எல்லோருமே மனம் நிரம்பி வழியும் கவலைகளோடு உலாவுகிறோம். யாராவது நம்மைக் காது கொடுத்து கேட்டாலே மனது திறந்து விடுகிறது. இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் கூடப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்று சொல்லும் நேரங்களில் எல்லாம் நாம்தான் அதிகம் பேசியிருப்போம். எதிராளி கேட்டுக் கொண்டிருந்திருப்பார்.
கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.
பேசுபவரின் பொருளில் மனதை ஊன்றிக் கொள்ள வேண்டும். அவரது அனுபவத்தில் நாமும் மூழ்கிப் போய் அவரது உணர்வுகளை அனுபவிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் பேச ஆரம்பித்ததுமே, நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதிலேயே மூழ்கியிருக்கிறோமே ஒழிய அவரது பேச்சில் கவனம் இருப்பதில்லை.
|
//அப்படிக் காதையும் மனதையும் கொடுத்து எதிர் தரப்பின் எண்ணங்களைக் கேட்டு விட்டாலே உறவுக்கான அடித்தளம் அமைந்து விடுகிறது//
ReplyDeleteநிதர்சனமான உண்மை