Wednesday, March 23, 2011

ஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi

தமிழக நிறுவனமான ஏர்செல் புதிய சேவையாக வயர்லெஸ் இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வயர்லெஸ் என்பது எந்த வயர் தொல்லையின்றி இணையத்தைப் பயன்படுத்துவது ஆகும். நாட்டின் எந்தவொரு இடத்திலும் 512 Kbps வேகமுள்ள பிராண்ட்பேண்ட் இணைய சேவையை இந்த வசதியின் மூலம் பெற முடியும். நகரின் முக்கிய இடங்களில் ஏர்செல் நிறுவியுள்ள பிராண்ட்பேண்ட் சேவையினை வயர்லெஸ் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும். இந்த வசதியினை Smartphones, laptops, tablet pc, netbooks போன்ற கருவிகளில் ஏர்செல்லின் wi-fi Hotspot கள் இருக்குமிடத்தில் மட்டுமே பெறமுடியும்.

GPRS வசதியெனில் நம்மிடம் சிம் இருக்க வேண்டும். அதைப்போலவே ஏர்செல்லின் Poket Internet க்கும் சிம் தேவை. ஆனால் சிம் இல்லாமல் இவற்றை விட அதிக வேகத்தில் செயல்படக்கூடியது Wi-fi ஆகும். இந்த சேவை தற்போது சென்னை நகரில் குறிப்பிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


Aircel Wi-fi ஐப் பெறுவது எப்படி?

1.உங்கள் லேப்டாப்பில் அல்லது போனில் வயர்லெஸ் சேவையை
ஆன் செய்து கொள்ளவும்.
2.View Available wireless networks என்பதை டாஸ்க் பாரில் கிளிக் செய்து வரும் விண்டோவில் Refresh செய்து பார்க்கவும்.
3.ஏர்செல்லின் சேவையிருந்தால் ”AIRCEL_SPECTRANET” என்ற பெயரில் தோன்றும். அதைக் கிளிக் செய்து Connect செய்யவும்.
4.பின்னர் உங்கள் வலை உலவிக்குச் சென்று www.google.com என்று தட்டச்சிட்டால் இந்த இணைய சேவையைப் பயன்படுத்த புதிய பயனராக Sign up செய்வதற்கான பக்கம் வரும்.
5. உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கவும். பின்னர் உங்களுக்கான கடவுச்சொல் SMS மூலம் மொபைல் எண்ணுக்கு அனுப்பப் படும்.
6. கிடைத்த கடவுச்சொல்லை வலைப்பக்கத்தில் அடித்து Submit செய்தால் உங்கள் மொபைலிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு வயர்லெஸ் இணைய சேவையை பயன்படுத்த முடியும்.



கட்டணங்கள் :

ஏர்செல் அறிமுக வசதியாக இதனை மார்ச் 31 வரை இலவசமாக இந்த வசதியினைப் பெற்றுக் கொள்ள குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ருபாய் 15 வீதம் வயர்லெஸ் சேவையைப் பெற முடியும். இதற்கான கட்டணம் உங்கள் மொபைலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். மொபைலில் போதிய அளவு பணமில்லை என்றால் இந்த வசதியினைப் பெற முடியாது. தரவிறக்க அளவு 30 Mb ஆகும். இதற்கு மேல் தரவிறக்க வேண்டுமெனில் திரும்பவும் 15 ருபாய் கட்டணத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment