் சாருவின் யோக்கியதை என்றால் சாருவின் வாசகர்கள் அந்த கருமத்தை நியாயப்படுத்த முயல்வீர்களா?
இச் சம்பவத்தை முன்வைத்து சாருவுக்காக வக்காலத்து வாங்க வருபவர்கள் தங்கள் அம்மா, மனைவி, மகள்களை சாருவின் ஆன்லைனில் விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு இங்கே வாருங்கள்! காத்திருக்கிறோம்!

No comments:

Post a Comment