Monday, December 6, 2010

ஐம்பதாவது பதிவு:- பணம் செலுத்தாமல் ஒரு மென்பொருளின் முழு பதிப்பை (full version) மற்றும் திறப்பு உண்டாக்கியை (keygen) தரவிறக்கம் செய்வது எப்படி?

 நமக்கு மிக மிக பயன் உள்ள மென்பொருள்கள் எப்பவுமே பணம் செலுத்தி வாங்கக்கூடிய மென்பொருளாக இருக்கும் (நம்ம ராசி அப்படி). அதனால் நாம் அந்த மென்பொருளுக்கான சான்று பதிப்பு மென்பொருளை (trial version ) தரவிறக்கம் செய்து பின்பு அதற்கான திறப்பு உண்டாகியை (keygen)  தேடி அலைவோம் அல்லது நேரடியாகவே அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை (full version ) தேடி அலைவோம்,இறுதிவரை அது கிடைக்காது. பின்பு அதனை தேடுவதையே விட்டுவிடுவோம்.உண்மையில்   ஒரு மென்பொருளுக்கான முழு பதிப்பை அல்லது  திறப்பு உண்டாக்கியை தேடுவது மிக சுலபம் (கீழே இருப்பது போல தேடினால்).

கூகிள் (google) :-
முதலில் அந்த மென்பொருளுக்கான திறப்பு உண்டாக்கியை (keygen) கூகிளில் தேட வேண்டும். அதுவும் இது போன்று <மென்பொருளின் பெயர்> <பதிப்பு> <ராபிட்ஷேர்>. உதாரணத்திற்கு  இப்படி imindmap 4.1 rapidshare  தேட வேண்டும். இது போன்று தேடினால் அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை தேடிக் கண்டுப் பிடித்து விடலாம். ராபிட்ஷேர் என்ற இடத்தில் நீங்கள் Keygen அல்லது megaupload எனவும் தேடலாம்.

கூகிளில் தேடிக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் இங்கு சென்று அந்த மென்பொருளை தேடி அதன் முழு பதிப்பை நேரடியாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்:-

வலை வாசல் (portals) :-
http://www.warez.com/ (இது ஒத்த தரவுத்தொடர் (torrent)இணைப்பை தேடிக் கொடுக்கும்)

பொது மன்றங்கள் (forum) :-

எச்சரிக்கை:- இது போன்ற வலை வாசல்களில்  (portals),பொது மன்றங்களில் (forum) தேடும் போதும்,தரவிறக்கம் செய்யும் போதும் மிக கவனமாக இருங்கள். சில நேரங்களில் அது தவறான மென்பொருள்கள் அல்லது வைரச்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீங்கள் அந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். அப்போது அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் படித்து கணக்கை உருவாக்குவது  நல்லது:)

கோப்பு பகிர்வு தளங்கள்:-
 ராபிட் ஷேர் முகவரியில் தரவிறக்கம் செய்வதற்கு என தனியே தேடுபொறி உள்ளது அங்கு சென்றும் நீங்கள் தேடலாம்rsfind.com
இதே போன்று சில தளங்கள் உள்ளன அவை வருமாறு:

திறப்பு உண்டாக்கி (keygen) தேடுபொறி:-  
இந்த தளம் மிக அருமையானது. இதில் நீங்கள் பெரும்பாலும் அனைத்து மென்பொருளுக்கும் திறப்பு உண்டாக்கியை (keygen) தேடிக் கண்டு பிடித்து விடலாம்.
  தளத்தின் முகவரி:-  keygen.ms
கவனிக்க:- இந்த தளம் திறப்பு உண்டாக்கியை ( keygen) மட்டுமே தேடித் தரும்!

ஐம்பதாவது பதிவு:-
விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது இப்பொழுது அனைவருக்கும் உதவும் வகையில் ஆகிவிட்டது. இந்த சின்ன பையனையும் ஒரு பதிவனாக நினைத்து ஆதரித்ததற்கு மிக்க நன்றி! 

No comments:

Post a Comment