Thursday, December 22, 2011

3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர். 

மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர். 

‌உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர். 

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை.

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர். 

மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர். 

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர். 

ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை. 

முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர். 

எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர். 

த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

Wednesday, December 21, 2011

பிரபல நடிகையை சூர்யா திருமணம் செய்துகொண்டார்

Alexa Rank ஐ உயர்த்த சுலப வழிகள்



பிளாக் வைத்திருக்கும் அனைவருக்கும் அலெக்ஸா தரவரிசையில் முன்னனியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்க்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதித் தள்ளுவோம். ஆனாலும் தரவரிசை மெதுவாக தான் ஏறும். உங்களுக்காக இதை எழுதுகிறேன். 

பின் வருவனவற்றை செய்து. உங்கள் ரேங்க் ஏறுவதைப் பாருங்கள்.

  • முதலில் உங்கள் தளத்தை Alexa.com 'ல் Register செய்துக் கொள்ளுங்கள்.
  • Alexa.com 'ஐ உங்கள் Browser' ன் Home Page ஆக பயன்படுத்துங்கள்.

  • உங்கள் Browser 'ல் Alexa Toolbar 'ஐப் பயன்படுத்துங்கள். 

  • Alexa Widget 'ஐ உங்கள் தளத்தின் Home Page 'ல் பயன்படுத்துங்கள்.

  • உங்கள் தளத்திள் Alexa Review Widget 'ஐ சேருங்கள். பதிவை படிக்க‌ வருபவர்களுக்கு உங்கள் தளம் பிடித்திருந்தால் Alexa 'வில் Review எழுதுவார்கள்.

  •  இதனால் தரவரிசையில் வேகமாக முன்னேர‌லாம்.

  • Alexa 'வை பற்றி உங்கள் பிளாகில் ஒரு பதிவாவது எழுதுங்கள். Alexa 'வில் தரம் எகிறும்.

  • உங்கள் தளத்திள் வாரத்திற்க்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

  • நேரம் இருந்தால் மற்றவர் பதிவுகளுக்கு கருத்துரை எழுதுங்கள். 

இந்த எட்டு கட்டளைகளை பின்பற்றினால் அலெக்ஸா தரவரிசையில் நீங்களும் முன்னேறலாம். நன்றி...

விண்வெளியில் உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை


வரை படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன், விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லையாம்.

இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். 

மனித மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில் பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது. 
அவர்களால் அந்த உயரத்தை உத்தேசமாகக்கூட கணிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. விண்வெளியில் தட்டையான பகுதிகளை சரியாக கணிக்க முடிகிற மனித மூளையினால் முப்பரிமாணம் கொண்ட உயரத்தை சரிவர திட்டமிடமுடியவில்லை என்பது தான் இவர்களது முடிவு.

கிழமைகள் ஏற்பட்டது எவ்வாறு?


நாட்களுக்குப் பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில், நாட்களுக்குப் பெயர் கிடையாது. அதற்குக் காரணம் என்ன? மனிதன், வாரத்தைக் கண்டுபிடிக்கவில்லையா?


பண்டைய நாட்களில் காலத்தை மாதங்களாகவே பிரித்திருந்தனர். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் இருந்தன.அத்தனை நாட்களுக்கும் பெயர் வைப்பதற்குச் சாத்தியப்படவில்லை.

மனிதர்கள் நகரங்களை அமைத்தபிறகு வாணிபம் செய்வதற்கு, அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தனியாக ஒருநாள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கினார்கள். 

சிலசமயங்களில் 7 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கப்பட்டது. அதாவது 7-வது நாளே வணிக நாளாக அமைந்தது.

பண்டைக் காலத்துப் பாபிலோனியர் ஒவ்வொரு 7-வது நாளையும் வணிகத்துக்கும், மத விஷயங்களுக்கும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யவில்லை.

யூதர்களும் பாபிலோனியர்களின் உதாரணத்தைப் பின்பற்றினர். ஒவ்வொரு 7-வது நாளையும் மத விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு வாரம் பிறந்தது. வாரம் என்பது இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம். வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் பெயர் வைத்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் எண்களாகவே அமைந்திருந்தன. சனிக்கிழமைக்குப் பிறகுஅவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு வந்து சனிக்கிழமையுடன் முடித்தனர். அவர்களுடைய திட்டப்படி ஞாயிறு முதல் நாளாகவும், சனிக்கிழமை ஏழாவது நாளாகவும் அமைந்தன.

வாரத்துக்கு 7 நாட்கள் என்ற முறையை எகிப்தியர்களும் கடைப்பிடித்தனர். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. வாரத்தின் நாட்களுக்கு அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர். எகிப்தியர்கள் வைத்த பெயர்களை ரோமானியர்கள் பின்பற்றினர். சூரியனின் பெயர் ஞாயிறு. சந்திரனின் பெயர் திங்கள். மார்ஸ் அல்லது டியூ, ரோமானியர்களின் போர்த் தெய்வம். அந்தப் பெயர் செவ்வாய்க்கிழமை ஆயிற்று. `மெர்க்குரி’ தெய்வத்தின் மற்றொரு பெயர் (ஓடன்) புதன்கிழமை ஆயிற்று. `தர்’என்பது ரோமானியர்களின் இடித்தெய்வம். அது `தர்ஸ்டே’ ஆயிற்று. அதாவது வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்தப் பெயர் எப்படி வந்தது? `ப்ரிக்’ என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர், `ப்ரைடே’, அதாவது வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் சனிக்கிழமைக்கு வந்தது.

மாணவர்களை கொடூரமாக அடிக்கும் ஆசிரியர்கள்! வீடியோ இணைப்பு


மாணவர்களை கொடூரமாக அடிக்கும் ஆசிரியர்கள்! வீடியோ இணைப்பு



கேபிளின் வரலாறு பாகம் 1

முன்னறிவிப்பு :

இது என் கதையல்ல.. ஆனால் என் கதையாகவும் இருக்கக்கூடும். வேண்டுமானால் தமிழ் வலைப்பதிவுலகில் எழுதப்படும் ஆட்டோ பிக்‌ஷனாகக்கூட இருக்ககூடும். கடந்த இருபது வருடங்களில் நம்மிடையே வாழ்வில் ஒரு அங்கமாய் போன ஒரு தொழிலை பற்றியும், அதை சார்ந்த ஒருவனின் வாழ்க்கையை பற்றியது இக்கதை. இது பல சமயங்களில் அபுனைவாகவும், புனைவாகவும் கூட இருக்கக்கூடும் என்பதை உங்களுக்கு நினைவுறுத்தவே இந்த முன்னறிவிப்பு.
கேபிளின் கதை-1 

என் கண்ட்ரோல் ரூமிலிருந்து கொத்தாய் ஒயர்கள் ஒரு பெரிய ஓட்டையின் வழியாய் வெளியேறி, இடது வலது என பார்க்காமல், ஆக்டபஸின் கைகள் போல எதிர் ப்ளாட் மொட்டைமாடிக்கும், பக்கத்து பிளாட் மாடிக்கும், பத்தடி இரும்பு போஸ்டிற்குமாய் பரந்து அங்கிருந்து மேலும் மாடிகளுக்கும், பல போஸ்ட் கம்பங்களுக்குமாய் ஆக்கிரமித்து, அடுத்த வீடு, அடுத்த திருப்பம், அடுத்த தெரு, என்று இரை தேடும் பாம்பு போல போய்க் கொண்டேயிருந்தது.
எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் இந்த இருபது வருடங்களில். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு, ஒரு ஹாபியாக வீடியோ கேசட் வாடகை விட ஆரம்பிக்க, மெல்ல அத்தொழில் நிரந்தரக் கடையாய் மாறி, வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் வர ஆரம்பித்த அடுத்த ஜெனரேஷன் தொழில் தான் இந்த கேபிள் டிவி. வீடியோ பார்லர் வைத்திருந்த போது கூட யாரும் செய்யாத ஒரு விஷயம், நான் கேபிள் டிவி தொழில் செய்ய ஆரம்பித்த போது, செய்தது... ஊரே சிரித்தது.

”இஞ்ஜினியரிங் படிச்சிட்டு இப்படி டெக்குல படம் போட்டு வீடு வீடா வசூல் பண்ணப் போறேன்னு சொல்றியே இது தேவையா?” என்று கேவலமாய் என்னை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் ஏராளம்.

நான் அப்போதெல்லாம் அவர்களிடம் சொல்லும் ஒரு விஷயம் எதிர்காலத்தில் இந்த தொழில் இன்னும் முப்பது நாற்பது வருடங்களுககு கோலோச்சப் போகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த தொழில் செய்ய பல பெரிய தொழிலதிபர்கள் நுழைந்து உனக்கு எனக்கு என்று போட்டிப் போடப் போகிறார்கள். அன்று நான் இருப்பேனோ இல்லையோ..? நிச்சயம் இந்த தொழில் இருக்கும் என்பேன். சிரிப்பார்கள்.

சினிமா என்ற ஒரு விஷயம் தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று இருந்த காலத்தில், கருப்பு வெள்ளை டிவி, பிறகு கலர் டிவி என்று வளர்ச்சியடைந்தது. அப்படி வளர்ந்த காலத்தில் சினிமாவுக்கு எமனாய் வந்தது விடியோ எனும் ஒரு விஷயம். மெல்ல அந்த வீடியோ தொழிலை ஆக்கிரமித்து, ஒரு இடத்திலிருந்து வீடியோ டெக்கின் மூலம் படம் போட்டால் வீடுகளில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் ஆயிரம் பேரின் வீட்டிற்கு படம் காட்ட முடியும் எனும் போது வீடியோ கேசட்டின் ஆதிக்கம் ஒழிந்து, கேபிளின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. வீட்டிலிருந்தே தினமும் காலையும் மாலையும் படம் பார்ப்பது ஆரம்ப காலத்தில் ஆடம்பர விஷயமாயத்தான் மக்கள் கருதினார்கள். ஆனால் எத்தனை நாள் தான் இப்படி தூர்தர்ஷன் காட்டும் தில்ரூபாவையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற விஷயம் மெல்ல கேபிளின் மேல் பார்வையை திருப்பியது.

இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளாளான ஆண்டெனாவினால் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக் கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டிவியை ட்யூன் செய்து படம் பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை. ”ஐ.த்தோடா” என்று கிண்டலடித்தார்கள்.

வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும், சனிக்கிழமை திரைப்படம் என்கிற விஷயங்கள் எல்லாம் உலக அதிசயமாய் இருந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் ரூபவாஹினி தெரிகிறது என்பதற்காக, பத்தடி உயர இரும்பு கழியில் பெரிய ஆண்டனாவை வைத்து, சிக்னலை இழுக்க, மேலும் ஒரு பூஸ்டரை போட்டு, நடுநடுவே அலையடிக்கும் ரூபவாஹினியில் போடும் தமிழ் படங்களை பார்ப்பதற்கு ஆவலாய் அலைந்த காலத்தை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழ் நாட்டை பொறுத்த வரை கேபிள் டிவி தொழில் செய்பவரை ஆரம்ப காலத்தில் கேபிள் டிவிக்காரர்கள் என்று அழைத்திருந்தாலும், சாட்டிலைட் ஒளிபரப்பில் தமிழில் முன்னோடியான சன் தொலைக்காட்சி வந்ததும் தமிழ் நாடு பூராவும் கேபிள்டிவி தொழில் செய்பவர்களை சன் டிவிக்காரர்கள் என்று அழைப்பது இன்றளவும் வழக்கமாய் இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் தான் எவ்வளவு தூரம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் வளரும். வளர்ந்து கொண்டேயிருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி கிடையாது. இது முற்று பெறும்போது உலகமும் முற்று பெற்றுவிடுமோ என்ற அச்சம் மனதில் தோன்றியது.

இன்றைய நிலையில் தமிழ் சேனல்கள் என்று எடுத்துக் கொண்டால் சன் குழுமம், கலைஞர் டிவி குழுமம், ராஜ் டிவி குழுமம், ஜெயா டிவி குழுமம் என்று லிஸ்ட் எடுத்துக் கொண்டாலே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்கள் சேர்ந்துவிடும். இன்ன பிற ஒற்றை சேனல்களை கணக்கெடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஐம்பது சேனல்கள் வரிசையில் வந்துவிடும். இதுதவிர ஒவ்வொரு ஊரிலும உள்ள லோக்கல் சேனல்கள் எனப்படும் சேனல்களை கணக்கிலெடுத்தால் நூற்றுக்கும் மேற்படும். முக்கியமாய் நம் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் சுமார் 30க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..



இப்படி தமிழில் மட்டுமே இவ்வளவு சேனல்கள் இருக்க, ஒவ்வொரு தேசிய, மாநில மொழிகளுக்கும் டஜன் கணக்கில் கொத்து கொத்தாய் டிவிக்கள் சேனல்களால் நிரம்பி வழிகிறது. முதல் முதலாய் கேபிள் டிவி என்று எப்போது எங்கே ஆரம்பித்தார்கள்? எப்படி இதன் டெக்னாலஜி வளர்ந்தது? எப்படி இவ்வளவு சேனல்கள் நடத்த முடிகிறது? இந்த சேனல்களை எப்படி கேபிளின் வழியே ஒளிபரப்புகிறார்கள்? பே சேனல்கள் எனப்படும் கட்டண சேனல்கள் எப்படி பணம் வசூல் செய்கிறார்கள்? எவ்வளவு கோடி ரூபாய்கள் இந்த கேபிள் தொழிலில் புரள்கிறது தெரியுமா? எத்தனை பெரிய நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறது? அனலாக் நெட்வொர்க், டிஜிட்டல் நெட்வொர்க் என்றால் என்ன?. கண்டிஷனல் ஆக்ஸஸ் என்றால் என்ன? செட்டாப்பாக்ஸ் முறையில் எப்படி கையாளப்படுகிறது? எம்.எஸ்.ஓ என்றால் என்ன? எம்.எஸ்.ஓ தான் எல்லாருக்கும் சிக்னல் கொடுக்கிறார்கள் என்றால் ஆப்பரேட்டர்கள் எனும் நம் ஏரியாவில் இருக்கும் ஆப்பரேட்டர்கள் என்ன செய்கிறார்கள்?

கேபிளின் ஆதிக்கத்தை டி.டி.எச் எனப்படும் வீட்டிற்கு நேரடியாய் ஒளிபரப்படும் டெக்னாலஜி வந்ததினால் கேபிள் டிவியின் நிலை என்னவாகும்? எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு அரசியல் தமிழ் நாட்டு கேபிள் டிவி தொழிலில் இருப்பது எதனால்?. இந்த அரசியல் பின்னணியால் பாதிக்கப்ப்ட்ட ஆப்பரேட்டர்கள் கதி? இதில் புரளும் பணம் என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலை ஒரு கேபிள் டிவி அதிபரின் பார்வையில் ஒரு ஆட்டோ பிக்‌ஷனாக இப்புத்தகத்தின் மூலம் பார்க்கலாம்.