Monday, January 31, 2011

குருவிகளின் நகரம்.

குருவி பற்றி ஏகப்பட்ட திரைப்பட பாடல்கள் வந்துள்ளது. படமும் வந்துள்ளது.விளையாட்டும் பல உள்ளது. அதில் அருமையாக உள்ள விளையாட்டு ஒன்றை இன்று பார்க்கலாம். 80 எம்.பி. கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நமது பெயரை தட்டச்சு செய்யவும்.பிளே கொடுக்கவும்.
குருவிகள் கலர் கலராக வரிசையாக வரும். அதில் கீழே சின்ன தொட்டியில் கலர்கலராக குருவிகள் வரும். அவ்வாறு வரிசையில் வருகின்ற குருவிகளில் நமது தொட்டியில் உள்ள குருவி எந்த நிறமோ அந்த நிற குருவியுடன் சேர்க்கவும்.மூன்று குருவிகள் சேர்ந்ததும் பறந்து சென்றுவிடும்

 அடுத்தடுத்த நிறங்கள் ஒன்று சேர்ந்தால் நமக்கு கூடுதல் பாயிண்ட்கள் கிடைக்கும்.
 வரிசையாக வரும் குருவியின் பாதையின் முடிவில் பூனையின் குகை இருக்கும்.தெரியாத தனமாக ஒரு குருவி உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து குருவிகளையும் கடகடவென பூனை சாப்பிட்டுவிடும்.அதனால் பூனை சாப்பிடாமல் கவனமாக விளையாடவேண்டும்.
இவ்வாறாக ஒவ்வொரு நிலையாக போய்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும் பாதைகள் வெவ்வேறாக இருக்கும்.விளையாடி பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்

Friday, January 28, 2011

Hard disk-இல் இருந்து DELETE செய்யப்பட்ட கோப்புகளை RECOVER செய்ய


தீடிரென நம்மை அறியாமலையே கணினியில் இருந்து கோப்புகளை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும் எந்த ஒரு பைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த கோப்பினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம் ஆனால் அந்த நேரத்தில் சரியான வழிமுறைகள் எதுவும் கிடைக்காது, அதுபோன்ற நிலையில் நம்முடைய கோப்புகளை இழக்க நேரிடும் அவ்வாறு இல்லாமல் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க அருமையான மென்பொருள் உள்ளது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


நீங்கள் எந்த ட்ரைவில் இருந்து கோப்பினை டெலிட் செய்தீர்களோ அதனை தேர்வு செய்து Scan என்னும் பட்டியை தேர்வு செய்யவும். நீங்கள் டெலிட் செய்யப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்பினை தேர்வு செய்து Undelete என்னும் பட்டியை அழுத்தவும் இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கும்.

இழந்த கோப்பானது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. இவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

E-MAIL-களில் உள்ள ATTACHMENT-களை மட்டும் தனியே DOWNLOAD செய்ய


தற்போதைய நிலையில் ஈ-மெயில் சேவையினை பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகிறன. அவற்றில் ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில், போன்ற  நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். நாம் சாதரணமாக ஈ-மெயில் அனுப்பினாலும் கூடவே ஒரு அட்டாச்மெண்ட் பைலை சேர்த்தே அனுப்புவோம். அது நலம் விசாரிக்கும் ஈ-மெயிலாக இருந்தாலும் சரி, முக்கியமான அலுவல்களாக இருந்தாலும் சரி அட்டாச்மெண்ட் என்பது முன்பெல்லாம் முக்கியமான செயலுக்காக மட்டுமே அனுப்பபடும், ஆனால் தற்போதைய நிலையில் எந்த ஒரு ஈ-மெயிலாக இருப்பினும் கூடவே சேர்ந்து ஒரு அட்டாச்மெண்ட் பைல் அனுப்பபடுகிறது.  ஈ-மெயில் அனுப்பும் போது அதனுடன் சேர்ந்து அட்டாச்மெண்ட் பைல்களாக போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், போன்ற பல பைல்களும் ஈ-மெயில் மூலமாக பரிமாற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு ஈ-மெயிலுடன் சேர்ந்துவரும் அட்டாச்மெண்ட் பைல்களை தனியே பதிவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அதுதான் Mail Attachment Downloader.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.பின் Start > Programs > GearMage > Mail Attachment Downloader என்பதை தேர்வு செய்து Mail Attachment Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் ஈ-மெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு எந்த இடத்தில் அட்டாமெண்ட்கள் பதிவாக வேண்டும் என்பதை குறிப்பிட்டுவிட்டு, Connect and Download என்ற பட்டனை அழுத்தி பதிவிறக்கி கொள்ள முடியும்.


 இந்த மென்பொருளின் சிறப்பம்சமாக உங்களுக்கு வேண்டிய பைல்களை மட்டும் தனியே தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் உள்ள வேண்டிய அட்டாச்மெண்ட்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதுபோன்ற பல்வேறு விதமான சிறப்பம்சங்களை இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது. ஈ-மெயில் அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய இது ஒரு அருமையான வாய்ப்பாகும்

இண்டநெட் இணைப்பில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டு சரிசெய்ய


இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.


மென்பொருளை தரவிறக்க: சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின்  (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.

தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நெட் இல்லாமல் ஜீமெயில் பார்க்கலாம்....




முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்offline - enable கொடுத்து save செய்யவும்.

பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.

ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.


உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .

இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம். 

ஜிமெயிலில் திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்ளன என்பதை அறிய


ஈ-மெயிலில் அதிகமான சேவையினை வழங்கி வருவது கூகிள் நிறுவனம் ஆகும். கூகிள் நிறுவனத்துடைய ஈ-மெயில் சேவையான ஜிமெயில் மூலமாக அவ்வபோது கூகிள் நிறுவனம் புதுப்புது சேவைகளை வழங்கி வருகிறது, அதை போல அண்மையில் கூகிள் நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது, இதன் மூலம் நம்முடைய அட்ரஸ்பாரில் உள்ள Favicon ஐகானிலேயே திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக நாம் வேறு தளத்தில் உலவும்போது நம்முடைய ஈ-மெயிலுக்கு புதியதாக ஈ-மெயில்கள் வந்தால் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.


இந்த சேவையினை உங்களுடைய ஈ-மெயிலில் இணைத்துக்கொள்ள முதலில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொலைக் கொடுத்து உள் நுழையவும். பின் Setting என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின் அதில் Labs பட்டியினை தேர்வு செய்யவும். அதில் Unread message icon என்னும் Labsயை  எனேபிள் செய்யவும். பின் Save Change என்னும் பட்டியை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும். 


இப்போது ஜிமெயிலானது மறுதொடக்கம் ஆகும், இப்போது பார்த்தால் உங்களுடைய அட்ரஸ்பாரில் உள்ள  Favicon ஐகானில் எத்தனை ஈ-மெயில்கள் திறக்கப்படாமல் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும்.


இப்போது எத்தனை ஈ-மெயில்கள் திறக்கப்படாமல் உள்ளது, என்பதை உங்களுடைய ஈ-மெயில் திறக்கப்பட்ட அட்ரஸ்பாரிலும், டேப் ஐகானிலும் காண முடியும்.

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்


தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப் பெற்றெடுத்த மாக்சு முல்லரே அதைக் கைவிட்டுவிட்டார். (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், origin And spread of Tamils) இன்றுவரை ஆரியர்களுக்குரியதாக ஒரேயோர் அகழ்வாய்வுக் களம்கூடக் கிடைக்கவில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசின்கீழ் சிந்து சமவெளி வந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் அதனைக் கைப்பற்றினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை அவர்களுடைய அரசியற் செல்வாக்கு அம்மண்டலத்தில் நிலவியது. இந்தக் கட்டத்தில்தான் சமற்கிருத மொழி உருவாகி வளம் பெற்றது. வட இந்தியப் பண்பாடும் உருவம் பெற்றது. இதுதான் சமற்கிருதத்தில் ஐரோப்பிய மொழிகளின் சில சொற்கள் இடம் பெற்ற பின்னணி.

ஆரிய இனக் கோட்பாடு கைவிடப்பட்டால் தமிழர் வரலாற்றிலுள்ள பல குழப்பங்கள் விலகும்.

தொல்காப்பியத்திற் கூறப்படும் வருணனும் இந்திரனும் வேதங்களிலும் கூறப்படுகின்றனர். சோழர்களுக்கும் இந்திரனுக்கும் உள்ள நெருக்கமான உறவும் பாண்டியர்களுக்கு அவனிடமுள்ள பகையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இந்திரனும் வெள்ளையானையும் கரும்பும் இந்தோனேசியத் தீவுகளுடன் தொடர்புடையவை எனக் கூறுவர். அத்தீவுக் கூட்டங்கள் சுமத்ரா(நன்மதுரை -மூலமதுரை), பாலி(தென்பாலி-பாலிமொழி), புருனெய்(பொருனை) என்ற பெயர்களைக் கொண்டுள்ளன. அத்தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயர், இலாமுரி தேசம் என்று இராசேந்திரன் கல்வெட்டொன்று கூறுகிறது. எனவே இலெமுரியாக் கண்டம் என்ற பெயரும் பண்டையிலிருந்தே வருகிறதென்று தெரிகிறது.

இச் செய்திகளிலிருந்து குமரிக் கண்டத் தமிழர்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள உறவு புலப்படும்.

மணிமேகலையின் முன்பிறப்பு பற்றிய கதையில் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதி என்ற மன்னனிடம் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை நிலம் கடலில் முழுகுமென்று கூறப்பட்டது. அவன் விலங்குகளையும் மக்களையும் உடன்கொண்டு வடக்கு நோக்கிச் சென்று அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையில் சேர்ந்தான் என்று கூறப்பட்டுள்ளது.

சீத்தலைச் சாத்தனார் தமிழ்ப்பற்றை விட சமயப்பற்று மிகுந்தவர் என்பது அவர் நூலை மேலோட்டமாகப் பார்க்கும் போதுகூட வெளிப்படும். எனவே அவரது இந்தக் கூற்றை நாம் நம்பலாம். காந்தாரம் எனும் இன்றைய ஆப்கானிய நகரத்துக்குக் குமரிக் கண்டத்தில் முழுகிய நகர்ப் பெயரே இடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பாண்டவர்களின் குலம் பூருவ இனமாகும். அவந்தி நாட்டிலுள்ள காயங்கரை என்ற ஆறு சிந்து சமவெளியில் ஓடிப் பின்னர் பாலைவனத்து மணலுள் மறைந்த கோக்ரா ஆறேயாகும். இதே கோக்ரா என்று பெயர் கங்கையின் கிளை நதி ஒன்றுக்கும் உண்டு. இவ்வாறு அவந்தி எனப்படும் குசராத்தின் கரைகளை அடைந்த குமரிக்கண்ட மக்கள் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு என்று வடஇந்தியா முழுவதும் பரவினர். குமரிக் கண்டத்திலிருந்த போதும் புதிய இடத்திலும் அவர்களிடையில் உருவான பாடல்களே வேதப் பாடல்கள். அப்பாடல்களில் இன்னும் இனம் காண முடியாத இடப்பெயர்கள் குமரிக் கண்டத்திற்குரியனவாக இருக்க வேண்டும். எனவே குமரிக் கண்ட இடப்பெயர்களை அறிய வேதங்கள் உதவும். அதுபோலவே புராணங்களும் குமரிக் கண்ட மக்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

இன்று ஆரிய மொழிகள் என்ற வகைப்பாட்டில் கீழ் மேலையாரிய மொழிகள் என்ற பிரிவில் கிரேக்கமும் இலத்தீனும் வருகின்றன. அம்மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இம்மொழிகளுக்கு இடையில் காணப்படும் நெருக்கத்தைவிடத் தமிழுக்கும் கிரேக்க இலத்தீன் மொழிகளுக்கும், தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் அடிப்படையான உறவு இருப்பதை எளிதில் காண முடியும். அதுபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளுக்கும் தமிழுடன் நெருக்கமான தொடர்பிருப்பதை மெய்ப்பிக்க முடியும். இதனடிப்படையில் உலகமொழிக் குடும்பங்கள் மறுவகைப்படுத்தப்பட வேண்டும்.

பினீசியர்கள் தென்னிந்தியாவிலிருந்து பாரசீகக் குடா வழியாக ஆசியாமைனர் சென்று குடியேறியவர்கள். அவர்கள்தான் கிரேக்கர்களுக்கு எழுத்துகளும் நாகரிகமும் வழங்கியவர்கள் என்று இரோடோட்டர் கூறுகிறார். ஐரோப்பா என்ற பெயரும் அவர்கள் தொடர்பானதே. தொட்டதெல்லாம் பொன்னாகும் கதையில் வரும் மன்னவன், ஓடிப்பசின் பாட்டன் காட்மஸ் எனப்படும் கடம்பன் அனைவரும் பினீசியர்களே. பினீசியர்கள் சிவந்த படகுகளில் பயணம் செய்தவராகக் கூறப்படுகிறது. நம் நாட்டுச் செம்படவர்களைப் பற்றி ஆய்ந்தால் தடையம் ஏதாவது கிடைக்கலாம்.

மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தினுள் நுழைந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்தமைக்குக் சான்றுகளாக இடப்பெயர்கள் அமைந்துள்ளன. பறளியாறு என்ற பெயர் குமரி மாவட்டத்தில் இரண்டிடங்களிலும் கேரளத்தில் ஓரிடத்திலும் சேலம் மாவட்டத்தில் ஓரிடத்திலும் வழங்குகிறது. இலங்கைக்கு நாகத்தீவு, சேரன்தீவு, தாம்பரபரணி என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன. இன்றைய நெல்லை தாமிரபரணியாற்றுக்குப் பொருனை, சோழனாறு என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன.

குமரிக் கண்டத்தில் முதலில் ஏழு குக்குலங்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் மூலவர்கள் ஏழு பெண்கள். அவர்களை ஏழு கன்னிகள் என்றும் ஏழு தாய்கள் என்றும் கூறுவர். பின்னர் அக்குலங்கள் ஆண்களின் தலைமையின் கீழ் இயங்கின. அவர்களை ஏழு முனிவர்கள் என அழைப்பர். இந்த ஏழு குக்குல முதல்வர்களின் துணையுடன் இந்திரன் ஆண்டான். உண்மையான ஆட்சித் தலைவர் இந்திராணியே. இந்திரனை இந்த ஏழு குக்குலத் தலைவர்களுமே தேர்ந்தெடுத்தனர், நினைத்த போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றினர். இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் வரும் நகுசன் கதையையும் சோசப் காம்பெல் எழுதிய Masks of Gods-Primitive Mythology என்று நூலில் எகிப்திலிருந்த பண்டை நடைமுறை பற்றிய குறிப்பையும் ஒப்பிடுகையில் இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு குமுகத்தில் அரசு தோன்றுவதற்கு முதற்படி மக்கள் குக்குலங்களாகப் பிரிந்திருப்பது மாறி நில எல்லை அடிப்படையில் பிரியத் தொடங்குவதே என்று ஏங்கெல்சு என்பார் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். உலக வரலாற்றில் மக்கள் நில அடிப்படையில் பிரிந்து நின்றதைத் தரும் முதல் ஆவணம் தமிழின் பொருளிலக்கணமே.

பொருளிலக்கணம் குமரிக் கண்ட மக்கள் குக்குல நிலையிலிருந்து மேம்பட்டு நிலங்களுக்கேற்ற வகையில் பொருளியலிலும் அதன் விளைவாகப் பண்பாண்டிலும் ஒருவருக்கொருவர் மாறி நின்றனர். அவர்களது குடும்ப அமைப்புகளும் போர்முறையும் மாறி நின்றன. குறிஞ்சி நில மக்கள் திருமணம் இன்றி சந்தித்த இடத்தில் கூடிப் பிரிந்தனர்; ஆ கவர்தலே போர் நோக்கமாக இருந்தது. முல்லை நில மக்கள் தாங்கள் விரும்பும்வரை சேர்ந்து ′′இருந்து′′ வேண்டாதபோது பிரிந்தனர்; போர் மேய்ச்சல் நிலத்துக்காக நடைபெற்றது. பாலை நிலம் வாணிகத்தின் வளர்ச்சியையும் பாலையின் கொடுமையையும் பொருட்படுத்தாது மருதத்துக்கும் முல்லைக்கும் பாலையினூடாக நடைபெற்ற போக்குவரத்தையும் அங்கு சிலர் வழிப்பறித்து வாழ்வதென்ற ஒரு புது நிலையையும் காட்டுகிறது; மக்கள் கூட்டுழைப்பிலிருந்து பிரிந்து வாணிகம், போர், வழிப்பறி என்று ஆணும் பெண்ணுமாக வெளியேறிதையும் ′′பொய்யும் வழுவும்′′ தோன்ற, கரணமெனும் திருமணத்தின் தேவையை உருவாக்கிய பின்புலம் பாலையில் வெளிப்பட்டது; போர் வாழ்வா சாவா என்ற நிலையில் நடைபெற்றது. மருதத்தில் திருமணத்தில் இணைந்த பெண் ஆடவனின் பரத்தையர் தொடர்பை முறியடிக்க முடியாத கையறு நிலையான பொருளியல் சார்புநிலை அடைந்தாள்; போர் கோட்டையிலுள்ள செல்வத்தைக் கொள்வதற்காக நடைபெற்றது. நெய்தலிலோ பெண் கைம்மைக் கொடுமைக்கு ஆளானாள்; போர் பேரரசுப் போராக, வெற்றி நோக்கியதாக இருந்தது.

பொருளிலக்கணம் தொல்காப்பியத்துக்கு வரும்போது அதன் மூல வடிவம் மிகவும் மாறுபட்டுவிட்டது.

ஆதாமும் ஏவாளும் ஈழத்தீவில்தான் வாழ்ந்தனர். அவர்கள் மகன் சேது என்பவன் பெயரால்தான் சேது என்ற பெயர் இலங்கை இந்திய நீரிணைக்கு ஏற்பட்டது என்று மெளலானா என்பவர் சேது முதல் சிந்து வரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். உடன்பிறந்த ஆபேலைப் பெண்ணுக்காகக் கொன்ற காயின் இராமனாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். உண்மையில் வாலிக்கும் சுக்ரீவனுக்குமே இந்த ஒப்புமை பொருந்தும்.

தமிழகத்தில் பெண்ணாட்சி நிலவியது என்ற மெகாத்தனிசின் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் பாண்டியர் குலமுதல்வி என்று ஒரு பெண்ணைக் குறிப்பது, திருவிளையாடற் புராணத்தில் தடாதகைப் பிராட்டி, நாட்டுப்புறக் கதைகளாக அல்லி, பவளக்கொடி போன்றோர் ஆகிய சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் மறைக்கும் இந்த உண்மைகளைச் சிலப்பதிகார ஆசிரியர் வெளிக்கொணருகிறார். குமரி என்ற பெயரையே அவர்தான் நமக்குச் சொல்லுகிறார்.

குமரிக் கண்டத்தில் மாபெரும் பொருளியல் வளர்ச்சி இருந்தது. அதனோடு பொருளியல், குமுகியல் கோட்பாடுகளும் உருவாகியிருந்தன. குபேரன் வடிவம் இதற்கொரு சான்று. குபேரனின் ஊர்தி மனிதனாகும். இந்த வடிவத்தின் பின்னணியில் இன்றைய மார்க்சியத்தின் கோட்பாடு புலப்படுவதைக் காணலாம். மனித மண்டை ஓடுகளில் குருதியைக் குடிப்பதுதான் மூலதனம் எனும் தெய்வம் என்று மார்க்சு கூறுகிறார்.

குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:

1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.


2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.


3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது.


4. உலகிலுள்ள இசைக் கருவிப் புனைவில் வீணை எனப்படும் யாழ் ஓர் இறும்பூது. எண்ணிக்கையில் குறைந்த நரம்புகளைக் கொண்டு யாழ்த் தண்டிலுள்ள பள்ளங்களின் உதவியால் ஆயிரம்வரை நரம்புகளை (இசைகளை) எழுப்ப முடியும். இந்த யாழ் இராவணனின் கொடியாகும். சிவனை மகிழ்விக்கத் தன் தலையைக் கிள்ளி, கையை ஒடித்து, நரம்பை உருவி யாழ் அமைந்து இசைத்தான் எனும் புராணக் கூற்று இந்த யாழை அவனே புதிதாகப் புனைந்ததைக் குறிப்பதாகலாம்.


5. தமிழகத்தில் ஒவ்வொரு புதுப்புனைவையும் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் தெய்வங்களுக்கு ஆயுதங்கள் உள்ளன.

சிவன் : நெருப்பு, உடுக்கு, மழு.


பரசுராமன் : கோடரி


பலராமன் : கலப்பை


இராவணன் : யாழ்


திருமால் : சக்கரம்


மூதேவி : குண்டாந்தடி.

ஒரு புராணக் கதையின்படி பருந்துகளின் தாயான பெண்ணும் நாகங்களின் தாயான பெண்ணும் முறையே அக்காள் தங்கைகள். தங்கையின் சூழ்ச்சியால் தமக்கை அவளுக்கு அடிமையாகிறாள். தமக்கையின் மகன் கருடன் பிறந்து போரிட்டு தாயின் அடிமைத்தனத்தை விலக்குகிறான்.

நாகமும் பருந்தும் தோற்றக்குறிகள். இரு மக்களுக்குள் நடந்த பூசலையே இது குறிக்கிறது. நாகங்கள் நம் தெய்வ வடிவங்கள் அனைத்திலும் உண்டு. பருந்து திருமாலின் ஊர்தியாக மட்டுமே காணப்படுகிறது.


உலகப் புராணங்களிலும் நாகத்துக்குச் சிறப்பிடம் உண்டு. பைபிள், கிரேக்கப் புராணம் போன்றவற்றிலும் ஒரு பெண்ணோடு அது தொடர்புபடுத்தப்படுகிறது, கில்காமேஷ் காவியத்தில் சாவா மருந்தாகிய கனியை அது பறித்துச் சென்று விடுகிறது.

பண்டை நாகரிகங்களில் தங்கம் அல்லது உலோக இறக்கைகள் உள்ள பருந்துதான் தங்கள் மூதாதை என்ற குறிப்பு காணப்படுகிறது. எரிக் வான் டெனிக்கான் பறவை போன்ற வானவூர்திகளில் வந்தோர் பண்டை மக்கள் மீது அணுகுண்டுகளைப் பொழிந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அத்துடன் தாடி வைத்த நாகம் தங்களுக்கு நாகரிகத்தைத் தந்ததாகச் சில மக்கள் குறித்து வைத்துள்ளனர். கவிழ்ந்த கப்பல் மாலுமியைப் பற்றிக் கூறும் எகிப்திய தாள் குறிப்பில் நிலத்தின் அரசனாக ஒரு தாடி வைத்த நாகமே கூறப்படுகிறது.

இவற்றிலிருந்து நாம் பெறும் முடிவு:

நாகத்தையும் பருந்தையும் தோற்றக்குறிகளாகக் கொண்டிருந்த மக்களுக்குள் குமரிக் கண்டத்தினுள் கடும்பகையும் போரும் நிகழ்ந்தன. முதலில் உலகமெலாம் பரவியவர் நாகர்கள். அவர்கள் பரவிய இடமெல்லாம் பருந்தின மக்கள் தொடர்ந்து சென்று தாக்கினர். இதற்கு அவர்களது கண்டுபிடிப்பான வானவூர்தியும் அணுவாற்றலும் பயன்பட்டது. உலகமெலாம் பரவிய இந்த அணுவாயுதப் போரினால் அம்மக்களின் நாகரிகம் ஒரு முடிவுக்கு வந்தது.


எரிக் வான் டெனிகான் ஊர்திகளில் வந்து குண்டு போட்டோர் வேறு உலகங்களின்று வந்தவர் என்கிறார். மேலையர் தவிர வேறெவரும் நாகரிகமடைய முடியாது என்ற ஐரோப்பியக் கருத்தின் எதிரொலிதான் இது.

Serandipity என்ற சொல்லுக்கு அடிப்படையான The Three Princes of Serandip என்ற கதையும் முன்று கோட்டைகளோடு பறந்து சென்று எதிரிகளை அழித்த முப்புராதிகளின் கதைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

குமரியை ஆண்டவர்களில் துவரைக் கோமானும் ஒருவர். துவரை என்பது வடக்கிலிருந்த துவாரகையல்ல. துவாரகா என்பதற்கு கதவகம் என்ற பொருள். இரண்டாம் கழகப் பாண்டியர் தலைநகராகிய கபாடபுரமே துவாரகை எனப்படும் துவரை. குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, முத்துக்குட்டி அடிகளின் வரலாறு கூறும் அகிலத் திரட்டு அம்மானையும் ″தெற்கே கடலினுள் இருக்கும்″ துவரையம்பதி பற்றிக் கூறுகிறது.

கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவர பாபிலோனிலிருந்து பல கடல்களைக் கடந்து ஒரு பெருங்கதவு வழியாக நுழைகிறான். அங்கு பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த நோவாவின் மூலவடிவமான உட்னாபிற்றிட்டிம் என்ற மனிதனைச் சந்திக்கிறான்.

சாவாமை உள்ளவனாகக் கூறப்படும் இயமனும் ஒரு பெருங்கதவுக்கு அப்புறமே வாழ்கிறான். இன்றைய உலோகம் காட்டியின் (Metal Detector) பண்டைய வடிவமோ இக்கதவு?

பாண்டிய மரபின் நீண்ட நெடும் வரலாற்றில் துவரைக் கோமான் போன்ற முல்லை நிலத்தாரும் குமரவேள் போன்ற குறிஞ்சி நிலத்தாரும் மீனவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை.

தமிழ் இலக்கணத்துறையில் தலையாய இரு கோட்பாடுகள் எதிரெதிராய் நிலவி வந்தனவாகத் தோன்றுகிறது. ஒன்று அகத்தியம் இன்னொன்று ஐந்திரம். பயன்பாட்டு வேறுபாட்டு அடிப்படையில் மொழியில் பிரிவினை தேவையில்லை என்பது அகத்தியக் கோட்பாடெனவும் சிறப்புத் தொழில்களுக்கென்று தனி எழுத்துகள் கொண்ட தனிக் குழூஉக்குறி மொழி ஒன்று வேண்டும் என்பது ஐந்திறக் கோட்பாடென்றும் கொள்ளலாம். இந்தப் பிரிவினைக் கோட்பாடே வெற்றி பெற்றது. பிரிவினைக்கு முன்பு வல்லின எழுத்துகளுக்கு நான்கு தனித்தனி ஒலிப்புகளும் அவற்றுக்குத் தனித்தனி வரியன்களும் இன்றைய பிற இந்திய மொழிகளில் காணப்படுவது போல் தமிழிலும் இருந்திருக்க வேண்டும். கிரந்த எழுத்துக்கள் எனப்படும் ஓலியன்களும் இருந்திருக்க வேண்டும்.


இன்றைய தமிழ் எழுத்துகளில் ஒரே வல்லின வரியனில் மூன்றுக்கு மேற்பட்ட ஓலியன்கள் பெறப்படுதல், தொல்காப்பிய சகரக்கிளவியும் அற்றோரன்ன என்ற முரண்பாடும் ந,ன,ற,ர மயக்கங்களும்

அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்


மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே

என்ற தொல்காப்பிய வரிகளும் ஐந்திரம் தெரிந்த தொல்காப்பியன் என்ற பாயிர வரிகளும் தொல்காப்பியருக்கும் அகத்தியருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் பூசல் பற்றிய புராண நிகழ்ச்சியும் சில தடயங்கள். அகத்தியம் மீதுள்ள காழ்ப்பினால்தான் அகத்தியர் வடக்கிலிருந்து வந்தார் என்ற கதை எழுந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிலப்பதிகார ஆசிரியர் தொல்காப்பிய விதிகளை அதன் மூலம் ஐந்திரக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பது அந்நூலை ஆய்வோருக்குப் புலப்படும். சகரக் கிளவியைத் தாராளமாகவே கையாண்டுள்ளார் அவர்.

இந்த அகத்திய-ஐந்திர மோதல் உண்மையாக இருந்தால் சமற்கிருதத்தின் பிறப்பின் பின்னணி (ஆரிய இனப் பின்னணி பொய்யென்பதால்) விளங்கும். ஒரு தமிழ் நூலின் பழமையை ′′மொழித் தூய்மை′′ பற்றிய இன்றைய அளவுகோல் கொண்டு அளப்பது தவறு என்பதும் புரியும்.

குமரிக் கண்டப் பண்பாடு மிகப் பெரிய பரப்பும் கி.மு. 50,000 வரை நீண்டு செல்லும் மிகப்பெரிய கால இடைவெளியையும் கொண்டது. இப்பெரிய பரப்பில் இந்நீண்ட காலத்தினுள் என்னென்ன மக்கள் எங்கெங்கு வாழ்ந்தனர்; அவர்கள் கால வரிசையில் இயற்றியவை என்னென்ன என்பவையெல்லாம் அறிவது மிகவும் கடினமான பணி. ஆனால் தப்பெண்ணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியப் புராணங்கள் மட்டுமல்லாமல் உலகப் புராணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பியப் பழம் புராணங்களை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் தொகுத்து அவை இன்று நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.

வரலாற்று மேதையான வில் டூறாண்டு யூதர்களைப் பற்றிக் கூறும்போது தவறென்று மெய்ப்பிக்கப்படாதவரை பைபிளில் கூறப்பட்டிருப்பவற்றையே யூதர்களின் வரலாறாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். நாமும் கிடைக்கும் தடையங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் நம் குமரிக் கண்ட கால வரலாற்றை எழுதுவோம்.

Tuesday, January 25, 2011

காய்ச்சல்-ஒரு நோய் அல்ல


உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம்.  ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.
காய்ச்சல் மூளையை பாதிக்குமா?
காய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.
மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?
அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.
காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர் , மற்றும் சில காரணங்களாலும் வரும்.

வெப்ப அதிர்ச்சி
அதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி வெயில் தாகுதல்கள். நெருப்பினால் உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆபத்தானவ. இத்தகைய நிலைகளில் உடல் தன் வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போவதால் மரணத்தை ஏற்படுத்தி விடும். இன்னிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த சூழலில் இருந்து இடம் மாற்றவும். குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும் துடைத்து விடவும். ஐஸ் கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து வெப்பத்தை உடனடியாகக் குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து நினைவிழக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடனடி மருத்துவரை பார்க்கவும்.
காய்ச்சலுக்கு என்ன சிகிட்சை செய்யலாம்?
காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிட்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை.  சிகிட்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான். நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும். குழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது.
காய்ச்சலை குறைக்க முயலும் போது
  • காய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.
  • வெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம்.தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்
  • இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம்.காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவவாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்
  • பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது. இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும்.இது நிலமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.
  • முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்
என்ன மருந்துகள் எடுக்கலாம்?
  • Acetaminophen மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது.
  • 4 முதல் 5 மணிக்கொருமுறை acetaminophen எடுத்துகொள்ளலாம். 6 முதல் 8 மணிக்கொருமுறை ibuprofen எடுத்துகொள்ளலாம். கைகுழந்தகளுக்கு Ibuprofen நல்லதல்ல.
  • பெரியவர்களுக்கு Aspirin நல்லது. ஆனால் குழநதைக்கு கொடுக்காதீர்கள்.
  • காய்ச்சல் மருந்துக்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. சரியான மருந்து விபரங்களை படித்து விட்டு அதன் படி உபயோகிக்கவும்.
  • 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரை காண்பிக்காமல் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.
டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?
  • மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்.100.2°F (37.9°C) மேல் காய்ச்சல் அதிகரித்தால்.
  • 3 முதல் 6 மாதக் குழந்தைக்கு காய்ச்சல்101°F (38.3°C) அல்லது அதற்கு மேல் அதிகமானால்.
  • 6 முதல் 12 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 103°F (39.4°C)கு மேல் அதிகமானால்.
  • இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்.
  • சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் 48 முதல் 72 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால்.
  • 105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து சிகிட்சை செய்தும் குறையா விட்டால்.
  • எரிச்சல். பிதற்றல், சுவாசிப்பதில் சிரமம். கழுத்து விறைத்தல் ,கை கால் செயலிழப்பு, ஜன்னி ஏற்பட்டால்.
  • தொண்டை கரகரப்பு,காதுவலி,இருமல் இருந்தால்.
  • Acetaminophen போன்ற காய்ச்சல் மாத்திரைகள் பலனளிக்காவிட்டால் உடனே டாக்டரை பார்க்க வேண்டும்
நோய் நாடி அறிதல்:
மருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.
  • எவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது?
  • காய்ச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? அதுவும் வேகமாகவா?
  • விட்டு விட்டு காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு? தினமும் வந்து போகிறதா?
  • காய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா?
  • காய்ச்சல் ஏறி இறங்குகிறதா?
போன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் தெரிய வரும்.
தேவைப்படும் டெஸ்டுகள்:
  • இரத்த சோதனை
  • சிறு நீர் பரிசோதனை
  • மார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை
காய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரசுகளை அழிக்கிறது.
தொண்டை கரகரப்புக்கு 1 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும்.
மருந்துகள் பாதுகாப்பானது அல்ல: காய்ச்சல் ஜல தோசத்திற்கு கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
“ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் “என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் ஒவர் டோசாகவோ, தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்ககூடாது என்று FDA கூறுகிறது.
மூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன் படுத்துவது கெடுதி செய்யும்.அவற்றில் அடங்கியுள்ள Pseudoephedrine இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும். தொடர்பாக புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்து செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் phenylpropanolamine (PPA) பக்க வாதத்திற்கு அடிகோலும் . எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.
உறங்குவதிலோ , பேசுவதிலோ இடையூறு இருந்தால் ஒழிய dextromethorphan அடங்கிய இருமல் மருந்துகள் உபயோகிக்க வேண்டாம். சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும். அது விபத்துக்களுக்கு ஆளாக்கும் .சிறிய இருமலை வாயை துணி கொண்டு பொத்தி சகித்துக் கொள்வது நல்லது.  சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது.  இது நல்லது.  இருமல் ஒரு நோயல்ல.
காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?
காய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது.  அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது.  எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.
மிருதுவான, அதே சமயம் காரம் – மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம்.பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும்.எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும்.
காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.
காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான்.நோய்த் தொற்று (viral infection) காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை.இந் நிலையில் பால், தயிர், பருப்பு – கீரைகள் – காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும். அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.
நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்
எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.
நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்!
நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • சத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.
  • காப்பர் சத்து: நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.
  • வைட்டமின் E:இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல… நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் .
  • வைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.
  • துத்தம் (ZINC):உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.
  • தாவர வேதிப்பொருள்:உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை. வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.
  • சந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை…. இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்

Saturday, January 15, 2011

நம்க்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி தடுப்பது


நாம் இணையத்தில் பல்வேறு தளங்களில் உள்ளே உள்ளே செல்லும் போது நம் விவரங்களை  கொடுக்கும் போது நம்முடைய மெயில் ஐடியையும்  கொடுப்போம். அப்படி கொடுத்த மெயில் ஐடிக்கு அந்த தளத்தில் இருந்து அவர்களின் விளம்பர செய்திகளை நம் மெயிலுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பார். ஒரு சில மெயில்களில் unsubscribe என்ற வசதி இருக்கும் அதன்மூலம் நாம் தடுத்து விடலாம் ஆனால் ஒருசில மெயில்களில் இந்த வசதி இருக்காது அது போன்ற மெயில்களை எப்படி நாம் unsubscribe செய்வது என்று இங்கு பார்ப்போம்.
இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சி. குறிப்பாக பதிவர்களுக்கு பயனுள்ள நீட்சி நீங்கள் இந்த நீட்சியை நிறுவினால் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தின் அலெக்சா ரேங்க் இந்த நீட்சி காட்டும். அந்த தளத்தில் அலெக்சா விட்ஜெட் இல்லை என்றாலும் இந்த நீட்சி சூப்பராக வேலை செய்கிறது. தினமும் அலெக்சா ரேங்க்கை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் பயனுள்ள நீட்சி.




நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளையும் மற்றும் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரையும் சென்றடையும்