திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம், திருமணமான 3000 ஆண், பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:
திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம்1 நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் 6 பேர் தெரிவித்தனர்
.தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும்,புத்திசாலியாகவும், இரக்க குணத்துடனும், ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதேசமயம், எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.
அதே இடம், அதே பெட், அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் 8 பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல்2 பேர் கூறியுள்ளனர்
|
No comments:
Post a Comment