Saturday, May 7, 2011

ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

மரித்துக்கொண்டிருக்கும் அரக்கனுக்கு CPR கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களாகத் தான் ஆப்பிள், பேஸ்புக், இண்டெல், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களைக் காண்கின்றேன்.தொழிற்சாலைகளெல்லாம் சைனாவுக்கும், பிறவேலைகளெல்லாம் BRIC-க்கும் போன பிறகும் இன்னும் அமெரிக்காவை ஜீவனோடு வைத்திருப்பது இது போன்ற இன்னோவேசன் தரும் நிறுவனங்களே.இந்த இன்னோ வேலைகளில் பெரும் பங்களிப்பு நம் ஊர்காரர்களுக்கும் இருக்கின்றது என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை.சமீபத்தில்கூட கூகிள் 25 மில்லியன்கள் கொடுத்து வாங்கிய PushLife.com-என்ற தளத்துக்கு சொந்தக்காரர் ஒரு இந்தியர்.ரே ரெட்டி பெயராம்(Ray Reddy).இவர் உருவாக்கிய PushLife என்ற மென்பொருள் கைப்பேசி டு கணினிக்கு பாடல்களை கடத்த/கையாள உதவுகின்றது. சீக்கிரத்தில் இதற்கு கூகிள் பெயிண்ட் அடிக்கப்பட்டு மார்கெட்டில் உலாத்தவிடப்படும். நாமெல்லாரும் பயன்படுத்துவோம்.

அது மாதிரியே ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?. இந்த Slingbox கொண்டு உங்கள் லிவிங் ஹால் டிவியை iPad,iPhone,iPod touch, Android, Windows Phone,BlackBerry,Palm OS,Symbian OS கைப்பேசியின் வழி எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம் Wi-Fi அல்லது 3G துணையோடு. இதை உருவாக்கிய Sling Media, Inc என்ற நிறுவனத்தை நிறுவியதும் ஷா,ரகு என்னும் இந்தியர்கள் தானாம்.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 
Read more »

No comments:

Post a Comment